Wednesday, March 30, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - மாயம்மாயனி - ராகம் ஆஹிரி - Mayammayani - Ahiri Raga

பல்லவி
1மா(ய)ம்மா(ய)னி நே 2பிலசிதே
மா(ட்லா)ட3 ராதா3 3நாதோ அம்பா3

அனுபல்லவி
4ந்யாயமா (மீ(னா)(க்ஷ)ம்மா) மீ(னா)க்ஷி(கி)தி3
நின்னு வினா 5வேரே தி3க்(கெ)வ(ரு)ன்னாரு (மாயம்மா)

சரணம்
சரணம் 1
ஸரஸிஜ ப4வ ஹரி ஹர நுத ஸு-லலித
நீ பத3 பங்கஜமுல
ஸ்தி2ர(ம)னி நம்மிதி நம்மிதி நம்மிதினி
கருண ஜூட3வே 6காத்யாயனி காளிகா ப4வானி
பரமேஸ்1வரி ஸுந்த3ரேஸு1 ராணி
பா3(லா)ம்பா3 மது4ர வாணி (மாயம்மா)


சரணம் 2
வினுத ஜன பாப விமோசனி ஓ ஜனனீ
4ன நீல வேணி
7வித3ளித தா3னவ மண்ட3ல த3மனீ
வனஜ லோசனா ஸுதா4-க(ரா)னனா வர தா3யகி
அனயமு நினு கோரி(யு)ன்னா(ன)ம்மா
3ங்கா3ரு பொ3ம்மா (மாயம்மா)


சரணம் 3
அப4ய(மொ)ஸகி3 நன்னு ப்3ரோவுமு ஓ வரதா3
8நெர தா3தவு3தா3
அம்பி3கா பி3ட்33பை கொ3ப்பக33ய ராதா3
அகி2ல லோக ஜனனீ அனாத2 ரக்ஷகி
அனேடி பி3ருது3 கா3தா3
வைப4வமு க3ல ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி
9வீர ஸ1க்தி த்ரிபுர ஸுந்த3ரி (மாயம்மா)


பொருள் - சுருக்கம்
  • அம்பா!
  • மீனாட்சியம்மா!
  • கமலத்தில் உறைவோன், அரி, அரன் போற்றும், இனிய லலிதையே! காத்தியாயினீ, காளிகா, பவானீ! பரமேசன், சுந்தரேசனின் ராணீ! பாலாம்பா! இன்சொல்லினளே!
  • துதிப்போரின் பாவம் களைபவளே! ஓ ஈன்றவளே! கார்முகில் நிகர் கருங்கூந்தலினளே! அசுரர் கும்பலை அழித்தவளே! கமலக்கண்ணீ! அமிழ்துக் கதிரோன் முகத்தவளே! வரமருள்பவளே! தங்கச் சிலையே!
  • ஒ வரமருள்பவளே! அம்பிகையே! அனைத்துலகையும் ஈன்றவளே! பெருஞ் சிறப்புடைய, சியாம கிருஷ்ணனுக்கு சோதரியே! வீர சக்தீ! திரிபுர சுந்தரீ!

  • 'எந்தாயே' என நான் அழைத்தால், பேசக்கூடாதா, என்னுடன்,

    • நியாயமா?
    • மீனாட்சிக்கு, இது நியாயமா?
    • உன்னையன்றி, வேறே புகல் யாருளர்?

    • உனது திருவடிக் கமலங்களை திரமென நம்பினேன், நம்பினேன், நம்பினேனே.
    • எவ்வமயமும் உன்னை கோரியுள்ளேனம்மா.

    • மிக்கு கொடையாளியன்றோ?
    • உனது குழந்தையின் மீது பெரும் கருணை வாராதா?
    • 'அனாதைகளைக் காப்பவள்' எனும் விருது அன்றோ (உனக்கு)?

    • கருணை காட்டுவாயம்மா.
    • அபயமளித்து என்னைக் காப்பாயம்மா.


  • 'எந்தாயே' என நான் அழைத்தால், பேசக்கூடாதா, என்னுடன்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மா/-அம்மா/-அனி/ நே/ பிலசிதே/
'எம்/ தாயே/' என/ நான்/ அழைத்தால்/

மாடலு-ஆட3/ ராதா3/ நாதோ/ அம்பா3/
பேச/ கூடாதா/ என்னுடன்/ அம்பா/


அனுபல்லவி
ந்யாயமா/ (மீன-அக்ஷி/-அம்மா/) மீனாக்ஷிகி/-இதி3/
நியாயமா/ மீனாட்சி/ யம்மா/ மீனாட்சிக்கு/ இது/ (நியாயமா?)

நின்னு/ வினா/ வேரே/ தி3க்கு/-எவரு/-உன்னாரு/ (மாயம்மா)
உன்னை/ யன்றி/ வேறே/ புகல்/ யார்/ உளர்/


சரணம்
சரணம் 1
ஸரஸிஜ/ ப4வ/ ஹரி/ ஹர/ நுத/ ஸு-லலித/
கமலத்தில்/ உறைவோன்/ அரி/ அரன்/ போற்றும்/ இனிய லலிதையே/

நீ/ பத3/ பங்கஜமுல/
உனது/ திருவடி/ கமலங்களை/

ஸ்தி2ரமு/-அனி/ நம்மிதி/ நம்மிதி/ நம்மிதினி/
திரம்/ என/ நம்பினேன்/ நம்பினேன்/ நம்பினேனே/

கருண/ ஜூட3வே/ காத்யாயனி/ காளிகா/ ப4வானி/
கருணை/ காட்டுவாயம்மா/ காத்தியாயினீ/ காளிகா/ பவானீ/

பரமேஸ்1வரி/ ஸுந்த3ரேஸு1/ ராணி/
பரமேசன்/ சுந்தரேசனின்/ ராணீ/

பா3லா/-அம்பா3/ மது4ர வாணி/ (மாயம்மா)
பாலா/ அம்பா/ இன்சொல்லினளே/


சரணம் 2
வினுத ஜன/ பாப/ விமோசனி/ ஓ ஜனனீ/
துதிப்போரின்/ பாவம்/ களைபவளே/ ஓ ஈன்றவளே/

4ன/ நீல/ வேணி/
கார்முகில்/ (நிகர்) கருங்/ கூந்தலினளே/

வித3ளித/ தா3னவ/ மண்ட3ல/ த3மனீ/
அழித்தவளே/ அசுரர்/ கும்பலை/ அழித்தவளே/

வனஜ/ லோசனா/ ஸுதா4-கர/-ஆனனா/ வர/ தா3யகி/
கமல/ கண்ணீ/ அமிழ்துக் கதிரோன்/ முகத்தவளே/ வரம்/ அருள்பவளே/

அனயமு/ நினு/ கோரி/-உன்னானு/-அம்மா/
எவ்வமயமும்/ உன்னை/ கோரி/ யுள்ளேன்/ அம்மா/

3ங்கா3ரு/ பொ3ம்மா/ (மாயம்மா)
தங்க/ சிலையே/


சரணம் 3
அப4யமு/-ஒஸகி3/ நன்னு/ ப்3ரோவுமு/ ஓ வரதா3/
அபயம்/ அளித்து/ என்னை/ காப்பாயம்மா/ ஒ வரமருள்பவளே/

நெர/ தா3தவு/ க3தா3/
மிக்கு/ கொடையாளி/ யன்றோ/'

அம்பி3கா/ பி3ட்33பை/ கொ3ப்பக3/ த3ய/ ராதா3/
அம்பிகையே/ (உனது) குழந்தையின் மீது/ பெரும்/ கருணை/ வாராதா/

அகி2ல/ லோக/ ஜனனீ/ அனாத2/ ரக்ஷகி/
அனைத்து/ உலகையும்/ ஈன்றவளே/ 'அனாதைகளை/ காப்பவள்/'

அனேடி/ பி3ருது3/ கா3தா3/
எனும்/ விருது/ அன்றோ (உனக்கு)/

வைப4வமு/ க3ல/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/
பெருஞ் சிறப்பு/ உடைய/ சியாம/ கிருஷ்ணனுக்கு/ சோதரியே/

வீர/ ஸ1க்தி/ த்ரிபுர/ ஸுந்த3ரி/ (மாயம்மா)
வீர/ சக்தீ/ திரிபுர/ சுந்தரீ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மாயம்மாயனி - மாயம்மயனி : 'மாயம்ம' என்பது, இவ்விடத்தில் சரியெனப்படவில்லை.

2 - பிலசிதே - பிலிசிதே.

3 - நாதோ அம்பா3 - (நாதோ) அம்பா3.

4 - ந்யாயமா (மீனாக்ஷம்மா) மீனாக்ஷிகிதி3 - ந்யாயமா ஸ்ரீ மீனாக்ஷம்மா மீனாக்ஷிகிதி3 - ந்யாயமா மீனாக்ஷம்மா : இந்த கிருதி முழுதும் முன்னிலையில் உள்ளது. ஆனால், 'மீனாக்ஷிகி' (மீனாட்சிக்கு) என்பது படர்க்கையில் உள்ளது. எனவே, 'மீனாக்ஷிகிதி3' என்பது ஐயத்திற்குரியது.

5 - வேரே - வேரெ.

7 - மண்ட3ல த3மனீ - மண்ட3ல ஸ1மனீ.

8 - நெர தா3தவு - நிர தா3தவு : 'நிர' என்பது சரியெனப்படவில்லை.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
6 - காத்யாயனி காளிகா ப4வானி பா3லா - இவையெல்லாம், 'லலிதா மகா திரிபுர சுந்தரி'யின் பெயர்களாகும். அந்தப் பெயரை (திரிபுர சுந்தரி), சியாமா சாஸ்திரி, மூன்றாவது சரணத்தின் கடைசியில் குறிப்பிடுகின்றார்.

7 - வித3ளித தா3னவ மண்ட3ல த3மனீ - 'வித3ளித' மற்றும் 'த3மனீ' என்பதற்கு 'அழித்தவள்' என்று பொருள்படும். 'த3மனீ' என்பதற்கு வேறுபாடாகிய, 'ஸ1மனீ' என்ற சொல்லும் அங்ஙனமே. எனவே, 'வித3ளித த3மனீ' அல்லது 'வித3ளித ஸ1மனீ' என்பவற்றில், ஏதோ ஒரு சொல் மிகையாகும்.

Top

9 - வீர ஸ1க்தி - 'வீர' என்ற சொல்லுக்கு சக்தி வழிபாட்டில் தனிப்பட்டப் பொருளுண்டு.

கமலத்தில் உறைவோன் - பிரமன்
அமிழ்துக் கதிரோன் - மதி
சியாம கிருஷ்ணன் - விஷ்ணு - ஆசிரியர் முத்திரை

Top


Updated on 30 Mar 2011

No comments:

Post a Comment