Tuesday, April 26, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸ1ங்கரி ஸ1ம்-குரு - ராகம் ஸாவேரி - Sankari Samkuru - Raga Saveri

பல்லவி
1ங்கரி ஸ1ம்-குரு சந்த்3ர முகி2 1அகி2(லா)ண்(டே3)ஸ்1வரி
ஸா1ம்ப4வி ஸரஸிஜ ப4வ வந்தி3தே 2கௌ3ரி அம்ப3

அனுபல்லவி
ஸங்கட ஹாரிணி ரிபு விதா3ரிணி கல்யாணி
ஸதா3 நத 32ல தா3யிகே ஹர நாயிகே ஜக3ஜ்-ஜனனி (ஸ1ங்கரி)

சரணம்
சரணம் 1
ஜம்பு3 பதி விலாஸினி ஜக3(த3)வ(னோ)ல்லாஸினி
கம்பு3 கந்த4ரே ப4வானி 4கபால தா4ரிணி ஸூ1லினி (ஸ1ங்கரி)


சரணம் 2
அங்க3ஜ ரிபு தோஷிணி அகி2ல பு4வன போஷிணி
மங்க3ள ப்ரதே3 5ம்ரு2டா3னி 6மராள ஸன்னிப43மனி (ஸ1ங்கரி)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி ஸ்1யாமளே 7ஸா1(தோ)த3ரி
ஸாம கா3ன லோலே 8பா3லே ஸ(தா3)ர்தி ப4ஞ்ஜன-ஸீ1லே (ஸ1ங்கரி)


பொருள் - சுருக்கம்
  • சங்கரீ! சந்திர வதனத்தினளே, அகிலாண்டேசுவரீ! சாம்பவீ! மலரோனால் தொழப்பெற்றவளே! கௌரீ! அம்பையே!
  • சங்கடங்களைத் தீர்ப்பவளே! பகைவரை அழிப்பவளே! கலியாணீ! எவ்வமயமும் பணிந்தோருக்குப் பயன் அருள்பவளே! அரனின் இல்லாளே! உலகைப் படைத்தவளே!
  • ஜம்பு பதியுடன் களிப்பவளே! உலகைக் காப்பதில் மகிழ்பவளே! சங்குக் கழுத்தினளே! பவானீ! கபாலம் ஏந்துபவளே! சூலமேந்தியே!
  • மன்மதனின் எதிரியை மகிழ்விப்பவளே! அகில புவனத்தையும் பேணுபவளே! மங்களம் அருள்பவளே! மிருடனின் மனைவியே! அன்னம் நிகர் நடையினளே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே, சியாமளா! மெல்லிடையாளே! சாம கானத்தினை விரும்புபவளே! பாலையே! எவ்வமயமும் துயர் களைவதில் ஈடுபாடுடையவளே!

    • நலனருள்வாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
1ங்கரி/ ஸ1ம்/-குரு/ சந்த்3ர/ முகி2/ அகி2ல-அண்ட3-ஈஸ்1வரி/
சங்கரீ/ நலன்/ அருள்வாய் (செய்வாய்)/ சந்திர/ வதனத்தினளே/ அகிலாண்டேசுவரீ/

ஸா1ம்ப4வி/ ஸரஸிஜ ப4வ/ வந்தி3தே/ கௌ3ரி/ அம்ப3/
சாம்பவீ/ மலரோனால்/ தொழப்பெற்றவளே/ கௌரீ/ அம்பையே/


அனுபல்லவி
ஸங்கட/ ஹாரிணி/ ரிபு/ விதா3ரிணி/ கல்யாணி/
சங்கடங்களை/ தீர்ப்பவளே/ பகைவரை/ அழிப்பவளே/ கலியாணீ/

ஸதா3/ நத/ ப2ல/ தா3யிகே/ ஹர/ நாயிகே/ ஜக3த்/-ஜனனி/ (ஸ1ங்கரி)
எவ்வமயமும்/ பணிந்தோருக்கு/ பயன்/ அருள்பவளே/ அரனின்/ இல்லாளே/ உலகை/ படைத்தவளே/


சரணம்
சரணம் 1
ஜம்பு3/ பதி/ விலாஸினி/ ஜக3த்/-அவன/-உல்லாஸினி/
ஜம்பு/ பதியுடன்/ களிப்பவளே/ உலகை/ காப்பதில்/ மகிழ்பவளே/

கம்பு3/ கந்த4ரே/ ப4வானி/ கபால/ தா4ரிணி/ ஸூ1லினி/ (ஸ1ங்கரி)
சங்கு/ கழுத்தினளே/ பவானீ/ கபாலம்/ ஏந்துபவளே/ சூலமேந்தியே/


சரணம் 2
அங்க3ஜ/ ரிபு/ தோஷிணி/ அகி2ல/ பு4வன/ போஷிணி/
மன்மதனின்/ எதிரியை/ மகிழ்விப்பவளே/ அகில/ புவனத்தையும்/ பேணுபவளே/

மங்க3ள/ ப்ரதே3/ ம்ரு2டா3னி/ மராள/ ஸன்னிப4/ க3மனி/ (ஸ1ங்கரி)
மங்களம்/ அருள்பவளே/ மிருடனின் மனைவியே/ அன்னம்/ நிகர்/ நடையினளே/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ ஸ்1யாமளே/ ஸா1த-உத3ரி/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ சியாமளா/ மெல்லிடையாளே/

ஸாம/ கா3ன/ லோலே/ பா3லே/ ஸதா3/-ஆர்தி/ ப4ஞ்ஜன/-ஸீ1லே/ (ஸ1ங்கரி)
சாம/ கானத்தினை/ விரும்புபவளே/ பாலையே/ எவ்வமயமும்/ துயர்/ களைவதில்/ ஈடுபாடுடையவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - கௌ3ரி அம்ப3 - கௌ3ரி.

3 - 2ல தா3யிகே - ப2ல தா3யகி.

Top

மேற்கோள்கள்
1 - அகி2லாண்டே3ஸ்1வரி - திருவானைக்கா (திருவானைக் கோயில்) - அகிலாண்டேசுவரி சமேத ஜம்புகேசுவரர் (ஜம்பு பதி). திருவானைக்கா - 1; திருவானைக்கா - 2 .

4 - கபால தா4ரிணி - கபாலம் ஏந்துபவள் - மேற்கூறிய வலைத் தளத்தில், முன்னாளில், அகிலாண்டேசுவரி உக்கிர ரூபத்துடன் இருந்ததாகவும், ஆதி சங்கரர், அம்மையின் காதுகளில், ஸ்ரீ சக்கிரத்தினை, தாடங்கமாக ஸ்தாபித்து, அம்மையை சாந்தப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

Top

5 - ம்ரு2டா3னி - மிருடன் (கருணையுடையவன்) - சிவன். மிருடனின் இல்லாள் - லலிதா ஸஹஸ்ர நாமம் (564) நோக்கவும்.

6 - மராள ஸன்னிப43மனி - அன்னம் நிகர் நடை - லலிதா ஸஹஸ்ர நாமம் (47) 'மராளி மந்த33மனா' மற்றும் ஸௌந்தரிய லஹரி (91) - காஞ்சி மாமுனிவர் உரை நோக்கவும்.

7 - ஸா1தோத3ரி - மெல்லிடையாள். இமவானுக்கு, 'ஸதோதரன்' (நூற்றுக்கணக்கான குகைகளை உடையவன்) என்று பெயர். அதனால் 'ஸா1தோத3ரி' என்பதற்கு, 'இமவான் மகள்' என்றும் பொருள் கொள்ளலாம்.

8 - பா3லே - பாலை. 9 வயது பெண் - லலிதா ஸஹஸ்ர நாமம் (965) நோக்கவும்.

Top

விளக்கம்
மலரோன் - பிரமன்
ஜம்பு பதி - ஜம்புகேசுவரர் - திருவானைக்கா சிவனின் பெயர்.
கபாலம் - மண்டையோடு
மன்மதனின் எதிரி - சிவன்
சாம கானம் - சாம வேதம் ஓதுதல்

Top


Updated on 26 Apr 2011

2 comments:

  1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
    ஸா1தோத3ரி – மெல்லிடையாள்-- உத3ரம் என்றால் வயிறு என்றல்லவா பொருள்.
    வணக்கம்,
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,

      இந்த ப்ரயோகம் லலிதா ஸஹஸ்ர நாமத்திலுள்ளது. இதனையே, தீக்ஷிதரும் பல கீர்த்தனைகளில் பயன்படுத்தியுள்ளார். உத3ர என்பதற்கு வயிறு என்று பொருளாகும். ஆனால் ஸா1த என்ற சொல்லுடன் இதற்கு இடையென்றுதான் பொருள் கொள்ளவியலும்.

      வணக்கம்,
      கோவிந்தன்.

      Delete