Saturday, April 9, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - கனக ஸை1ல - ராகம் புன்னாக வராளி - Kanaka Saila - Raga Punnaga Varali

பல்லவி
கனக ஸை11விஹாரிணி ஸ்ரீ
காம கோடி பா3லே
ஸுஸீ1லே

அனுபல்லவி
வனஜ ப4வ ஹரி நுதே தே3வி
ஹிம கி3ரிஜே லலிதே ஸததம்
வினதம் மாம் பரிபாலய ஸ1ங்கர
வனிதே 2ஸதி மஹா த்ரிபுர ஸுந்த3ரி (கனக)

சரணம்
சரணம் 1
கம்பு3 கண்டி2 3கஞ்ஜ ஸத்3ரு21 வத3னே
கரி ராஜ க3மனே 4மணி ஸத3னே
51ம்ப3ர விதா3ரி தோஷிணி ஸி1
1ங்கரி ஸதா3 மது4ர பா4ஷிணி (கனக)


சரணம் 2
6சண்ட3 முண்ட32ண்ட3 பண்டி3(தே)க்ஷு
3ண்ட3 கோத3ண்ட3 மண்டி3த பாணி
புண்ட3ரீக 7நய(னா)ர்சித பதே3 த்ரி-
புர வாஸினி
ஸி1வே ஹர விலாஸினி (கனக)


சரணம் 3
ஸ்1யாம(ளா)ம்பி3கே ப4(வா)ப்3தி4 தரணே
8ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலினி ஜனனி
9காமி(தா)ர்த22ல தா3யிகே
காமாக்ஷி 10ஸகல லோக ஸாக்ஷி (கனக)


பொருள் - சுருக்கம்
  • தங்க மலை உறைபவளே! ஸ்ரீ காம கோடி பாலையே! நற்பண்பினளே!
  • மலரோன், அரி போற்றும், தேவீ! மலை மகளே! லலிதையே! சங்கரன் மனைவி, சதியே! மஹா திரிபுர சுந்தரீ!
  • சங்குக் கழுத்தினளே! தாமரை நிகர் வதனத்தினளே! களிறு அரசன் நடையினளே! (சிந்தா) மணி வீட்டிலிருப்பவளே! காமனை எரித்தோனுக்கு மகிழ்வளிப்பவளே! சிவ சங்கரீ! எவ்வமயும் இன்-சொல்லினளே!
  • சண்ட, முண்டர்களை வதைத்த திறமைசாலியே! கரும்புத் துண்டுக் கோதண்டம் அலங்கரிக்கும், கைகளினளே! புண்டரீக நயனன் அர்ச்சிக்கும், திருவடியுடைய, திரிபுரத்தினில் உறையும், சிவையே! அரனுக்கு இனியவளே!
  • சியாமளா! அம்பிகையே! பிறவிக்கடல் கடத்துவிப்பவளே! சியாம கிருஷ்ணனைப் பேணும், ஈன்றவளே! விரும்பிய பொருட்பயனருளும், காமாட்சீ! அனைத்துலக சாட்சியே!

    • எவ்வமயமும் (உன்னைப்) போற்றும் என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கனக/ ஸை1ல/ விஹாரிணி/ ஸ்ரீ/
தங்க/ மலை/ உறைபவளே/ ஸ்ரீ/

காம/ கோடி/ பா3லே/ ஸுஸீ1லே/
காம/ கோடி/ பாலையே/ நற்பண்பினளே/


அனுபல்லவி
வனஜ ப4வ/ ஹரி/ நுதே/ தே3வி/
மலரோன்/ அரி/ போற்றும்/ தேவீ/

ஹிம/ கி3ரிஜே/ லலிதே/ ஸததம்/
மலை/ மகளே/ லலிதையே/ எவ்வமயமும்/

வினதம்/ மாம்/ பரிபாலய/ ஸ1ங்கர/
(உன்னைப்) போற்றும்/ என்னை/ காப்பாய்/ சங்கரன்/

வனிதே/ ஸதி/ மஹா/ த்ரிபுர/ ஸுந்த3ரி/ (கனக)
மனைவி/ சதியே/ மஹா/ திரிபுர/ சுந்தரீ/


சரணம்
சரணம் 1
கம்பு3/ கண்டி2/ கஞ்ஜ/ ஸத்3ரு21/ வத3னே/
சங்கு/ கழுத்தினளே/ தாமரை/ நிகர்/ வதனத்தினளே/

கரி/ ராஜ/ க3மனே/ மணி/ ஸத3னே/
களிறு/ அரசன்/ நடையினளே/ (சிந்தா) மணி/ வீட்டிலிருப்பவளே/

1ம்ப3ர/ விதா3ரி/ தோஷிணி/ ஸி1வ/
காமனை/ எரித்தோனுக்கு/ மகிழ்வளிப்பவளே/ சிவ/

1ங்கரி/ ஸதா3/ மது4ர/ பா4ஷிணி/ (கனக)
சங்கரீ/ எவ்வமயும்/ இன்/-சொல்லினளே/


சரணம் 2
சண்ட3/ முண்ட3/ க2ண்ட3ன/ பண்டி3தே/-இக்ஷு/
சண்ட/ முண்டர்களை/ வதைத்த/ திறமைசாலியே/ கரும்பு/

3ண்ட3/ கோத3ண்ட3/ மண்டி3த/ பாணி/
துண்டு/ கோதண்டம்/ அலங்கரிக்கும்/ கைகளினளே/

புண்ட3ரீக/ நயன/-அர்சித/ பதே3/
புண்டரீக/ நயனன்/ அர்ச்சிக்கும்/ திருவடியுடைய/

த்ரி-புர/ வாஸினி/ ஸி1வே/ ஹர/ விலாஸினி/ (கனக)
திரிபுரத்தினில்/ உறையும்/ சிவையே/ அரனுக்கு/ இனியவளே/


சரணம் 3
ஸ்1யாமளா/-அம்பி3கே/ ப4வ/-அப்3தி4/ தரணே/
சியாமளா/ அம்பிகையே/ பிறவி/ கடல்/ கடத்துவிப்பவளே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பரிபாலினி/ ஜனனி/
சியாம/ கிருஷ்ணனை/ பேணும்/ ஈன்றவளே/

காமித/-அர்த2/ ப2ல/ தா3யிகே/
விரும்பிய/ பொருட்/ பயன்/ அருளும்/

காமாக்ஷி/ ஸகல/ லோக/ ஸாக்ஷி/ (கனக)
காமாட்சீ/ அனைத்து/ உலக/ சாட்சியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - விஹாரிணி ஸ்ரீ - விஹாரிணீ ஸ்ரீ - விஹாரிணி அம்ப3 ஸ்ரீ.

3 - கஞ்ஜ ஸத்3ரு21 வத3னே - கஞ்ச ஸத்3ரு21 வத3னே : 'கஞ்ச' என்பது தவறாகும்.

5 - - ஸம்ப3ர விதாரி தோஷிணி - இவ்விடத்தில் 'தோஷிணி' என்ற சொல்லினால் சிவனைத்தான் குறிப்பதாகும். ஆனால் அதற்கு 'ஸம்ப3ராரி விதா3ரி தோஷிணி' என்றிருக்கவேண்டும். ஆனால் எல்லா புத்தகங்களிலும் 'ஸம்ப3ர விதா3ரி தோஷிணி' என்றே கொடுக்கப்பட்டுள்ளது.
5 - - தோஷிணி - தோஷி : 'தோஷி' என்பது தவறாகும்.

6 - சண்ட3 முண்ட32ண்ட3 - சண்ட32ண்ட32ண்ட3ன : 'சண்ட3 முண்ட3' என்பதே சரியாகும்.

7 - நயனார்சித பதே3 த்ரி-புர வாஸினி - நயனார்சித பத3 புர வாஸினி : பிற்கூறியது தவறாகும்.

8 - ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலினி ஜனனி - ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலித ஜனனி.

9 - காமிதார்த22ல தா3யிகே - காமிதார்த22ல தா3யகி.

Top

மேற்கோள்கள்
1 - காம கோடி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்மையின் பெயர்களிலொன்று - 'காம கோடிகா' (590). ஸ்ரீ கணேசய்யர் அவர்களின் 'ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம்' என்ற புத்தகத்தில், "பரப்ரஹ்மமானது சிவசக்தி ஸாமரஸ்ய ரூபமாக இருப்பதனால், அம்பாளை, 'காம கோடிகா' என்று சொல்லப்பட்டது. அம்பாள் வேறு, பரமசிவன் வேறு என்பது கிடையாது என்று தாத்பர்யம்" எனக் கூறப்பட்டுள்ளது.

1 - பா3லே - பாலை - மஹா திரிபுர சுந்தரி் - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்மையின் பெயர்களிலொன்று 'பா3லா' (965).

4 - மணி ஸத3னே - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்மையின் பெயர்களிலொன்று 'சிந்தாமணி க்3ரூ2ஹாந்தஸ்தா2' (57) அதாவது 'சிந்தாமணி என்னும் இல்லத்தில் இருப்பவள்'.

7 - த்ரி-புர வாஸினி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்மையின் பெயர்களிலொன்று, 'த்ரி-புரா' (626) - மும்மூன்றாக உள்ளவை - குணங்கள் (சத்துவம், ராஜஸம், தாமஸம்), தொழில்கள் (படைத்தல், காத்தல் அழித்தல்) ஆகியவை, 'த்ரி-புரா' எனப்படும்.

Top

விளக்கம்
2 - ஸதி - சதி - இதற்கு, 'மனைவி' என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆயினும், 'தக்ஷன் மகளாகிய பார்வதி' என்றும் பொருள் கொள்ளலாம்.

5 - 1ம்ப3ர விதா3ரி தோஷிணி - 'ஸ1ம்ப3ர விதா3ரி' என்பதற்கு 'சம்பரனை வதைத்தவன்' அதாவது 'மன்மதன்' என்று பொருளாகும். மன்மதனின் மறுபிறப்பெனப்படும், 'ப்ரத்யும்நன்', 'சம்பரன்' என்னும் அரக்கனை வதைத்த கதை' நோக்கவும். இவ்விடத்தில், அடுத்து வரும், 'தோஷிணி' (மகிழ்விப்பவள்) என்பது 'அம்பாள் சிவனை மகிழ்விப்பதாக'. 'சிவன்', 'மன்மதனுக்கு எதிரி' எனப்படும். அதன்படி, 'ஸ1ம்ப3ர விதா3ரி தோஷிணி' என்பதற்கு 'சிவனை மகிழ்விப்பவள்' என்று பொருளாகாது. ஆனால், எல்லா புத்தகங்களிலும், அப்படிப்பட்ட பொருள் கொள்ளப்பட்டிருப்பதனால், இவ்விடத்தில் ஏதோ ஒரு சொல் விடப்பட்டுள்ளது என்று கருதுகின்றேன். எனக்குத் தெரிந்தவரை, இது, 'ஸ1ம்ப3ர வைரி விதா3ரி தோஷிணி' என்றோ அல்லது 'ஸ1ம்ப3ராரி விதா3ரி தோஷிணி' என்றோ இருக்க வேண்டும்.

10 - ஸகல லோக ஸாக்ஷி - 'லோக' என்ற சொல்லுக்கு, 'உலகம்' என்றும் 'மக்கள்' என்றும் பொருளுண்டு. இவ்விடத்தில், 'அனைத்துலக சாட்சி' என்று பொருள் கொள்ளப்பட்டது, ஆனால், 'அனைத்து சீவன்களிலும், 'அந்தர்யாமி' எனப்படும் 'சாட்சி' என்றும் பொருள் கொள்ளலாம்.

Top

தங்க மலை - மேரு மலை
மலரோன் - பிரமன்
சிந்தாமணி இல்லம் - ஸ்ரீ வித்யா நோக்கவும்
புண்டரீக நயனன் - அரி

Top


Updated on 17 Feb 2015

2 comments:

  1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே பதம் பிரித்துக் கூறும் போது ஸ1ம்ப3ர என்பதற்கு காமனை என்று பொருள் கொடுத்துள்ளீர். இது சிறிது குழப்பம் தரும்.
    'ஸ1ம்ப3ராரி விதா3ரி சரியென்று நான் நினைக்கிறேன். ஸ1ம்ப3ராரி வைரி என்றும் சில பாடல்களில் உள்ளது.
    (ஸ்யாமா ஸாஸ்த்ரி பாடல்களில் ஏன் இத்தனை குழப்பங்கள்.)

    வணக்கம்,
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

      நீங்கள் கூறுவது உண்மையே, இதை நான் கவனிக்கவில்லை. ஆனால் எல்லா புத்தகங்களிலும் ஸம்ப3ர விதா3ரி என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுந்த குறிப்பினை நான் இங்கு எழுதியுள்ளேன். தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி,

      வணக்கம்
      கோவிந்தன்.

      Delete