Saturday, April 2, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ப்3ரோவ ஸமயமிதே3 - ராகம் புன்னாக வராளி - Brova Samayamide - Raga Punnaga Varali

பல்லவி
ப்3ரோவ ஸமய(மி)தே3 தே3வீ வினு
தே3வ ராஜ நுதா பர தே3வதா அம்பா3

அனுபல்லவி
பா4வ(ஜா)ரி ராணீ ப4க்த பாலினீ
4வானீ ப்3ரு2ஹத3ம்பா3 நனு (ப்3ரோவ)

சரணம்
சரணம் 1
அம்பு3ஜ த3ள நயனா விது4
பி3ம்ப3 நி(பா4)னனா க3ஜ க3மனா
அம்பி3கே பராகு ஸேய தகு3னா
பி3ம்(பா3)த4ரீ கௌ3ரீ குந்த3 ரத3னா (ப்3ரோவ)


சரணம் 2
அம்ப3ர சர வினுதா
1கத3ம்ப3 வன ப்ரியா ஸ்ரீ லலிதா
2கம்பு33ளா வர தா3ன நிரதா
தும்பு3ரு நாரத3 நுதா 3ஸங்கீ3த ரதா (ப்3ரோவ)


சரணம் 3
4ஸ்1யாம கி3ரி தனயா கு3
தா4ம கர த்4ரு2த மணி வலயா
ஸோம கலா த4ரீ ஸி1வ ப்ரியா
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஹ்ரு23(யா)ம்பு3ஜ நிலயா (ப்3ரோவ)


பொருள் - சுருக்கம்
  • தேவீ! தேவ ராஜன் போற்றும், பர தேவதையே, அம்பா!
  • காமன் பகைவனின் ராணீ! தொண்டரைப் பேணுபவளே! பவானீ! பெரியநாயகியே!
  • தாமரையிதழ் கண்ணினளே! மதி பிம்பம் நிகர் வதனத்தினளே! களிறு நடையினளே! அம்பிகையே! கோவையிதழினளே! கௌரீ! முல்லைப் பல்லினளே!
  • வானுறைவோரால் போற்றப்பெற்றவளே! கதம்ப வனத்தினை விரும்பும், ஸ்ரீ லலிதையே! சங்குக் கழுத்தினளே! வரமளிப்பதில் ஈடுபாடுடையவளே! தும்புரு, நாரதரால் போற்றப்பெற்றவளே! இசையில் மகிழ்பவளே!
  • கரு-நீல மலை மகளே! பண்புகளின் உறைவிடமே! கைகளில் மணி வளையல்கள் அணிபவளே! மதிப் பிறை அணிபவளே! சிவனுக்குப் பிரியமானவளே! சியாம கிருஷ்ணனின் இதயக் கமலத்தில் நிலைபெற்றவளே!

  • கேளாய்.
    • என்னைக் காப்பதற்கு தருணமிதுவே.

    • பராக்கு செய்யத் தகுமா?

    • என்னைக் காப்பதற்கு தருணமிதுவே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்3ரோவ/ ஸமயமு/-இதே3/ தே3வீ/ வினு/
காப்பதற்கு/ தருணம்/ இதுவே/ தேவீ/ கேளாய்/

தே3வ/ ராஜ/ நுதா/ பர/ தே3வதா/ அம்பா3/
தேவ/ ராஜன்/ போற்றும்/ பர/ தேவதையே/ அம்பா/


அனுபல்லவி
பா4வஜ/-அரி/ ராணீ/ ப4க்த/ பாலினீ/
காமன்/ பகைவனின்/ ராணீ/ தொண்டரை/ பேணுபவளே/

4வானீ/ ப்3ரு2ஹத்-அம்பா3/ நனு/ (ப்3ரோவ)
பவானீ/ பெரியநாயகியே/ என்னை/ காப்பதற்கு...


சரணம்
சரணம் 1
அம்பு3ஜ/ த3ள/ நயனா/ விது4/
தாமரை/ யிதழ்/ கண்ணினளே/ மதி/

பி3ம்ப3/ நிப4/-ஆனனா/ க3ஜ/ க3மனா/
பிம்பம்/ நிகர்/ வதனத்தினளே/ களிறு/ நடையினளே/

அம்பி3கே/ பராகு/ ஸேய/ தகு3னா/
அம்பிகையே/ பராக்கு/ செய்ய/ தகுமா/

பி3ம்ப3/-அத4ரீ/ கௌ3ரீ/ குந்த3/ ரத3னா/ (ப்3ரோவ)
கோவை/ யிதழினளே/ கௌரீ/ முல்லை/ பல்லினளே/


சரணம் 2
அம்ப3ர/ சர/ வினுதா/
வான்/ உறைவோரால்/ போற்றப்பெற்றவளே/

கத3ம்ப3/ வன/ ப்ரியா/ ஸ்ரீ லலிதா/
கதம்ப/ வனத்தினை/ விரும்பும்/ ஸ்ரீ லலிதையே/

கம்பு3/ க3ளா/ வர/ தா3ன/ நிரதா/
சங்கு/ கழுத்தினளே/ வரம்/ அளிப்பதில்/ ஈடுபாடுடையவளே/

தும்பு3ரு/ நாரத3/ நுதா/ ஸங்கீ3த/ ரதா/ (ப்3ரோவ)
தும்புரு/ நாரதரால்/ போற்றப்பெற்றவளே/ இசையில்/ மகிழ்பவளே/


சரணம் 3
ஸ்1யாம/ கி3ரி/ தனயா/ கு3ண/
கரு-நீல/ மலை/ மகளே/ பண்புகளின்/

தா4ம/ கர/ த்4ரு2த/ மணி/ வலயா/
உறைவிடமே/ கைகளில்/ அணிபவளே/ மணி/ வளையல்கள்/

ஸோம/ கலா/ த4ரீ/ ஸி1வ/ ப்ரியா/
மதி/ பிறை/ அணிபவளே/ சிவனுக்கு/ பிரியமானவளே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஹ்ரு23ய/-அம்பு3ஜ/ நிலயா/ (ப்3ரோவ)
சியாம/ கிருஷ்ணனின்/ இதய/ கமலத்தில்/ நிலைபெற்றவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - கம்பு33ளா - கம்பு33ள.

3 - ஸங்கீ3த ரதா - ஸங்கீ3த ரதா3 : 'ரதா3' என்பது தவறாகும்.

Top

மேற்கோள்கள்
1 - கத3ம்ப3 வன ப்ரியா ஸ்ரீ லலிதா - கதம்ப வனத்தினை விரும்பும் ஸ்ரீ லலிதை - 'கத3ம்ப3 வன வாஸினி' - லலிதா ஸஹஸ்ர நாமம் (60) நோக்கவும். மதுரை, 'கதம்ப வனம்' எனப்படும். 'கதம்ப வன'த்தினைப் பற்றி, மேற்கொண்டு விவரங்கள் அறிய, ‘லலிதோபாக்கியானம்’ மற்றும் ஸ்ரீ வித்யா நோக்கவும்.

Top

விளக்கம்
4 - ஸ்1யாம கி3ரி தனயா - கரு-நீல மலை மகள் - இவ்விடத்தில் 'கரு-நீல மலை' என்பது 'இமய மலை'யைக் குறிக்கும். இவ்விடத்தில், வேறு எந்த பொருளும் பொருந்தாது. ஆனால், இமய மலைக்கு அத்தகைய பெயர் உண்டா என்று தெரியவில்லை.

காமன் பகைவன் - சிவன்
பெரியநாயகி - உலக நாயகி என்றும் கொள்ளலாம்
வானுறைவோர் - தேவர்கள்

Top


Updated on 02 Apr 2011

No comments:

Post a Comment