Monday, May 2, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பார்வதி நினு - ராகம் கல்க33 - Parvati Ninu - Raga Kalgada

பல்லவி
1பார்வதி நினு நே நெர நம்மிதி ஸு1
பாணீ ப்3ரோவு 2பரா(கி)க(னே)லே ஸுஸீ1லே

அனுபல்லவி
கீ3ர்வாண வந்தி3த பத3 ஸாரஸ
ஸங்கீ3த லோலே ஸுகு3ண ஜாலே 3ஜால(மே)லே காமாக்ஷீ (பார்வதி)

சரணம்
சரணம் 1
4ண்ட3 தை3த்ய க2ண்ட3(னா)க2ண்ட3ல வினுதா
மார்தாண்ட3 கோடி தேஜ நீர(ஜா)க்ஷீ நிகி2ல ஸாக்ஷீ (பார்வதி)


சரணம் 2
இந்து3 வத3னா குந்த3 ரத3னா ஸிந்து4ர க3மனா
மகரந்த3 வாணீ நீல மேக4 வேணீ 4கீ3ர்வாணீ (பார்வதி)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ ஸி1வ ஸ1ங்கரீ கௌ3ரீ கு3
தா4ம காம பீட2 வாஸினீ ஸா1ம்ப4வீ ம்ரு2டா3னீ (பார்வதி)


பொருள் - சுருக்கம்
  • பார்வதீ! கிளி ஏந்துபவளே! நற்பண்பினளே!
  • வானோர் தொழும் கமலத் திருவடியினளே! சங்கீதத்தினை விரும்புபவளே! நற்பண்புக் குவியலே! காமாட்சீ!
  • பண்டாசுரனை வதைத்தவளே! இந்திரனால் போற்றப்பெற்றவளே! பரிதி கோடி நிகர் ஒளியினளே! கமலக்கண்ணீ! பல்லுலக சாட்சியே!
  • மதி முகத்தினளே! முல்லைப் பல்லினளே! களிறு நடையினளே! தேன் குரலினளே! கார்முகில் குழலியே! சொல்லரசியே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! சிவ சங்கரீ! கௌரீ! பண்புகளின் உறைவிடமே! காம கோடி பீடத்திலுறைபவளே! சாம்பவீ! மிருடானீ!

  • காப்பாய்..

    • உன்னை நான் மிக்கு நம்பினேன்.
    • பராக்கு இன்னமும் ஏனம்மா?
    • தாமதமேனம்மா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பார்வதி/ நினு/ நே/ நெர/ நம்மிதி/ ஸு1க/
பார்வதீ/ உன்னை/ நான்/ மிக்கு/ நம்பினேன்/ கிளி/

பாணீ/ ப்3ரோவு/ பராகு/-இகனு/-ஏலே/ ஸுஸீ1லே/
ஏந்துபவளே/ காப்பாய்/ பராக்கு/ இன்னமும்/ ஏனம்மா/ நற்பண்பினளே/


அனுபல்லவி
கீ3ர்வாண/ வந்தி3த/ பத3/ ஸாரஸ/
வானோர்/ தொழும்/ திருவடியினளே/ கமல/

ஸங்கீ3த/ லோலே/ ஸுகு3ண/ ஜாலே/ ஜாலமு/-ஏலே/ காமாக்ஷீ/ (பார்வதி)
சங்கீதத்தினை/ விரும்புபவளே/ நற்பண்பு/ குவியலே/ தாமதம்/ ஏனம்மா/ காமாட்சீ/


சரணம்
சரணம் 1
4ண்ட3/ தை3த்ய/ க2ண்ட3ன/-ஆக2ண்ட3ல/ வினுதா/
பண்ட/ அசுரனை/ வதைத்தவளே/ இந்திரனால்/ போற்றப்பெற்றவளே/

மார்தாண்ட3/ கோடி/ தேஜ/ நீரஜ/-அக்ஷீ/ நிகி2ல/ ஸாக்ஷீ/ (பார்வதி)
பரிதி/ கோடி/ (நிகர்) ஒளியினளே/ கமல/ கண்ணீ/ பல்லுலக/ சாட்சியே/


சரணம் 2
இந்து3/ வத3னா/ குந்த3/ ரத3னா/ ஸிந்து4ர/ க3மனா/
மதி/ முகத்தினளே/ முல்லை/ பல்லினளே/ களிறு/ நடையினளே/

மகரந்த3/ வாணீ/ நீல/ மேக4/ வேணீ/ கீ3ர்வாணீ/ (பார்வதி)
தேன்/ குரலினளே/ கார்/ முகில்/ குழலியே/ சொல் அரசியே/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ ஸி1வ/ ஸ1ங்கரீ/ கௌ3ரீ/ கு3ண/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ சிவ/ சங்கரீ/ கௌரீ/ பண்புகளின்/

தா4ம/ காம/ பீட2/ வாஸினீ/ ஸா1ம்ப4வீ/ ம்ரு2டா3னீ/ (பார்வதி)
உறைவிடமே/ காம/ (கோடி) பீடத்தில்/ உறைபவளே/ சாம்பவீ/ மிருடானீ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பார்வதி நினு நே நெர - பார்வதீ நினு நெர.

2 - பராகிகனேலே ஸுஸீ1லே - பராகிகனேல ஸுஸீ1ல.

3 - ஜாலமேலே - ஜாலமேல.

Top

மேற்கோள்கள்
4 - கீ3ர்வாணீ - சொல்லரசி - பிறவியில், ஊமை-செவிடாக இருந்த (பின்னர்) 'மூக கவி'க்கு, காமாட்சி பேச்சு அருளியதாக, காஞ்சி தல புராணம் கூறும். அவர், காமாட்சியைப் புகழ்ந்து, 'மூக பஞ்ச ஸ1தி' என்ற தோத்திரத்தினை இயற்றினார். ‘மூக கவி’ (appendix 2 நோக்கவும்).

Top

விளக்கம்
3 - ஜாலமேலே - தெலுங்கில் ஒரே மாதிரியான இரண்டு சொற்கள் 'jAlam' மற்றும் 'dzAlam' உண்டு. 'jAlam' என்பதற்கு, இவ்விடத்தில், 'ஏமாற்றுதல்' என்றும், 'dzAlam' என்பதற்கு 'தாமதம்' என்றும் பொருளாகும். இரண்டு பொருள்களுமே இவ்விடத்தில் பொருந்தும். இங்கு, 'தாமதம்' என்று பொருள் கொள்ளப்பட்டது. 'ஏமாற்றுதல்' என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

சாம்பவி - சம்பு (சிவன்) மனைவி
மிருடானி - மிருடன் (சிவன்) மனைவி

Top


Updated on 02 May 2011

3 comments:

  1. அன்புள்ள கோவிந்தன் அவர்களே

    Re : pArvati ninu - kalgaDa
    இப்பாடலை Dr பந்துலு ரமா அவர்கள் பாடக்கேட்டேன்.
    http://www.sangeethamshare.org/tvg/SEASON_2013/025-Pantula_Rama/#
    பார்வதியின் பெயர்கள் எல்லாமே நெடிலாகவும் விளிச்சொற்களாகவும் நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அவர் பாடும்போது பெரும்பான்மையானவை குறில்போல எனக்குத் தோன்றியது. தமிழ் போலல்லாது தெலுங்கில் குறில் கூட விளிச்சொல்லாகும் அல்லவா.
    நன்றி
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,
      அந்த வலைத்தளத்தில் பாடலைக் கேட்டேன். என்னிடம் ஸௌம்யா பாடிய பாடலும் உள்ளது. அதையும் கேட்டேன். ஸ்யாமா சாஸ்திரிகள் பாட்டுக்களின் notation-ஐயும் பார்த்தேன். பந்துல ரமாவை விட ஸௌம்யா சிறிது மெள்ள நடையில் பாடுகின்றாள். புத்தகத்தில் நெடில் உள்ள இடங்களிலெல்லாம் தகுந்த இடைவெளி கொடுக்கப்படவில்லை. எனக்குத் தெரிந்தவரை இந்தப்பாடல் slow tempo-வில் பாடப்பட வேண்டும். ஆனால் ஸ்வரம் அமைத்தவர்களும், அதையொட்டிப் பாடியவர்களும் தீவிர கதியில்தான் பாடம் கற்றுள்ளனர் என்று நினைக்கின்றேன். இதைப் பற்றி இன்னும் ஆராய்ந்து எழுத எனக்கு சங்கீத ஞானம் போதாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். பாடல்களை உணர்ந்து பாடும் வழக்கம் நமது சங்கீத வித்வான்களிடமில்லை. எனவே, இவையெல்லாம் ஒரு துக்கடா மாதிரிதான். இதிலே எப்படிப் பாடினாலென்ன. கேட்பவர்களுக்கு, முக்கால்வாசிப் பேர்களுக்குப் புரியப்போவதில்லை. அதனால் எப்படி வேண்டுமானாலும் பாடலாம். எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்பது போல.
      நன்றி,
      வணக்கம்,
      கோவிந்தன்.

      Delete