Wednesday, May 18, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பாஹி ஸ்ரீ கி3ரி ராஜ - ராகம் ஆனந்த பைரவி - Pahi Sri Giri Raja - Raga Ananda Bhairavi

பல்லவி
பாஹி ஸ்ரீ கி3ரி ராஜ ஸுதே கருணா கலிதே
பத3 ஸரோஜ(ம)னுஸராமி தே அம்ப3

அனுபல்லவி
தே3ஹி 1மதே(ர)னுபம க3திம் 2மே ஏ(கா)ம்ர பதி ஸதி ஸுத3தி
தேஜஸாऽதுலித தி3வ்ய மூர்தே லலிதே அதி லலிதே (பாஹி)

சரணம்
சரணம் 1
தே3வி புராணி நிக3ம வினுதே ப்ரீதி(ரி)ஹ வஸது
தே மானதே3 அனுதி3ன(ம)ஜிதே 3யுதி4 ஜி(தே)ந்த்3ர விமதே
4தே3வாऽவிரத க்ரு2த நுதே 5காம கோடி பீட23தே
6தீ3ன ஜன நிகரே பு4வி பர தே3வதே ஸுசரிதே (பாஹி)


சரணம் 2
7நீப வனீ பரம நிவஸனே நம்ர ஜக3(த3)வன
நேத்ரி ஜனனி கனக வஸனே 82ஷ விஸா1ல நயனே
9கோ3பாயித ஸுகவி ஜனே பாப 10தாப 112ண்ட3ன நிபுணே
குந்தள விஜித க4னே க4ன ஜக4னே 12கலாவதி கலே (பாஹி)


சரணம் 3
காமித தா4த்ரி கமல முகி2 காமாக்ஷி அகி2ல ஸாக்ஷி
13காம ரதி 14காம ஸு142லதே3 த்4ரு2த ஸுக3ந்த44ன லதே
ஸ்1யாமே அத்3ய ப4வ மம முதே3 ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸத்3-வரதே3
15ஸ்1யாமளே ஆஸ்1ரித ரதே 16விதி3த க3தே 17ஸதா3 இஹ வரதே3 (பாஹி)


பொருள் - சுருக்கம்
  • ஸ்ரீ மலையரசன் மகளே! கருணையுடைவளே! அம்பையே!
  • ஏகாம்ர பதியின் இல்லாளே! அழகிய பற்களினளே! ஒளியில், உவமையற்ற, திவ்விய மூர்த்தியே! மிக்கு அழகிய, லலிதையே!
  • தேவீ! பழம்பொருளே! மறைகளால் போற்றப்பெற்றவளே! அனுதினமும், பெருமை அருள்பவளே! வெல்லப்படாதவளே! போரில், மூளையற்ற, அசுர மன்னர்களை வென்றவளே! தேவர்களால், இடையறாது போற்றப்பெற்றவளே! காம கோடி பீடத்தில் உறைபவளே! புவியில், எளியோரின் களஞ்சியமே! பரதேவதையே! புனித சரிதத்தினளே!
  • உயரிய, கதம்ப வனத்தில் உறைபவளே! புவியில், பணியும் மக்களைக் காப்பதில் தலைவியே! ஈன்றவளே! பீதாம்பரம் அணிந்தவளே! அகன்ற, மீன் கண்களினளே! நற்கவிகளைப் பேணுபவளே! பாவங்கள், வெம்மைகளை நீக்குவதில் வல்லவளே! முகிலை வெல்லும் கார்குழலியே! பெருத்த இடுப்பினளே! கலாவதியே! கலையே!
  • விரும்பியதருள்பவளே! கமல வதனத்தினளே! காமாட்சீ! பல்லுலக சாட்சியே! காமத்தில் களிப்பவளே! மன்மதனுக்கு நற்பயன் அருள்பவளே! புனுகு, வாசனை சந்தனம் அணிந்தவளே! கார்வண்ணத்தினளே! சியாம கிருஷ்ணனுக்கு, நல்ல வரமருள்பவளே! சியாமளையே! அண்டியோரின் களிப்பே! பேரறிவினளே! எவ்வமயமும், இங்கு வரமருள்பவளே!

    • காப்பாய்.
    • உனது கமலத் திருவடியினை அனுசரிக்கின்றேன்.
    • தருவாய், எனது அறிவிற்கு, ஒப்பற்ற புகலினை.
    • இங்கு, உனது பரிவு இருக்கட்டும்.
    • இப்போது, எனது களிப்பாவாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ ஸ்ரீ/ கி3ரி/ ராஜ/ ஸுதே/ கருணா/ கலிதே/
காப்பாய்/ ஸ்ரீ/ மலை/ யரசன்/ மகளே/ கருணை/ யுடைவளே/

பத3 ஸரோஜம்-அனுஸராமி தே அம்ப3
திருவடி/ கமல/ அனுசரிக்கின்றேன்/ உனது/ அம்பையே/


அனுபல்லவி
தே3ஹி/ மதே:/ அனுபம/ க3திம்/ மே/ ஏக-அம்ர/ பதி/ ஸதி/ ஸுத3தி/
தருவாய்/ அறிவிற்கு/ ஒப்பற்ற/ புகலினை/ எனது/ ஏகாம்ர/ பதியின்/ இல்லாளே/ அழகிய பற்களினளே/

தேஜஸா/-அதுலித/ தி3வ்ய/ மூர்தே/ லலிதே/ அதி/ லலிதே/ (பாஹி)
ஒளியில்/ உவமையற்ற/ திவ்விய/ மூர்த்தியே/ லலிதையே/ மிக்கு/ அழகிய/


சரணம்
சரணம் 1
தே3வி/ புராணி/ நிக3ம/ வினுதே/ ப்ரீதி:/-இஹ/ வஸது/
தேவீ/ பழம்பொருளே/ மறைகளால்/ போற்றப்பெற்றவளே/ பரிவு/ இங்கு/ இருக்கட்டும்/

தே/ மானதே3/ அனுதி3னம்/-அஜிதே/ யுதி4/ ஜித/-இந்த்3ர/ விமதே/
உனது/ பெருமை அருள்பவளே/ அனுதினமும்/ வெல்லப்படாதவளே/ போரில்/ வென்றவளே/ (அசுர) மன்னர்களை/ மூளையற்ற/

தே3வ/-அவிரத/ க்ரு2த நுதே/ காம/ கோடி/ பீட2/ க3தே/
தேவர்களால்/ இடையறாது/ போற்றப்பெற்றவளே/ காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/

தீ3ன ஜன/ நிகரே/ பு4வி/ பர/ தே3வதே/ ஸுசரிதே/ (பாஹி)
எளியோரின்/ களஞ்சியமே/ புவியில்/ பர/ தேவதையே/ புனித சரிதத்தினளே/


சரணம் 2
நீப/ வனீ/ பரம/ நிவஸனே/ நம்ர/ ஜக3த்/-அவன/
கதம்ப/ வனத்தில்/ உயரிய/ உறைபவளே/ பணியும் மக்களை/ புவியில்/ காப்பதில்/

நேத்ரி/ ஜனனி/ கனக/ வஸனே/ ஜ2ஷ/ விஸா1ல/ நயனே/
தலைவியே/ ஈன்றவளே/ பொன்/ ஆடை (பீதாம்பரம்)/ அணிந்தவளே/ மீன்/ அகன்ற/ கண்களினளே/

கோ3பாயித/ ஸுகவி ஜனே/ பாப/ தாப/ க2ண்ட3ன/ நிபுணே/
பேணுபவளே/ நற்கவிகளை/ பாவங்கள்/ வெம்மைகளை/ நீக்குவதில்/ வல்லவளே/

குந்தள/ விஜித/ க4னே/ க4ன/ ஜக4னே/ கலாவதி/ கலே/ (பாஹி)
கார்குழலி/ வெல்லும்/ முகிலை/ பெருத்த/ இடுப்பினளே/ கலாவதியே/ கலையே/


சரணம் 3
காமித/ தா4த்ரி/ கமல/ முகி2/ காமாக்ஷி/ அகி2ல/ ஸாக்ஷி/
விரும்பியது/ அருள்பவளே/ கமல/ வதனத்தினளே/ காமாட்சீ/ பல்லுலக/ சாட்சியே/

காம/ ரதி/ காம/ ஸு14/ ப2லதே3/ த்4ரு2த/ ஸுக3ந்த4/ க4ன/ லதே/
காமத்தில்/ களிப்பவளே/ மன்மதனுக்கு/ நற்/ பயன் அருள்பவளே/ அணிந்தவளே/ சந்தனம்/ வாசனை/ புனுகு/

ஸ்1யாமே/ அத்3ய/ ப4வ/ மம/ முதே3/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸத்3/-வரதே3/
கார்வண்ணத்தினளே/ இப்போது/ ஆவாய்/ எனது/ களிப்பு/ சியாம/ கிருஷ்ணனுக்கு/ நல்ல/ வரமருள்பவளே/

ஸ்1யாமளே/ ஆஸ்1ரித/ ரதே/ விதி3த க3தே/ ஸதா3/ இஹ/ வரதே3/ (பாஹி)
சியாமளையே/ அண்டியோரின்/ களிப்பே/ பேரறிவினளே/ எவ்வமயமும்/ இங்கு/ வரமருள்பவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மே ஏகாம்ர - மே (அம்ப3) ஏகாம்ர.

2 - ஏகாம்ர பதி ஸதி ஸுத3தி - ஏகாம்ர பதி ஸுத3தி ஸதி : பிற்கூறியது சரியெனத் தோன்றவில்லை.

3 - ஜிதேந்த்3ர விமதே - ஜிதேந்த்3ர வினுதே.

4 - தே3வாऽவிரத க்ரு2த நுதே - தே3வாऽவிர க்ரு2த நுதே : பிற்கூறியது சரியெனத் தோன்றவில்லை.

6 - தீ3ன ஜன நிகரே - தீ3ன ஜன நிஜ கரே : பிற்கூறியது சரியெனத் தோன்றவில்லை.

Top

9 - கோ3பாயித - கோ3பயித.

11 - 2ண்ட3ன நிபுணே - க2ண்ட3 நிபுணே - க2ண்ட3ன சண.

12 - கலாவதி கலே - கலாவதி ரதே - கலாவதி க4னே.

15 - ஸ்1யாமளே ஆஸ்1ரித ரதே - ஸ்1யாமளே உசித ரதே : பிற்கூறியது சரியெனத் தோன்றவில்லை.

17 - ஸதா3 இஹ வரதே3 - ஸதே3ஹ வரதே3.

Top

மேற்கோள்கள்
5 - காம கோடி பீட23தே - காம கோடி பீடத்தில் உறைபவள் - லலிதா ஸஹஸ்ர நாமம் (589) - 'காம கோடிகா'. காம கோடி பீடம்

7 - நீப வனீ பரம நிவஸனே - உயரிய கதம்ப வனத்தினில் உறைபவள். லலிதா ஸஹஸ்ர நாமம் (60) - 'கதம்ப வன வாஸினி'. ஸௌந்தரிய லஹரி (8) - 'நீப உபவனவதி'.

10 - தாப - வெம்மைகள் - முவ்வெம்மைகள் - தன்னால் - தெய்வத்தினால் - இயற்கையினால் உண்டாவன

12 - கலாவதி கலே - கலாவதியே, கலையே - 64 கலைகளின் வடிவமானவள் - லலிதா ஸஹஸ்ர நாமம் (327) - 'சதுஷ்-ஷஷ்டி-கலாமயீ' (236) - அம்மையே கலைகளென.

13 - காம ரதி - காமத்தினில் களிப்பவள் - லலிதா ஸஹஸ்ர நாமம் (863) - 'காம கேளி தரங்கிதா'.

Top

விளக்கம்
1 - அனுபம க3திம் - புத்தகங்களில், இதற்கு, 'ஞானம்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

3 - யுதி4 ஜிதேந்த்3ர விமதே - இதற்கு, புத்தகங்களில், 'இந்திரனை வென்றும், பணிவுடையவள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. என் சிற்றறிவுக்கு எட்டியவரையில், இது, அம்மை, பல அசுர மன்னர்களைப் போரில் வென்றதனைக் குறிக்கும் என்று நினைக்கின்றேன்.

8 - 2ஷ விஸா1ல நயனே - அகன்ற மீன் கண்களினள் - இது 'மீனாட்சி'யினைக் குறிக்கலாம்.

14 - காம ஸு142லதே3 - மன்மதனுக்கு நற்பயன் அருள்பவள் - சிவன், மன்மதனை எரித்தபின்னர், காமாட்சி அவனை (உடலின்றி) உயிர்ப்பித்தாள்.

16 - விதி3த க3தே - இதன் சரியான பொருள் விளங்கவில்லை. புத்தகங்களில், இதற்கு, 'அறிவு படைத்தவள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே இங்கும் ஏற்கப்பட்டது.

மலையரசன் - இமயமலை
ஏகாம்ர பதி - ஏகாம்ரேசர் (ஏகாம்பரேசர்) - காஞ்சியில் சிவனின் பெயர்

Top


Updated on 18 May 2011

8 comments:

  1. திரு கோவிந்தன் அவர்களே

    சரணம் 2- க4ன/ ஜக4னே- க4ன/ ஜக4னே: பெண்களுக்கு சிறிய இடை தானே அழகு என்று கூறப்படும்?

    வணக்கம்
    கோவிந்தசாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தசாமி அவர்களே,

    'ஜக4ன' என்பதற்கு 'இடுப்பு' என்று பொருள் கொள்ளவேண்டும். 'இடை' என்பது தவறாகும். அதனைத் திருத்திவிட்டேன்.
    தவற்றினை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

    வணக்கம்
    கோவிந்தன்

    ReplyDelete
  3. திரு கோவிந்தன் அவர்களே
    'ஜக4ன' என்பதற்கு திருத்தப்பட்ட பொருள் என்ன?


    வணக்கம்
    கோவிந்தசாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

      இடுப்பு என்று பொருள் கொடுத்துள்ளேன்.
      வணக்கம்
      கோவிந்தன்

      Delete
  4. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
    நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பிய சந்தேகம் க4ன/ ஜக4னே என்பது சரியா?
    வணக்கம்
    கோவிந்தசாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

      தாங்கள் சுட்டிக்காட்டியதன்பேரில் எனது தவறினைத் திருத்திவிட்டேன். அதற்கு நன்றியும் தெரிவித்திருக்கின்றேன்.

      வணக்கம்
      கோவிந்தன்.

      Delete
  5. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
    என்னுடைய சந்தேகத்தினை நான் தெளிவாகக் கேட்கவில்லை என்று எண்ணுகிறேன்.
    பெண்களுக்கு சிறுத்த இடையும் (இடுப்பு) பெருத்தமுலையும் அழகு என்று கூறப்படும். க4ன ஜக4னே- பெருத்த இடுப்பினளே என்பது சரியா என்பது தான் என் கேள்வி. ஜக4ன என்பது அகராதியில் கிடைக்கவில்லை. இதி இடைச்செருகலா
    வணக்கம்,
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,

      இடை வேறு இடுப்பு வேறு. க4ன ஜக4னே என்ற ப்ரயோகம் தீக்ஷிதர் க்ருதி ஞானாம்பி3கே யிலும் வருகின்றது. வேறு ஏதோ ஸ்லோகத்திலும் அந்த ப்ரயோகத்தைக் கண்டதாக நினைவு.
      jaghanamu -
      http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?page=458&table=brown&display=utf8

      வணக்கம்,
      கோவிந்தன்.

      Delete