Monday, May 30, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - காமாக்ஷி லோக சாக்ஷிணீ - ராகம் மத்யமாவதி - Kamakshi Loka Sakshini - Raga Madhyamavati

கீதம்
கீதம் 1
காமாக்ஷி லோக ஸாக்ஷிணீ
கா(மா)ரி மனோ-ஹாரிணீ
காமாக்ஷி கஞ்சி காமாக்ஷி
பாஹி மாம் பாஹி மாம் (ப3ங்கா3ரு) பாஹி


கீதம் 2
பங்கஜ த3ள லோசனே உமே
ஸங்கட ப4ய மோசனே ஸி1வே
குஞ்ஜர ஸம க3மனே ரமணே
1மஞ்ஜுள தம நயனே ஹரிணி


கீதம் 3
4ண்ட3 தை3த்ய க2ண்ட3ன பண்டி3தே
2அண்ட3ஜ ஹரி கி3(ரீ)ஸ1 மண்டி3தே
புண்ட3ரீக ம்ரு2து3 பத3 யுக3ளே
3மண்ட3ல ஸ்தி2தே லலிதே வரதே3


கீதம் 4
4காம கோடி பீட2 வாஸினீ
காமி(தா)ர்த2 ஸு142ல தா3யிகே
ஸாம கா3ன ஸ்1ருதி ஸம்மோதி3னி
ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலித ஜனனி


பொருள் - சுருக்கம்
  • காமாட்சீ! உலக சாட்சியே! காமன் பகைவன் உள்ளம் கவர்பவளே! காஞ்சி காமாட்சீ! பங்காரு காமாட்சீ!
  • தாமரை யிதழ்க் கண்ணீ! உமையே! சங்கடம், பயத்தினின்று விடுவிப்பவளே! சிவையே! களிறு நிகர் நடையினளே! இனியவளே! பெண்மான் நிகர், அழகு மிகு கண்களினளே!
  • பண்டாசுரனை வதைத்த, வல்லவளே! அண்டத்திலுதித்தோன், அரி, மலையீசன் ஆகியோர் போற்றுபவளே! (ஆகியோரை அணிபவளே!) தாமரை நிகர், மிருதுவான திருவடி யிணையினளே! மண்டலத்துறையும், லலிதையே! வரமருள்பவளே!
  • காம கோடி பீடத்திலுறைபவளே! விரும்பிய பொருட்களின், நற்பயன் அருள்பவளே! சாம கானத்தின், சுருதியில் மகிழ்பவளே! சியாம கிருஷ்ணனைப் பேணும், ஈன்றவளே!

    • காப்பாயென்னை.



பதம் பிரித்தல் - பொருள்

கீதம்
கீதம் 1
காமாக்ஷி/ லோக/ ஸாக்ஷிணீ/
காமாட்சீ/ உலக/ சாட்சியே/

காம/-அரி/ மனோ/-ஹாரிணீ/
காமன்/ பகைவன்/ உள்ளம்/ கவர்பவளே/

காமாக்ஷி/ கஞ்சி/ காமாக்ஷி/
காமாட்சீ/ காஞ்சி/ காமாட்சீ/

பாஹி/ மாம்/ பாஹி/ மாம்/ (ப3ங்கா3ரு)/ பாஹி/
காப்பாய்/ என்னை/ காப்பாய்/ என்னை/ (பங்காரு)/ காப்பாய்/


கீதம் 2
பங்கஜ/ த3ள/ லோசனே/ உமே/
தாமரை/ யிதழ்/ கண்ணீ/ உமையே/

ஸங்கட/ ப4ய/ மோசனே/ ஸி1வே/
சங்கடம்/ பயத்தினின்று/ விடுவிப்பவளே/ சிவையே/

குஞ்ஜர/ ஸம/ க3மனே/ ரமணே/
களிறு/ நிகர்/ நடையினளே/ இனியவளே/

மஞ்ஜுள/ தம/ நயனே/ ஹரிணி/
அழகு/ மிகு/ கண்களினளே/ பெண்மான் (நிகர்)/


கீதம் 3
4ண்ட3/ தை3த்ய/ க2ண்ட3ன/ பண்டி3தே/
பண்ட/ அசுரனை/ வதைத்த/ வல்லவளே/

அண்ட3ஜ/ ஹரி/ கி3ரி/-ஈஸ1/ மண்டி3தே/
அண்டத்திலுதித்தோன்/ அரி/ மலை/ யீசன்/ (ஆகியோர்) போற்றுபவளே/ (ஆகியோரை) அணிபவளே/

புண்ட3ரீக/ ம்ரு2து3/ பத3/ யுக3ளே/
தாமரை (நிகர்)/ மிருதுவான/ திருவடி/ யிணையினளே/

மண்ட3ல/ ஸ்தி2தே/ லலிதே/ வரதே3/
மண்டலத்து/ உறையும்/ லலிதையே/ வரமருள்பவளே/


கீதம் 4
காம/ கோடி/ பீட2/ வாஸினீ/
காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/

காமித/-அர்த2/ ஸு142ல/ தா3யிகே/
விரும்பிய/ பொருட்களின்/ நற்பயன்/ அருள்பவளே/

ஸாம/ கா3ன/ ஸ்1ருதி/ ஸம்மோதி3னி/
சாம/ கானத்தின்/ சுருதியில்/ மகிழ்பவளே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பாலித/ ஜனனி/
சியாம/ கிருஷ்ணனை/ பேணும்/ ஈன்றவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - காம கோடி பீட2 வாஸினீ - காம கோடி பீட2 ஸுவாஸினீ.

Top

மேற்கோள்கள்
2 - அண்ட3 - அண்டத்தில் (முட்டையில்) உதித்தோன் - பிரமன் - 'ஹிரண்ய க3ர்ப4' நோக்கவும்.

3 - மண்ட3ல ஸ்தி2தே லலிதே - மண்டலத்துறைபவள் - ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பது மண்டலங்கள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (380), அம்மையின் பெயர் 'பி3ந்து3 மண்ட3ல வாஸினி' - 'பி3ந்து3 மண்ட3லம்'.

4 - காம கோடி பீட2 - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (589), அம்மையின் பெயர் 'காம கோடிகா' - 'காம கோடி பீடம்' நோக்கவும்.

4 - ஸுவாஸினீ - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (970), அம்மையின் ஓர் பெயர்.

Top

விளக்கம்
1 - மஞ்ஜுள தம நயனே ஹரிணி - பெண்மான் நிகர், அழகு மிகு கண்களினள் - இதனை, இரண்டு அடைமொழிகளாகவும் கொள்ளலாம் - 'மஞ்ஜுள தம நயனே' மற்றும் 'ஹரிணி' என்று. ஆனால், லலிதா மகா திரிபுர சுந்தரியைப் பற்றிய இந்த கீதத்தினில், 'ஹரிணி' என்ற சொல்லுக்கு, பொருத்தமான பொருள் ஏதும் கொள்ள இயலாது. எனவே, இதனை, ஒரே அடைமொழியாக ஏற்கப்பட்டது. ஆயினும், அம்மைக்கு, 'நாராயணி' (நாராயணனின் உருவினள்) என்றோர் பெயர் இருப்பதனைப்போல், 'ஹரிணி' (ஹரியின் உருவினள்) என்று சியாமா சாஸ்த்திரிகள் பயன்படுத்தியுள்ளாரோ என்று விளங்கவில்லை.

2 - அண்ட3ஜ ஹரி கி3ரீஸ1 மண்டி3தே - புத்தகங்களில், 'மண்டி3தே' என்ற சொல்லினை 'போற்றப்பெற்றவள்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இச்சொல்லுக்கு, 'அணிபவள்' என்றுதான் பொருள். காமாட்சி அம்மை, லலிதா மகா திரிபுர சுந்தரி என்ற உருவத்தினில், மும்மூர்த்திகளின் தொழில்களான, படைத்தல், காத்தல், அழித்தல், ஆகியவற்றினை, தானே இயற்றுதலால், அவள், இந்த மும்மூர்த்திகளை அணிகின்றாள் என்று பொருள் கொள்வது தவறாகாது என்று நான் நம்புகின்றேன்.

காமன் பகைவன் - சிவன்
மலையீசன் - சிவன்

Top


Updated on 30 May 2011

No comments:

Post a Comment