Thursday, May 26, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பாலிம்பவம்மா - ராகம் முகாரி - Palimpavamma - Raga Mukhari

பல்லவி
பாலிம்(பவ)ம்மா பரம பாவனீ ப4வானீ

அனுபல்லவி
ஸ்ரீ லலிதா கு3ண ஸீ1லமுலனு வினி
சால நீ ஸேவ ஜேய கோரி வச்சிதி (பாலிம்ப)

சரணம்
சரணம் 1
நீ ஸமான தை3வமு நே கா3
நிகி2ல லோக ஜனனீ மா(ய)ம்மா
1ஸ்ரீ ஸ்வயம்பு4 நாத2 தருணீ மது4ர வாணீ
நீ தா3ஸுனி ப்3ரோவ இந்த பரா(கே)ல(ன)ம்மா (பாலிம்ப)


சரணம் 2
நா தாபமு தீ3ர்சி ப்ரேம ஜூசி
நிதா3னமுக3 மா(ட்லா)ட3 ஸமய(மி)தே3
3தா3 ஜெப்(பவ)ம்மா மா(ய)ம்மா
ஸதா3 நீ ஜபமே க3தி(ய)னி நம்மினா(ன)ம்மா (பாலிம்ப)


பொருள் - சுருக்கம்
  • முற்றிலும் தூயவளே! பவானீ!
  • ஸ்ரீ லலிதா!
  • அனைத்துலகை ஈன்றவளே! எமதம்மா! ஸ்ரீ சுயம்பு நாதரின் துணைவியே! இனிய குரலினளே!
  • எமதம்மா!

  • காப்பாயம்மா.

    • உனது பண்புத் தன்மைகளைக் கேட்டு, மிக்கு, உனது சேவை செய்யக் கோரி, வந்தேன்.
    • உனது சமான தெய்வம், நான் காணேன்.
    • உனது தொண்டனைக் காக்க, இத்தனைப் பராக்கேனம்மா?

    • எனது துயரினைத் தீர்த்து, அன்பு காட்டி, நிதானமாக உரையாட, சமயமிஃதே, அன்றோ? சொல்லம்மா.
    • எவ்வமயமும், உனது ஜபமே கதியென, நம்பினேனம்மா.


  • காப்பாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாலிம்பு/-அம்மா/ பரம/ பாவனீ/ ப4வானீ/
காப்பாய்/ அம்மா/ முற்றிலும்/ தூயவளே/ பவானீ/


அனுபல்லவி
ஸ்ரீ/ லலிதா/ கு3ண/ ஸீ1லமுலனு/ வினி/
ஸ்ரீ/ லலிதா/ உனது/ பண்பு/ தன்மைகளை/ கேட்டு/

சால/ நீ/ ஸேவ/ ஜேய/ கோரி/ வச்சிதி/ (பாலிம்ப)
மிக்கு/ உனது/ சேவை/ செய்ய/ கோரி/ வந்தேன்/


சரணம்
சரணம் 1
நீ/ ஸமான/ தை3வமு/ நே/ கா3ன/
உனது/ சமான/ தெய்வம்/ நான்/ காணேன்/

நிகி2ல/ லோக/ ஜனனீ/ மா/-அம்மா/
அனைத்து/ உலகை/ ஈன்றவளே/ எமது/ அம்மா/

ஸ்ரீ/ ஸ்வயம்பு4/ நாத2/ தருணீ/ மது4ர/ வாணீ/
ஸ்ரீ/ சுயம்பு/ நாதரின்/ துணைவியே/ இனிய/ குரலினளே/

நீ/ தா3ஸுனி/ ப்3ரோவ/ இந்த/ பராகு/-ஏலனு/-அம்மா/ (பாலிம்ப)
உனது/ தொண்டனை/ காக்க/ இத்தனை/ பராக்கு/ ஏன்/ அம்மா/


சரணம் 2
நா/ தாபமு/ தீ3ர்சி/ ப்ரேம/ ஜூசி/
எனது/ துயரினை/ தீர்த்து/ அன்பு/ காட்டி/

நிதா3னமுக3/ மாடலு-ஆட3/ ஸமயமு/-இதே3/
நிதானமாக/ உரையாட/ சமயம்/ இஃதே/

3தா3/ ஜெப்பு/-அம்மா/ மா/-அம்மா/
அன்றோ/ சொல்/ அம்மா/ எமது/ அம்மா/

ஸதா3/ நீ/ ஜபமே/ க3தி/-அனி/ நம்மினானு/-அம்மா/ (பாலிம்ப)
எவ்வமயமும்/ உனது/ ஜபமே/ கதி/ யென/ நம்பினேன்/ அம்மா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்

1 - ஸ்ரீ ஸ்வயம்பு4 நாத2 தருணீ - ஸ்ரீ சுயம்பு நாதரின் துணைவி - திருவையாற்றிலுறை, ஐயாறப்பரின் துணைவியாகிய, 'அறம் வளர்த்த நாயகி'யினைக் குறிக்கும் என ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.

Top


Updated on26 May 2011

No comments:

Post a Comment