Tuesday, May 24, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸரியெவரம்மா - ராகம் பைரவி - Sariyevaramma - Raga Bhairavi

பல்லவி
ஸரி(யெ)வ(ர)ம்மா அம்ப3 நீ
3ய ஜூ(ட3வ)ம்மா ஸ்ரீ காமாக்ஷீ நீ (ஸரி)

அனுபல்லவி
பரம பாவனீ ப4வானீ தே3வீ
1பரா ஸ1க்தி நீ(வ)னி நம்மினானு (ஸரி)

சரணம்
சரணம் 1
மாத4வ ஸோத3ரீ 2கௌ3ரீ அம்ப3
3மஹா பை4ரவீ ஸா1ம்ப4வீ
நாத3 ரூபிணீ ஜனனீ தே3வீ
நாராயணீ நளி(னா)க்ஷீ (ஸரி)


சரணம் 2
ராஜ ராஜேஸ்1வரீ சித்3-ரூபீ
ராஜீ(வா)க்ஷீ லோக ஸாக்ஷீ
தேஜோ-மயீ ஜனனீ தே3வீ
4ஓஜோவதீ ஓங்காரீ (ஸரி)


சரணம் 3
பாமர பாவனீ 5பார்வதீ தே3வீ
பா(கா)ரி வினுதே ஸ்ரீ லலிதே
ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலினீ தே3வீ
ஸ்1யாம கி3ரி ஸுபுத்ரீ (ஸரி)


ஸ்வர ஸாஹித்ய
ஸாரஸ த3ள நயனா ஹரி ஹர ஸுர நுத
லலிதா நினு ஸததமு ஸ1ரணமு
கோரிதினி கமல பாத3 யுக3மு
நம்மிதி ஸுந்த3ரி ஸ1ங்கரி ஈ ஜக3முலோ (ஸரி)


பொருள் - சுருக்கம்
  • அம்பா! ஸ்ரீ காமாட்சீ!
  • முற்றிலும் தூயவளே! பவானீ! தேவீ!
  • மாதவன் சோதரியே! கௌரீ! அம்பா! மகா பைரவீ! சாம்பவீ! நாத உருவினளே! ஈன்றவளே! தேவீ! நாராயணீ! கமலக்கண்ணீ!
  • ராஜ ராஜேசுவரீ! சைதன்னிய உருவே! கமலக்கண்ணீ! உலக சாட்சியே! ஒளி மயமானவளே! ஈன்றவளே! தேவீ! ஓஜோவதீ! ஓங்காரீ!
  • பாமரர்களைத் தூய்மைப்படுத்துபவளே! பார்வதீ! தேவீ! பாகாசுரன் எதிரி போற்றும், ஸ்ரீ லலிதையே! சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! தேவீ! நீல மலையின் நற்புதல்வியே!
  • தாமரையிதழ்க் கண்ணீ! அரி, அரன், அமரர் போற்றும், லலிதையே! சுந்தரீ! சங்கரீ!

  • சரியெவரம்மா, உனது?

    • தயை காட்டுவாயம்மா.
    • பரா சக்தி நீயென நம்பினேன்.
    • உன்னை எவ்வமயமும் சரணம் கோரினேன்.
    • உனது கமலத் திருவடியிணையினை நம்பினேன்.


  • இந்த ஜகத்தினில் சரியெவரம்மா, உனது?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸரி/-எவரு/-அம்மா/ அம்ப3/ நீ/
சரி/ யெவர்/ அம்மா/ அம்பா/ உனது/

3ய/ ஜூடு3/-அம்மா/ ஸ்ரீ/ காமாக்ஷீ/ நீ/ (ஸரி)
தயை/ காட்டுவாய்/ அம்மா/ ஸ்ரீ/ காமாட்சீ/ உனது/ (சரி)


அனுபல்லவி
பரம/ பாவனீ/ ப4வானீ/ தே3வீ/
முற்றிலும்/ தூயவளே/ பவானீ/ தேவீ/

பரா/ ஸ1க்தி/ நீவு/-அனி/ நம்மினானு/ (ஸரி)
பரா/ சக்தி/ நீ/ யென/ நம்பினேன்/


சரணம்
சரணம் 1
மாத4வ/ ஸோத3ரீ/ கௌ3ரீ/ அம்ப3/
மாதவன்/ சோதரியே/ கௌரீ/ அம்பா/

மஹா/ பை4ரவீ/ ஸா1ம்ப4வீ/
மகா/ பைரவீ/ சாம்பவீ/

நாத3/ ரூபிணீ/ ஜனனீ/ தே3வீ/
நாத/ உருவினளே/ ஈன்றவளே/ தேவீ/

நாராயணீ/ நளின/-அக்ஷீ/ (ஸரி)
நாராயணீ/ கமல/ கண்ணீ/


சரணம் 2
ராஜ/ ராஜேஸ்1வரீ/ சித்/-ரூபீ/
ராஜ/ ராஜேசுவரீ/ சைதன்னிய/ உருவே/

ராஜீவ/-அக்ஷீ/ லோக/ ஸாக்ஷீ/
கமல/ கண்ணீ/ உலக/ சாட்சியே/

தேஜோ/-மயீ/ ஜனனீ/ தே3வீ/
ஒளி/ மயமானவளே/ ஈன்றவளே/ தேவீ/

ஓஜோவதீ/ ஓங்காரீ/ (ஸரி)
ஓஜோவதீ/ ஓங்காரீ/


சரணம் 3
பாமர/ பாவனீ/ பார்வதீ/ தே3வீ/
பாமரர்களை/ தூய்மைப்படுத்துபவளே/ பார்வதீ/ தேவீ/

பாக/-அரி/ வினுதே/ ஸ்ரீ/ லலிதே/
பாக (அசுரன்)/ எதிரி/ போற்றும்/ ஸ்ரீ/ லலிதையே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பரிபாலினீ/ தே3வீ/
சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ தேவீ/

ஸ்1யாம/ கி3ரி/ ஸுபுத்ரீ/ (ஸரி)
நீல/ மலையின்/ நற்புதல்வியே/


ஸ்வர ஸாஹித்ய
ஸாரஸ/ த3ள/ நயனா/ ஹரி/ ஹர/ ஸுர/ நுத/
தாமரை/ யிதழ்/ கண்ணீ/ அரி/ அரன்/ அமரர்/ போற்றும்/

லலிதா/ நினு/ ஸததமு/ ஸ1ரணமு/
லலிதையே/ உன்னை/ எவ்வமயமும்/ சரணம்/

கோரிதினி/ கமல/ பாத3/ யுக3மு/
கோரினேன்/ (உனது) கமல/ திருவடி/ யிணையினை/

நம்மிதி/ ஸுந்த3ரி/ ஸ1ங்கரி/ ஈ/ ஜக3முலோ/ (ஸரி)
நம்பினேன்/ சுந்தரீ/ சங்கரீ/ இந்த/ ஜகத்தினில்/ (சரி)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - கௌ3ரீ அம்ப3 - கௌ3ரீ.

5 - பார்வதீ தே3வீ - பார்வதீ.

Top

மேற்கோள்கள்
1 - பரா ஸ1க்தி - 'பரா' என்பது, ஒலியின் அருவமான, மூலத்தினைக் குறிக்கும். லலிதா ஸஹஸ்ரநாமத்தில், அம்மைக்கு, 'பரா, பஸ்1யந்தி, மத்4யமா, வைக2ரீ ரூபா' என்று பெயராகும். இந்த நான்கும், உடலில், ஒலி வெளிப்படும் முறையினைக் குறிக்கும். இது குறித்து 'காஞ்சி மாமுனிவரின், ஸௌந்தர்ய லஹரி உரை’யினை நோக்கவும்.

3 - மஹா பை4ரவீ - விளக்கத்திற்கு, 'ஸ்ரீ வித்யை வழிபாட்டின் ரகசியம்' நோக்கவும்.

4 - ஓஜோவதீ - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (767), இஃது அம்மையின் ஓர் பெயராகும். 'ஓஜஸ்' (வீரியம்) பற்றி விளக்கம் நோக்கவும்.

Top

விளக்கம்
இந்த கீர்த்தனையில் வரும் பல பெயர்கள் - மகா பைரவி, சாம்பவி, நாத ரூபிணி, நாராயணி, ஓங்காரி, சுந்தரி ஆகியவை - ஸ்ரீ வித்யையின் அங்கமாகும். இது குறித்து, 'ஸ்ரீ வித்யை வழிபாட்டின் ரகசியம்' பற்றிய மேற்கூறிய வலைத் தளத்தினை நோக்கவும்.

ஓஜோவதி - வீரியமுடைத்தவள்.
பாகாசுரன் எதிரி - இந்திரன்
நீல மலை - இமய மலை

Top


Updated on 25 May 2011

2 comments:

  1. அன்புள்ள கோவிந்தன் அவர்களே
    இமயமலையை ஹிமகிரி/பனிமலை/வெண்மலை என்று தானே கூறுவது வழக்கம் . ஸ்1யாம/ கி3ரி எனறு ஏன் கூறியுள்ளார்.
    நன்றிகோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,

      ஸாஸ்த்திரிகள் ப்3ரோவ ஸமயமிதே3 என்ற கீர்த்தனையிலும் இந்த ப்ரயோகம் செய்கின்றார். இதற்கு வேறேதும் பொருள் கொள்ள இயலாது. ஒருவேளை 'ஸ்1யாம' என்பதனை தனி அடைமொழியாக எடுத்துக்கொள்ளலாமோ என்னவோ.

      வணக்கம்,
      கோவிந்தன்

      Delete