Thursday, June 16, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பாலயாஸு1 மாம் - ராகம் ஆரபி - Paalayaasu Mam - Raga Arabhi

பல்லவி
பால(யா)ஸு1 மாம் பர தே3வதே

அனுபல்லவி
கால கால வல்லபே4 லலிதே அதி லலிதே (பாலயாஸு1)

சரணம்
சரணம் 1
கா3ன வினோதி3னீ நிரஞ்ஜனீ
தா3ன ப்ரதா3யினீ ரஞ்ஜனீ
1மா(னோ)ன்னதிம் தே3ஹி மே ஸி1வே
மானவதீ ஹிம கி3ரி தனயே (பாலயாஸு1)


சரணம் 2
கஞ்ஜ லோசனே காமாக்ஷீ
2பஞ்(சா)க்ஷர வைப4வ முதி3தே
3காம கோடி பீட2 4ஸுவாஸினீ
ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலித ஜனனீ (பாலயாஸு1)


பொருள் - சுருக்கம்
  • பர தேவதையே!
  • காலனுக்குக் காலனின் இல்லாளே! லலிதையே! மிக்கு திருவிளையாடல்கள் புரிபவளே!
  • இசை விரும்பியே! களங்கமற்றவளே! கொடையருள்பவளே! மகிழ்வூட்டுபவளே! சிவையே! மதிக்கப்பெற்றவளே! பனிமலை மகளே!
  • கமலக் கண்ணீ, காமாட்சீ! ஐந்தெழுத்தின் பெருமையில் களிப்பவளே! காம கோடி பீடத்தில் உறைபவளே! சியாம கிருஷ்ணனைப் பேணும், ஈன்றவளே!

    • காப்பாய், விரைவாக, என்னை.
    • மான உயர்வு தருவாய், எனக்கு.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாலய/-ஆஸு1/ மாம்/ பர/ தே3வதே/
காப்பாய்/ விரைவாக/ என்னை/ பர/ தேவதையே/


அனுபல்லவி
கால/ கால/ வல்லபே4/ லலிதே/ அதி/ லலிதே/ (பாலயாஸு1)
காலனுக்கு/ காலனின்/ இல்லாளே/ லலிதையே/ மிக்கு/ திருவிளையாடல்கள் புரிபவளே/


சரணம்
சரணம் 1
கா3ன/ வினோதி3னீ/ நிரஞ்ஜனீ/
இசை/ விரும்பியே/ களங்கமற்றவளே/

தா3ன/ ப்ரதா3யினீ/ ரஞ்ஜனீ/
கொடை/ யருள்பவளே/ மகிழ்வூட்டுபவளே/

மான/-உன்னதிம்/ தே3ஹி/ மே/ ஸி1வே/
மான/ உயர்வு/ தருவாய்/ எனக்கு/ சிவையே/

மானவதீ/ ஹிம/ கி3ரி/ தனயே/ (பாலயாஸு1)
மதிக்கப்பெற்றவளே/ பனி/ மலை/ மகளே/


சரணம் 2
கஞ்ஜ/ லோசனே/ காமாக்ஷீ/
கமல/ கண்ணீ/ காமாட்சீ/

பஞ்ச/-அக்ஷர/ வைப4வ/ முதி3தே/
ஐந்து/ எழுத்தின்/ பெருமையில்/ களிப்பவளே/

காம/ கோடி/ பீட2/ ஸுவாஸினீ/
காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பரிபாலித/ ஜனனீ/ (பாலயாஸு1)
சியாம/ கிருஷ்ணனை/ பேணும்/ ஈன்றவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - பஞ்சாக்ஷர - ஐந்தெழுத்து - நமசிவாய - ஐந்தெழுத்தின் பெருமை.

3 - காம கோடி பீட2 - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (589) அம்மையின் பெயர் - 'காம கோடிகா' - காம கோடி பீடம்.

4 - ஸுவாஸினீ - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (970) அம்மையின் பெயர்.
Top

விளக்கம்
1 - மானோன்னதிம் தே3ஹி - மான உயர்வு தருவாய். புத்தகங்களில், 'மானம்' என்ற சொல்லுக்கு, 'பெருமை' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. என் சிற்றறிவுக்கு எட்டியவரையில், இறைவனின் உண்மையான தொண்டர்கள், தங்களுக்கு, பெருமை உயரவேண்டுமென கேட்கமாட்டார்கள். ஏனென்றால், அத்தகைய பெருமையும், அதன் உயர்வும், ஒருவனுடைய அகங்காரத்தினை தீவிரப்படுத்துவதாகத்தான் அமையும். எனவே, 'மானம்' என்ற சொல்லுக்கு 'பெருமை' என்று பொருள் இங்கு பொருந்தாது என்று நான் கருதுகின்றேன்.
'மானம்' என்ற சொல்லுக்கு, 'அளவு (கோல்)' என்றும் ஒரு பொருள் உண்டு. அறிவு (intellect) என்னும் அளவுகோலினால், இறைவனை அளக்க, நாம் செய்யும் முயற்சிகளெல்லாம் வீணே. தீட்சிதர், தமது, 'மீனாட்சி மே முத3ம்' என்ற க3மக க்ரியா ராக கீர்த்தனையில், அம்மையை, 'மான, மாத்ரு2, மேயே' - 'அளவுகோல் - அளவிடுபவள் - அளவிடப்படும் பொருள்' என்கின்றார். எனக்குத் தெரிந்தவரை, சியாமா சாஸ்த்ரியும், அந்தப் பொருளிலேயே இச்சொல்லினைப் பயன்படுத்துகின்றார் என்று நான் கருதுகின்றேன். 'உயர்வு தருவாய்' என்று அவர் கேட்பது, அந்த, 'அறிவெனும் அளவுகோலை'க் கடந்து, மெய்யுணர்வு பெறுவதற்கு வேண்டுகின்றார், என்று நான் கருதுகின்றேன். ஆயினும், பாரம்பரியமாக வரும், புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள, பொருள் இங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
Top

காலன் - நமன்
காலனுக்குக் காலன் - சிவன்
மானம் - பெருமை
ஐந்தெழுத்து - நமசிவாய
Top


Updated on 16 Jun 2011

2 comments:

  1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே

    அனுபல்லவியில் லலிதையை என்றுள்ளது. லலிதே என்பது தானே சரி.

    உயர்ந்த மனம் என்பதை உன்னத+ மனஸு அல்லது மனஸு +உன்னதி என்று தெலுங்கில் கூறலாமா? இது தெலுங்கு/ஸம்ஸ்க்ருதத்தில் மானோன்னதி என்று திரியுமா?

    வணக்கம்
    கோவிந்தசாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

    'லலிதையே' என்று திருத்திவிட்டேன். பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    'மனஸ்+உன்னதி' என்பது 'மனோன்னதி' என்றுதான் வரும். 'மானோன்னதி' என்றல்ல.

    வணக்கம்,
    கோவிந்தன்.

    ReplyDelete