Friday, June 17, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - காமாக்ஷீ நாதோ - ராகம் பே333 - Kamakshi Nato - Raga Begada

பல்லவி
காமாக்ஷீ நாதோ வாதா33ய லேதா3
கம(லா)க்ஷீ நன்(னொ)கனி ப்3ரோசுட பா4ரமா 13ங்கா3ரு (காமாக்ஷீ)

அனுபல்லவி
தாமஸமு ஜேஸிதே நே தாள(ன)ம்மா நீ
நாம பாராயணமு வின வேடி3தி(ன)ம்மா மா(ய)ம்மா (காமாக்ஷீ)

சரணம்
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ தல்லீ (அம்பா3) ஸு1
ஸ்1யாமளே நின்னே கோரி(யு)ன்னா(ன)ம்மா
மா(ய)ம்ம(ய)னி நே த3லசி த3லசி
மாடி மாடிகி கன்னீரு விடு3வ லேதா3 அம்பா3
நீவு மாடாட3(கு)ண்டி3ன நே தாள லே(ன)ம்மா
நீ பி3ட்33னு லாலிஞ்சவே தொ3ட்33 தல்லிவே
2கா(மா)து3 சபல சித்த பாமருடை3
திரிகி3 திரிகி3 இலலோ
காமித கத2லு வினி வினி
வேஸாரி நேனு ஏமாரி 3போதுனா (காமாக்ஷீ)


பொருள் - சுருக்கம்
  • காமாட்சீ! கமலக்கண்ணீ! பங்காரு காமாட்சீ!
  • எமதம்மா!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! தாயே! அம்பா! கிளியேந்தும், சியாமளையே! அம்பா!

    • என்னுடன் வாதா?
    • தயை யில்லையா?
    • என்னொருவனைக் காத்தல் பளுவா?

    • தாமதம் செய்தால், நான் பொறுக்கமாட்டேனம்மா.
    • உனது நாம பாராயணத்தினைக் கேட்க வேண்டினேனம்மா.

    • உன்னையே கோரியுள்ளேனம்மா.
    • 'எமது தாயே' என நான், நினைந்து நினைந்து, திரும்பத் திரும்ப, கண்ணீர் உகுக்கவில்லையா?
    • நீ பேசாதிருந்தால், நான் பொறுக்க இயலேனம்மா.
    • உனது குழந்தை நான்.
    • தேற்றுவாயம்மா.
    • பெருந் தாய் நீ.
    • இச்சை ஆகியவற்றினால், நிலையற்ற உள்ள அறிவிலியாகி, திரிந்து திரிந்து, உலகினில், ஆசை கதைகளைக் கேட்டுக் கேட்டு, துயருற்று, நான் ஏமாந்து போவேனோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
காமாக்ஷீ/ நாதோ/ வாதா3/ த3ய/ லேதா3/
காமாட்சீ/ என்னுடன்/ வாதா/ தயை/ யில்லையா/

கமல/-அக்ஷீ/ நன்னு/-ஒகனி/ ப்3ரோசுட/ பா4ரமா/ ப3ங்கா3ரு/ (காமாக்ஷீ)
கமல/ கண்ணீ/ என்/ ஒருவனை/ காத்தல்/ பளுவா/ பங்காரு/ (காமாட்சீ)


அனுபல்லவி
தாமஸமு/ ஜேஸிதே/ நே/ தாளனு/-அம்மா/ நீ/
தாமதம்/ செய்தால்/ நான்/ பொறுக்கமாட்டேன்/ அம்மா/ உனது/

நாம/ பாராயணமு/ வின/ வேடி3தினி/-அம்மா/ மா/-அம்மா/ (காமாக்ஷீ)
நாம/ பாராயணத்தினை/ கேட்க/ வேண்டினேன்/ அம்மா/ எமது/ அம்மா/


சரணம்
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ தல்லீ/ அம்பா3/ ஸு1க/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ தாயே/ அம்பா/ கிளியேந்தும்/

ஸ்1யாமளே/ நின்னே/ கோரி/-உன்னானு/-அம்மா/
சியாமளையே/ உன்னையே/ கோரி/ யுள்ளேன்/ அம்மா/

மா/-அம்ம/-அனி/ நே/ த3லசி/ த3லசி/
'எமது/ தாயே/' என/ நான்/ நினைந்து/ நினைந்து/

மாடி/ மாடிகி/ கன்னீரு/ விடு3வ லேதா3/ அம்பா3/
திரும்ப/ திரும்ப/ கண்ணீர்/ உகுக்கவில்லையா/ அம்பா/

நீவு/ மாடாட3க/-உண்டி3ன/ நே/ தாள/ லேனு/-அம்மா/
நீ/ பேசாது/ இருந்தால்/ நான்/ பொறுக்க/ இயலேன்/ அம்மா/

நீ/ பி3ட்33னு/ லாலிஞ்சவே/ தொ3ட்33/ தல்லிவே/
உனது/ குழந்தை/ நான்/ தேற்றுவாயம்மா/ பெருந்/ தாய் நீ/

காம/-ஆது3ல/ சபல/ சித்த/ பாமருடை3/
இச்சை/ ஆகியவற்றினால்/ நிலையற்ற/ உள்ள/ அறிவிலியாகி/

திரிகி3/ திரிகி3/ இலலோ/
திரிந்து/ திரிந்து/ உலகினில்/

காமித/ கத2லு/ வினி/ வினி/
ஆசை/ கதைகளை/ கேட்டு/ கேட்டு/

வேஸாரி/ நேனு/ ஏமாரி/ போதுனா/ (காமாக்ஷீ)
துயருற்று/ நான்/ ஏமாந்து/ போவேனோ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - காமாது3 - எல்லா புத்தகங்களிலும், 'காமாதுல' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், 'காமாது3ல' என்பதே பொருந்தும்.
3 - போதுனா - போது3னா.
Top

மேற்கோள்கள்
1 - 3ங்கா3ரு காமாக்ஷீ - தஞ்சாவூர் பங்காரு காமாட்சி.
2 - காமாது3 - இச்சை ஆகியவை - இச்சை, சீற்றம், கருமித்தனம், மயக்கம், செருக்கு, காழ்ப்பு எனும் ஆறு உட்பகைவர்.
Top

விளக்கம்
நாம பாராயணம் - இறைவியின் பெயர் (புகழ்) உரைத்தல்
Top


Updated on 18 Jun 2011

1 comment:

  1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
    காமாக்ஷீ நாதோ - ராகம் பே3க3ட3
    தொ3ட்3ட3 தல்லிவே - தொ3ட்3ட3 என்பது கன்னட மொழிச்சொல் அல்லவா? நான் அறிந்தவரை இது தெலுங்கில் இல்லை.
    கன்னீரு விடு3வ லேதா3 - கன்னீரு தெலுங்கு சொல்லா?
    வணக்கம்,
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete