Sunday, June 19, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸாமி நின்னே - ராகம் பே333 - Sami Ninne - Raga Begada

பல்லவி
ஸாமி நின்னே நம்மிதிரா
ராரா 1முத்3து3 குமாரா (ஸாமி)

அனுபல்லவி
நா மீத33ய ஜூசி
நன்னு ரக்ஷிம்பரா வேக3மே
தாமஸமு ஜேஸிதே நிமிஷ(மி)க
தாள ஜால(ன)ய்யா முத்3(த3)ய்யா (ஸாமி)

சரணம்
சரணம் 1
நீ மஹிமலு 2ப்3ரஹ்(மா)து3ல(னி)ஞ்சி
நிர்ணயிம்ப தர(மௌ)னா
பாமரு நேனு பொக33 தரமா
பதித பாவன ஷ(டா3)னன
நா மனவி வினரா அனயமு நீ
நாமமே ஜபமுரா க3ம்பீ4ரா
பூ4மிலோ நீ ஸாடி தை3வ(மெ)வடு3
நீவே மஹானுபா4வ நன்னு ப்3ரோவு (ஸாமி)


சரணம் 2
தாபமுல(னெ)ல்ல இக பா3புது3(வ)னி
ப்ராபு கோரிதிரா நேனு
நீ பாத3முலே தி3க்கு லோகமுலனு
நிகி23ஸந்தாப ஹரண
பாப ஹரண 4ஸம்மோஹன கலா வித்4ரு2
5ஸ்ரீ-பதி பத3 விதி3 6வேதா3ந்த
ரூப
7கோடி மன்ம(தா2)ங்க3 ஜித
ஸரோஜ நேத்ர 8தீ4ர ரண வீர (ஸாமி)


சரணம் 3
கோரி(யு)ண்டி நீது3 ஸன்னிதி4னி
கோரின வாரி(கெ)ல்ல த3யதோனு
கோரிகல(னி)ச்சேதி3 நீ பி3ருது33தா3
குடில தாரக விதா3ரக
ஸாரஸ சரித நீ த3ய ராதா3
ஸ்1யாம க்ரு2ஷ்ண நுத 9வைத்3(யே)ஸு1
நீல கண்ட2 வாஹன தீ3(னா)வன
ஸுஹ்ரு23ய வாஸ த3ர ஹாஸ (ஸாமி)


பொருள் - சுருக்கம்
  • சாமீ! முத்துக் குமாரா!
  • முத்தய்யா!
  • வீழ்ந்தோரைப் புனிதமாக்குவோனே! ஆறுமுகத்தோனே! கம்பீரமானவனே!
  • அனைத்துலகில், கொடிய வெம்மைகளைப் போக்குவோனே! பாவம் களைவோனே! மயக்குவிக்கும் களை யுடைத்தவனே! மாமணாளன் திருவடி யறிவோனே! வேதாந்த உருவினனே! கோடி மன்மதர்களை, உருவில் வென்றோனே! கமலக் கண்ணா! தீரனே! போரில் வீரனே!
  • சூழ்ச்சிக்கார, தாரகாசுரனை வதைத்தோனே! இனிய சரிதத்தோனே! சியாம கிருஷ்ணன் போற்றும், வைத்திய ஈசனே! நீல மிடறு (மயில்) வாகனனே! எளியோரைக் காப்போனே! நல்லோரிதயங்களில் உறைவோனே! புன்னகையோனே!

  • உன்னையே நம்பினேனய்யா.
  • வாருமய்யா.

    • புவியில், உனக்கீடு தெய்வம் யார்?
    • நீயே பெருந்தகையாம்.
    • உனது மகிமைகள், பிரமன் முதலானோராலும், நிர்ணயிக்கத் தரமாகுமா? அறிவிலி நான், உன்னைப் போற்றத் தரமா?
    • கோரினோருக்கெல்லாம், தயையுடன், கோரிக்கைகளை அருள்வது, உனது விருதன்றோ?

    • எனது வேண்டுகோளினைக் கேளுமய்யா.
    • என்மீது தயை செய்து, என்னைக் காப்பாயய்யா, விரைவாக.
    • தாமதம் செய்தால், நிமிடமும், இனி பொறுக்க இயலேனய்யா.
    • இடைவிடாது, உனது நாமமே ஜபிக்கின்றேனய்யா.
    • வெம்மைகளையெல்லாம், இனி போக்குவாயென, ஆதரவு கோரினேனய்யா, நான்.
    • உனது திருவடிகளே போக்கு, உலகங்களில்.
    • கோரியிருந்தேன், உனது சன்னிதியினை.

    • உனது தயை வாராதா?
    • என்னைக் காப்பாய்.


  • உன்னையே நம்பினேனய்யா.
  • வாருமய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாமி/ நின்னே/ நம்மிதிரா/
சாமீ/ உன்னையே/ நம்பினேனய்யா/

ராரா/ முத்3து3/ குமாரா/ (ஸாமி)
வாருமய்யா. முத்துக் குமாரா!


அனுபல்லவி
நா/ மீத3/ த3ய/ ஜூசி/
என்/ மீது/ தயை/ செய்து/

நன்னு/ ரக்ஷிம்பரா/ வேக3மே/
என்னை/ காப்பாயய்யா/ விரைவாக/

தாமஸமு/ ஜேஸிதே/ நிமிஷமு/-இக/
தாமதம்/ செய்தால்/ நிமிடமும்/ இனி/

தாள/ ஜாலனு/-அய்யா/ முத்3து3/-அய்யா/ (ஸாமி)
பொறுக்க/ இயலேன்/ அய்யா/ முத்து/ அய்யா/


சரணம்
சரணம் 1
நீ/ மஹிமலு/ ப்3ரஹ்மா/-ஆது3ல-உஞ்சி/
உனது/ மகிமைகள்/ பிரமன்/ முதலானோராலும்/

நிர்ணயிம்ப/ தரமு/-ஔனா/
நிர்ணயிக்க/ தரம்/ ஆகுமா/

பாமரு/ நேனு/ பொக33/ தரமா/
அறிவிலி/ நான்/ (உன்னை) போற்ற/ தரமா/

பதித/ பாவன/ ஷட்3/-ஆனன/
வீழ்ந்தோரை/ புனிதமாக்குவோனே/ ஆறு/ முகத்தோனே/

நா/ மனவி/ வினரா/ அனயமு/ நீ/
எனது/ வேண்டுகோளினை/ கேளுமய்யா/ இடைவிடாது/ உனது/

நாமமே/ ஜபமுரா/ க3ம்பீ4ரா/
நாமமே/ ஜபிக்கின்றேனய்யா/ கம்பீரமானவனே/

பூ4மிலோ/ நீ/ ஸாடி/ தை3வமு/-எவடு3/
புவியில்/ உனக்கு/ ஈடு/ தெய்வம்/ யார்/

நீவே/ மஹானுபா4வ/ நன்னு/ ப்3ரோவு/ (ஸாமி)
நீயே/ பெருந்தகையாம்/ என்னை/ காப்பாய்/


சரணம் 2
தாபமுலனு/-எல்ல/ இக/ பா3புது3வு/-அனி/
வெம்மைகளை/ யெல்லாம்/ இனி/ போக்குவாய்/ என/,

ப்ராபு/ கோரிதிரா/ நேனு/
ஆதரவு/ கோரினேனய்யா/ நான்/

நீ/ பாத3முலே/ தி3க்கு/ லோகமுலனு/
உனது/ திருவடிகளே/ போக்கு/ உலகங்களில்/

நிகி2ல/ ஸந்தாப/ ஹரண/
அனைத்துலகில்/ கொடிய வெம்மைகளை/ போக்குவோனே/

பாப/ ஹரண/ ஸம்மோஹன/ கலா/ வித்4ரு2த/
பாவம்/ களைவோனே/ மயக்குவிக்கும்/ களை/ யுடைத்தவனே/

ஸ்ரீ/-பதி/ பத3/ விதி3த/ வேதா3ந்த/
மா/ மணாளன்/ திருவடி/ யறிவோனே/ வேதாந்த/

ரூப/ கோடி/ மன்மத2/-அங்க3/ ஜித/
உருவினனே/ கோடி/ மன்மதர்களை/ உருவில்/ வென்றோனே/

ஸரோஜ/ நேத்ர/ தீ4ர/ ரண/ வீர/ (ஸாமி)
கமல/ கண்ணா/ தீரனே/ போரில்/ வீரனே/


சரணம் 3
கோரி/-உண்டி/ நீது3/ ஸன்னிதி4னி/
கோரி/ யிருந்தேன்/ உனது/ சன்னிதியினை/

கோரின வாரிகி/-எல்ல/ த3யதோனு/
கோரினோருக்கு/ எல்லாம்/ தயையுடன்/

கோரிகலனு/-இச்சேதி3/ நீ/ பி3ருது3/ க3தா3/
கோரிக்கைகளை/ அருள்வது/ உனது/ விருது/ அன்றோ/

குடில/ தாரக/ விதா3ரக/
சூழ்ச்சிக்கார/ தாரக அசுரனை/ வதைத்தோனே/

ஸாரஸ/ சரித/ நீ/ த3ய/ ராதா3/
இனிய/ சரிதத்தோனே/ உனது/ தயை/ வாராதா/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுத/ வைத்3ய/-ஈஸு1/
சியாம/ கிருஷ்ணன்/ போற்றும்/ வைத்திய/ ஈசனே/

நீல/ கண்ட2/ வாஹன/ தீ3ன/-அவன/
நீல/ மிடறு (மயில்)/ வாகனனே/ எளியோரை/ காப்போனே/

ஸுஹ்ரு23ய/ வாஸ/ த3ர ஹாஸ/ (ஸாமி)
நல்லோரிதயங்களில்/ உறைவோனே/ புன்னகையோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ப்3ரஹ்மாது3லனிஞ்சி - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல், 'ப்3ரஹ்மாது3ல+உஞ்சி' என்று பிரிக்கப்படும். எனவே இது, 'ப்3ரஹ்மாது3லனுஞ்சி' என்றிருக்கவேண்டும். ஆனால், பேச்சு வழக்கில், 'ப்3ரஹ்மாது3லனிஞ்சி' என்று பயன்படுத்தப்படுகின்றது. அங்ஙனமே, இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்.

8 - தீ4ர ரண வீர - தீ4ர ரண தீ4ர : 'தீ4ர' என்ற சொல் மறுபடியும் பயன்படுத்தப்பட்டிருக்காது என்று கருதுகின்றேன். ஆனால், 'ரண தீ4ர' என்பது சரியான சொல்லாகும்.

9 - வைத்3யேஸு1 - வைத்3யேஸு : இச்சொல், 'வைத்3ய+ஈஸு1' என்று பிரிக்கப்படும். எனவே, 'வைத்3யேஸு1' என்பதுதான் சரியென்று நான் கருதுகின்றேன்.
Top

மேற்கோள்கள்
1 - முத்3து3 குமாரா - முத்துக் குமார - வைத்தீசுவரன் கோவில் முருகன் பெயர். தீட்சிதர், தமது 'ப4ஜரே சித்த பா3லாம்பி3காம்' என்ற கல்யாணி ராக கீர்த்தனையில், 'முத்3து3 குமார' என்று குறிப்பிடுகின்றார்.

3 - ஸந்தாப - கொடிய வெம்மைகள் - ஆத்4யாத்மீக, ஆதி4-தெ3ய்வீக, ஆதி4-பௌ4தீக எனப்படும், தன்னால் - கடவுளரால் - இயற்கையால் உண்டாகும் முவ்வெம்மைகளைக் குறிக்கும்.

8 - ரண வீர - போரில் வீரன் - முருகன், அசுரர்களை எதிர்த்த போரில், தேவர் படைகளுக்கு சேனாபதியாம்.
Top

விளக்கம்
4 - ஸம்மோஹன கலா வித்4ரு2 - மயக்குவிக்கும் களையுடைத்தவன் - தமிழில், 'முருகு' என்றால் 'அழகு', 'இளமை' என்று பொருளாகும் - எனவே 'முருகன்'.

5 - ஸ்ரீ-பதி பத3 விதி3 - மா மணாளன் திருவடி யறிவோன் - விஷ்ணு ஸூக்தத்தினில் 'சூரர்கள் (அறிஞர்கள்) அந்த விஷ்ணுவின் திருவடியினை எவ்வமயமும் காண்கின்றனர்' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், முருகன், விஷ்ணுவின் மருகன் - இரண்டு வகையில் - முருகனின் தாயாரான பார்வதி, விஷ்ணுவுக்குத் தங்கை. அத்துடன், முருகனின் இரு மனைவியரும், முற்பிறவியில், விஷ்ணுவின் பெண்கள் எனப்படும். முருகனின் மனைவியர் நோக்கவும். ஆனால், வட இந்தியாவில், 'சுப்பிரமணியன்' திருமணமாகாதவராக வழிபடப்படுகின்றார்.

6 - வேதா3ந்த ரூப - வேதாந்த உருவினன். முருகன், தந்தைக்கு, பிரணவ மந்திரத்தினை உபதேசம் செய்து, 'தகப்பன் சாமி' என்று பெயர் பெற்றான். முருகன் வழிபாடு நோக்கவும்.
Top

7 - கோடி மன்மதா2ங்க3 ஜித - கோடி மன்மதர்களை உருவில் வென்றவன். முருகனுக்கு, 'குமாரன்' என்றும் பெயருண்டு. மன்மதனுக்கு, 'மாரன்' என்றும் பெயராகும். காஞ்சி மாமுனிவர் தமது உரையில் 'குமாரன்' என்பதற்கு, 'மாரனைப் பழித்தவன்' (குத்ஸித மார - குமார) என்று விளக்கம் கூறுகின்றார்.

9 - வைத்3யேஸு1 - வைத்திய ஈசன் - வைத்தீசுரவன் கோவில் ஈசன் - இங்கு முருகனைக் குறிக்கும். ஆனால், 'வைத்திய ஈசன்' என்பதற்கு, 'நோய் நீக்க வல்லோன்' என்று பொருள் கொள்ளலாம். இங்கு குறிக்கப்படும் நோய், உடல் நோயல்ல - பிறவியெனும் நோய்.

மாமணாளன் - அரி
Top


Updated on 19 Jun 2011

6 comments:

  1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே

    - ப்3ரஹ்மாது3லனிஞ்சி – உஞ்சி என்றால் இருத்தி என்று பொருள். இஞ்சி என்னும் பேச்சு வழக்கு இருந்து/தொடங்கி/ என்று பொருள் தரும். இது தான் சரி என்பது என் கருத்து.

    வணக்கம்
    கோவிந்தசாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

    தெலுங்கில் 'இஞ்சி' என்ற சொல்லுக்கு, 'கரும்பு' என்று பொருளாகும். 'உண்டி' என்ற சொல்லின் திரிபுதான் 'உஞ்சி'யாகும். பேச்சு வழக்கில், நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் இலக்கணப்படி அது தவறாகும். இதை நான் 'வேறுபாடுகளி'ல் விளக்கியுள்ளேன்.

    வணக்கம்,
    கோவிந்தன்

    ReplyDelete
  3. அன்புள்ள கோவிந்தன் அவர்களே
    சரணம் 2 - நீ பாத3முலே தி3க்கு லோகமுலனு – இதற்கு உனது திருவடிகளே போக்கு, உலகங்களில் என்று பொருள் கொடுத்துள்ளீர். லோகமுலலோ என்று இருக்கவேண்டுமா? லோகமுலனு என்றால் உலகங்களை என்று பொருள் அல்லவா?

    வணக்கம்
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

      நீங்கள் கூறுவது சரியே. ஆனால் எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. நான் அதை மாற்ற விரும்பவில்லை.

      வணக்கம்
      கோவிந்தன்

      Delete
  4. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
    முத்3து3 குமாரா - முத்துக் குமார - வைத்தீசுவரன் கோவில் முருகன் பெயர். முத்3து3 என்றால் முத்தம்/ அழகிய என்று பொருள். இங்கு இரண்டாவது பொருள் பொருந்தும் என்று எண்ணுகிறேன். தமிழில் முத்துக் குமார என்றால் என்ன அர்த்தம்.
    தெலுங்கில் 'இஞ்சி' என்ற சொல்லுக்கு, 'கரும்பு' என்று பொருளாகும் என்று கூறியுள்ளீர். நான் இதை கேட்டதுமில்லை, படிதததுமில்லை.
    வணக்கம்,
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
  5. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

    தெலுங்கில் முத்3து3 குமார என்று வழக்கு. அதுவே தமிழில் முத்துக்குமார என்று வழங்கும். அதனால் முத்3து3 என்பதற்கு தனியாகப் பொருள் கொள்ளவில்லை.

    தெலுங்கில் 'இஞ்சு' என்ற சொல் ஸம்ஸ்க்ருதத்தின் 'இக்ஷு' என்பதன் திரிபாகும் -
    தெலுங்கு அகராதி நோக்கவும்.

    http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?page=131&table=brown&display=utf8

    வணக்கம்
    கோவிந்தன்

    ReplyDelete