Sunday, June 5, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - கருண ஜூட3 - ஸ்ரீ ராகம் - Karuna Juda - Sri Ragam

பல்லவி
கருண ஜூட3 நின்னு 1நம்மின வாடு3
3தா3 இந்த பரா(கே)ல(ன)ம்மா

அனுபல்லவி
ஸரஸி(ஜா)ஸன மாத4வ ஸன்னுத
சரணா ப்3ரு2ஹந்-நாயகி வேக3மே (கருண)

சரணம்
சரணம் 1
தீ3ன ஜ(னா)வன மூர்திவி நீ(வ)னி
நேனு நின்னு நெர நம்மிதினி
கா3ன வினோதி3னி க4ன நிப4 வேணி
காமித ப2லதா3 ஸமய(மி)தே3 (கருண)


சரணம் 2
நீ மஹி(மா)திஸ1யம்பு3லனு(னெ)ந்தனி
நே ஜெப்புது3னோ லலிதா
2ஹே(மா)பாங்கி3 ஹிம கி3ரி புத்ரி
ம(ஹே)ஸ்1வரி கி3(ரீ)ஸ1 ரமணி நீ (கருண)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலினி ஸூ1லினி
ஸாமஜ க3மனா குந்த3 ரத3னா
தாமஸம்பு3 இடு ஸேயக நா
3பரிதாபமுலனு 4பரிஹரிஞ்சின நீவு (கருண)


பொருள் - சுருக்கம்
  • மலரோன், மாதவன் போற்றும் திருவடியினளே! பெரிய நாயகியே!
  • இசையில் மகிழ்பவளே! கார்முகில் நிகர் குழலியே! விரும்பியவற்றின் பயனருள்பவளே!
  • லலிதையே! பொன்னங்கத்தினளே! பனிமலை மகளே! மகேசுவரீ! மலையீசனுக்குக் களிப்பூட்டுபவளே!
  • சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! சூலமேந்தியே! களிறு நடையினளே! முல்லைப் பற்களினளே!

  • கருணை காட்ட, உன்னை நம்பினவன் அன்றோ?
  • இத்தனை பராக்கேனம்மா?

    • உனது மகிமைகளின் அதிசயங்களை, எவ்வளவென, நான் கூறுவேனோ!
    • எளியோரைக் காக்கும் வடிவினள் நீயென, நான் உன்னை, மிக்கு நம்பினேன்.
    • சமயமிதுவே.
    • தாமதம், இப்படி செய்யாது, எனது பரிதாபங்களைப் போக்கடிப்பாய்.


  • வேகமே, கருணை காட்ட, உன்னை நம்பினவன் அன்றோ?
  • இத்தனை பராக்கேனம்மா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருண/ ஜூட3/ நின்னு/ நம்மின வாடு3/
கருணை/ காட்ட/ உன்னை/ நம்பினவன்/

3தா3/ இந்த/ பராகு/-ஏலனு/-அம்மா/
அன்றோ/ இத்தனை/ பராக்கு/ ஏன்/ அம்மா/


அனுபல்லவி
ஸரஸிஜ-ஆஸன/ மாத4வ/ ஸன்னுத/
மலரோன்/ மாதவன்/ போற்றும்/

சரணா/ ப்3ரு2ஹத்-நாயகி/ வேக3மே/ (கருண)
திருவடியினளே/ பெரிய நாயகியே/ வேகமே/ (கருணை)


சரணம்
சரணம் 1
தீ3ன ஜன/-அவன/ மூர்திவி/ நீவு/-அனி/
எளியோரை/ காக்கும்/ வடிவினள்/ நீ/ யென/

நேனு/ நின்னு/ நெர/ நம்மிதினி/
நான்/ உன்னை/ மிக்கு/ நம்பினேன்/

கா3ன/ வினோதி3னி/ க4ன/ நிப4/ வேணி/
இசையில்/ மகிழ்பவளே/ கார்முகில்/ நிகர்/ குழலியே/

காமித/ ப2லதா3/ ஸமயமு/-இதே3/ (கருண)
விரும்பியவற்றின்/ பயன் அருள்பவளே/ சமயம்/ இதுவே/ (கருணை)


சரணம் 2
நீ/ மஹிம/-அதிஸ1யம்பு3லனு/-எந்தனி/
உனது/ மகிமைகளின்/ அதிசயங்களை/ எவ்வளவென/

நே/ ஜெப்புது3னோ/ லலிதா/
நான்/ கூறுவேனோ/ லலிதையே/

ஹேம/-அபாங்கி3/ ஹிம/ கி3ரி/ புத்ரி/
பொன்/ அங்கத்தினளே/ பனி/ மலை/ மகளே/

மஹா-ஈஸ்1வரி/ கி3ரி/-ஈஸ1/ ரமணி/ நீ/ (கருண)
மகேசுவரீ/ மலை/ யீசனுக்கு/ களிப்பூட்டுபவளே/ உனது/ (கருணை)


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பரிபாலினி/ ஸூ1லினி/
சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ சூலமேந்தியே/

ஸாமஜ/ க3மனா/ குந்த3/ ரத3னா/
களிறு/ நடையினளே/ முல்லை/ பற்களினளே/

தாமஸம்பு3/ இடு/ ஸேயக/ நா/
தாமதம்/ இப்படி/ செய்யாது/ எனது/

பரிதாபமுலனு/ பரிஹரிஞ்சின/ நீவு/ (கருண)
பரிதாபங்களை/ போக்கடிப்பாய்/ நீ/ (கருணை)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நம்மின வாடு3 - நம்மின வாட3னு.

2 - ஹேமாபாங்கி3 - ஹேமபாங்கி3 : இவ்விடத்தில், 'ஹேமாபாங்கி3' (ஹேம அபாங்கி3) என்பதே பொருந்தும்.

3 - பரிதாபமுலனு - பரிதாபமிலனு (பரிதாபமு இலனு).

4 - பரிஹரிஞ்சின நீவு (போக்கடித்த நீ) - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, '(பரிதாபங்களைப்) போக்கடிப்பாய்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'பரிஹரிஞ்சின' (போக்கடித்த) என்ற இந்த சொல்லின் வடிவத்துடன், அத்தகைய பொருள் கொள்ள இயலாது. எனவே, இது, 'பரிஹரிஞ்சு நீவு' (போக்கடிப்பாய் நீ) என்றிருந்தால், 'நீவு' என்பதனை பல்லவியுடன் இணைத்துப் பொருள் கொள்ளலாம். அல்லது, 'பரிஹரிஞ்சி நீவு' (போக்கடித்து நீ) என்றிருந்தால், இரண்டு சொற்களையும், பல்லவியுடன் இணைத்துப் பொருள் கொள்ளலாம்.

Top

மேற்கோள்கள்
2 - ஹேமாபாங்கி3 - பொன்னங்கத்தினள் - தஞ்சாவூர் பங்காரு காமாட்சியைக் குறிக்கலாம்.

Top

விளக்கம்
பெரிய நாயகி - தஞ்சாவூரில் அம்மையின் பெயர்
மலரோன் - பிரமன்
மாதவன் - அரி
மகேசுவரி - சிவன் (மகேசுவரன்) இல்லாள் என்றும் கொள்ளலாம்.
மலையீசன் - சிவன்

Top


Updated on 05 Jun 2011

No comments:

Post a Comment