Tuesday, March 29, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ராவே ஹிம கி3ரி குமாரி - ராகம் தோடி - Rave Hima Giri Kumari - Raga Todi

பல்லவி
ராவே 1ஹிம கி3ரி குமாரி கஞ்சி காமாக்ஷி வரதா3
மனவி வி(னவ)ம்ம ஸு14(மி)ம்மா மா(ய)ம்மா

ஸ்வர ஸாஹித்ய
ஸ்வர ஸாஹித்ய 1
நத ஜன பரிபாலினி(வ)னுசு
நம்மிதினி ஸதா3 ப்3ரோவ (ராவே)


ஸ்வர ஸாஹித்ய 2
மத3 மத்த மஹிஷ 2தா3னவ மர்த3னி
வெத தீ3ர்சவே து3ரமுக3னு (ராவே)


ஸ்வர ஸாஹித்ய 3
3காம பாலினி நீவே க3தி(ய)னி
கோரிதி கொனியாடி3தி வேடி3தி (ராவே)


ஸ்வர ஸாஹித்ய 4
காமி(தா)ர்த22ல தா3யகி(ய)னேடி
பி3ருது3 மஹிலோ நீகே தகு3 (ராவே)


ஸ்வர ஸாஹித்ய 5
கமல முகி23ர க3ள க4ன நீல கச
4ரா ம்ரு23 விலோசன மணி ரத3னா
3ஜ க3மனா மதி3லோ நினு ஸதா3
தலசுகொனி நீ 4த்4யானமே தல்லி (ராவே)


ஸ்வர ஸாஹித்ய 6
ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா வினு நா சிந்தனு
5வேவேக3 தீ3ர்சி அப4ய(மி)ய்யவே
6கல்யாணீ கஞ்சி காமாக்ஷீ
நீ பாத3மே தி3க்கு (ராவே)


பொருள் - சுருக்கம்
  • இமயமலையின் மகளே! காஞ்சி காமாட்சீ! வரமருள்பவளே! எமது தாயே!
  • செருக்குப் பிடித்த, மகிட அசுரனை வதைத்தவளே!
  • காமனைக் காத்தவளே!
  • கமல வதனீ! அழகிய கழுத்தையுடையவளே! கார்முகில் நிகர், கருநீல, அளக பாரம் உடையவளே! மானின் பார்வையுடைவளே! முத்துப் பல்லினளே! களிறு நடையினளே! தாயே!
  • சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே! கலியாணீ! காஞ்சி காமாட்சீ!

  • வாராயம்மா.
    • வேண்டுதலைக் கேளாயம்மா.
    • நலனருளம்மா.
    • துயர் தீர்ப்பாயம்மா.
    • எனது கவலையை, வெகுவிரைவில் தீர்த்து, அபயமளிப்பாயம்மா.

    • 'விரும்பிய பொருட்பயனைத் தருபவள்' எனப்படும் விருது, உலகினில், உனக்கே தகும்.

    • பணிந்தோரைப் பேணுபவள் என நம்பினேன்.
    • நீயே கதியெனக் கோரினேன், கொண்டாடினேன், வேண்டினேன்.
    • உள்ளத்தினில், உன்னை, எவ்வமயமும் நினைத்துக்கொண்டு, உனது தியானமே.

    • உனது திருவடியே புகல்.


  • எவ்வமயமும் காக்க விரைவாக வாராயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராவே/ ஹிம/ கி3ரி/ குமாரி/ கஞ்சி/ காமாக்ஷி/ வரதா3/
வாராயம்மா/ இமயமலையின்/ மகளே/ காஞ்சி/ காமாட்சீ/ வரமருள்பவளே/

மனவி/ வினு/-அம்ம/ ஸு14மு/-இம்மா/ மா/-அம்மா/
வேண்டுதலை/ கேளாய்/ அம்மா/ நலன்/ அருளம்மா/ எமது/ தாயே/


ஸ்வர ஸாஹித்ய
ஸ்வர ஸாஹித்ய 1
நத ஜன/ பரிபாலினி/-அனுசு/
பணிந்தோரை/ பேணுபவள்/ என/

நம்மிதினி/ ஸதா3/ ப்3ரோவ/ (ராவே)
நம்பினேன்/ எவ்வமயமும்/ காக்க/ வாராயம்மா...


ஸ்வர ஸாஹித்ய 2
மத3/ மத்த/ மஹிஷ/ தா3னவ/ மர்த3னி/
செருக்கு/ பிடித்த/ மகிட/ அசுரனை/ வதைத்தவளே/

வெத/ தீ3ர்சவே/ து3ரமுக3னு/ (ராவே)
துயர்/ தீர்ப்பாயம்மா/ விரைவாக/ வாராயம்மா...


ஸ்வர ஸாஹித்ய 3
காம/ பாலினி/ நீவே/ க3தி/-அனி/
காமனை/ காத்தவளே/ நீயே/ கதி/ யென/

கோரிதி/ கொனியாடி3தி/ வேடி3தி/ (ராவே)
கோரினேன்/ கொண்டாடினேன்/ வேண்டினேன்/


ஸ்வர ஸாஹித்ய 4
காமித/-அர்த2/ ப2ல/ தா3யகி/-அனேடி/
'விரும்பிய/ பொருட்/ பயனை/ தருபவள்/' எனப்படும்/

பி3ருது3/ மஹிலோ/ நீகே/ தகு3/ (ராவே)
விருது/ உலகினில்/ உனக்கே/ தகும்/.


ஸ்வர ஸாஹித்ய 5
கமல/ முகி2/ த3ர/ க3ள/ க4ன/ நீல/ கச/
கமல/ வதனீ/ அழகிய/ கழுத்தையுடையவளே/ கார்முகில்/ (நிகர்) கருநீல/ அளக/

4ரா/ ம்ரு23/ விலோசன/ மணி/ ரத3னா/
பாரம் உடையவளே/ மானின்/ பார்வையுடைவளே/ முத்து/ பல்லினளே/

3ஜ/ க3மனா/ மதி3லோ/ நினு/ ஸதா3/
களிறு/ நடையினளே/ உள்ளத்தினில்/ உன்னை/ எவ்வமயமும்/

தலசுகொனி/ நீ/ த்4யானமே/ தல்லி/ (ராவே)
நினைத்துக்கொண்டு/ உனது/ தியானமே/ தாயே/


ஸ்வர ஸாஹித்ய 6
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதா/ வினு/ நா/ சிந்தனு/
சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/ கேளாயம்மா/ எனது/ கவலையை/

வேவேக3/ தீ3ர்சி/ அப4யமு/-இய்யவே/
வெகுவிரைவில்/ தீர்த்து/ அபயம்/ அளிப்பாயம்மா/

கல்யாணீ/ கஞ்சி/ காமாக்ஷீ/
கலியாணீ/ காஞ்சி/ காமாட்சீ/

நீ/ பாத3மே/ தி3க்கு/ (ராவே)
உனது/ திருவடியே/ புகல்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஹிம கி3ரி குமாரி - ஹிம கி3ரி குமாரீ.

2 - தா3னவ மர்த3னி - தா3னவ மர்த்33னி : 'மர்த்33னி' என்பது தவறாகும்.

4 - த்4யானமே தல்லி - த்4யானமே தல்லீ.

5 - வேவேக3 தீ3ர்சி அப4ய(மி)ய்யவே - வேவேக3 தீ3ர்சாப4ய(மி)ய்யவே - வேவேக3 தீ3ர்சியப4ய(மி)ய்யவே.

6 - கல்யாணீ - கல்யாணி.

Top

மேற்கோள்கள்
3 - காம பாலினி - காமனைக் காத்தவள். சிவன், மன்மதனை, நெற்றிக் கண்ணினால் எரித்தபின், அம்பாள், அவனை (மன்மதனை) உடலின்றி, உயிர்ப்பித்தாள். எனவே, மன்மதனுக்கு, 'அனங்கன்' (உடலில்லாதவன்) என்று பெயர். 'ஸௌந்தர்ய லஹரி'யில் (6-வது செய்யுள்) கூறப்பட்டது -

"மலர் வில், தேன்வண்டு வரிசை நாண், ஐந்து அம்புகள், இளவேனில் மந்திரி, மலையமாருதம் போரிடும் தேர், என உடைத்திருந்தும், மன்மதன் ஒண்டியே. மலைமகளே! உனது கடைக் கண் பார்வையின் கருணையினால், அனைத்துலகினையும் அவன் வெல்கின்றான். "

இநதச் செய்யுளில் வரும் 'ஹிம கி3ரி ஸுதே' என்பதனை, சியாமா சாஸ்திரி, 'ஹிம கி3ரி குமாரி' என்று கூறுகின்றார். எனவே, இந்த கிருதிக்கு, 'ஸௌந்தர்ய லஹரி'யின் 6-வது செய்யுளுடன் தொடர்பு இருப்பதாக நான் கருதுகின்றேன்.

ஸௌந்தர்ய லஹரி - 6-வது செய்யுள் விளக்கம்.

Top

விளக்கம்



Updated on 29 Mar 2011

2 comments:

  1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
    ஸ்வர ஸாஹித்ய 5-
    க3ஜ/ க3மனா/ மதி3லோ/ நினு/ ஸதா3/ தலசுகொனி/ நீ/ த்4யானமே/ தல்லி/
    களிறு/ நடையினளே/ உள்ளத்தினில்/ உன்னை/ எவ்வமயமும்/
    நினைத்துக்கொண்டு/ உனது/ தியானமே/

    இது முழுமையாக இல்லையே.
    The sentence seems to be incomplete.
    வணக்கம்,
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

      இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

      வணக்கம்,
      வே கோவிந்தன்

      Delete