Thursday, March 24, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஏமனி மிகு3ல - ராகம் தோடி - Syama Krishna Vaibhavam - Syama Sastry Kriti - Emani Migula - Todi Raga

பல்லவி
ஏமனி மிகு3ல வர்ணிந்து ஈ மஹினி நே நீ மஹிமலு

அனுபல்லவி
ஸாமஜ க3மனா 14ர்ம ஸம்வர்த4னி 2(அம்பா3) 3ஸுருலகு
நீ மாய தெலிய லேரு
ஸா1ம்ப4வீ நீ மஹாத்ம்யமதிஸ1யமு (ஏமனி)

சரணம்
சரணம் 1
நீரஜ லோசனா லோகமுலோ நினு ஹ்ரு23யமுலோ
நிலுபின லோகுலு த4ன்யுலைரிகா3 நலுகு3ரிலோ
ஸாரமதீ நனு த3யதோ கா3ஞ்சி கருணிஞ்சுமு தல்லி 4நெர நம்மிதி
சாலா மஹா லீல க3லிகி3ன ஸ1க்தி ஸந்ததமு நீவே 5ஸந்தோஷவதி (ஏமனி)


சரணம் 2
ஓ ஜனனி கருணி ப4வ ப்ரியா வினுமவனி
ஓம் அனின ஜன்ம ஸாப2ல்யமாயே நீது3 கத2லனு வினி
ஓ மோஹாவ்ரு2தலையுன்ன ஜனுலனு தல்லி இபுடு3 ப்3ரோவுமு
ஓ ராஜாதி4 ராஜேந்த்36மகுட படலி மணி விரசித பதா3 (ஏமனி)


சரணம் 3
7கஞ்ஜனதா3ந்துனி காமிதா ஸு14 சரிதா ப்ரஸன்ன வத3னா
4ன க்ரு2பா ஸஹிதா ஸ்1யாம க்ரு2ஷ்ண சிந்தா கி3ரி தனயா
பஞ்ச நத3 காவேரீ தீரமுன நிவஸிஞ்சே உமா
8பஞ்சாபகே31 முனி நுதா ஹைமவதீ 9பரா ஸ1க்தீ (ஏமனி)


பொருள் - சுருக்கம்
  • களிறு நடையாளே! அறம் வளர்த்த நாயகியே! தாயே! சாம்பவி!
  • கமலக் கண்ணி! சாரமதி! தாயே! மிகுந்த திருவிளையாடல்கள் உடைய, சக்தி!
  • ஓ ஈன்றவளே! கருணையுள்ளவளே! பவனுக்கு இனியவளே! தாயே! ஓ பேரரசர்கள் மற்றும் இந்திரனின் பன்மணி முடிகள் அலங்கரிக்கும் திருவடியினளே!
  • காமனை அழித்தோன் விரும்பும், நல் சரிதத்தினளே! இன்முகத்தவளே! பெரும் கிருபை கூடியவளே! சியாம கிருஷ்ணனின் சிந்தையுறைபவளே! மலை மகளே! திருவையாறு, காவேரிக் கரையில் உறையும், உமையே! திருவையாறு பைரவர் போற்றும், இமவான் செல்வமே! பராசக்தி!

  • என்னவென்று மிக்கு வருணிப்பேன், இப்புவியில் நான் உனது மகிமைகளை!

  • கேளாய்.

    • வானோரும் உனது மாயையினை அறிந்திலர்.
    • உனது பெருமை அதிசயமானது.

    • புவியில், உன்னை இதயத்தில் நிறுத்திய மக்கள், பேறு பெற்றோர் ஆகினரன்றோ!
    • நால்வரில், என்னை, தயையுடன் காத்து, கருணிப்பாய்.
    • மிக்கு நம்பினேன்.
    • எவ்வமயமும், நீயே மகழ்வளிப்பவள்.

    • அவனியில், 'ஓம்' என்றால், பிறவி ஈடேறும்!
    • உனது கதைகளைக் கேட்டு,மயங்கியுள்ள மக்களை, இவ்வமயம் காப்பாய்,


  • என்னவென்று மிக்கு வருணிப்பேன், இப்புவியில் நான் உனது மகிமைகளை!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமனி/ மிகு3ல/ வர்ணிந்து/ ஈ/ மஹினி/ நே/ நீ/ மஹிமலு/
என்னவென்று/ மிக்கு/ வருணிப்பேன்/ இந்த/ புவியில்/ நான்/ உனது/ மகிமைகளை/


அனுபல்லவி
ஸாமஜ/ க3மனா/ த4ர்ம/ ஸம்வர்த4னி/ அம்பா3/ ஸுருலகு/
களிறு/ நடையாளே/ அறம்/ வளர்த்த நாயகியே/ தாயே/ வானோரும்/

நீ/ மாய/ தெலிய லேரு/ ஸா1ம்ப4வீ/ நீ/ மஹாத்ம்யமு/-அதிஸ1யமு/ (ஏமனி)
உனது/ மாயையினை/ அறிந்திலர்/ சாம்பவி/ உனது/ பெருமை/ அதிசயமானது/.


சரணம்
சரணம் 1
நீரஜ/ லோசனா/ லோகமுலோ/ நினு/ ஹ்ரு23யமுலோ/
கமல/ கண்ணி/ புவியில்/ உன்னை/ இதயத்தில்/

நிலுபின/ லோகுலு/ த4ன்யுலு/-ஐரிகா3/ நலுகு3ரிலோ/
நிறுத்திய/ மக்கள்/ பேறு பெற்றோர்/ ஆகினரன்றோ/ நால்வரில்/

ஸாரமதீ/ நனு/ த3யதோ/ கா3ஞ்சி/ கருணிஞ்சுமு/ தல்லி/ நெர/ நம்மிதி/
சாரமதி/ என்னை/ தயையுடன்/ காத்து/ கருணிப்பாய்/ தாயே/ மிக்கு/ நம்பினேன்/

சாலா/ மஹா லீல/ க3லிகி3ன/ ஸ1க்தி/ ஸந்ததமு/ நீவே/ ஸந்தோஷவதி/ (ஏமனி)
மிகுந்த/ திருவிளையாடல்கள்/ உடைய/ சக்தி/ எவ்வமயமும்/ நீயே/ மகழ்வளிப்பவள்/


சரணம் 2
ஓ/ ஜனனி/ கருணி/ ப4வ/ ப்ரியா/ வினுமு/-அவனி/
ஓ/ ஈன்றவளே/ கருணையுள்ளவளே/ பவனுக்கு/ இனியவளே/ கேளாய்/ அவனியில்/

ஓம்/ அனின/ ஜன்ம/ ஸாப2ல்யமு-ஆயே/ நீது3/ கத2லனு/ வினி/
'ஓம்'/ என்றால்/ பிறவி/ ஈடேறும்/ உனது/ கதைகளை/ கேட்டு/

ஓ/ மோஹ-ஆவ்ரு2தலை/-உன்ன/ ஜனுலனு/ தல்லி/ இபுடு3/ ப்3ரோவுமு/
ஓ/ மயங்கி/ யுள்ள/ மக்களை/ தாயே/ இவ்வமயம்/ காப்பாய்/

ஓ/ ராஜ-அதி4 ராஜ/-இந்த்3ர/ மகுட/ படலி மணி/ விரசித/ பதா3/ (ஏமனி)
ஓ/ பேரரசர்கள்/ (மற்றும்) இந்திரனின்/ முடிகள்/ பன்மணி/ அலங்கரிக்கும்/ திருவடியினளே/


சரணம் 3
கஞ்ஜனத3/-அந்துனி/ காமிதா/ ஸு14/ சரிதா/ ப்ரஸன்ன/ வத3னா/
காமனை/ அழித்தோன்/ விரும்பும்/ நல்/ சரிதத்தினளே/ இன்/ முகத்தவளே/

4ன/ க்ரு2பா/ ஸஹிதா/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ சிந்தா/ கி3ரி/ தனயா/
பெரும்/ கிருபை/ கூடியவளே/ சியாம/ கிருஷ்ணனின்/ சிந்தையுறைபவளே/ மலை/ மகளே/

பஞ்ச நத3/ காவேரீ/ தீரமுன/ நிவஸிஞ்சே/ உமா/
திருவையாறு/, காவேரி/ கரையில்/ உறையும்/ உமையே/

பஞ்ச-ஆபக3/-ஈஸ1 முனி/ நுதா/ ஹைமவதீ/ பரா ஸ1க்தீ/ (ஏமனி)
திருவையாறு/ பைரவர்/ போற்றும்/ இமவான் செல்வமே/ பராசக்தி/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸுருலகு நீ மாய தெலிய லேரு - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கியம், இலக்கணப்படி தவறாகும். இது, 'ஸுருலு நீ மாய தெலிய லேரு' என்றோ, அல்லது 'ஸுருலகு நீ மாய தெலிய லேது3' என்றோதான் இருக்கவேண்டும்.

4 - நெர நம்மிதி - நினு நெர நம்மிதி.

5 - ஸந்தோஷவதி - ஸந்தோஷவதீ.

7 - கஞ்ஜனதா3ந்துனி காமிதா - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, சில புத்தகங்களில், 'காமனை அழித்த, சிவனுக்கு இனியவளே' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சொற்களை, (கஞ்ஜனதா3ந்துனி காமிதா) 'கஞ்ஜனத3+அந்துனி காமிதா' என்று பிரிக்கவேண்டும். எனவே, 'கஞ்ஜனத3' என்பதற்கு 'காமன்' என்று பொருளிருக்க வேண்டும். ஆனால், காமனைக்குறிக்கும் அத்தகைய சொல்லேதும் இல்லை. எனவே, எனக்குத் தெரிந்தவரை, இதனை, 'கம்+ஜனித' (கஞ்ஜனித) என்று கொண்டால் 'காமன்' என்று பொருள்படும். அதன்படி, இங்கு, 'கஞ்ஜனிதாந்துனி காமிதா' என்றிருக்கவேண்டும் என்று நான் நம்புகின்றேன்.

8 - பஞ்சாபகே31 - எல்லா புத்தகங்களிலும், 'பஞ்சாபகேஸ1' என்றே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'பஞ்சாபகே31' என்பதே சரியான சொல்லாகும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
1 - 4ர்ம ஸம்வர்த4னி - அறம் வளர்த்த நாயகி - திருவையாற்றில் அம்மையின் பெயர்.

8 - பஞ்சாபகே31 முனி - முத்துஸ்வாமி தீக்ஷிதர், தமது 'பரமேஸ்1வர ஜக3தீ3ஸ்1வர' என்ற 'சல நாட' ராக கீர்த்தனையில், திருவையாறுறை சிவனை, 'க்ஷேத்ர பால வினுத சரண' என்று அழைக்கின்றார். 'க்ஷேத்ர பால' என்பதற்கு, 'காவல் தெய்வம்' அதாவது, 'பைரவர்' என்று பொருளாகும். தமிழ்நாட்டில், பைரவரும், முனீஸ்வரரும், காவல் தெய்வங்களாகத் தொழப்படுவர். எனவே, இங்கு, 'முனி' என்று வரும் சொல், 'பைரவரை'க் குறிக்கும் என்று நான் கருதுகின்றேன். எனவே, 'பஞ்சாபகே31 முனி' என்பதற்கு, 'திருவையாறு உறை பைரவர்' என்று பொருள் கொள்ளப்பட்டது.

9 - பரா ஸ1க்தீ - 'பரா' என்பது, ஒலியின் அருவமான, மூலத்தினைக் குறிக்கும். லலிதா ஸஹஸ்ரநாமத்தில், அம்மைக்கு, 'பரா, பஸ்1யந்தி, மத்4யமா, வைக2ரீ ரூபா' என்று பெயராகும். இந்த நான்கும், உடலில், ஒலி வெளிப்படும் முறையினைக் குறிக்கும். இது குறித்து 'காஞ்சி மாமுனிவரின், ஸௌந்தர்ய லஹரி உரை’யினை நோக்கவும்.

Top

விளக்கம்
2 - (அம்பா3) - எல்லா புத்தகங்களிலும் இச்சொல் bracket-களில் கொடுக்கப்பட்டள்ளது. அதன் காரணம் தெரியவில்லை.

6 - மகுட படலி மணி விரசித பதா3 - பன்மணி முடிகள் அலங்கரிக்கும் திருவடி - அம்மையின் திருவடி சதங்கைகளின் மணிகளாக, பேரரசர்கள் மற்றும் இந்திரனின் மகுடங்கள் திகழ்வதாக.

சாம்பவி - சம்புவின் (சிவன்) மனைவி
நால்வரில் - யாவர் முன்னிலையில்
சாரமதி - மிகச் சிறந்தவள்
பவன் - காமனை அழித்தோன் - சிவன்

Top


Updated on 25 Mar 2011

No comments:

Post a Comment