Friday, April 1, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - மீன லோசனா - ராகம் த4ன்யாஸி - Meena Lochana - Raga Dhanyasi

பல்லவி
1மீன லோசனா ப்3ரோவ யோசனா
தீ3ன ஜ(னா)வனா 2அம்பா3

அனுபல்லவி
3கா3ன வினோதி3னீ நீ ஸமானமு
ஜகா3ன கா3ன(ன)ம்மா 4தே3வீ (மீன)

சரணம்
சரணம் 1
கன்ன 5தல்லி க3தா3 நா வின்னபமு வி(னவ)ம்மா
பன்னக3 பூ4ஷணுனிகி ராணீ
6நின்னு வினா இலலோ 7தா3
வே(ரெ)வ(ரு)ன்னா(ர)ம்மா
83ங்கா3ரு பொ3ம்மா (மீன)


சரணம் 2
இந்து3 முகீ2 நீவு வரமு(லொ)ஸகி3 நா
முந்து3 வச்சி த3ய ஸே(யவ)ம்மா
9குந்த3 முகுந்த3 ரத3னா ஹிம கி3ரி
குமாரீ கௌமாரீ பர(மே)ஸ்1வரீ (மீன)


சரணம் 3
ஸாமஜ க3மனா நீவு தாமஸமு
ஸேயக ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ ராவே
காம பாலினீ ப4வானீ சந்த்3
கலா தா4ரிணீ நீரத3 வேணீ (மீன)


பொருள் - சுருக்கம்
  • அங்கயற்கண்ணீ! தீனர்களைக் காப்பவளே! அம்பா!
  • இசையில் மகிழ்பவளே! தேவீ!
  • அரவணிவோனின் ராணீ! தங்கச் சிலையே!
  • மதி முகத்தினளே! முல்லை, பாதரசப் பற்களுடையவளே! இமய மலை மகளே! கௌமாரீ! பரமேசுவரீ!
  • களிறு நடையினளே! சியாம கிருஷ்ணனின் சோதரியே! மதனைக் காத்தவளே! பவானீ! மதிப் பிறை சூடுபவளே! கார்முகில் கூந்தலினளே!

  • காப்பதற்கு யோசனையா?

    • உனது ஈடு, இப்புவியில், காணேனம்மா.
    • ஈன்ற தாயன்றோ?
    • உன்னையல்லாது, புவியில், கொடையாளி வேறு எவருளரம்மா?

    • எனது விண்ணப்பத்தினைக் கேளாயம்மா.
    • வரங்களருளி, எனது முன்பு எழுந்தருளி, தயை செய்வாயம்மா.
    • தாமதம் செய்யாது வாராயம்மா.


  • காப்பதற்கு யோசனையா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மீன/ லோசனா/ ப்3ரோவ/ யோசனா/
அங்கயற்/ கண்ணீ/ காப்பதற்கு/ யோசனையா/

தீ3ன ஜன/-அவனா/ அம்பா3/
தீனர்களை/ காப்பவளே/ அம்பா/


அனுபல்லவி
கா3ன/ வினோதி3னீ/ நீ/ ஸமானமு/
இசையில்/ மகிழ்பவளே/ உனது/ ஈடு/

ஜகா3ன/ கா3னனு/-அம்மா/ தே3வீ/ (மீன)
இப்புவியில்/ காணேன்/ அம்மா/ தேவீ/


சரணம்
சரணம் 1
கன்ன/ தல்லி/ க3தா3/ நா/ வின்னபமு/ வினு/-அம்மா/
ஈன்ற/ தாய்/ அன்றோ/ எனது/ விண்ணப்பத்தினை/ கேளாய்/ அம்மா/

பன்னக3/ பூ4ஷணுனிகி/ ராணீ/
அரவு/ அணிவோனின்/ ராணீ/

நின்னு/ வினா/ இலலோ/ தா3த/
உன்னை/ யல்லாது/ புவியில்/ கொடையாளி/

வேரு/-எவரு/-உன்னாரு/-அம்மா/ ப3ங்கா3ரு/ பொ3ம்மா/ (மீன)
வேறு/ எவர்/ உளர்/ அம்மா/ தங்க/ சிலையே/


சரணம் 2
இந்து3/ முகீ2/ நீவு/ வரமுலு/-ஒஸகி3/ நா/
மதி/ முகத்தினளே/ நீ/ வரங்கள்/ அருளி/ எனது/

முந்து3/ வச்சி/ த3ய/ ஸேயு/-அம்மா/
முன்பு/ எழுந்தருளி/ தயை/ செய்வாய்/ அம்மா/

குந்த3/ முகுந்த3/ ரத3னா/ ஹிம/ கி3ரி/
முல்லை/ பாதரச/ பற்களுடையவளே/ இமய/ மலை/

குமாரீ/ கௌமாரீ/ பரம-ஈஸ்1வரீ/ (மீன)
மகளே/ கௌமாரீ/ பரமேசுவரீ/


சரணம் 3
ஸாமஜ/ க3மனா/ நீவு/ தாமஸமு/
களிறு/ நடையினளே/ நீ/ தாமதம்/

ஸேயக/ ஸ்1யாம க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ ராவே/
செய்யாது/ சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ வாராயம்மா/

காம/ பாலினீ/ ப4வானீ/ சந்த்3ர/
மதனை/ காத்தவளே/ பவானீ/ மதி/

கலா/ தா4ரிணீ/ நீரத3/ வேணீ/ (மீன)
பிறை/ சூடுபவளே/ கார்முகில்/ கூந்தலினளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மீன லோசனா - மீன லோசனி.

2 - அம்பா3 - அம்ப3.

3 - கா3ன வினோதி3னீ - கா3ன வினோதி3னி - கா3ன வினோதி3னீ அம்ப3.

4 - தே3வீ - அம்ப3.

5 - தல்லி க3தா3 - தல்லி கா3தா3.

6 - நின்னு வினா - நினு வினா.

7 - தா3த வேரெவருன்னாரம்மா - தா3தலெவருன்னாரம்மா.

8 - 3ங்கா3ரு பொ3ம்மா - ப3ங்கா3ரு பொ3ம்ம அம்ப3.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
9 - குந்த3 முகுந்த3 ரத3னா - முல்லைப் பற்களைக் குறிப்பதற்கு 'குந்த3 ரத3னா' என்பது பொது வழக்கு. ஆனால், இவ்விடத்தில், இடையில் கொடுக்கப்பட்டுள்ள, 'முகுந்த3' என்ற சொல்லுக்குப் பொருள் சரிவர விளங்கவில்லை. 'குந்த3', 'முகுந்த3' - நவ நிதிகளில் இரண்டின் பெயராகும். அவை இவ்விடம் பொருந்தாது. 'முகுந்த3' என்பதற்கு 'முக்தி அருள்பவள்' என்று பொருள். அதுவும் இவ்விடம் பொருந்தாது. 'முகுந்த3' என்ற சொல்லுக்கு, 'பாதரசம்' என்றும் பொருளுண்டு. அந்தப் பொருள், இவ்விடத்தில், ஓரளவுக்குப் பொருந்துவதனால், அங்ஙனமே ஏற்கப்பட்டது. ஆயினும், இங்கு 'முகுல' (மொட்டு) (முல்லை மொட்டுப் போன்ற பற்களுடையவளே!) என்றிருக்கவேண்டுமென கருதப்படுகின்றது. ஆனால், எல்லா புத்தகங்களிலும், 'முகுந்த' என்றே கொடுக்கப்பட்டிருப்பதனால், அச்சொல் அப்படியே ஏற்கப்பட்டது.

Top

அரவணிவோன் - சிவன்
சியாம கிருஷ்ணன் - விஷ்ணு - ஆசிரியர் முத்திரை
மதன் - மன்மதன்
கார்முகில் கூந்தல் - கார்முகில் நிகர் கருங்கூந்தல்.
Top


Updated on 01 Apr 2011

No comments:

Post a Comment