Tuesday, May 17, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - மரி வேரே க3தி - ராகம் ஆனந்த பைரவி - Mari Vere Gati - Raga Ananda Bhairavi

பல்லவி
மரி வேரே க3தி(யெ)வ(ர)ம்மா
1மஹிலோ நன்னு ப்3ரோசுடகு

அனுபல்லவி
1ர(ணா)க3த ரக்ஷகி நீவே(ய)னி
2ஸதா3 நம்மிதி நம்மிதினி மீ(னா)க்ஷீ (மரி)

சரணம்
சரணம் 1
மது4ரா புரி நிலயா வாணீ
ரமா ஸேவித பத3 கமலா
3மது4 கைடப44ஞ்ஜனீ காத்யாயனீ
மராள க3மனா நிக3(மா)ந்த வாஸினீ (மரி)


சரணம் 2
வர(மி)ச்சி 4ஸீ1க்4ரமே ப்3ரோவு
ஸி1வா அம்பா3 இதி3 நீகு ப3ருவா
நெர தா3தவு நீவு க3தா31ங்கரீ
ஸரோஜ ப4(வா)தி3 ஸு(ரே)ந்த்35பூஜிதே (மரி)


சரணம் 3
ஸு1க ஸ்1யாமளா க46ஸ்1யாம க்ரு2ஷ்ணுனி
ஸோத3ரீ கௌமாரீ
அகளங்க கலா த4ரீ பி3ம்(பா3)த4ரீ
அபார க்ரு2பா நிதி4 நீவே ரக்ஷிம்ப (மரி)


ஸ்வர ஸாஹித்யம்
பாத3 யுக3மு மதி3லோ த3லசி கோரிதி
வினுமு மத33ஜ க3மனா
7பருல நுதிம்பக3னே வர(மொ)ஸகு3
ஸததமு 8நினு மதி3 மரவகனே
மத3ன ரிபு ஸதி 9நினு ஹ்ரு23யமுலோ
3தி(ய)னி த3லசி ஸ்துதி ஸலிபிதே
முத3முதோ ப2ல(மொ)ஸகு3டகு த4ரலோ
ந(தா)வன குதூஹல 10நீவேகா3 (மரி)


பொருள் - சுருக்கம்
 • மீனாட்சீ!
 • மதுரை நகரில் நிலைபெற்றவளே! வாணி, ரமா சேவிக்கும், கமலத் திருவடியினளே! மது, கைடபர்களை அழித்தவளே! காத்தியாயனியே! அன்ன நடையினளே! வேதாந்தத்தினில் உறைபவளே!
 • சிவையே! அம்பையே! சங்கரீ! மலரோன், வானோர் தலைவன் ஆகியோரால் தொழப்பெற்றவளே!
 • கிளியேந்தும், சியாமளையே! முகில்வண்ணன், சியாம கிருஷ்ணனின் சோதரியே! கௌமாரீ! களங்கமற்ற, பிறை யணியும், கோவையிதழினளே!
 • மத கரி நடையினளே! காமன் பகைவன் இல்லாளே! புவியில், பணிந்தோரைக் காப்பதில் ஊக்கமுடையவளே!

 • கேளாயம்மா.
 • இன்னம், வேறே கதியெவரம்மா, புவியில், என்னைக் காப்பதற்கு?

  • சரண் அடைந்தோரைக் காப்பவள் நீயேயென, எவ்வமயமும், நம்பினேன், நம்பினேன்.
  • கரைகாணா, கருணைக் கடல் நீயே, காப்பதற்கு.
  • எவ்வமயமும், உன்னை, மனத்தினில் மறவாது, உன்னை, இதயத்தினில் கதியென நினைத்து, துதி செய்தால், மகிழ்வுடன், பயனருள்வதற்கு, நீயேயன்றோ?

  • திருவடி யிணையினை, உள்ளத்தினில் நினைந்து, கோரினேன்.
  • பிறரைப் புகழேனம்மா.
  • வரமருள்வாய்.
  • வரமருளி, விரைவாகக் காப்பாய்.
  • இஃதுனக்கு பளுவா?
  • மிக்கு, கொடையாளி நீயன்றோ?


 • இன்னம், வேறே கதியெவரம்மா, புவியில், என்னைக் காப்பதற்கு?பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மரி/ வேரே/ க3தி/-எவரு/-அம்மா/
இன்னம்/ வேறே/ கதி/ யெவர்/ அம்மா/

மஹிலோ/ நன்னு/ ப்3ரோசுடகு/
புவியில்/ என்னை/ காப்பதற்கு/


அனுபல்லவி
1ரணு/-ஆக3த/ ரக்ஷகி/ நீவே/-அனி/
சரண்/ அடைந்தோரை/ காப்பவள்/ நீயே/ யென/

ஸதா3/ நம்மிதி/ நம்மிதினி/ மீன-அக்ஷீ/ (மரி)
எவ்வமயமும்/ நம்பினேன்/ நம்பினேன்/ மீனாட்சீ/


சரணம்
சரணம் 1
மது4ரா/ புரி/ நிலயா/ வாணீ/
மதுரை/ நகரில்/ நிலைபெற்றவளே/ வாணி/

ரமா/ ஸேவித/ பத3/ கமலா/
ரமா/ சேவிக்கும்/ திருவடியினளே/ கமல/

மது4/ கைடப4/ ப4ஞ்ஜனீ/ காத்யாயனீ/
மது/ கைடபர்களை/ அழித்தவளே/ காத்தியாயனியே/

மராள/ க3மனா/ நிக3ம/-அந்த/ வாஸினீ/ (மரி)
அன்ன/ நடையினளே/ வேத/ அந்தத்தினில்/ உறைபவளே/


சரணம் 2
வரமு/-இச்சி/ ஸீ1க்4ரமே/ ப்3ரோவு/
வரம்/ அருளி/ விரைவாக/ காப்பாய்/

ஸி1வா/ அம்பா3/ இதி3/ நீகு/ ப3ருவா/
சிவையே/ அம்பையே/ இஃது/ உனக்கு/ பளுவா/

நெர/ தா3தவு/ நீவு/ க3தா3/ ஸ1ங்கரீ/
மிக்கு/ கொடையாளி/ நீ/ யன்றோ/ சங்கரீ/

ஸரோஜ ப4வ/-ஆதி3/ ஸுர/-இந்த்3ர/ பூஜிதே/ (மரி)
மலரோன்/ ஆகியோரால்/ வானோர்/ தலைவன்/ தொழப்பெற்றவளே/


சரணம் 3
ஸு1க/ ஸ்1யாமளா/ க4ன/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ணுனி/
கிளியேந்தும்/ சியாமளையே/ முகில்வண்ணன்/ சியாம/ கிருஷ்ணனின்/

ஸோத3ரீ/ கௌமாரீ/
சோதரியே/ கௌமாரீ/

அகளங்க/ கலா/ த4ரீ/ பி3ம்ப3/-அத4ரீ/
களங்கமற்ற/ பிறை/ யணியும்/ கோவை/ யிதழினளே/

அபார/ க்ரு2பா/ நிதி4/ நீவே/ ரக்ஷிம்ப/ (மரி)
கரைகாணா/ கருணை/ கடல்/ நீயே/ காப்பதற்கு/


ஸ்வர ஸாஹித்யம்
பாத3/ யுக3மு/ மதி3லோ/ த3லசி/ கோரிதி/
திருவடி/ யிணையினை/ உள்ளத்தினில்/ நினைந்து/ கோரினேன்/

வினுமு/ மத3/ க3ஜ/ க3மனா/
கேளாயம்மா/ மத/ கரி/ நடையினளே/

பருல/ நுதிம்பக3னே/ வரமு/-ஒஸகு3/
பிறரை/ புகழேனம்மா/ வரம்/ அருள்வாய்/

ஸததமு/ நினு/ மதி3/ மரவகனே/
எவ்வமயமும்/ உன்னை/ மனத்தினில்/ மறவாது/

மத3ன/ ரிபு/ ஸதி/ நினு/ ஹ்ரு23யமுலோ/
காமன்/ பகைவன்/ இல்லாளே/ உன்னை/ இதயத்தினில்/

3தி/-அனி/ த3லசி/ ஸ்துதி/ ஸலிபிதே/
கதி/ யென/ நினைத்து/ துதி/ செய்தால்/

முத3முதோ/ ப2லமு/-ஒஸகு3டகு/ த4ரலோ/
மகிழ்வுடன்/ பயன்/ அருள்வதற்கு/ புவியில்/

நத/-அவன/ குதூஹல/ நீவேகா3/ (மரி)
பணிந்தோரை/ காப்பதில்/ ஊக்கமுடையவளே/ நீயேயன்றோ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மஹிலோ நன்னு ப்3ரோசுடகு - மஹிலோ ப்3ரோசுடகு.

2 - ஸதா3 நம்மிதி நம்மிதினி மீனாக்ஷீ - ஸதா3 நம்மிதி நம்மிதி மீனாக்ஷீ - ஸதா3 நினு நம்மிதினி மீனாக்ஷீ.

4 - ஸீ1க்4ரமே - தீவ்ரமே.

5 - பூஜிதே - பூஜித.

Top

6 - ஸ்1யாம க்ரு2ஷ்ணுனி - ஸ்1யாம க்ரு2ஷ்ண.

7 - பருல நுதிம்பக3னே - பருலு நுதிம்பக3னே : இவ்விடத்தில் 'பருலு' என்பது தவறாகும்.

8 - நினு மதி3 மரவகனே - நினு மதி மருவகனே : 'மதி3' என்பது, 'மதி' என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லின் தெலுங்கு வடிவாகும். இந்த கீர்த்தனை பெரும்பாலும் தெலுங்கிலுள்ளதனால், 'மதி3' என்பதே சரியென்று நினைக்கின்றேன். 'மரவகனே' - 'மருவகனே' - இரண்டுமே சரியாகும்.

9 - நினு ஹ்ரு23யமுலோ - (உன்னை இதயத்தினில்) - நனு ஹ்ரு23யமுலோ : இவ்விடத்தில், 'நனு' என்பது பொருந்தாது.

10 - நீவேகா3 - நீவேக3 - ஈ வேள : இவ்விடத்தில், 'நீவேக3' என்பது பொருந்தாது.

Top

மேற்கோள்கள்
3 - மது4 கைடப44ஞ்ஜனீ - மது கைடபர்களை வதைத்தவள் - தேவி பாகவதம் நோக்கவும்.

Top

விளக்கம்
வாணி - கலைமகள்
ரமா - திருமகள்
மது கைடபர்கள் - தேவியினால் கொல்லப்பட்ட அசுரர்கள்
வேதாந்தம் - உபநிடதங்கள்
வேதாந்தத்தினில் உறைபவள் - உபநிடதங்களில் போற்றப்பெற்றவள்
காமன் பகைவன் - சிவன்'

Top


Updated on 17 May 2011

No comments:

Post a Comment