Sunday, May 1, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நன்னு ப்3ரோவு - ராகம் லலித - Nannu Brovu - Raga Lalita

பல்லவி
நன்னு ப்3ரோவு லலிதா வேக3மே சால
நின்னு நெர நம்மி(யு)ன்ன-1வாடு33தா3
4க்த 2கல்ப லதா

அனுபல்லவி
நின்னு வினா 3எவ(ரு)ன்னாரு க3தி ஜனனீ
அதி வேக3மே வச்சி (நன்னு)


சரணம்
சரணம் 1
பராகு ஸேயகனே வச்சி க்ரு2
ஸலுப ராதா3 4மொர வினவா
பரா ஸ1க்தீ கீ3ர்வாண 5வந்தி3
பதா3
நீ ப4க்துட3(ன)ம்மா ஸந்ததமு (நன்னு)


சரணம் 2
ஸரோஜ ப46கமல நாப41ங்கர
ஸு(ரே)ந்த்3ர நுத சரிதா
புராணீ வாணீ இந்த்3ராணீ 7வந்தி3
ராணீ அஹி பூ4ஷணுனி ராணீ
(நன்னு)


சரணம் 3
8ம(தா3)த்முலைன து3ராத்ம 9ஜனு(ல)னு
10கத2லனு பொக3டி3
ஸதா3 11நே வாரல சுட்டி திரிகி3தி
12வெதல(னெ)ல்ல தீ3ர்சி வர(மொ)ஸகி3 (நன்னு)


சரணம் 4
13ஸுமேரு மத்4ய நிலயே ஸ்1யாம க்ரு2ஷ்ணுனி
ஸோத3ரீ கௌமாரீ
14உமா ஸ்ரீ மீனா(க்ஷ)ம்மா1ங்கரீ
ஓ மஹா ராக்3ஞீ 15ரக்ஷிஞ்சுட(கி)தி3 ஸமயமு (நன்னு)


பொருள் - சுருக்கம்
 • லலிதையே! பக்தர்களின் கற்பகக் கொடியே!
 • ஈன்றவளே!
 • பரா சக்தீ! வானோர் தொழும், திருவடியினளே!
 • மலரோன், கமலவுந்தியோன், சங்கரன், வானோர் தலைவன் போற்றும், சரிதத்தினளே! பழம்பொருளே! வாணி மற்றும் இந்திராணி தொழும், ராணியே! அரவணிவோனின் ராணீ!
 • புனித மேருவின் நடுவில் நிலைபெற்றவளே! சியாம கிருஷ்ணனின் சோதரியே! கௌமாரீ! உமையே! ஸ்ரீ மீனாட்சியம்மா! சங்கரீ! ஓ (அண்டமாளும்) பேரரசியே!

 • என்னைக் காப்பாய், வெகு விரைவாக.

  • உன்னை மிக்கு நம்பியுள்ளவனல்லவா?
  • உன்னையன்றி எவருளர் கதி?

  • பராக்கு செய்யாமலே, வந்து, கிருபை காட்டக் கூடாதா?
  • வேண்டுகோளைக் கேளாயோ?
  • உனது தொண்டனம்மா.

  • செருக்குடையவர்களாகிய, தீய உள்ள, மனிதர்கள் கூறும் கதைகளைப் புகழ்ந்து, எவ்வமயமும், அவர்களைச் சுற்றித் திரிந்தேன்.

  • காப்பதற்கு, இது சமயம்.


 • துயரங்களையெல்லாம் தீர்த்து, வரமருளி, மிக்கு விரைவாக வந்து, எவ்வமயமும் என்னைக் காப்பாய்.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நன்னு/ ப்3ரோவு/ லலிதா/ வேக3மே/ சால/
என்னை/ காப்பாய்/ லலிதையே/ விரைவாக/ வெகு/

நின்னு/ நெர/ நம்மி/-உன்ன-வாடு3/ க3தா3/
உன்னை/ மிக்கு/ நம்பி/ யுள்ளவன்/ அல்லவா/

4க்த/ கல்ப/ லதா/
பக்தர்களின்/ கற்பக/ கொடியே/


அனுபல்லவி
நின்னு/ வினா/ எவரு/-உன்னாரு/ க3தி/ ஜனனீ/
உன்னை/ யன்றி/ எவர்/ உளர்/ கதி/ ஈன்றவளே/

அதி/ வேக3மே/ வச்சி/ (நன்னு)
மிக்கு/ விரைவாக/ வந்து/ (என்னை)


சரணம்
சரணம் 1
பராகு/ ஸேயகனே/ வச்சி/ க்ரு2ப/
பராக்கு/ செய்யாமலே/ வந்து/ கிருபை/

ஸலுப/ ராதா3/ மொர/ வினவா/
காட்ட/ கூடாதா/ வேண்டுகோளை/ கேளாயோ/

பரா/ ஸ1க்தீ/ கீ3ர்வாண/ வந்தி3த/
பரா/ சக்தீ/ வானோர்/ தொழும்/

பதா3/ நீ/ ப4க்துட3னு/-அம்மா/ ஸந்ததமு/ (நன்னு)
திருவடியினளே/ உனது/ தொண்டன்/ அம்மா/ எவ்வமயமும்/ (என்னை)


சரணம் 2
ஸரோஜ ப4வ/ கமல/ நாப4/ ஸ1ங்கர/
மலரோன்/ கமல/ வுந்தியோன்/ சங்கரன்/

ஸுர/-இந்த்3ர/ நுத/ சரிதா/
வானோர்/ தலைவன்/ போற்றும்/ சரிதத்தினளே/

புராணீ/ வாணீ/ இந்த்3ராணீ/ வந்தி3த/
பழம்பொருளே/ வாணி/ (மற்றும்) இந்திராணி/ தொழும்/

ராணீ/ அஹி/ பூ4ஷணுனி/ ராணீ/ (நன்னு)
ராணியே/ அரவு/ அணிவோனின்/ ராணீ/


சரணம் 3
மத3/-ஆத்முலைன/ து3ராத்ம/ ஜனுலு/-அனு/
செருக்கு/ உடையவர்களாகிய/ தீய உள்ள/ மனிதர்கள்/ கூறும்/

கத2லனு/ பொக3டி3/
கதைகளை/ புகழ்ந்து/

ஸதா3/ நே/ வாரல/ சுட்டி/ திரிகி3தி/
எவ்வமயமும்/ அவர்களை/ சுற்றி/ திரிந்தேன்/

வெதலனு/-எல்ல/ தீ3ர்சி/ வரமு/-ஒஸகி3/ (நன்னு)
துயரங்களை/ யெல்லாம்/ தீர்த்து/ வரம்/ அருளி/ (என்னை)


சரணம் 4
ஸுமேரு/ மத்4ய/ நிலயே/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ணுனி/
புனித மேருவின்/ நடுவில்/ நிலைபெற்றவளே/ சியாம/ கிருஷ்ணனின்/

ஸோத3ரீ/ கௌமாரீ/
சோதரியே/ கௌமாரீ/

உமா/ ஸ்ரீ மீனாக்ஷி/-அம்மா/ ஸ1ங்கரீ/
உமையே/ ஸ்ரீ மீனாட்சி/ யம்மா/ சங்கரீ/

ஓ/ மஹா ராக்3ஞீ/ ரக்ஷிஞ்சுடகு/-இதி3/ ஸமயமு/ (நன்னு)
ஓ/ (அண்டமாளும்) பேரரசியே/ காப்பதற்கு/ இது/ சமயம்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வாடு33தா3 - வாடு3 கா3தா3.

2 - கல்ப லதா - கல்ப லதிகா.

3 - எவருன்னாரு க3தி ஜனனீ அதி வேக3மே வச்சி (நன்னு) - எவருன்னாரு மா க3தி ஜனனீ மா ஜனனீ அதி வேக3மே (நன்னு).

4 - மொர வினவா - மொர வினதா3.

5 - வந்தி3த பதா3 - வந்தி3த பாதா3.

6 - கமல நாப4 - கமல நாத2 : இவ்விடத்தில், இது விஷ்ணுவைக் குறிப்பதனால், 'கமல நாப4' என்றோ 'கமலா நாத2' என்றோ இருக்க வேண்டும். எல்லா புத்தகங்களிலும் 'கமல' என்றே கொடுக்கப்பட்டுள்ளதால், 'கமல நாப4' என்றே ஏற்கப்பட்டது.

7 - வந்தி3த ராணீ அஹி பூ4ஷணுனி ராணீ - வந்தி3த போ4கி3 பூ4ஷணுனிகி ராணீ.

8 - மதா3த்முலைன - மதா3ந்து4லைன.

9 - ஜனுலனு - ஜனமுலனு.

Top

10 - கத2லனு பொக3டி3 - கத2லனு பொக3டி3 பொக3டி3 - தா3தலனி பொக3டி3.

11 - நே வாரல சுட்டி - நேனிட்ல சுட்டி : சில புத்தகங்களில், 'வரால' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், இச்சொல்லுக்கு, 'அவர்களை' என்று பொருளாதலால், 'வாரல' என்பதே பொருந்தும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.

12 - வெதலனெல்ல - சஞ்சலம்ப3ன்னியு.

13 - நிலயே - நிலய.

14 - உமா ஸ்ரீ மீனாக்ஷம்மா - உமா மீனாக்ஷம்மா.

15 - ரக்ஷிஞ்சுடகிதி3 ஸமயமு - ரக்ஷிம்ப ஸமயமிதி3.

Top

மேற்கோள்கள்
2 - கல்ப லதா - கற்ப தரு கொடிகளால் சூழப்பட்டதெனக் கூறப்படும். கற்ப விருட்ச வாகனம் நோக்கவும்.

13 - ஸுமேரு மத்4ய நிலயே - புனித மேரு மலையின் நடுவில் நிலைபெற்றவள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (55) 'ஸுமேரு மத்4ய ஸ்1ரு2ங்க3ஸ்தா2' என்பது அம்மையின் நாமங்களிலொன்று.

Top

விளக்கம்
மலரோன் - பிரமன்
கமலவுந்தியோன் - விஷ்ணு
அரவணிவோன் - சிவன்

Top


Updated on 01 May 2011

No comments:

Post a Comment