Tuesday, May 10, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஹிமாசல தனய - ராகம் ஆனந்த பைரவி - Himachala Tanaya - Raga Ananda Bhairavi

பல்லவி
ஹி(மா)சல தனய ப்3ரோசுட(கி)தி3
மஞ்சி ஸமயமு ராவே 1அம்ப3

அனுபல்லவி
குமார ஜனனி ஸமான(மெ)வ(ரி)லனு
மானவதி ஸ்ரீ ப்3ரு2ஹந்-நாயகீ (ஹிமாசல)

சரணம்
சரணம் 1
ஸரோஜ முகி2 பி3ரான நீவு
வரா(லொ)ஸகு3(ம)னி நேனு வேடி3தி
2பு(ரா)ரி ஹரி ஸு(ரே)ந்த்3ர நுத புராணி
3பராமுக2(மே)லனே தல்லி (ஹிமாசல)


சரணம் 2
உமா 4ஹம்ஸ க3மனா தாமஸமா
ப்3ரோவ தி3க்(கெ)வரு 5நிக்கமுக3னு
மா(கி)பு(ட3)பி4மானமு சூப
பா4ரமா வினுமா
3யதோனு (ஹிமாசல)


சரணம் 3
ஸதா3 நத 6வர தா3யகீ நிஜ
தா3ஸுட3னு
7ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி
3தா3
மொர 8வினவா து3ரித
விதா3ரிணீ ஸ்ரீ ப்3ரு2ஹந்-நாயகீ (ஹிமாசல)


பொருள் - சுருக்கம்
  • இமயமலையின் புதல்வியே! அம்பையே!
  • முருகனை யீன்றவளே! மதிப்பிற்குரியவளே! ஸ்ரீ பெரிய நாயகியே!
  • கமல வதனத்தினளே! புரமெரித்தோன், அரி, வானோர் தலைவன் போற்றும், பழம்பொருளே! தாயே!
  • உமையே! அன்ன நடையினளே!
  • எவ்வமயமும், பணிந்தோருக்கு வரமருள்பவளே! பாவங்களை அழிப்பவளே! ஸ்ரீ பெரிய நாயகியே!

  • காப்பதற்கிது நல்ல சமயம்.
  • வாராயம்மா.

    • உனக்கு ஈடு யார், உலகினில்?

    • விரைவில், நீ வரங்களருள்வாயென, நான் வேண்டினேன்.
    • பராமுகமேனம்மா?

    • தாமதமா, காப்பதற்கு?
    • போக்கெவர்?
    • திண்ணமாக, எமக்கு, இப்போது, அன்பு காட்ட, பளுவா?
    • கேளாயம்மா, தயையுடன்.

    • உண்மையான தொண்டனம்மா.
    • சியாம கிருஷ்ணனின் சோதரி யன்றோ?
    • (நீ) முறை கேளாயோ?


  • காப்பதற்கிது நல்ல சமயம்.
  • வாராயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஹிம/-அசல/ தனய/ ப்3ரோசுடகு/-இதி3/
இமய/ மலையின்/ புதல்வியே/ காப்பதற்கு/ இது/

மஞ்சி/ ஸமயமு/ ராவே/ அம்ப3/
நல்ல/ சமயம்/ வாராயம்மா/ அம்பையே/


அனுபல்லவி
குமார/ ஜனனி/ ஸமானமு/-எவரு/-இலனு/
முருகனை/ யீன்றவளே/ (உனக்கு) ஈடு/ யார்/ உலகினில்/

மானவதி/ ஸ்ரீ/ ப்3ரு2ஹத்/-நாயகீ/ (ஹிமாசல)
மதிப்பிற்குரியவளே/ ஸ்ரீ/ பெரிய/ நாயகியே/


சரணம்
சரணம் 1
ஸரோஜ/ முகி2/ பி3ரான/ நீவு/
கமல/ வதனத்தினளே/ விரைவில்/ நீ/

வராலு/-ஒஸகு3மு/-அனி/ நேனு/ வேடி3தி/
வரங்கள்/ அருள்வாய்/ என/ நான்/ வேண்டினேன்/

புர/ அரி/ ஹரி/ ஸுர/-இந்த்3ர/ நுத/ புராணி/
புரம்/ எரித்தோன்/ அரி/ வானோர்/ தலைவன்/ போற்றும்/ பழம்பொருளே/

பராமுக2மு/-ஏலனே/ தல்லி/ (ஹிமாசல)
பராமுகம்/ ஏனம்மா/ தாயே/


சரணம் 2
உமா/ ஹம்ஸ/ க3மனா/ தாமஸமா/
உமையே/ அன்ன/ நடையினளே/ தாமதமா/

ப்3ரோவ/ தி3க்கு/-எவரு/ நிக்கமுக3னு/
காப்பதற்கு/ போக்கு/ எவர்/ திண்ணமாக/

மாகு/-இபுடு3/-அபி4மானமு/ சூப/
எமக்கு/ இப்போது/ அன்பு/ காட்ட/

பா4ரமா/ வினுமா/ த3யதோனு/ (ஹிமாசல)
பளுவா/ கேளாயம்மா/ தயையுடன்/


சரணம் 3
ஸதா3/ நத/ வர/ தா3யகீ/ நிஜ/
எவ்வமயமும்/ பணிந்தோருக்கு/ வரம்/ அருள்பவளே/ உண்மையான/

தா3ஸுட3னு/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/
தொண்டனம்மா/ சியாம/ கிருஷ்ணனின்/ சோதரி/

3தா3/ மொர/ வினவா/ து3ரித/
யன்றோ/ (நீ) முறை/ கேளாயோ/ பாவங்களை/

விதா3ரிணீ/ ஸ்ரீ/ ப்3ரு2ஹந்/-நாயகீ/ (ஹிமாசல)
அழிப்பவளே/ ஸ்ரீ/ பெரிய/ நாயகியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - அம்ப3 - அம்பா3.

4 - ஹம்ஸ க3மனா - ஹம்ஸ க3மா : 'க3மா' என்பது சரியான பிரயோகமா என்று தெரியவில்லை.

5 - நிக்கமுக3னு மாகிபுட3பி4மானமு சூப பா4ரமா வினுமா - நிக்கமுக3 ஸுமா இபுட3பி4மானமு பா4ரமா சலமா வினுமா : இவ்விடத்தில், 'ஸுமா' என்பது சரியெனப்படவில்லை. பிற்கூறியது தவறென்று கருதுகின்றேன்.

6 - வர தா3யகீ நிஜ தா3ஸுட3னு - வரதா3 யோகினீ நிஜ தா3ஸுட3னு : பிற்கூறியது தவறென்று கருதுகின்றேன்.

7 - ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி க3தா3 - ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ க3தா3 : இவ்விடத்தில், 'க3தா3' என்ற சொல்லுடன், இந்த அடைமொழி நிறைவுறுவதனால், 'ஸோத3ரீ' என்பது பொருந்தாது.

8 - வினவா - வினதா3.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - புராரி நுத - சிவனால் போற்றப்பெற்றவள். இவ்விடத்தில், மும்மூர்த்திகளும் தவைவியான, பரதேவதை, 'லலிதா மஹா திரிபுர சுந்தரி'யைக் குறிக்கும்.

3 - பராமுக2 - சரியான தெலுங்கு சொல் 'பராப்3முக2' அல்லது 'பராங்முக2' ஆகும். 'பராமுக' என்பது 'பராங்முக2' என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லின் தமிழ் வடிவாகும்.

பெரிய நாயகி - தஞ்சையில் அம்மையின் பெயர்
புரமெரித்தோன் - சிவன்

Top


Updated on 10 May 2011

No comments:

Post a Comment