Monday, May 23, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பார்வதி ஜனனி - ராகம் பைரவி - Parvati Janani - Raga Bhairavi

கீதம்
கீதம் 1
பார்வதி ஜனனி ப4வானி ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி
ஸர்வ லோக பாலினி மானினி தே3வி
நீரா(ஜா)க்ஷி பரம பாவனி காமாக்ஷி
நிரஞ்ஜனி மா(ம)வ அம்ப3


கீதம் 2
ஸ்ரீ-கரி ஜனனி ம்ரு2டா3னி ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி
1ஹ்ரீம்-கார ரூபிணி ஹரி(ணா)க்ஷி தே3வி
ஸ்ரீ காஞ்சீ புர வாஸினி காமாக்ஷி
2ஸ்ரீ காமேஸ்1வரி மா(ம)வ அம்ப3


கீதம் 3
ஸா1ம்ப4வி ஜனனி புராணி ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி
1ர்வ(ரீ)ஸ1 தா4ரிணி ஸ1ங்கரி தே3வி
ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலினி காமாக்ஷி
ஸ்1யாம(ளா)ம்பி3கே மா(ம)வ அம்ப3


பொருள் - சுருக்கம்
  • பார்வதீ! ஈன்றவளே! பவானீ! ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ! அனைத்துலகையும் காப்பவளே! மதிக்கப்பெற்றவளே! தேவீ! கமலக் கண்ணீ! முற்றிலும் தூயவளே! காமாட்சீ! களங்கமற்றவளே! அம்பையே!
  • நன்மை செய்பவளே! ஈன்றவளே! மிருடனின் இல்லாளே! ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ! ஹ்ரீம்-கார உருவினளே! மான்கண்ணீ! தேவீ! ஸ்ரீ காஞ்சீபுரத்தினில் உறைபவளே! காமாட்சீ! ஸ்ரீ காமேசுவரீ! அம்பையே!
  • சாம்பவீ! ஈன்றவளே! பழம்பொருளே! ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ! இரவரசனை அணிபவளே! சங்கரீ! தேவீ! சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! காமாட்சீ! சியாமளை அம்பிகையே! அம்பையே!
    • என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
கீதம்
கீதம் 1
பார்வதி/ ஜனனி/ ப4வானி/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்1வரி/
பார்வதீ/ ஈன்றவளே/ பவானீ/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/

ஸர்வ/ லோக/ பாலினி/ மானினி/ தே3வி/
அனைத்து/ உலகையும்/ காப்பவளே/ மதிக்கப்பெற்றவளே/ தேவீ/

நீராஜ/-அக்ஷி/ பரம/ பாவனி/ காமாக்ஷி/
கமல/ கண்ணீ/ முற்றிலும்/ தூயவளே/ காமாட்சீ/

நிரஞ்ஜனி/ மாம்/-அவ/ அம்ப3/
களங்கமற்றவளே/ என்னை/ காப்பாய்/ அம்பையே/


கீதம் 2
ஸ்ரீ/-கரி/ ஜனனி/ ம்ரு2டா3னி/ ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி/
நன்மை/ செய்பவளே/ ஈன்றவளே/ மிருடனின் இல்லாளே/ ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ/

ஹ்ரீம்/-கார/ ரூபிணி/ ஹரிண/-அக்ஷி/ தே3வி/
ஹ்ரீம்/-கார/ உருவினளே/ மான்/ கண்ணீ/ தேவீ/

ஸ்ரீ/ காஞ்சீ/ புர/ வாஸினி/ காமாக்ஷி/
ஸ்ரீ/ காஞ்சீ/ புரத்தினில்/ உறைபவளே/ காமாட்சீ/

ஸ்ரீ/ காமேஸ்1வரி/ மாம்/-அவ/ அம்ப3/
ஸ்ரீ/ காமேசுவரீ/ என்னை/ காப்பாய்/ அம்பையே/


கீதம் 3
ஸா1ம்ப4வி/ ஜனனி/ புராணி/ ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி/
சாம்பவீ/ ஈன்றவளே/ பழம்பொருளே/ ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ/

1ர்வரீ/-ஈஸ1/ தா4ரிணி/ ஸ1ங்கரி/ தே3வி/
இரவு/ அரசனை/ அணிபவளே/ சங்கரீ/ தேவீ/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பரிபாலினி/ காமாக்ஷி/
சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ காமாட்சீ/

ஸ்1யாமளா/-அம்பி3கே/ மாம்/-அவ/ அம்ப3/
சியாமளை/ அம்பிகையே/ என்னை/ காப்பாய்/ அம்பையே/


குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - ஹ்ரீம்-கார ரூபிணி - ஹ்ரீம்-கார உருவினள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தினில் (301) அம்மையின் பெயர், 'ஹ்ரீம்-காரீ'.

2 - ஸ்ரீ காமேஸ்1வரி - மேற்கொண்டு விவரங்களுக்கு ஸ்ரீ வித்யை நோக்கவும்.

Top

விளக்கம்
இந்த கீதத்தினில் வரும் அம்மையின் பெயர்களான, ராஜ ராஜேசுவரி, ஹ்ரீம்-கார ரூபிணி, காமேசுவரி, சாம்பவி, சங்கரி ஆகியை 'ஸ்ரீ வித்யை'யினைச் சேர்ந்தவை. விவரங்களுக்கு, மேற்கூறிய வலைத்தளத்தினை நோக்கவும்.

மிருடன் - சிவன்
ஹ்ரீம்-காரம் - ஸ்ரீ வித்யை நோக்கவும்.
இரவரசன் - மதி - பிறையினைக் குறிக்கும்

Top


Updated on 23 May 2011

No comments:

Post a Comment