Monday, June 6, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தே3வீ நீ பத3 - ராகம் காம்போஜி - Devi Ni Pada - Raga Kambhoji

பல்லவி
தே3வீ 1நீ பத3 ஸாரஸமுலே
தி3க்கு வேரே க3தி(யெ)வ(ர)ம்மா நா (தே3வீ)

அனுபல்லவி
ஸ்ரீ வெலயு மது4ர நெலகொன்ன
சித்3-ரூபிணீ ஸ்ரீ மீனா(க்ஷ)ம்மா (தே3வீ)

சரணம்
சரணம் 1
அனாத2 ரக்ஷகி அனேடி பி3ருது3
நீ(க)னாதி33தா3 லோக
நாயகீ த4ரலோ க்ரு2பா நிதி4
நீ கன்னா(யெ)வ(ர)ம்மா மா(ய)ம்மா
2கன்னாகு லதா லவித்ரீ நாபை
கடாக்ஷிஞ்சவே வேக3மே
சின்னா வெதலு நீவு தீ3ர்சி நன்னு
3ரக்ஷிஞ்சுட(கி)தி3 மஞ்சி ஸமய(ம)ம்மா (தே3வி)


சரணம் 2
4கத3ம்ப3 கானன மயூரீ நீவே
3(த3)ம்பா31ங்கரீ
சண்ட3 தா3னவ மத32ண்டி3தா
ம்ரு2டா3னீ ஸு1க பாணீ கல்யாணீ
ஸதா3 நீ த்4யானமு ஸேயுவாரிகி
3தா3 5ஸாம்ராஜ்யமு
6சி(தா3)னந்த3 ரூபுடை3(யு)ன்ன ஸ்ரீ
ஸதா3-ஸி1வுனி ராணீ மது4ர வாணீ (தே3வி)


சரணம் 3
உமா 7ரமா ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா கி3ரி
குமாரீ கௌமாரீ நீ
ஸமான(மெ)வரு ப்3ரோவ நீகு
பா4ரமா ஜக3த்-ஸாக்ஷீ மீனாக்ஷீ
தாமஸமு ஜேஸிதே நீ(கி)தி3
ந்யாயமா இந்த ஜா(கே3)லனே
வேமாரு நீ பாத33ர்ஸ1னமு லபி4ஞ்சி
நீ மாடலு வினக3 வச்சிதி(ன)ம்மா (தே3வி)


பொருள் - சுருக்கம்
  • எனது தேவீ!
  • திரு விளங்கும், மதுரையில் நிலைபெற்ற, சித்-உருவினளே! ஸ்ரீ மீனாக்ஷி அம்மா!
  • உலக நாயகியே! எமதம்மா! கொழுந்து வெற்றிலை விரும்புபவளே!
  • அம்பையே! சங்கரீ! சண்டாசுரனின் செருக்கினை அழித்தவளே! மிருடானீ! கிளியேந்துபவளே! கல்யாணீ! சித்-ஆனந்த வடிவினனாயுள்ள, ஸ்ரீ சதா-சிவனின் ராணீ! இனிய குரலினளே!
  • உமையே! ரமையே! சியாம கிருஷ்ணன் போற்றும், மலை மகளே! கௌமாரீ! பல்லுலகிற்கும் சாட்சியே! மீனாக்ஷீ!

  • உனது திருவடித் தாமரைகளே புகல்.
  • வேறே கதி எவரம்மா?

    • 'அனாதைகளைக் காப்பவள்' எனப்படும் விருது, உனக்கு அனாதியன்றோ?
    • புவியில், கருணைக் கடல், உன்னை விட, எவரம்மா?

    • என்மீது கடைக்கணிப்பாயம்மா.
    • விரைவில், சின்ன கவலைகளை, நீ தீர்த்து, என்னைக் காப்பதற்கு, இது நல்ல சமயமம்மா.

    • கதம்ப வன மயில், நீயே அன்றோ?
    • எவ்வமயமும், உனது தியானம் செய்வோருக்கு அன்றோ, உனது பேரரசு?

    • உனது சமானம் எவர்?
    • காத்தல் உனக்கு பளுவா?
    • தாமதம் செய்தால், உனக்கிது நியாயமா?
      இத்தனை தந்திரங்களேனம்மா?
    • ஆயிரம் முறை, உனது திருவடி தரிசனம் அடையப்பெற்று, உனது சொற்களைக் கேட்பதற்கு, வந்தேனம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தே3வீ/ நீ/ பத3/ ஸாரஸமுலே/
தேவீ/ உனது/ திருவடி/ தாமரைகளே/

தி3க்கு/ வேரே/ க3தி/-எவரு/-அம்மா/ நா/ (தே3வீ)
புகல்/ வேறே/ கதி/ எவர்/ அம்மா/ எனது/ (தேவீ)


அனுபல்லவி
ஸ்ரீ/ வெலயு/ மது4ர/ நெலகொன்ன/
திரு/ விளங்கும்/ மதுரையில்/ நிலைபெற்ற/

சித்/-ரூபிணீ/ ஸ்ரீ/ மீனாக்ஷி/-அம்மா/ (தே3வீ)
சித்/-உருவினளே/ ஸ்ரீ/ மீனாக்ஷி/ அம்மா/


சரணம்
சரணம் 1
அனாத2/ ரக்ஷகி/ அனேடி/ பி3ருது3/
'அனாதைகளை/ காப்பவள்/' எனப்படும்/ விருது/

நீகு/-அனாதி3/ க3தா3/ லோக/
உனக்கு/ அனாதி/ யன்றோ/ உலக/

நாயகீ/ த4ரலோ/ க்ரு2பா நிதி4/
நாயகியே/ புவியில்/ கருணை/ கடல்/

நீ/ கன்னா/-எவரு/-அம்மா/ மா/-அம்மா/
உன்னை/ விட/ எவர்/ அம்மா/ எமது/ அம்மா/

கன்னாகு லதா லவித்ரீ/ நாபை/
கொழுந்து வெற்றிலை விரும்புபவளே/ என்மீது/

கடாக்ஷிஞ்சவே/ வேக3மே/
கடைக்கணிப்பாயம்மா/ விரைவில்/

சின்னா/ வெதலு/ நீவு/ தீ3ர்சி/ நன்னு/
சின்ன/ கவலைகளை/ நீ/ தீர்த்து/ என்னை/

ரக்ஷிஞ்சுடகு/-இதி3/ மஞ்சி/ ஸமயமு/-அம்மா/ (தே3வி)
காப்பதற்கு/ இது/ நல்ல/ சமயம்/ அம்மா/


சரணம் 2
கத3ம்ப3/ கானன/ மயூரீ/ நீவே/
கதம்ப/ வன/ மயில்/ நீயே/

33/-அம்பா3/ ஸ1ங்கரீ/
அன்றோ/ அம்பையே/ சங்கரீ/

சண்ட3 தா3னவ/ மத3/ க2ண்டி3தா/
சண்டாசுரனின்/ செருக்கினை/ அழித்தவளே/

ம்ரு2டா3னீ/ ஸு1க/ பாணீ/ கல்யாணீ/
மிருடானீ/ கிளி/ யேந்துபவளே/ கல்யாணீ/

ஸதா3/ நீ/ த்4யானமு/ ஸேயுவாரிகி/
எவ்வமயமும்/ உனது/ தியானம்/ செய்வோருக்கு/

3தா3/ ஸாம்ராஜ்யமு/
அன்றோ/ (உனது) பேரரசு/

சித்/-ஆனந்த3/ ரூபுடை3/-உன்ன/ ஸ்ரீ/
சித்/-ஆனந்த/ வடிவினனாய்/ உள்ள/ ஸ்ரீ/

ஸதா3/-ஸி1வுனி/ ராணீ/ மது4ர/ வாணீ/ (தே3வி)
சதா/-சிவனின்/ ராணீ/ இனிய/ குரலினளே/


சரணம் 3
உமா/ ரமா/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதா/ கி3ரி/
உமையே/ ரமையே/ சியாம/ கிருஷ்ணன்/ போற்றும்/ மலை/

குமாரீ/ கௌமாரீ/ நீ/
மகளே/ கௌமாரீ/ உனது/

ஸமானமு/-எவரு/ ப்3ரோவ/ நீகு/
சமானம்/ எவர்/ காத்தல்/ உனக்கு/

பா4ரமா/ ஜக3த்/-ஸாக்ஷீ/ மீனாக்ஷீ/
பளுவா/ பல்லுலகிற்கும்/ சாட்சியே/ மீனாக்ஷீ/

தாமஸமு/ ஜேஸிதே/ நீகு/-இதி3/
தாமதம்/ செய்தால்/ உனக்கு/ இது/

ந்யாயமா/ இந்த/ ஜாகு3/-ஏலனே/
நியாயமா/ இத்தனை/ தந்திரங்கள்/ ஏனம்மா/

வேமாரு/ நீ/ பாத3/ த3ர்ஸ1னமு/ லபி4ஞ்சி/
ஆயிரம் முறை/ உனது/ திருவடி/ தரிசனம்/ அடையப்பெற்று/

நீ/ மாடலு/ வினக3/ வச்சிதினி/-அம்மா/ (தே3வி)
உனது/ சொற்களை/ கேட்பதற்கு/ வந்தேன்/ அம்மா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நீ பத3 ஸாரஸமுலே - நின்னே பத3 ஸாரஸமுலே : இவ்விடத்தில், 'நின்னே' என்பது தவறாகும்.

3 - ரக்ஷிஞ்சுடகிதி3 மஞ்சி ஸமயமம்மா - ரக்ஷிஞ்சுடகிதி3 ஸமயமம்மா.

Top

மேற்கோள்கள்
4 - கத3ம்ப3 கானன - கதம்ப வனம் - மதுரை, 'கதம்ப வனம்' எனப்படும்.

7 - ரமா - ரமை - இலக்குமி. அம்மையின் ஓர் பெயர். லலிதா ஸஹஸ்ர நாமம் (313) நோக்கவும்.

Top

விளக்கம்
2 - கன்னாகு லதா லவித்ரீ - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'கொழுந்து வெற்றிலையை விரும்புபவள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'கன்னாகு' என்பதற்கு 'வெற்றிலை' என்று பொருளாகும். ஆனால், 'லவித்ரீ' என்பதற்கு 'அரிவாள்' என்று பொருளாகும். ஸ்யாமா ஸாஸ்த்ரியின் புதல்வர், சுப்பராய ஸாஸ்த்ரி, தமது, 'ஜனனி நின்னு வினா' என்ற 'ரீதி கௌள' கிருதியில் 'க4ன பாப லதா லவித்ரீ' என்று அம்மையை அழைக்கின்றார். இதற்கு, 'கொடிய பாவக்கொடியை வெட்டும் அரிவாள்' என்று பொருளாகும். மற்ற சில தோத்திரங்களிலும் 'லவித்ர', 'லவித்ரி' என்ற சொல், 'வெட்டுதல்' என்ற பொருள்படவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

'கன்னாகு' என்பதற்கு 'சக்கரத்தின் கடைசிக் கதிர்' (final spoke of wheel) என்றும் பொருளாகும்.ஆனால், 'லதா' என்பதற்கு 'கொடி' என்பதைத் தவிர, மற்ற, தகுந்த பொருளேதும் இல்லை. எனவே, பரம்பரையாகக் கொடுக்கப்பட்டுள்ள பொருளாகிய, 'கொழுந்து வெற்றிலையை விரும்புபவள்' என்ற பொருளே இங்கும் ஏற்கப்பட்டது.

Top

5 - ஸாம்ராஜ்யமு - புத்தகங்களில், இதற்கு, 'முத்தி' என்றும் 'பேறு' என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, ஒரு உண்மையான தொண்டன், இறைவனிடம், தனக்கு பக்தியொன்றே வேண்டும் என்றுதான் கேட்பான். அங்ஙனமே, இங்கும் 'பக்திப் பேரரசு' என்று பொருள் கொள்ளப்பட்டது.

6 - சிதா3னந்த3 ரூபுடை3யுன்ன - சித்-ஆனந்த வடிவினனாயுள்ள - இவ்விடத்தில், 'உள்ள' என்பது, பரம் பொருளின் இலக்கணமாகிய 'சத்' (sat) என்பதனைக் குறிக்கும் என்று நான் நினைக்கின்றேன். எனவே, இந்த சொற்றொடர், பரம்பொருளின் மூவிலக்கணமாகிய, 'சத்-சித்-ஆனந்தம்' (சச்சிதானந்தம்) என்பதைக் குறிக்கும்.

சித்-உருவினள் - 'பிரக்ஞை' எனப்படும் 'தன்னுணர்வு' உருவினள்
மிருடானீ - அம்மையின் பெயர் - 'மிருடன் (சிவன்) இல்லாள்' என்றும் பொருள் கொள்ளலாம்.

Top


Updated on 07 Jun 2011

2 comments:

  1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
    சரணம் 1 - ‘சின்னா வெதலு நீவு தீ3ர்சி’ -. சின்ன என்று இருக்கவேண்டுமா? ஏன் பெரிய கவலைகளைத் தீர்க்கச் சொல்லி வேண்டவில்லை.
    கன்னாகு லதா என்றால் வெற்றிலைக்கொடி என்று பொருள் அல்லவா.
    வணக்கம்
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

    நீங்கள் கூறுவது சரியே. ஆனால் எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. நான் அதை மாற்ற விரும்பவில்லை.
    கன்னாகு லதா லவித்ரீ என்பது குறித்த விளக்கத்தினை நோக்கவும்

    வணக்கம்
    கோவிந்தன்

    ReplyDelete