Sunday, June 19, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நன்னு ப்3ரோவ ராதா3 - ராகம் ஜன ரஞ்சனி - Nannu Brova Rada - Raga Jana Ranjani

பல்லவி
நன்னு ப்3ரோவ ராதா3 ஓ ஜக3(த3)ம்பா3
நீ த3ய ஸேயவே

அனுபல்லவி
கன்ன தல்லி 1நீவே அம்பா3
நா மொரலனு வின ராதா3 (நன்னு)

சரணம்
சரணம் 1
ஆதி31க்தி ம(ஹே)ஸ்1வரீ கௌமாரீ
ஆத3ரிம்பவே வேவேக3மே நீ(லா)ய(தா)க்ஷீ ப4வானீ (நன்னு)


சரணம் 2
கோமள ம்ரு2து3 வாணீ கல்யாணீ
ஸோம ஸே12ருனி ராணீ லலி(தா)ம்பி3கே வரதே3 (நன்னு)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண 2ஸஹோத3ரீ ஓங்காரீ
ஸா1ம்ப4வீ ஓ ஜனனீ 3நாத3 ரூபிணீ 4நளி(னா)க்ஷீ (நன்னு)


பொருள் - சுருக்கம்
  • ஓ பல்லுலகத் தாயே!
  • அம்பா!
  • ஆதி சக்தீ! மகேசுவரீ! கௌமாரீ! கருந்தடங்கண்ணீ! பவானீ!
  • கோமள, மிருதுவான குரலினளே! கல்யாணீ! மதியணிவோனின் ராணீ! லலிதாம்பிகையே! வரமருள்பவளே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! ஓங்காரீ! சாம்பவீ! ஓ ஈன்றவளே! நாத வடிவினளே! கமலக்கண்ணீ!

    • என்னைக் காக்கலாகாதா?
    • நீ கருணை காட்டுவாயம்மா.

    • ஈன்ற தாய் நீயே.
    • எனது முறையீடுகளைக் கேட்கலாகாதா?
    • ஆதரிப்பாயம்மா, வெகு விரைவாக.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நன்னு/ ப்3ரோவ ராதா3/ ஓ/ ஜக3த்/-அம்பா3/
என்னை/ காக்கலாகாதா/ ஓ/ பல்லுலக/ தாயே/

நீ/ த3ய/ ஸேயவே/
நீ/ கருணை/ காட்டுவாயம்மா/


அனுபல்லவி
கன்ன/ தல்லி/ நீவே/ அம்பா3/
ஈன்ற/ தாய்/ நீயே/ அம்பா/

நா/ மொரலனு/ வின ராதா3/ (நன்னு)
எனது/ முறையீடுகளை/ கேட்கலாகாதா/


சரணம்
சரணம் 1
ஆதி3/ ஸ1க்தி/ மஹா-ஈஸ்1வரீ/ கௌமாரீ/
ஆதி/ சக்தீ/ மகேசுவரீ/ கௌமாரீ/

ஆத3ரிம்பவே/ வேவேக3மே/ நீல-ஆயத-அக்ஷீ/ ப4வானீ/ (நன்னு)
ஆதரிப்பாயம்மா/ வெகு விரைவாக/ கருந்தடங்கண்ணீ/ பவானீ/


சரணம் 2
கோமள/ ம்ரு2து3/ வாணீ/ கல்யாணீ/
கோமள/ மிருதுவான/ குரலினளே/ கல்யாணீ/

ஸோம/ ஸே12ருனி/ ராணீ/ லலிதா/-அம்பி3கே/ வரதே3/ (நன்னு)
மதி/ யணிவோனின்/ ராணீ/ லலிதா/ அம்பிகையே/ வரமருள்பவளே/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸஹோத3ரீ/ ஓங்காரீ/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ ஓங்காரீ/

ஸா1ம்ப4வீ/ ஓ/ ஜனனீ/ நாத3/ ரூபிணீ/ நளின/-அக்ஷீ/ (நன்னு)
சாம்பவீ/ ஓ/ ஈன்றவளே/ நாத/ வடிவினளே/ கமல/ கண்ணீ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நீவே அம்பா3 - நீவனி : இவ்விடத்தில், 'நீவனி' என்பது பொருந்தாது.
2 - ஸஹோத3ரீ - ஸோத3ரீ.
4 - நளினாக்ஷீ - நளினீ.
Top

மேற்கோள்கள்
3 - நாத3 ரூபிணீ - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர்கள் - 'நாத3 ரூபா' (229) - 'நாத3 ரூபிணீ' (901).
Top

விளக்கம்
கருந்தடங்கண்ணீ - நீலாயதாட்சி - நாகப்பட்டினத்தில் அம்மையின் பெயர்.
மதியணிவோன் - சிவன்
Top


Updated on 20 Jun 2011

2 comments:

  1. அன்புள்ள கோவிந்தன் அவர்களே
    நீ த3ய ஸேயவே என்பதற்கு நீ கருணை காட்டுவாயம்மா என்று பொருள் கொடுத்துள்ளீர். நீ என்றால் உன் என்று தானே பொருள். இது நீவு என்று இருக்கவேண்டுமா?

    வணக்கம்
    கோவிநதஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

      நீங்கள் கூறுவது சரியே. ஆனால் எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. நான் அதை மாற்ற விரும்பவில்லை.

      வணக்கம்
      கோவிந்தன்

      Delete