Friday, June 17, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - த3யா நிதே4 - ராகம் பே333 - Daya Nidhe - Raga Begada - Varnam

பல்லவி
3யா நிதே4 மா(ம)வ ஸதா3 ஸ்1யாம க்ரு2ஷ்ண பூஜிதே

அனுபல்லவி
4(யா)பஹாரிணி ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி (த3யா)

சரணம்
பரம பாவனி ப4வானி பராத்பரி ஸி1வ ஸ1ங்கரி (த3யா)

ஸ்வர ஸாஹித்ய
பாலித ஜன முனி க3ண ஸுர ஸமுத3யே
லலித பத3 யுக3ளே கமனீய கந்த4ரே
பாப ஸ1மனி ஸுஹ்ரு23ய ஸம்மோதி3
மஹனீய ஸுகு3(ணா)லயே விதர ப4க்திம் மே (த3யா)


பொருள் - சுருக்கம்
  • கருணைக் கடலே! சியாம கிருஷ்ணனால் தொழப்பெற்றவளே!
  • அச்சம் அகற்றுபவளே, ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ!
  • முற்றிலும் தூயவளே! பவானீ! பராபரீ! சிவ சங்கரீ!
  • மக்கள், முனிவர்கள், வானோர் சமுதாயங்களைப் பேணுபவளே! மிருதுவான திருவடி யிணையினளே! அழகிய கழுத்தினளே! பாவம் களைபவளே! நல்லிதயத்தோருக்குக் களிப்பூட்டும், மாண்பு மிகு, நற்பண்புகளின் உறைவிடமே!

    • என்னைக் காப்பாய், எவ்வமயமும்.
    • அருள்வாய், பக்தியினை, எனக்கு.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3யா/ நிதே4/ மாம்/-அவ/ ஸதா3/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பூஜிதே/
கருணை/ கடலே/ என்னை/ காப்பாய்/ எவ்வமயமும்/ சியாம/ கிருஷ்ணனால்/ தொழப்பெற்றவளே/


அனுபல்லவி
4ய/-அபஹாரிணி/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்1வரி/ (த3யா)
அச்சம்/ அகற்றுபவளே/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/


சரணம்
பரம/ பாவனி/ ப4வானி/ பராத்பரி/ ஸி1வ/ ஸ1ங்கரி/ (த3யா)
முற்றிலும்/ தூயவளே/ பவானீ/ பராபரீ/ சிவ/ சங்கரீ/


ஸ்வர ஸாஹித்ய
பாலித/ ஜன/ முனி க3ண/ ஸுர/ ஸமுத3யே/
பேணுபவளே/ மக்கள்/ முனிவர்கள்/ வானோர்/ சமுதாயங்களை/

லலித/ பத3/ யுக3ளே/ கமனீய/ கந்த4ரே/
மிருதுவான/ திருவடி/ யிணையினளே/ அழகிய/ கழுத்தினளே/

பாப/ ஸ1மனி/ ஸுஹ்ரு23ய/ ஸம்மோதி3த/
பாவம்/ களைபவளே/ நல்லிதயத்தோருக்கு/ களிப்பூட்டும்/

மஹனீய/ ஸுகு3ண/-ஆலயே/ விதர/ ப4க்திம்/ மே/ (த3யா)
மாண்பு மிகு/ நற்பண்புகளின்/ உறைவிடமே/ அருள்வாய்/ பக்தியினை/ எனக்கு/


Top

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்



Updated on 17 Jun 2011

No comments:

Post a Comment