Thursday, July 7, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸ1ங்கரி ஸ1ங்கரி - ராகம் கல்யாணி - Sankari Sankari - Raga Kalyani

பல்லவி
1ங்கரி ஸ1ங்கரி கருணா-கரி ராஜ
ராஜேஸ்1வரி ஸுந்த3ரி பராத்பரி கௌ3ரி

அனுபல்லவி
பங்கஜ த3ள நேத்ரி கி3ரி ராஜ குமாரி
பரம பாவனி ப4வானி ஸதா3-ஸி1வ குடும்பி3னி (ஸ1ங்கரி)

சரணம்
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி ஸி1ஸு1ம் மாம் பரிபாலய ஸ1ங்கரி
கரி முக2 குமார ஜனனி காத்யாயனி கல்யாணி
1ஸர்வ சித்த போ3தி4னி 2தத்வ ஞான ரூபிணி
3ஸர்வ லோகாய தி31 மங்க3ளம் ஜய மங்க3ளம்
ஸு14 மங்க3ளம் (ஸ1ங்கரி)


பொருள் - சுருக்கம்
  • சங்கரீ! கருணையுடையவளே! ராஜ ராஜேசுவரீ! சுந்தரீ! பராபரீ! கௌரீ!
  • தாமரையிதழ்க் கண்ணீ! மலையரசன் மகளே! முற்றிலும் தூயவளே! பவானீ! சதா-சிவனின் இல்லாளே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! சங்கரீ! யானை முகத்தோன், முருகனை ஈன்றவளே! காத்தியாயனீ! கல்யாணீ! அனைவரின் உள்ளம் அறிந்தவளே! தத்துவங்கள் மற்றும் அறிவு வடிவினளே!

    • உனது குழந்தை நான்.
    • பேணுவாய்.
    • அனைத்துலகோருக்கும் அருள்வாய், மங்களம், ஜய மங்களம், நன் மங்களம்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
1ங்கரி/ ஸ1ங்கரி/ கருணா-கரி/ ராஜ/
சங்கரீ/ சங்கரீ/ கருணையுடையவளே/ ராஜ/

ராஜேஸ்1வரி/ ஸுந்த3ரி/ பராத்பரி/ கௌ3ரி/
ராஜேசுவரீ/ சுந்தரீ/ பராபரீ/ கௌரீ/


அனுபல்லவி
பங்கஜ/ த3ள/ நேத்ரி/ கி3ரி/ ராஜ/ குமாரி/
தாமரை/ யிதழ்/ கண்ணீ/ மலை/ யரசன்/ மகளே/

பரம/ பாவனி/ ப4வானி/ ஸதா3/-ஸி1வ/ குடும்பி3னி/ (ஸ1ங்கரி)
முற்றிலும்/ தூயவளே/ பவானீ/ சதா/-சிவனின்/ இல்லாளே/


சரணம்
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ ஸி1ஸு1ம்/ மாம்/ பரிபாலய/ ஸ1ங்கரி/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ (உனது) குழந்தை/ நான்/ பேணுவாய்/ சங்கரீ/

கரி/ முக2/ குமார/ ஜனனி/ காத்யாயனி/ கல்யாணி/
யானை/ முகத்தோன்/ முருகனை/ ஈன்றவளே/ காத்தியாயனீ/ கல்யாணீ/

ஸர்வ/ சித்த/ போ3தி4னி/ தத்வ/ ஞான/ ரூபிணி/
அனைவரின்/ உள்ளம்/ அறிந்தவளே/ தத்துவங்கள்/ (மற்றும்) அறிவு/ வடிவினளே/

ஸர்வ/ லோகாய/ தி31/ மங்க3ளம்/ ஜய/ மங்க3ளம்/
அனைத்து/ உலகோருக்கும்/ அருள்வாய்/ மங்களம்/ ஜய/ மங்களம்/

ஸு14/ மங்க3ளம்/ (ஸ1ங்கரி)
நன்/ மங்களம்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸர்வ லோகாய தி31 - ஸர்வ லோகாதீ3ஸே1 : புத்தகங்களில், இதற்கு, 'அனத்துலகோருக்கும் (மங்களம்) அருள்வாய்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. சரணத்தின் முதல் வரியில், 'குழந்தையாகிய என்னைப் பேணுவாய்' என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இப்பாடல், அம்மைக்கு மங்களம் பாடுவதாக அமையவில்லை. எனவே, 'ஸர்வ லோகாதீ3ஸே1' (அனைத்துலகத் தலைவியே) என்பது தவறாகும்.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஸர்வ சித்த போ3தி4னி - உள்ளம் அறிந்தவள் - 'உள்ளத்தினை ஒளிர்விப்பவள்' என்றும் கொள்ளலாம்.

2 - தத்வ ஞான ரூபிணி - தத்துவங்கள் மற்றும் அறிவு வடிவினள் - 'மெய்யறிவு வடிவினள்' என்றும் கொள்ளலாம்.

யானை முகத்தோன் - விநாயகன்
Top


Updated on 07 Jul 2011

No comments:

Post a Comment