நின்னே நம்மினானு ஸதா3 நா
வின்னபமு 1வினி நன்னு ப்3ரோவுமு
அனுபல்லவி
2கன்ன தல்லி கா3தா3 (அம்பா3) பி3ட்3ட3(ய)னி
கனிகர(மி)ந்தைன லேதா3
3பன்னக3 த4ருனி ராணீ ஸு1க
பாணீ காமாக்ஷீ கல்யாணீ (நின்னே)
சரணம்
சரணம் 1
வேக3மே வச்சி நாது3 கோர்கெ(லீ)வே
4பராமுக2(மே)ல
5போ4(கீ3)ந்த்3ர ஸன்னுத பூத சரிதா
புருஹூத பூஜிதா 6பர தே3வதே (நின்னே)
சரணம் 2
7த்4யானமே வினாக3 மந்த்ர
8தந்த்ர(மே)மி எருங்க3னே
கா3ன வினோதி3னீ நீது3 ஸாடி
ஜகா3ன 9கா3னனே 10ப3ங்கா3ரு பொ3ம்மா (நின்னே)
சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸஹோத3ரீ ப4க்த
காமி(தா)ர்த2 ப2ல தா3யகீ
காமாக்ஷீ கஞ்ஜ த3(ளா)ய(தா)க்ஷீ
காருண்ய மூர்தி க3தா3 நீவே ஸம்பத3 (நின்னே)
ஸ்வர ஸாஹித்ய
நீ மஹிம வினி மதி3லோ
நீவே க3தி(ய)னுசுனு கோரிதி
கமல ப4வ த3னுஜ ரிபு நுத பத3
கமல யுக3 ஸமய(மி)தே3 ப்3ரோவுமு (நின்னே)
பொருள் - சுருக்கம்
- அம்பா! அரவணிவோனின் ராணியே! கிளி ஏந்தியவளே! காமாட்சி! கல்யாணி!
- அரவரசன் சிறக்கப் போற்றும், தூய சரிதமுடையவளே! இந்திரன் தொழும், பர தேவதையே!
- இசையில் மகிழ்பவளே! தங்கச் சிலையே!
- சியாம கிருஷ்ணனின் சோதரியே! தொண்டர் விரும்பும் பொருட்பயனை அருள்பவளே! காமாட்சி! தாமரையிதழ் நிகர் அகன்ற கண்களுடையவளே!
- கமலத்தில் உறைவோன் மற்றும் அசுரர் பகைவன் போற்றும், திருவடிக் கமல இணையினளே!
- உன்னையே நம்பியுள்ளேன், எவ்வமயமும்.
- எனது விண்ணப்பத்தினைக் கேட்டு, என்னைக் காப்பாயம்மா.
- ஈன்ற தாய் அன்றோ!
- உனது குழந்தையென கனிவு, இத்தனையாகிலும் இல்லையா?
- வேகமாக வந்து, எனது கோரிக்கைகளை அருள்வாயம்மா.
- பாராமுகமேன்?
- தியானமே அல்லாது, மந்திர, தந்திரமேதும் அறியேனம்மா.
- உனது ஈடு, புவியினில், காணேனம்மா.
- கருணை உருவு நீயன்றோ!
- நீயே எனது செல்வம்.
- உனது மகிமையினைக் கேட்டு, உள்ளத்தினில் நீயே புகலெனக் கோரினேன்.
- உகந்த சமயமிஃதே.
- காப்பாயம்மா.
- எனது விண்ணப்பத்தினைக் கேட்டு, என்னைக் காப்பாயம்மா.
- உன்னையே நம்பியுள்ளேன், எவ்வமயமும்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னே/ நம்மினானு/ ஸதா3/ நா/
உன்னையே/ நம்பியுள்ளேன்/ எவ்வமயமும்/ எனது/
வின்னபமு/ வினி/ நன்னு/ ப்3ரோவுமு/
விண்ணப்பத்தினை/ கேட்டு/ என்னை/ காப்பாயம்மா/
அனுபல்லவி
கன்ன/ தல்லி/ கா3தா3/ அம்பா3/ பி3ட்3ட3/-அனி/
ஈன்ற/ தாய்/ அன்றோ/ அம்பா/ (உனது) குழந்தை/ யென/
கனிகரமு/-இந்தைன/ லேதா3/
கனிவு/ இத்தனையாகிலும்/ இல்லையா/
பன்னக3/ த4ருனி/ ராணீ/ ஸு1க/
அரவு/ அணிவோனின்/ ராணியே/ கிளி/
பாணீ/ காமாக்ஷீ/ கல்யாணீ/ (நின்னே)
ஏந்தியவளே/ காமாட்சி/ கல்யாணி/
சரணம்
சரணம் 1
வேக3மே/ வச்சி/ நாது3/ கோர்கெலு/-ஈவே/
வேகமாக/ வந்து/ எனது/ கோரிக்கைகளை/ அருள்வாயம்மா/
பராமுக2மு/-ஏல/
பாராமுகம்/ ஏன்/
போ4கி3/-இந்த்3ர/ ஸன்னுத/ பூத/ சரிதா/
அரவு/ அரசன்/ சிறக்கப் போற்றும்/ தூய/ சரிதமுடையவளே/
புருஹூத/ பூஜிதா/ பர/ தே3வதே/ (நின்னே)
இந்திரன்/ தொழும்/ பர/ தேவதையே/
சரணம் 2
த்4யானமே/ வினாக3/ மந்த்ர/
தியானமே/ அல்லாது/ மந்திர/
தந்த்ரமு/-ஏமி/ எருங்க3னே/
தந்திரம்/ ஏதும்/ அறியேனம்மா/
கா3ன/ வினோதி3னீ/ நீது3/ ஸாடி/
இசையில்/ மகிழ்பவளே/ உனது/ ஈடு/
ஜகா3ன/ கா3னனே/ ப3ங்கா3ரு/ பொ3ம்மா/ (நின்னே)
புவியினில்/ காணேனம்மா/ தங்க/ சிலையே/
சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸஹோத3ரீ/ ப4க்த/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ தொண்டர்/
காமித/-அர்த2/ ப2ல/ தா3யகீ/
விரும்பும்/ பொருட்/ பயனை/ அருள்பவளே/
காமாக்ஷீ/ கஞ்ஜ/ த3ள/-ஆயத/-அக்ஷீ/
காமாட்சி/ தாமரை/ யிதழ்/ (நிகர்) அகன்ற (நீண்ட)/ கண்களுடையவளே/
காருண்ய/ மூர்தி/ க3தா3/ நீவே/ ஸம்பத3/ (நின்னே)
கருணை/ உருவு/ (நீ)யன்றோ/ நீயே/ (எனது) செல்வம்/
ஸ்வர ஸாஹித்ய
நீ/ மஹிம/ வினி/ மதி3லோ/
உனது/ மகிமையினை/ கேட்டு/ உள்ளத்தினில்/
நீவே/ க3தி/-அனுசுனு/ கோரிதி/
நீயே/ புகல்/ என/ கோரினேன்/
கமல/ ப4வ/ த3னுஜ/ ரிபு/ நுத/ பத3/
கமலத்தில்/ உறைவோன்/ (மற்றும்) அசுரர்/ பகைவன்/ போற்றும்/ திருவடி/
கமல/ யுக3/ ஸமயமு/-இதே3/ ப்3ரோவுமு/ (நின்னே)
கமல/ இணையினளே/ உகந்த சமயம்/ இஃதே/ காப்பாயம்மா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வினி நன்னு ப்3ரோவுமு - வினி ப்3ரோவுமு.
2 - கன்ன தல்லி கா3தா3 (அம்பா3) - கன்ன தல்லி கா3தா3.
3 - பன்னக3 த4ருனி - பன்னக3 தா4ருணி : பிற்கூறியதில் 'ணி' என்பது தவறாகும்.
4 - பராமுக2மேல - பராமுக2மேலே.
5 - போ4கீ3ந்த்3ர - போ4கே3ந்த்3ர : 'போ4கே3ந்த்3ர' என்பது சரியெனப்படவில்லை.
6 - பர தே3வதே - பர தே3வதா.
7 - த்4யானமே வினாக3 - த்4யானமே வினக3 : இவ்விடத்தில், 'வினக3' என்பது தவறாகும்.
8 - தந்த்ரமேமி எருங்க3னே - தந்த்ரமேமிலெருங்க3னே : பிற்கூறியதில், 'ஏமி', மற்றும் 'எருங்க3னே' என்ற சொற்களுக்கு இடையில் வரும் சந்தியெழுத்து 'ல' தவறாகும்.
9 - கா3னனே - கா3னனம்மா.
Top
மேற்கோள்கள்
10 - ப3ங்கா3ரு பொ3ம்மா - தங்கச்சிலை - இது தஞ்சாவூரில் உள்ள பங்காரு காமாட்சி மீது இயற்றப் பெற்ற கீர்த்தனை. பங்காரு காமாட்சி, சியாமா சாஸ்த்ரியின் இஷ்ட தெய்வம்.
Top
விளக்கம்
அரவணிவோன் - சிவன்
அரவரசன் - ஆதி சேடன்
கமலத்தில் உறைவோன் - பிரமன்
அசுரர் பகைவன் - இந்திரன்
Top
Updated on 27 Mar 2011
அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
ReplyDelete7த்4யானமே வினாக –இது 7த்4யானமே வினாக3 என்றல்லவா இருக்க வேண்டும்.
. வணக்கம்,
கோவிந்தஸ்வாமி
திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,
Deleteஇது வினாக3 என்றிருக்கவேண்டும். திருத்தம் செய்துவிட்டேன். நன்றி.
வணக்கம்.
கோவிந்தன்