Showing posts with label Raga Todi. Show all posts
Showing posts with label Raga Todi. Show all posts

Tuesday, March 29, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ராவே ஹிம கி3ரி குமாரி - ராகம் தோடி - Rave Hima Giri Kumari - Raga Todi

பல்லவி
ராவே 1ஹிம கி3ரி குமாரி கஞ்சி காமாக்ஷி வரதா3
மனவி வி(னவ)ம்ம ஸு1ப4(மி)ம்மா மா(ய)ம்மா

ஸ்வர ஸாஹித்ய
ஸ்வர ஸாஹித்ய 1
நத ஜன பரிபாலினி(வ)னுசு
நம்மிதினி ஸதா3 ப்3ரோவ (ராவே)


ஸ்வர ஸாஹித்ய 2
மத3 மத்த மஹிஷ 2தா3னவ மர்த3னி
வெத தீ3ர்சவே து3ரமுக3னு (ராவே)


ஸ்வர ஸாஹித்ய 3
3காம பாலினி நீவே க3தி(ய)னி
கோரிதி கொனியாடி3தி வேடி3தி (ராவே)


ஸ்வர ஸாஹித்ய 4
காமி(தா)ர்த2 ப2ல தா3யகி(ய)னேடி
பி3ருது3 மஹிலோ நீகே தகு3 (ராவே)


ஸ்வர ஸாஹித்ய 5
கமல முகி2 த3ர க3ள க4ன நீல கச
ப4ரா ம்ரு2க3 விலோசன மணி ரத3னா
க3ஜ க3மனா மதி3லோ நினு ஸதா3
தலசுகொனி நீ 4த்4யானமே தல்லி (ராவே)


ஸ்வர ஸாஹித்ய 6
ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா வினு நா சிந்தனு
5வேவேக3 தீ3ர்சி அப4ய(மி)ய்யவே
6கல்யாணீ கஞ்சி காமாக்ஷீ
நீ பாத3மே தி3க்கு (ராவே)


பொருள் - சுருக்கம்
  • இமயமலையின் மகளே! காஞ்சி காமாட்சீ! வரமருள்பவளே! எமது தாயே!
  • செருக்குப் பிடித்த, மகிட அசுரனை வதைத்தவளே!
  • காமனைக் காத்தவளே!
  • கமல வதனீ! அழகிய கழுத்தையுடையவளே! கார்முகில் நிகர், கருநீல, அளக பாரம் உடையவளே! மானின் பார்வையுடைவளே! முத்துப் பல்லினளே! களிறு நடையினளே! தாயே!
  • சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே! கலியாணீ! காஞ்சி காமாட்சீ!

  • வாராயம்மா.
    • வேண்டுதலைக் கேளாயம்மா.
    • நலனருளம்மா.
    • துயர் தீர்ப்பாயம்மா.
    • எனது கவலையை, வெகுவிரைவில் தீர்த்து, அபயமளிப்பாயம்மா.

    • 'விரும்பிய பொருட்பயனைத் தருபவள்' எனப்படும் விருது, உலகினில், உனக்கே தகும்.

    • பணிந்தோரைப் பேணுபவள் என நம்பினேன்.
    • நீயே கதியெனக் கோரினேன், கொண்டாடினேன், வேண்டினேன்.
    • உள்ளத்தினில், உன்னை, எவ்வமயமும் நினைத்துக்கொண்டு, உனது தியானமே.

    • உனது திருவடியே புகல்.


  • எவ்வமயமும் காக்க விரைவாக வாராயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராவே/ ஹிம/ கி3ரி/ குமாரி/ கஞ்சி/ காமாக்ஷி/ வரதா3/
வாராயம்மா/ இமயமலையின்/ மகளே/ காஞ்சி/ காமாட்சீ/ வரமருள்பவளே/

மனவி/ வினு/-அம்ம/ ஸு1ப4மு/-இம்மா/ மா/-அம்மா/
வேண்டுதலை/ கேளாய்/ அம்மா/ நலன்/ அருளம்மா/ எமது/ தாயே/


ஸ்வர ஸாஹித்ய
ஸ்வர ஸாஹித்ய 1
நத ஜன/ பரிபாலினி/-அனுசு/
பணிந்தோரை/ பேணுபவள்/ என/

நம்மிதினி/ ஸதா3/ ப்3ரோவ/ (ராவே)
நம்பினேன்/ எவ்வமயமும்/ காக்க/ வாராயம்மா...


ஸ்வர ஸாஹித்ய 2
மத3/ மத்த/ மஹிஷ/ தா3னவ/ மர்த3னி/
செருக்கு/ பிடித்த/ மகிட/ அசுரனை/ வதைத்தவளே/

வெத/ தீ3ர்சவே/ து3ரமுக3னு/ (ராவே)
துயர்/ தீர்ப்பாயம்மா/ விரைவாக/ வாராயம்மா...


ஸ்வர ஸாஹித்ய 3
காம/ பாலினி/ நீவே/ க3தி/-அனி/
காமனை/ காத்தவளே/ நீயே/ கதி/ யென/

கோரிதி/ கொனியாடி3தி/ வேடி3தி/ (ராவே)
கோரினேன்/ கொண்டாடினேன்/ வேண்டினேன்/


ஸ்வர ஸாஹித்ய 4
காமித/-அர்த2/ ப2ல/ தா3யகி/-அனேடி/
'விரும்பிய/ பொருட்/ பயனை/ தருபவள்/' எனப்படும்/

பி3ருது3/ மஹிலோ/ நீகே/ தகு3/ (ராவே)
விருது/ உலகினில்/ உனக்கே/ தகும்/.


ஸ்வர ஸாஹித்ய 5
கமல/ முகி2/ த3ர/ க3ள/ க4ன/ நீல/ கச/
கமல/ வதனீ/ அழகிய/ கழுத்தையுடையவளே/ கார்முகில்/ (நிகர்) கருநீல/ அளக/

ப4ரா/ ம்ரு2க3/ விலோசன/ மணி/ ரத3னா/
பாரம் உடையவளே/ மானின்/ பார்வையுடைவளே/ முத்து/ பல்லினளே/

க3ஜ/ க3மனா/ மதி3லோ/ நினு/ ஸதா3/
களிறு/ நடையினளே/ உள்ளத்தினில்/ உன்னை/ எவ்வமயமும்/

தலசுகொனி/ நீ/ த்4யானமே/ தல்லி/ (ராவே)
நினைத்துக்கொண்டு/ உனது/ தியானமே/ தாயே/


ஸ்வர ஸாஹித்ய 6
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதா/ வினு/ நா/ சிந்தனு/
சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/ கேளாயம்மா/ எனது/ கவலையை/

வேவேக3/ தீ3ர்சி/ அப4யமு/-இய்யவே/
வெகுவிரைவில்/ தீர்த்து/ அபயம்/ அளிப்பாயம்மா/

கல்யாணீ/ கஞ்சி/ காமாக்ஷீ/
கலியாணீ/ காஞ்சி/ காமாட்சீ/

நீ/ பாத3மே/ தி3க்கு/ (ராவே)
உனது/ திருவடியே/ புகல்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஹிம கி3ரி குமாரி - ஹிம கி3ரி குமாரீ.

2 - தா3னவ மர்த3னி - தா3னவ மர்த்3த3னி : 'மர்த்3த3னி' என்பது தவறாகும்.

4 - த்4யானமே தல்லி - த்4யானமே தல்லீ.

5 - வேவேக3 தீ3ர்சி அப4ய(மி)ய்யவே - வேவேக3 தீ3ர்சாப4ய(மி)ய்யவே - வேவேக3 தீ3ர்சியப4ய(மி)ய்யவே.

6 - கல்யாணீ - கல்யாணி.

Top

மேற்கோள்கள்
3 - காம பாலினி - காமனைக் காத்தவள். சிவன், மன்மதனை, நெற்றிக் கண்ணினால் எரித்தபின், அம்பாள், அவனை (மன்மதனை) உடலின்றி, உயிர்ப்பித்தாள். எனவே, மன்மதனுக்கு, 'அனங்கன்' (உடலில்லாதவன்) என்று பெயர். 'ஸௌந்தர்ய லஹரி'யில் (6-வது செய்யுள்) கூறப்பட்டது -

"மலர் வில், தேன்வண்டு வரிசை நாண், ஐந்து அம்புகள், இளவேனில் மந்திரி, மலையமாருதம் போரிடும் தேர், என உடைத்திருந்தும், மன்மதன் ஒண்டியே. மலைமகளே! உனது கடைக் கண் பார்வையின் கருணையினால், அனைத்துலகினையும் அவன் வெல்கின்றான். "

இநதச் செய்யுளில் வரும் 'ஹிம கி3ரி ஸுதே' என்பதனை, சியாமா சாஸ்திரி, 'ஹிம கி3ரி குமாரி' என்று கூறுகின்றார். எனவே, இந்த கிருதிக்கு, 'ஸௌந்தர்ய லஹரி'யின் 6-வது செய்யுளுடன் தொடர்பு இருப்பதாக நான் கருதுகின்றேன்.

ஸௌந்தர்ய லஹரி - 6-வது செய்யுள் விளக்கம்.

Top

விளக்கம்



Updated on 29 Mar 2011

Sunday, March 27, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நின்னே நம்மினானு - ராகம் தோடி - Ninne Namminanu - Todi Raga

பல்லவி
நின்னே நம்மினானு ஸதா3 நா
வின்னபமு 1வினி நன்னு ப்3ரோவுமு

அனுபல்லவி
2கன்ன தல்லி கா3தா3 (அம்பா3) பி3ட்3ட3(ய)னி
கனிகர(மி)ந்தைன லேதா3
3பன்னக3 த4ருனி ராணீ ஸு1க
பாணீ காமாக்ஷீ கல்யாணீ (நின்னே)

சரணம்
சரணம் 1
வேக3மே வச்சி நாது3 கோர்கெ(லீ)வே
4பராமுக2(மே)ல
5போ4(கீ3)ந்த்3ர ஸன்னுத பூத சரிதா
புருஹூத பூஜிதா 6பர தே3வதே (நின்னே)


சரணம் 2
7த்4யானமே வினாக3 மந்த்ர
8தந்த்ர(மே)மி எருங்க3னே
கா3ன வினோதி3னீ நீது3 ஸாடி
ஜகா3ன 9கா3னனே 10ப3ங்கா3ரு பொ3ம்மா (நின்னே)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸஹோத3ரீ ப4க்த
காமி(தா)ர்த2 ப2ல தா3யகீ
காமாக்ஷீ கஞ்ஜ த3(ளா)ய(தா)க்ஷீ
காருண்ய மூர்தி க3தா3 நீவே ஸம்பத3 (நின்னே)


ஸ்வர ஸாஹித்ய
நீ மஹிம வினி மதி3லோ
நீவே க3தி(ய)னுசுனு கோரிதி
கமல ப4வ த3னுஜ ரிபு நுத பத3
கமல யுக3 ஸமய(மி)தே3 ப்3ரோவுமு (நின்னே)


பொருள் - சுருக்கம்
  • அம்பா! அரவணிவோனின் ராணியே! கிளி ஏந்தியவளே! காமாட்சி! கல்யாணி!
  • அரவரசன் சிறக்கப் போற்றும், தூய சரிதமுடையவளே! இந்திரன் தொழும், பர தேவதையே!
  • இசையில் மகிழ்பவளே! தங்கச் சிலையே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! தொண்டர் விரும்பும் பொருட்பயனை அருள்பவளே! காமாட்சி! தாமரையிதழ் நிகர் அகன்ற கண்களுடையவளே!
  • கமலத்தில் உறைவோன் மற்றும் அசுரர் பகைவன் போற்றும், திருவடிக் கமல இணையினளே!

  • உன்னையே நம்பியுள்ளேன், எவ்வமயமும்.
    • எனது விண்ணப்பத்தினைக் கேட்டு, என்னைக் காப்பாயம்மா.

    • ஈன்ற தாய் அன்றோ!
    • உனது குழந்தையென கனிவு, இத்தனையாகிலும் இல்லையா?

    • வேகமாக வந்து, எனது கோரிக்கைகளை அருள்வாயம்மா.
    • பாராமுகமேன்?

    • தியானமே அல்லாது, மந்திர, தந்திரமேதும் அறியேனம்மா.
    • உனது ஈடு, புவியினில், காணேனம்மா.

    • கருணை உருவு நீயன்றோ!
    • நீயே எனது செல்வம்.

    • உனது மகிமையினைக் கேட்டு, உள்ளத்தினில் நீயே புகலெனக் கோரினேன்.
    • உகந்த சமயமிஃதே.
    • காப்பாயம்மா.


  • உன்னையே நம்பியுள்ளேன், எவ்வமயமும்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னே/ நம்மினானு/ ஸதா3/ நா/
உன்னையே/ நம்பியுள்ளேன்/ எவ்வமயமும்/ எனது/

வின்னபமு/ வினி/ நன்னு/ ப்3ரோவுமு/
விண்ணப்பத்தினை/ கேட்டு/ என்னை/ காப்பாயம்மா/


அனுபல்லவி
கன்ன/ தல்லி/ கா3தா3/ அம்பா3/ பி3ட்3ட3/-அனி/
ஈன்ற/ தாய்/ அன்றோ/ அம்பா/ (உனது) குழந்தை/ யென/

கனிகரமு/-இந்தைன/ லேதா3/
கனிவு/ இத்தனையாகிலும்/ இல்லையா/

பன்னக3/ த4ருனி/ ராணீ/ ஸு1க/
அரவு/ அணிவோனின்/ ராணியே/ கிளி/

பாணீ/ காமாக்ஷீ/ கல்யாணீ/ (நின்னே)
ஏந்தியவளே/ காமாட்சி/ கல்யாணி/


சரணம்
சரணம் 1
வேக3மே/ வச்சி/ நாது3/ கோர்கெலு/-ஈவே/
வேகமாக/ வந்து/ எனது/ கோரிக்கைகளை/ அருள்வாயம்மா/

பராமுக2மு/-ஏல/
பாராமுகம்/ ஏன்/

போ4கி3/-இந்த்3ர/ ஸன்னுத/ பூத/ சரிதா/
அரவு/ அரசன்/ சிறக்கப் போற்றும்/ தூய/ சரிதமுடையவளே/

புருஹூத/ பூஜிதா/ பர/ தே3வதே/ (நின்னே)
இந்திரன்/ தொழும்/ பர/ தேவதையே/


சரணம் 2
த்4யானமே/ வினாக3/ மந்த்ர/
தியானமே/ அல்லாது/ மந்திர/

தந்த்ரமு/-ஏமி/ எருங்க3னே/
தந்திரம்/ ஏதும்/ அறியேனம்மா/

கா3ன/ வினோதி3னீ/ நீது3/ ஸாடி/
இசையில்/ மகிழ்பவளே/ உனது/ ஈடு/

ஜகா3ன/ கா3னனே/ ப3ங்கா3ரு/ பொ3ம்மா/ (நின்னே)
புவியினில்/ காணேனம்மா/ தங்க/ சிலையே/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸஹோத3ரீ/ ப4க்த/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ தொண்டர்/

காமித/-அர்த2/ ப2ல/ தா3யகீ/
விரும்பும்/ பொருட்/ பயனை/ அருள்பவளே/

காமாக்ஷீ/ கஞ்ஜ/ த3ள/-ஆயத/-அக்ஷீ/
காமாட்சி/ தாமரை/ யிதழ்/ (நிகர்) அகன்ற (நீண்ட)/ கண்களுடையவளே/

காருண்ய/ மூர்தி/ க3தா3/ நீவே/ ஸம்பத3/ (நின்னே)
கருணை/ உருவு/ (நீ)யன்றோ/ நீயே/ (எனது) செல்வம்/


ஸ்வர ஸாஹித்ய
நீ/ மஹிம/ வினி/ மதி3லோ/
உனது/ மகிமையினை/ கேட்டு/ உள்ளத்தினில்/

நீவே/ க3தி/-அனுசுனு/ கோரிதி/
நீயே/ புகல்/ என/ கோரினேன்/

கமல/ ப4வ/ த3னுஜ/ ரிபு/ நுத/ பத3/
கமலத்தில்/ உறைவோன்/ (மற்றும்) அசுரர்/ பகைவன்/ போற்றும்/ திருவடி/

கமல/ யுக3/ ஸமயமு/-இதே3/ ப்3ரோவுமு/ (நின்னே)
கமல/ இணையினளே/ உகந்த சமயம்/ இஃதே/ காப்பாயம்மா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வினி நன்னு ப்3ரோவுமு - வினி ப்3ரோவுமு.

2 - கன்ன தல்லி கா3தா3 (அம்பா3) - கன்ன தல்லி கா3தா3.

3 - பன்னக3 த4ருனி - பன்னக3 தா4ருணி : பிற்கூறியதில் 'ணி' என்பது தவறாகும்.

4 - பராமுக2மேல - பராமுக2மேலே.

5 - போ4கீ3ந்த்3ர - போ4கே3ந்த்3ர : 'போ4கே3ந்த்3ர' என்பது சரியெனப்படவில்லை.

6 - பர தே3வதே - பர தே3வதா.

7 - த்4யானமே வினாக3 - த்4யானமே வினக3 : இவ்விடத்தில், 'வினக3' என்பது தவறாகும்.

8 - தந்த்ரமேமி எருங்க3னே - தந்த்ரமேமிலெருங்க3னே : பிற்கூறியதில், 'ஏமி', மற்றும் 'எருங்க3னே' என்ற சொற்களுக்கு இடையில் வரும் சந்தியெழுத்து 'ல' தவறாகும்.

9 - கா3னனே - கா3னனம்மா.

Top

மேற்கோள்கள்
10 - ப3ங்கா3ரு பொ3ம்மா - தங்கச்சிலை - இது தஞ்சாவூரில் உள்ள பங்காரு காமாட்சி மீது இயற்றப் பெற்ற கீர்த்தனை. பங்காரு காமாட்சி, சியாமா சாஸ்த்ரியின் இஷ்ட தெய்வம்.

Top

விளக்கம்
அரவணிவோன் - சிவன்
அரவரசன் - ஆதி சேடன்
கமலத்தில் உறைவோன் - பிரமன்
அசுரர் பகைவன் - இந்திரன்

Top


Updated on 27 Mar 2011

Saturday, March 26, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - கருணா நிதி4 இலலோ - ராகம் தோடி - Karuna Nidhi Ilalo - Raga Todi

பல்லவி
கருணா நிதி4 இலலோ நீவனுசுனு
கன்ன தல்லி வேடு3கொண்டினி நீ ஸ1ரணண்டினி

அனுபல்லவி
1அருணாம்பு3த3 நிப4 2சரணா ஸுர முனி
ஸ1ரணானந்தேஷ்ட தா3யகி ஸ்ரீ ப்3ரு2ஹந்-நாயகி (கருணா)

சரணம்
சரணம் 1
கா3ன வினோதி3னி நீ மஹிமாதிஸ1யம்பு3ல
எந்தடிவாட3னு தரமா ப்3ரோவ
தாமஸமிடு ஜேஸிதே அர நிமிஷமைன
தாள ஜாலனம்மா 3மாயம்மா (கருணா)


சரணம் 2
4பாமர பாலினி பாவனி நீவு க3தா3 நீ
பாத3மே
க3தியனி 5நம்மினானு
கோமள ம்ரு2து3 பா4ஷிணீ க4ன ஸத்3ரு2ஸ1 வேணீ
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ கோ3கர்ணேஸ்1வருனி 6ராணி (கருணா)


பொருள் - சுருக்கம்
  • ஈன்ற தாயே!
  • இளங்காலை முகில் நிகர் திருவடிகளுடையவளே! வானோர், முனிவரின் புகலே! அளவற்ற விருப்பங்களை அருள்பவளே! பெரிய நாயகியே!
  • இசையில் மகிழ்பவளே! எமது தாயே!
  • பாமரர்களைக் காப்பவளே! கோமள, மிருதுவான சொல்லினளே! கார்முகில் நிகர் கூந்தலினளே! சியாம கிருஷ்ணனின் சோதரியே! கோகர்ணேஸ்வரரின் ராணியே!

  • கருணைக் கடல், இப்புவியில் நீயென, வேண்டிக்கொண்டேன்;
    • உனது சரணடைந்தேன்.

    • உனது மகிமையின் அதிசயங்களை எவ்வளவு என உரைக்க இயலுமா?
    • காப்பதற்கு தாமதம் இப்படிச் செய்தால், அரை நிமிடமும் பொறுக்க மாட்டேனம்மா.

    • புனிதப்படுத்துபவள் நீயன்றோ!
    • உனது பாதமே கதியென நம்பினேன்.


  • கருணைக் கடல், இப்புவியில் நீயென, வேண்டிக்கொண்டேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருணா/ நிதி4/ இலலோ/ நீவு/-அனுசுனு/
கருணை/ கடல்/ இப்புவியில்/ நீயென/

கன்ன/ தல்லி/ வேடு3கொண்டினி/ நீ/ ஸ1ரணு/-அண்டினி/
ஈன்ற/ தாயே/ வேண்டிக்கொண்டேன்/ உனது/ சரண்/ அடைந்தேன்/


அனுபல்லவி
அருண/-அம்பு3த3/ நிப4/ சரணா/ ஸுர/ முனி/
இளங்காலை/ முகில்/ நிகர்/ திருவடிகளுடையவளே/ வானோர்/ முனிவரின்/

ஸ1ரண/-அனந்த/-இஷ்ட/ தா3யகி/ ஸ்ரீ ப்3ரு2ஹந்-நாயகி/ (கருணா)
புகலே/ அளவற்ற/ விருப்பங்களை/ அருள்பவளே/ ஸ்ரீ பெரிய நாயகியே/


சரணம்
சரணம் 1
கா3ன/ வினோதி3னி/ நீ/ மஹிம/-அதிஸ1யம்பு3ல/
இசையில்/ மகிழ்பவளே/ உனது/ மகிமையின்/ அதிசயங்களை/

எந்தடிவி/-ஆட3னு/ தரமா/ ப்3ரோவ/
எவ்வளவு (என)/ உரைக்க/ இயலுமா/ காப்பதற்கு/

தாமஸமு/-இடு/ ஜேஸிதே/ அர/ நிமிஷமைன/
தாமதம்/ இப்படி/ செய்தால்/ அரை/ நிமிடமும்/

தாள/ ஜாலனு/-அம்மா/ மா/ அம்மா/ (கருணா)
பொறுக்க/ மாட்டேன்/ அம்மா/ எமது/ தாயே/


சரணம் 2
பாமர/ பாலினி/ பாவனி/ நீவு/ க3தா3/ நீ/
பாமரர்களை/ காப்பவளே/ புனிதப்படுத்துபவள்/ நீ/ யன்றோ/ உனது/

பாத3மே/ க3தி/-அனி/ நம்மினானு/
பாதமே/ கதி/ யென/ நம்பினேன்/

கோமள/ ம்ரு2து3/ பா4ஷிணீ/ க4ன/ ஸத்3ரு2ஸ1/ வேணீ/
கோமள/ மிருதுவான/ சொல்லினளே/ கார்முகில்/ நிகர்/ கூந்தலினளே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ கோ3கர்ணேஸ்1வருனி/ ராணி/ (கருணா)
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ கோகர்ணேஸ்வரரின்/ ராணியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - சரணா ஸுர முனி - சரணா (அம்பா3) ஸுர முனி.

3 - மாயம்மா - நேடு3 நீ பாலுட3னு கா3னா : பிற்கூறியதில், 'நேடு3' என்பதற்கு பதிலாக, 'நேனு' என்றிருந்தால், 'நான் உனது மகனன்றோ?' என்று பொருள் கொள்ளலாம். எனவே, பிற்கூறியது இவ்விடத்தில் பொருந்தாது.

4 - பாமர பாலினி பாவனி நீவு க3தா3 நீ பாத3மே - பாமர பாவனி அம்பா பாவனி மூர்திவி நீவு க3தா3 நீது பாத3மே : பிற்கூறியதில், 'பாவனி' என்பதற்கு பதிலாக, 'பாவன' என்றிருந்தால், 'புனித உருவு நீயன்றோ?' என்று பொருள் கொள்ளலாம். எனவே பிற்கூறியது இவ்விடத்தில் பொருந்தாது.

5 - நம்மினானு - நம்மிதி.

6 - ராணி - ராணீ.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - அம்பு3த3 - புத்தகங்களில், இச்சொல்லுக்கு, 'தாமரை' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு, அத்தகைய பொருளேதும் இல்லை. இச்சொல்லுக்கு, 'முகில்' என்று பொருளாகும். 'அம்பு3ஜ' என்றிருந்தால்தான், 'தாமரை' என்று பொருள் கொள்ள இயலும். எனவே, 'முகில்' என்ற பொருள் கொள்ளப்பட்டது.

இளங்காலை முகில் நிகர் - சிவந்த
பெரிய நாயகி - புதுக்கோட்டையருகிலுள்ள திருக்கோகர்ணத்தில் அம்மையின் பெயர்.
சியாம கிருஷ்ண - விஷ்ணு - பாடலாசிரியர் முத்திரை

Top


Updated on 26 Mar 2011

Thursday, March 24, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஏமனி மிகு3ல - ராகம் தோடி - Syama Krishna Vaibhavam - Syama Sastry Kriti - Emani Migula - Todi Raga

பல்லவி
ஏமனி மிகு3ல வர்ணிந்து ஈ மஹினி நே நீ மஹிமலு

அனுபல்லவி
ஸாமஜ க3மனா 1த4ர்ம ஸம்வர்த4னி 2(அம்பா3) 3ஸுருலகு
நீ மாய தெலிய லேரு
ஸா1ம்ப4வீ நீ மஹாத்ம்யமதிஸ1யமு (ஏமனி)

சரணம்
சரணம் 1
நீரஜ லோசனா லோகமுலோ நினு ஹ்ரு2த3யமுலோ
நிலுபின லோகுலு த4ன்யுலைரிகா3 நலுகு3ரிலோ
ஸாரமதீ நனு த3யதோ கா3ஞ்சி கருணிஞ்சுமு தல்லி 4நெர நம்மிதி
சாலா மஹா லீல க3லிகி3ன ஸ1க்தி ஸந்ததமு நீவே 5ஸந்தோஷவதி (ஏமனி)


சரணம் 2
ஓ ஜனனி கருணி ப4வ ப்ரியா வினுமவனி
ஓம் அனின ஜன்ம ஸாப2ல்யமாயே நீது3 கத2லனு வினி
ஓ மோஹாவ்ரு2தலையுன்ன ஜனுலனு தல்லி இபுடு3 ப்3ரோவுமு
ஓ ராஜாதி4 ராஜேந்த்3ர 6மகுட படலி மணி விரசித பதா3 (ஏமனி)


சரணம் 3
7கஞ்ஜனதா3ந்துனி காமிதா ஸு1ப4 சரிதா ப்ரஸன்ன வத3னா
க4ன க்ரு2பா ஸஹிதா ஸ்1யாம க்ரு2ஷ்ண சிந்தா கி3ரி தனயா
பஞ்ச நத3 காவேரீ தீரமுன நிவஸிஞ்சே உமா
8பஞ்சாபகே3ஸ1 முனி நுதா ஹைமவதீ 9பரா ஸ1க்தீ (ஏமனி)


பொருள் - சுருக்கம்
  • களிறு நடையாளே! அறம் வளர்த்த நாயகியே! தாயே! சாம்பவி!
  • கமலக் கண்ணி! சாரமதி! தாயே! மிகுந்த திருவிளையாடல்கள் உடைய, சக்தி!
  • ஓ ஈன்றவளே! கருணையுள்ளவளே! பவனுக்கு இனியவளே! தாயே! ஓ பேரரசர்கள் மற்றும் இந்திரனின் பன்மணி முடிகள் அலங்கரிக்கும் திருவடியினளே!
  • காமனை அழித்தோன் விரும்பும், நல் சரிதத்தினளே! இன்முகத்தவளே! பெரும் கிருபை கூடியவளே! சியாம கிருஷ்ணனின் சிந்தையுறைபவளே! மலை மகளே! திருவையாறு, காவேரிக் கரையில் உறையும், உமையே! திருவையாறு பைரவர் போற்றும், இமவான் செல்வமே! பராசக்தி!

  • என்னவென்று மிக்கு வருணிப்பேன், இப்புவியில் நான் உனது மகிமைகளை!

  • கேளாய்.

    • வானோரும் உனது மாயையினை அறிந்திலர்.
    • உனது பெருமை அதிசயமானது.

    • புவியில், உன்னை இதயத்தில் நிறுத்திய மக்கள், பேறு பெற்றோர் ஆகினரன்றோ!
    • நால்வரில், என்னை, தயையுடன் காத்து, கருணிப்பாய்.
    • மிக்கு நம்பினேன்.
    • எவ்வமயமும், நீயே மகழ்வளிப்பவள்.

    • அவனியில், 'ஓம்' என்றால், பிறவி ஈடேறும்!
    • உனது கதைகளைக் கேட்டு,மயங்கியுள்ள மக்களை, இவ்வமயம் காப்பாய்,


  • என்னவென்று மிக்கு வருணிப்பேன், இப்புவியில் நான் உனது மகிமைகளை!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமனி/ மிகு3ல/ வர்ணிந்து/ ஈ/ மஹினி/ நே/ நீ/ மஹிமலு/
என்னவென்று/ மிக்கு/ வருணிப்பேன்/ இந்த/ புவியில்/ நான்/ உனது/ மகிமைகளை/


அனுபல்லவி
ஸாமஜ/ க3மனா/ த4ர்ம/ ஸம்வர்த4னி/ அம்பா3/ ஸுருலகு/
களிறு/ நடையாளே/ அறம்/ வளர்த்த நாயகியே/ தாயே/ வானோரும்/

நீ/ மாய/ தெலிய லேரு/ ஸா1ம்ப4வீ/ நீ/ மஹாத்ம்யமு/-அதிஸ1யமு/ (ஏமனி)
உனது/ மாயையினை/ அறிந்திலர்/ சாம்பவி/ உனது/ பெருமை/ அதிசயமானது/.


சரணம்
சரணம் 1
நீரஜ/ லோசனா/ லோகமுலோ/ நினு/ ஹ்ரு2த3யமுலோ/
கமல/ கண்ணி/ புவியில்/ உன்னை/ இதயத்தில்/

நிலுபின/ லோகுலு/ த4ன்யுலு/-ஐரிகா3/ நலுகு3ரிலோ/
நிறுத்திய/ மக்கள்/ பேறு பெற்றோர்/ ஆகினரன்றோ/ நால்வரில்/

ஸாரமதீ/ நனு/ த3யதோ/ கா3ஞ்சி/ கருணிஞ்சுமு/ தல்லி/ நெர/ நம்மிதி/
சாரமதி/ என்னை/ தயையுடன்/ காத்து/ கருணிப்பாய்/ தாயே/ மிக்கு/ நம்பினேன்/

சாலா/ மஹா லீல/ க3லிகி3ன/ ஸ1க்தி/ ஸந்ததமு/ நீவே/ ஸந்தோஷவதி/ (ஏமனி)
மிகுந்த/ திருவிளையாடல்கள்/ உடைய/ சக்தி/ எவ்வமயமும்/ நீயே/ மகழ்வளிப்பவள்/


சரணம் 2
ஓ/ ஜனனி/ கருணி/ ப4வ/ ப்ரியா/ வினுமு/-அவனி/
ஓ/ ஈன்றவளே/ கருணையுள்ளவளே/ பவனுக்கு/ இனியவளே/ கேளாய்/ அவனியில்/

ஓம்/ அனின/ ஜன்ம/ ஸாப2ல்யமு-ஆயே/ நீது3/ கத2லனு/ வினி/
'ஓம்'/ என்றால்/ பிறவி/ ஈடேறும்/ உனது/ கதைகளை/ கேட்டு/

ஓ/ மோஹ-ஆவ்ரு2தலை/-உன்ன/ ஜனுலனு/ தல்லி/ இபுடு3/ ப்3ரோவுமு/
ஓ/ மயங்கி/ யுள்ள/ மக்களை/ தாயே/ இவ்வமயம்/ காப்பாய்/

ஓ/ ராஜ-அதி4 ராஜ/-இந்த்3ர/ மகுட/ படலி மணி/ விரசித/ பதா3/ (ஏமனி)
ஓ/ பேரரசர்கள்/ (மற்றும்) இந்திரனின்/ முடிகள்/ பன்மணி/ அலங்கரிக்கும்/ திருவடியினளே/


சரணம் 3
கஞ்ஜனத3/-அந்துனி/ காமிதா/ ஸு1ப4/ சரிதா/ ப்ரஸன்ன/ வத3னா/
காமனை/ அழித்தோன்/ விரும்பும்/ நல்/ சரிதத்தினளே/ இன்/ முகத்தவளே/

க4ன/ க்ரு2பா/ ஸஹிதா/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ சிந்தா/ கி3ரி/ தனயா/
பெரும்/ கிருபை/ கூடியவளே/ சியாம/ கிருஷ்ணனின்/ சிந்தையுறைபவளே/ மலை/ மகளே/

பஞ்ச நத3/ காவேரீ/ தீரமுன/ நிவஸிஞ்சே/ உமா/
திருவையாறு/, காவேரி/ கரையில்/ உறையும்/ உமையே/

பஞ்ச-ஆபக3/-ஈஸ1 முனி/ நுதா/ ஹைமவதீ/ பரா ஸ1க்தீ/ (ஏமனி)
திருவையாறு/ பைரவர்/ போற்றும்/ இமவான் செல்வமே/ பராசக்தி/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸுருலகு நீ மாய தெலிய லேரு - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கியம், இலக்கணப்படி தவறாகும். இது, 'ஸுருலு நீ மாய தெலிய லேரு' என்றோ, அல்லது 'ஸுருலகு நீ மாய தெலிய லேது3' என்றோதான் இருக்கவேண்டும்.

4 - நெர நம்மிதி - நினு நெர நம்மிதி.

5 - ஸந்தோஷவதி - ஸந்தோஷவதீ.

7 - கஞ்ஜனதா3ந்துனி காமிதா - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, சில புத்தகங்களில், 'காமனை அழித்த, சிவனுக்கு இனியவளே' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சொற்களை, (கஞ்ஜனதா3ந்துனி காமிதா) 'கஞ்ஜனத3+அந்துனி காமிதா' என்று பிரிக்கவேண்டும். எனவே, 'கஞ்ஜனத3' என்பதற்கு 'காமன்' என்று பொருளிருக்க வேண்டும். ஆனால், காமனைக்குறிக்கும் அத்தகைய சொல்லேதும் இல்லை. எனவே, எனக்குத் தெரிந்தவரை, இதனை, 'கம்+ஜனித' (கஞ்ஜனித) என்று கொண்டால் 'காமன்' என்று பொருள்படும். அதன்படி, இங்கு, 'கஞ்ஜனிதாந்துனி காமிதா' என்றிருக்கவேண்டும் என்று நான் நம்புகின்றேன்.

8 - பஞ்சாபகே3ஸ1 - எல்லா புத்தகங்களிலும், 'பஞ்சாபகேஸ1' என்றே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'பஞ்சாபகே3ஸ1' என்பதே சரியான சொல்லாகும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
1 - த4ர்ம ஸம்வர்த4னி - அறம் வளர்த்த நாயகி - திருவையாற்றில் அம்மையின் பெயர்.

8 - பஞ்சாபகே3ஸ1 முனி - முத்துஸ்வாமி தீக்ஷிதர், தமது 'பரமேஸ்1வர ஜக3தீ3ஸ்1வர' என்ற 'சல நாட' ராக கீர்த்தனையில், திருவையாறுறை சிவனை, 'க்ஷேத்ர பால வினுத சரண' என்று அழைக்கின்றார். 'க்ஷேத்ர பால' என்பதற்கு, 'காவல் தெய்வம்' அதாவது, 'பைரவர்' என்று பொருளாகும். தமிழ்நாட்டில், பைரவரும், முனீஸ்வரரும், காவல் தெய்வங்களாகத் தொழப்படுவர். எனவே, இங்கு, 'முனி' என்று வரும் சொல், 'பைரவரை'க் குறிக்கும் என்று நான் கருதுகின்றேன். எனவே, 'பஞ்சாபகே3ஸ1 முனி' என்பதற்கு, 'திருவையாறு உறை பைரவர்' என்று பொருள் கொள்ளப்பட்டது.

9 - பரா ஸ1க்தீ - 'பரா' என்பது, ஒலியின் அருவமான, மூலத்தினைக் குறிக்கும். லலிதா ஸஹஸ்ரநாமத்தில், அம்மைக்கு, 'பரா, பஸ்1யந்தி, மத்4யமா, வைக2ரீ ரூபா' என்று பெயராகும். இந்த நான்கும், உடலில், ஒலி வெளிப்படும் முறையினைக் குறிக்கும். இது குறித்து 'காஞ்சி மாமுனிவரின், ஸௌந்தர்ய லஹரி உரை’யினை நோக்கவும்.

Top

விளக்கம்
2 - (அம்பா3) - எல்லா புத்தகங்களிலும் இச்சொல் bracket-களில் கொடுக்கப்பட்டள்ளது. அதன் காரணம் தெரியவில்லை.

6 - மகுட படலி மணி விரசித பதா3 - பன்மணி முடிகள் அலங்கரிக்கும் திருவடி - அம்மையின் திருவடி சதங்கைகளின் மணிகளாக, பேரரசர்கள் மற்றும் இந்திரனின் மகுடங்கள் திகழ்வதாக.

சாம்பவி - சம்புவின் (சிவன்) மனைவி
நால்வரில் - யாவர் முன்னிலையில்
சாரமதி - மிகச் சிறந்தவள்
பவன் - காமனை அழித்தோன் - சிவன்

Top


Updated on 25 Mar 2011