Thursday, April 14, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - த3ய ஜூட3 - ராகம் ஜகன்மோஹினி - Daya Juda - Raga Jaganmohini

பல்லவி
3ய ஜூட3 மஞ்சி ஸமய(மி)தே3 வேவேக3மே வச்சி

அனுபல்லவி
ஜய(மொ)ஸகே31ங்கரீ நீவு
ஜனனி க3தா3 ப்3ரு2ஹத3ம்பா3 (த3ய)

சரணம்
சரணம் 1
1கன(கா)ங்கீ3 நீ 2பாத3 கமலமே
தி3க்(க)னி நம்மினானு நேனு
ஸனக ஸனந்த3ன வந்தி3த சரணா
ஸாரஸ நேத்ரி நீவு க3தா3 (த3ய)


சரணம் 2
3சபல(ம)ன்யு 4தீ3ர்(ச்ய)க2ண்ட3
5ஸாம்ராஜ்ய(மீ)யவே
கபடமு ஸேயகனே நிக3ம வினுதா
காமித தா3யகி நீவு க3தா3 (த3ய)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ கௌமாரீ
ஸக(லா)க36பூஜிதே தே3வீ
நீ மஹிமலு பொக33 தரமா
நீ ஸமான(மெ)ந்து3 கா3னனே (த3ய)


பொருள் - சுருக்கம்
  • வெற்றியளிக்கும், சங்கரீ! பெரிய நாயகியே!
  • பொன்னங்கத்தினளே! சனக, சனந்தனர் வந்திக்கும் திருவடிகளினளே!
  • மறைகளால் போற்றப்பெற்றவளே!
  • சியாம கிருஷ்ணன் சோதரீ! கௌமாரீ! அனைத்து ஆகமங்களும் தொழும், தேவியே!

  • தயை செய்ய நல்ல சமயமிதுவே, வெகு விரைவில் வந்து.

    • நீ ஈன்றவளன்றோ?
    • கமலக்கண்ணி நீயன்றோ?
    • விரும்பியதருள்பவள் நீயன்றோ?
    • உனது மகிமைகளைப் போற்றத் தரமா?

    • உனது ஈடு எங்கும் காணேனம்மா.
    • உனது திருவடிக் கமலமே புகலென நம்பியுள்ளேன், நான்.
    • என்னிடம் வஞ்சனை செய்யாமலே, ஈர்ப்புகள் யாவற்றினையும் தீர்த்து, (உனது) விரிந்த (பக்திப்) பேரரசினைத் தருவாயம்மா.


  • தயை செய்ய நல்ல சமயமிதுவே, வெகு விரைவில் வந்து.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3ய/ ஜூட3/ மஞ்சி/ ஸமயமு/-இதே3/ வேவேக3மே/ வச்சி/
தயை/ செய்ய/ நல்ல/ சமயம்/ இதுவே/ வெகு விரைவில்/ வந்து/


அனுபல்லவி
ஜயமு/-ஒஸகே3/ ஸ1ங்கரீ/ நீவு/
வெற்றி/ யளிக்கும்/ சங்கரீ/ நீ/

ஜனனி/ க3தா3/ ப்3ரு2ஹத3ம்பா3/ (த3ய)
ஈன்றவள்/ அன்றோ/ பெரிய நாயகியே/


சரணம்
சரணம் 1
கனக/-அங்கீ3/ நீ/ பாத3/ கமலமே/
பொன்/ அங்கத்தினளே/ உனது/ திருவடி/ கமலமே/

தி3க்கு/-அனி/ நம்மினானு/ நேனு/
புகல்/ என/ நம்பியுள்ளேன்/ நான்/

ஸனக/ ஸனந்த3ன/ வந்தி3த/ சரணா/
சனக/ சனந்தனர்/ வந்திக்கும்/ திருவடிகளினளே/

ஸாரஸ/ நேத்ரி/ நீவு/ க3தா3/ (த3ய)
கமல/ கண்ணி/ நீ/ யன்றோ/


சரணம் 2
சபலமு/-அன்யு/ தீ3ர்சி/-அக2ண்ட3/
ஈர்ப்புகள்/ யாவற்றினையும்/ தீர்த்து/ (உனது) விரிந்த/

ஸாம்ராஜ்யமு/-ஈயவே/
(பக்திப்) பேரரசினை/ தருவாயம்மா/

கபடமு/ ஸேயகனே/ நிக3ம/ வினுதா/
(என்னிடம்) வஞ்சனை/ செய்யாமலே/ மறைகளால்/ போற்றப்பெற்றவளே/

காமித/ தா3யகி/ நீவு/ க3தா3/ (த3ய)
விரும்பியது/ அருள்பவள்/ நீ/ யன்றோ/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ கௌமாரீ/
சியாம/ கிருஷ்ணன்/ சோதரீ/ கௌமாரீ/

ஸகல/-ஆக3ம/ பூஜிதே/ தே3வீ/
அனைத்து/ ஆகமங்களும்/ தொழும்/ தேவியே/

நீ/ மஹிமலு/ பொக33/ தரமா/
உனது/ மகிமைகளை/ போற்ற/ தரமா/

நீ/ ஸமானமு/-எந்து3/ கா3னனே/ (த3ய)
உனது/ ஈடு/ எங்கும்/ காணேனம்மா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - பாத3 கமலமே - பத3 கமலமே.

3 - சபலமன்யு - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'சபலமன்னியு' என்பதே சரியான வடிவாகும்.

4 - தீ3ர்ச்யக2ண்ட3 - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'தீ3ர்சியக2ண்ட3' என்பதே சரியான வடிவாகும்.

6 - பூஜிதே தே3வீ - பூஜிதே தே3வி.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - கனகாங்கீ3 - பொன் அங்கத்தினள். அம்மையின் நிறம் கரு-நீலமெனப்படும். இவ்விடத்தில், 'பொன்' என்று கூறப்பட்டமையால், இது, தஞ்சை 'ப3ங்கா3ரு காமாட்சி'யினைக் குறிக்கலாம்.

5 - ஸாம்ராஜ்யமு - பேரரசு - புத்தகங்களில், இது, 'அருட் பேரரசினை'க் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், என் சிற்றறிவுக்கு எட்டியவரையில், 'பக்திப் பேரரசு' என்று பொருள் கொள்வது மிக்குப் பொருந்தும்.

பெரிய நாயகி - தஞ்சையில் அம்மையின் பெயர்.

Top


Updated on 14 Apr 2011

No comments:

Post a Comment