Friday, April 15, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - காமாக்ஷி கருணா - ராகம் பரஜு - Kamakshi Karuna - Raga Paraju

கீதம்
கீதம் 1
காமாக்ஷி கருணா கடாக்ஷி காமாக்ஷி 1லோக ஸாக்ஷிணி
காமாக்ஷி கருணா கடாக்ஷி காமாக்ஷி மாம் பாஹி 23ங்கா3ரு (காமாக்ஷி)


கீதம் 2
3காம கோடி பீட23தே காமித ப2ல தா3யிகே
காமாக்ஷி மாம் பாஹி கஞ்சி காமாக்ஷி மாம் பாஹி


கீதம் 3
பங்கஜ த3ள லோசனே ஸங்கட ப4ய மோசனே
1ங்கரி மாம் பாஹி ஸி1வ ஸ1ங்கரி மாம் பாஹி


கீதம் 4
ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலித ஜனனி 4ஸாம கா3 வினோதி3னி
ஸ்1யாமளே மாம் பாஹி 5ஸு1க ஸ்1யாமளே மாம் பாஹி


பொருள் - சுருக்கம்
  • காமாட்சி! கருணைக் கடைக் கண்ணினளே! காமாட்சி! உலக சாட்சியே! பங்காரு காமாட்சி!
  • காம கோடி பீடத்திலுறைபவளே! விரும்பிய பயனருள்பவளே! காமாட்சி! காஞ்சி காமாட்சி!
  • தாமரை யிதழ்க் கண்ணினளே! மன உளைச்சல் மற்றும் அச்சம் களைபவளே! சங்கரியே! சிவ சங்கரியே!
  • சியாம கிருஷ்ணனைப் பேணும், ஈன்றவளே! சாம கானம் விரும்பியே! சியாமளையே! கிளி யேந்தும், சியாமளையே!

    • என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
கீதம்
கீதம் 1
காமாக்ஷி/ கருணா/ கடாக்ஷி/ காமாக்ஷி/ லோக/ ஸாக்ஷிணி/
காமாட்சி/ கருணை/ கடைக் கண்ணினளே/ காமாட்சி/ உலக/ சாட்சியே/

காமாக்ஷி/ கருணா/ கடாக்ஷி/ காமாக்ஷி/ மாம்/ பாஹி/ ப3ங்கா3ரு/ (காமாக்ஷி)
காமாட்சி/ கருணை/ கடைக் கண்ணினளே/ காமாட்சி/ என்னை/ காப்பாய்/ பங்காரு/ காமாட்சி!


கீதம் 2
காம/ கோடி/ பீட2/ க3தே/ காமித/ ப2ல/ தா3யிகே/
காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/ விரும்பிய/ பயன்/ அருள்பவளே/

காமாக்ஷி/ மாம்/ பாஹி/ கஞ்சி/ காமாக்ஷி/ மாம்/ பாஹி/
காமாட்சி/ என்னை/ காப்பாய்/ காஞ்சி/ காமாட்சி/ என்னை/ காப்பாய்/


கீதம் 3
பங்கஜ/ த3ள/ லோசனே/ ஸங்கட/ ப4ய/ மோசனே/
தாமரை/ யிதழ்/ கண்ணினளே/ மன உளைச்சல்/ (மற்றும்) அச்சம்/ களைபவளே/

1ங்கரி/ மாம்/ பாஹி/ ஸி1வ/ ஸ1ங்கரி/ மாம்/ பாஹி/
சங்கரியே/ என்னை/ காப்பாய்/ சிவ/ சங்கரியே/ என்னை/ காப்பாய்/


கீதம் 4
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பாலித/ ஜனனி/ ஸாம/ கா3ன/ வினோதி3னி/
சியாம/ கிருஷ்ணனை/ பேணும்/ ஈன்றவளே/ சாம/ கானம்/ விரும்பியே/

ஸ்1யாமளே/ மாம்/ பாஹி/ ஸு1க/ ஸ்1யாமளே/ மாம்/ பாஹி/
சியாமளையே/ என்னை/ காப்பாய்/ கிளி யேந்தும்/ சியாமளையே/ என்னை/ காப்பாய்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - 3ங்கா3ரு காமாக்ஷி - பங்காரு காமாட்சி - தஞ்சாவூர்

3 - காம கோடி பீட2 - காஞ்சீபுரம் - லலிதா ஸஹஸ்ர நாமம் (589) - காம கோடிகா - காம கோடி பீடம்.

4 - ஸாம கா3 - சாம கானம் - சாமம் எனும் மறையோதல். இசைக்கும், சாமன் மறைக்கும் உள்ள தொடர்பு பற்றி நாதோபாஸனை நோக்கவும்.

5 - ஸு1க ஸ்1யாமளே - கிளி யேந்தும் சியாமளை - கவி காளிதாசர் இயற்றிய சியாமளா தண்டகம் நோக்கவும்.

Top

விளக்கம்
1 - லோக ஸாக்ஷிணி - உலக சாட்சி. 'லோக' என்ற சொல்லுக்கு 'மக்கள்' என்றும் பொருளாகும். அதன்படி, 'சீவான்மாவின் உள்ளியக்கமாக உள்ள, பரம்பொருள் எனும் சாட்சி' என்றும் பொருள் கொள்ளலாம்.

Top


Updated on 15 Apr 2011

No comments:

Post a Comment