Tuesday, May 3, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நா மனவினி - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Naa Manavini - Raga Saurashtram

பல்லவி
நா மனவினி வினு ஈ வேள ப்3ரோவு கஞ்சி காமா(க்ஷ)ம்மா
பாமர பாலினீ ஓ ஜனனீ க்ரு2ப ஜூ(ட3வ)ம்மா

அனுபல்லவி
நெம்மதி3னி நீ நாமமே தி3க்(க)னி நின்னே
நம்மிதி நம்மிதி நம்மிதி(ன)ம்மா மா(ய)ம்மா (நா)

ஸ்வர ஸாஹித்யம்
பாத3 கமல யுக3முலபை க3தி(ய)னி
நீ ஸன்னிதி4னி வச்சின 1தா3ஸுனி
நனு
2சனுவுன ரக்ஷிஞ்சுடகு 33ருவா
ஈ த4ரலோ தெலிஸி தெலியக ஜேஸின
அபராத4முலனு மன்னிஞ்சி நீவு
மா து3ரிதமு தீ3ர்சி த3ய ஜூ(சி)புடு3 (நா)

சரணம்
4க்துடை3ன நாபை இந்த வாதா3 மா(ய)ம்மா
முக்தி(னீ)யவே ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா அம்பா3 (நா)


பொருள் - சுருக்கம்
  • காஞ்சி காமாட்சியம்மா! பாமரர்களைக் காப்பவளே! ஓ ஈன்றவளே!
  • எமது தாயே!
  • எமது தாயே! சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே, அம்பையே!

  • எனது வேண்டுகோளைக் கேட்டு, இவ்வேளை, காப்பாய்.

    • மன நிம்மதிக்கு, உனது நாமமே திக்கென, உன்னையே நம்பினேன், நம்பினேன், நம்பினேனம்மா.

    • திருவடிக் கமல இணையே கதியென, உனது சன்னிதிக்கு வந்த தாசனை, பரிவுடன் காப்பது பளுவா?
    • பக்தனாகிய என்மீது, இத்தனை வாதா?

    • கருணை காட்டுவாயம்மா.
    • முக்தியினை யருள்வாயம்மா.


  • இப்புவியில், தெரிந்தோ, தெரியாமலோ செய்த அபராதங்களை மன்னித்து, எனது பாவங்களைப் போக்கி, தயை புரிந்து, எனது வேண்டுகோளைக் கேட்டு, இவ்வேளை, காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நா/ மனவினி/ வினு/ ஈ/ வேள/ ப்3ரோவு/ கஞ்சி/ காமாக்ஷி-அம்மா/
எனது/ வேண்டுகோளை/ கேட்டு/ இந்த/ வேளை/ காப்பாய்/ காஞ்சி/ காமாட்சியம்மா/

பாமர/ பாலினீ/ ஓ/ ஜனனீ/ க்ரு2ப/ ஜூடு3-அம்மா/
பாமரர்களை/ காப்பவளே/ ஓ/ ஈன்றவளே/ கருணை/ காட்டுவாயம்மா/


அனுபல்லவி
நெம்மதி3னி/ நீ/ நாமமே/ தி3க்கு-அனி/ நின்னே/
(மன) நிம்மதிக்கு/ உனது/ நாமமே/ திக்கென/ உன்னையே/

நம்மிதி/ நம்மிதி/ நம்மிதினி/-அம்மா/ மா/-அம்மா/ (நா)
நம்பினேன்/ நம்பினேன்/ நம்பினேன்/ அம்மா/ எமது/ தாயே/


ஸ்வர ஸாஹித்யம்
பாத3/ கமல/ யுக3முலபை/ க3தி/-அனி/
திருவடி/ கமல/ இணையின் மீது/ கதி/ யென/

நீ/ ஸன்னிதி4னி/ வச்சின/ தா3ஸுனி/
உனது/ சன்னிதிக்கு/ வந்த/ தாசனை/

நனு/ சனுவுன/ ரக்ஷிஞ்சுடகு/ ப3ருவா/
என்னை/ பரிவுடன்/ காப்பதற்கு/ பளுவா/

ஈ/ த4ரலோ/ தெலிஸி/ தெலியக/ ஜேஸின/
இந்த/ புவியில்/ தெரிந்தோ/ தெரியாமலோ/ செய்த/

அபராத4முலனு/ மன்னிஞ்சி/ நீவு/
அபராதங்களை/ மன்னித்து/ நீ/

மா/ து3ரிதமு/ தீ3ர்சி/ த3ய/ ஜூசி/-இபுடு3/ (நா)
எமது/ பாவங்களை/ போக்கி/ தயை/ புரிந்து/ இவ்வமயம்/ (எனது)


சரணம்
4க்துடை3ன/ நாபை/ இந்த/ வாதா3/ மா/-அம்மா/
பக்தனாகிய/ என்மீது/ இத்தனை/ வாதா/ எமது/ தாயே/

முக்தினி/-ஈயவே/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதா/ அம்பா3/ (நா)
முக்தியினை/ யருள்வாயம்மா/ சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/ அம்பையே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தா3ஸுனி நனு - தா3ஸுன நன்னு : இவ்விடத்தில் 'தா3ஸுன' என்பது தவறாகும்.

2 - சனுவுன - சனுவுனு : இவ்விடத்தில் 'சனுவுனு' என்பது தவறாகும்.

3 - 3ருவா - பருல : இவ்விடத்தில் 'பருல' என்பது தவறாகும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்



Updated on 03 May 2011

2 comments:

  1. திரு கோவிந்தன் அவர்களே


    பல்லவி- மனவினி/ வினு என்பதற்கு வேண்டுகோளை/ கேட்டு என்று பொருள் கொடுத்துள்ளீர். அப்படியென்றால் வினி என்றல்லவா இருக்கவேண்டும். அல்லது வேண்டுகோளைக் கேள் என்பது சரி.

    அனுபல்லவி- நெம்மதி3னி- இது நெம்மதி3கி என்று இருக்கவேன்டுமா?

    ஸ்வர ஸாஹித்யம்- தீ3ர்சி த3ய ஜூ(சி)புடு3 - தீ3ர்சி த3ய ஜூ(பி)புடு3 என்பது சரியா? ஜூசி (பார்த்து) என்பது வினையெச்சம் அல்லவா?

    வேறுபாடுகள்- தா3ஸுனி நனு - இது தாஸைன நனு என்று இருக்குமா?

    வணக்கம்
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,

    'மனவினி வினு'; 'ஈ வேள ப்3ரோவு' - நீங்கள் கூறுவது சரிதான். 'வேண்டுகோளைக் கேள்'; 'இவ்வேளைக் காப்பாய்' என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். நான், இரண்டு சொற்றொடர்களையும் இணைப்பதற்கு, 'கேள்' என்பதற்கு பதிலாக, 'கேட்டு' என்று பயன்படுத்தியுள்ளேன்.

    'நெம்மதி3னி' - இவ்விடத்தில் இச்சொல்லின் வடிவம் சரியான பொருள் தரவில்லை. இதற்கு 'நிம்மதியாக' என்றுதான் பொருள். ஆனால் அத்தகைய பொருள் இவ்விடத்தில் பொருந்தாது. எனவே 'நிம்மதிக்கு' என்று பொருள் கொண்டேன். எல்லா புத்தகங்களிலும் 'நெம்மதி3னி' என்றே கொடுக்கப்பட்டுள்ளது.

    'த3ய ஜூசி+இபுடு3' என்று இதனைப் பிரித்து, 'இபுடு3' என்பதனை பல்லவியுடன் இணைக்கவேண்டும். அல்லது 'த3ய ஜூடு3 இபுடு3' என்றிருந்தால், 'இபுடு3' என்பதனை 'த3ய ஜூடு3' என்பதுடனே இணைக்கலாம். ஆனால், 'த3ய ஜூபி இபுடு3' என்பது சரியல்லவென நான் கருதுகின்றேன். 'த3ய ஜூசி' என்பதுதான் பொதுவான வழக்கு.

    'தா3ஸுனி நனு' - 'தா3ஸுடை3ன நனு' என்றிருந்தால் பொருந்தும். ஆனால், 'தா3ஸைன நனு' என்பது எனக்கு சரியாகத் தோன்றவில்லை.

    வணக்கம்,
    கோவிந்தன்.

    ReplyDelete