Tuesday, June 21, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ப்3ரோவவம்மா - ராகம் நீலாம்பரி - Brovavamma - Raga Nilambari

பல்லவி
ப்3ரோ(வவ)ம்மா ப3ங்கா3ரு பொ3ம்மா மா(ய)ம்மா நனு

அனுபல்லவி
ப்3ரோ(வவ)ம்மா நாதோ மா(ட்லா)(ட3வ)ம்மா
ஸார்வபௌ4ம பொ3ம்மா காமா(க்ஷ)ம்மா நனு (ப்3ரோவ)

சரணம்
ஸ்1யாம க்ரு2ஷ்ண பூஜிதா ஸுலலிதா
ஸ்1யாம(ளா)ம்பா3 ஏ(கா)ம்(ரே)ஸ்1வர ப்ரியா
தாமஸமு ஸேயகனே (காமா(க்ஷ)ம்மா மா(ய)ம்மா)
நா பரிதாபமுலனு பரிஹரிஞ்சி நனு (ப்3ரோவ)


பொருள் - சுருக்கம்
  • தங்கச் சிலையே! எமதம்மா!
  • அனைத்துலகாளும் சிலையே! காமாட்சியம்மா!
  • சியாம கிருஷ்ணன் தொழும், புனித லலிதையே! சியாமளா அம்பையே! ஏகாம்ரேசுவரருக்குப் பிரியமானவளே! காமாட்சியம்மா! எமதம்மா!

    • என்னைக் காப்பாயம்மா.
    • என்னுடன் பேசுவாயம்மா.
    • தாமதம் செய்யாது, எனது பரிதாபங்களைப் போக்கடித்து, என்னைக் காப்பாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்3ரோவு/-அம்மா/ ப3ங்கா3ரு/ பொ3ம்மா/ மா/-அம்மா/ நனு/
காப்பாய்/ அம்மா/ தங்க/ சிலையே/ எமது/ அம்மா/ என்னை/ (காப்பாயம்மா)


அனுபல்லவி
ப்3ரோவு/-அம்மா/ நாதோ/ மாடலு-ஆடு3/-அம்மா/
காப்பாய்/ அம்மா/ என்னுடன்/ பேசுவாய் அம்மா/

ஸார்வபௌ4ம/ பொ3ம்மா/ காமாக்ஷி/-அம்மா/ நனு/ (ப்3ரோவ)
அனைத்துலகாளும்/ சிலையே/ காமாட்சி/ யம்மா/ என்னை/ (காப்பாயம்மா)


சரணம்
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பூஜிதா/ ஸுலலிதா/
சியாம/ கிருஷ்ணன்/ தொழும்/ புனித லலிதையே/

ஸ்1யாமளா/-அம்பா3/ ஏக-ஆம்ர-ஈஸ்1வர/ ப்ரியா/
சியாமளா/ அம்பையே/ ஏகாம்ரேசுவரருக்கு/ பிரியமானவளே/

தாமஸமு/ ஸேயகனே/ காமாக்ஷி/-அம்மா/ மா/-அம்மா/
தாமதம்/ செய்யாது/ காமாட்சி/ யம்மா/ எமது/ அம்மா/

நா/ பரிதாபமுலனு/ பரிஹரிஞ்சி/ நனு/ (ப்3ரோவ)
எனது/ பரிதாபங்களை/ போக்கடித்து/ என்னை/ (காப்பாயம்மா)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
சில புத்தகங்களில், இந்த கீர்த்தனையின் தாளம், 'த்ரிபுட' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கச் சிலை - பங்காரு காமாட்சி.
ஏகாம்ரேசுவரர் - காஞ்சீபுரத்தில் சிவன் பெயர்.
Top


Updated on 21 Jun 2011

No comments:

Post a Comment