Thursday, June 23, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பாஹி மாம் - ராகம் நாட - Paahi Mam - Raga Nata

பல்லவி
பாஹி மாம் ஸ்ரீ ராஜ ரா(ஜே)ஸ்1வரி அம்ப3
பாஹி மாம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி

அனுபல்லவி
ஸிம்(ஹா)ஸ(னா)ரூடே4 தே3வதே த்3ரு24 வ்ரதே
ஸிம்ஹாஸனாரூடே4 ஏஹி ஆனந்த3 ஹ்ரு23யே (பாஹி)

சரணம்
சரணம் 1
காமி(தா)ர்த22ல தா3யிகே அம்பி3கே காளிகே
காமிதார்த22ல தா3யிகே 1காம கோடி பீட23தே (பாஹி)


சரணம் 2
மானவ முனி க3ண பாலினி மானினி ஜனனி ப4வானி
மானித கு3ண ஸா1லினி நிரஞ்ஜனி நிகி2ல பாப ஸ1மனி (பாஹி)


சரணம் 3
ஸாரஸ பத3 யுக3ளே ஸ்வர ஜதி கல்பித ஸங்கீ3
ரஸிகே நட ப்ரியே பா3லே ஸுரபி4 புஷ்ப மாலே (பாஹி)


சரணம் 4
ஸா1ரதே3 ஸாம கா3ன ஸம்மோதி3த-கரி 2ஸ்ரீ
சக்ர ரா(ஜே)ஸ்1வரி
ஸுலய-கரி ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி (பாஹி)


பொருள் - சுருக்கம்
  • ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ! அம்பா!
  • சிங்காதனத்தில் அமர்பவளே! தேவதையே! திண்ணமான விரதத்தினளே! சிங்காதனத்தில் அமர்பவளே! ஆனந்த இதயத்தினளே!
  • விரும்பிய பொருட்பயன் அருள்பவளே! அம்பிகையே! காளிகையே! காம கோடி பீடத்திலுறைபவளே!
  • மனிதர்கள், முனிவர்களைப் பேணுபவளே! மதிக்கப்பெற்றவளே! ஈன்றவளே! பவானி! மதிக்கப்பெற்ற பண்பு இயல்பினளே! களங்கமற்றவளே! அனைத்துலகிலும் பாவங்களைக் களைபவளே!
  • கமலத் திருவடி யிணையினளே! ஸ்வர ஜதிகளினால் கற்பிக்கப்பட்ட சங்கீத ரசிகையே! நடனத்தினை விரும்புபவளே! பாலையே! மணக்கும் பூமாலை அணிபவளே!
  • சாரதையே! சாம கானத்தினில் மகிழ்பவளே! உயர் ஸ்ரீ சக்ரத் தலைவியே! இனிய லயம் செய்தவளே! சியாம கிருஷ்ணனின் சோதரியே!

    • காப்பாயென்னை.
    • வாராய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ மாம்/ ஸ்ரீ/ ராஜ/ ராஜ-ஈஸ்1வரி/ அம்ப3/
காப்பாய்/ என்னை/ ஸ்ரீ/ ராஜ ராஜேசுவரீ/ அம்பா/

பாஹி/ மாம்/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்1வரி/
காப்பாய்/ என்னை/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/

ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்1வரி/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்1வரி/
ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/


அனுபல்லவி
ஸிம்ஹ/-ஆஸன/-ஆரூடே4/ தே3வதே/ த்3ரு24/ வ்ரதே/
சிங்க/ ஆதனத்தில்/ அமர்பவளே/ தேவதையே/ திண்ணமான/ விரதத்தினளே/

ஸிம்ஹாஸனாரூடே4/ ஏஹி/ ஆனந்த3/ ஹ்ரு23யே/ (பாஹி)
சிங்க ஆதனத்தில் அமர்பவளே/ வாராய்/ ஆனந்த/ இதயத்தினளே/


சரணம்
சரணம் 1
காமித/-அர்த2/ ப2ல/ தா3யிகே/ அம்பி3கே/ காளிகே/
விரும்பிய/ பொருட்/ பயன்/ அருள்பவளே/ அம்பிகையே/ காளிகையே/

காமிதார்த2/ ப2ல/ தா3யிகே/ காம/ கோடி/ பீட2/ க3தே/ (பாஹி)
விரும்பிய பொருட்/ பயன்/ அருள்பவளே/ காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/


சரணம் 2
மானவ/ முனி க3ண/ பாலினி/ மானினி/ ஜனனி/ ப4வானி/
மனிதர்கள்/ முனிவர்களை/ பேணுபவளே/ மதிக்கப்பெற்றவளே/ ஈன்றவளே/ பவானி/

மானித/ கு3ண/ ஸா1லினி/ நிரஞ்ஜனி/ நிகி2ல/ பாப/ ஸ1மனி/ (பாஹி)
மதிக்கப்பெற்ற/ பண்பு/ இயல்பினளே/ களங்கமற்றவளே/ அனைத்துலகிலும்/ பாவங்களை/ களைபவளே/


சரணம் 3
ஸாரஸ/ பத3/ யுக3ளே/ ஸ்வர/ ஜதி/ கல்பித/ ஸங்கீ3த/
கமல/ திருவடி/ யிணையினளே/ ஸ்வர/ ஜதிகளினால்/ கற்பிக்கப்பட்ட/ சங்கீத/

ரஸிகே/ நட/ ப்ரியே/ பா3லே/ ஸுரபி4/ புஷ்ப/ மாலே/ (பாஹி)
ரசிகையே/ நடனத்தினை/ விரும்புபவளே/ பாலையே/ மணக்கும்/ பூ/ மாலை அணிபவளே/


சரணம் 4
ஸா1ரதே3/ ஸாம/ கா3ன/ ஸம்மோதி3த-கரி/
சாரதையே/ சாம/ கானத்தினில்/ மகிழ்பவளே/

ஸ்ரீ/ சக்ர/ ராஜ/-ஈஸ்1வரி/ ஸுலய/-கரி/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ (பாஹி)
ஸ்ரீ/ சக்ர/ உயர்/ தலைவியே/ இனிய லயம்/ செய்தவளே/ சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - காம கோடி பீட23தே - காம கோடி பீடத்திலுறைபவள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (589), அம்மையின் பெயர் - 'காம கோடிகா' - காம கோடி பீடம்.

2 - ஸ்ரீ சக்ர ராஜேஸ்1வரி - 'ஸ்ரீ சக்ரம்', 'சக்ர ராஜ' என்றழைக்கப்படும். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (996), அம்மையின் பெயர் - 'ஸ்ரீ சக்ர ராஜ நிலயா'.
Top

விளக்கம்



Updated on 23 Jun 2011

No comments:

Post a Comment