Monday, June 27, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நின்னு வினாக3 - ராகம் பூர்வி கல்யாணி - Ninnu Vinaga - Raga Purvi Kalyani

பல்லவி
1நின்னு வினாக3 மரி தி3க்(கெ)வ(ரு)ன்னாரு
நிகி2ல லோக ஜனனீ நன்னு ப்3ரோசுடகு (நின்னு)

அனுபல்லவி
பன்னக3 பூ4ஷணுடை3ன காஞ்சி ஏ(கா)ம்ர
பதி மனோ-ஹாரிணீ ஸ்ரீ காமாக்ஷீ (நின்னு)

சரணம்
சரணம் 1
பரம லோபு4லனு பொக3டி3 பொக3டி3 அதி
பாமருடை3 திரிகி3 திரிகி3 வேஸாரி
ஸ்தி2ரமு லேக(ன)தி சபலு(டை3)தி நா
சிந்த தீ3ர்சி 2வேக3மே ப்3ரோசுடகு (நின்னு)


சரணம் 2
3இலலு நீ வலனே க3தா3 நீ மஹிம
எந்தனி யோசிம்ப 4எவ்வரி தரமு
5பலுக வஸ1மா ஆதி3 ஸே1ஷுனி(கை)னனு
பதித பாவனீ நன்னு ப்3ரோசுடகு (நின்னு)


சரணம் 3
6தாமஸம்(பி3)டுல ஸேய ரா(தி3)கனு
தல்லி நா மொர வின ராதா33ய லேதா3
காமி(தா)ர்த2 72ல தா3யகி நீவே க3தா3
ஸ்1யாம க்ரு2ஷ்ண 8ஸஹோத3ரீ ப்3ரோசுடகு (நின்னு)


பொருள் - சுருக்கம்
  • அனைத்துலகினை ஈன்றவளே!
  • அரவணிவோனாகிய, காஞ்சி, ஏகாம்ர பதியின் உள்ளம் கவர்பவளே! ஸ்ரீ காமாட்சீ!
  • வீழ்ந்தோரைப் புனிதமாக்குபவளே!
  • தாயே! சியாம கிருஷ்ணனின் சோதரியே!

  • உன்னையன்றி, வேறு புகல் எவருளர், என்னக் காப்பதற்கு?

    • முற்றிலும் கருமிகளைப் புகழ்ந்து, புகழ்ந்து, மிக்கு அறிவிலியாகித் திரிந்து, திரிந்து, துயருற்று, திண்ணமில்லாது, மிக்கு நிலையற்றவனாகினேன்.

    • உலகங்கள் உன்னாலேயே அன்றோ?
    • உனது மகிமை, எவ்வளவென்று யோசிக்க, எவருக்குக் கூடும்?
    • சொல்ல இயலுமா, ஆதி சேடனுக்காகிலும்?

    • தாமதம், இப்படிச் செய்யலாகாது, இனியும்.
    • எனது முறையீட்டினைக் கேளலாகாதா?
    • தயை யில்லையா?
    • விரும்பிய பொருட்பயனை அருள்பவள், நீயே யன்றோ?


  • எனது கவலையினைத் தீர்த்து, விரைவாகக் காப்பதற்கு உன்னையன்றி, வேறு புகல் எவருளர்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னு/ வினாக3/ மரி/ தி3க்கு/-எவரு/-உன்னாரு/
உன்னை/ யன்றி/ வேறு/ புகல்/ எவர்/ உளர்/

நிகி2ல/ லோக/ ஜனனீ/ நன்னு/ ப்3ரோசுடகு/ (நின்னு)
அனைத்து/ உலகினை/ ஈன்றவளே/ என்ன/ காப்பதற்கு/ (உன்னை)


அனுபல்லவி
பன்னக3/ பூ4ஷணுடை3ன/ காஞ்சி/ ஏக-ஆம்ர/
அரவு/ அணிவோனாகிய/ காஞ்சி/ ஏகாம்ர/

பதி/ மனோ/-ஹாரிணீ/ ஸ்ரீ/ காமாக்ஷீ/ (நின்னு)
பதியின்/ உள்ளம்/ கவர்பவளே/ ஸ்ரீ/ காமாட்சீ/


சரணம்
சரணம் 1
பரம/ லோபு4லனு/ பொக3டி3/ பொக3டி3/ அதி/
முற்றிலும்/ கருமிகளை/ புகழ்ந்து/ புகழ்ந்து/ மிக்கு/

பாமருடை3/ திரிகி3/ திரிகி3/ வேஸாரி/
அறிவிலியாகி/ திரிந்து/ திரிந்து/ துயருற்று/

ஸ்தி2ரமு/ லேக/-அதி/ சபலுடு3/-ஐதி/ நா/
திண்ணம்/ இல்லாது/ மிக்கு/ நிலையற்றவன்/ ஆகினேன்/ எனது/

சிந்த/ தீ3ர்சி/ வேக3மே/ ப்3ரோசுடகு/ (நின்னு)
கவலையினை/ தீர்த்து/ விரைவாக/ காப்பதற்கு/ (உன்னை)


சரணம் 2
இலலு/ நீ வலனே/ க3தா3/ நீ/ மஹிம/
உலகங்கள்/ உன்னாலேயே/ அன்றோ/ உனது/ மகிமை/

எந்தனி/ யோசிம்ப/ எவ்வரி/ தரமு/
எவ்வளவென்று/ யோசிக்க/ எவருக்கு/ கூடும்/

பலுக/ வஸ1மா/ ஆதி3/ ஸே1ஷுனிகி/-ஐனனு/
சொல்ல/ இயலுமா/ ஆதி/ சேடனுக்கு/ ஆகிலும்/

பதித/ பாவனீ/ நன்னு/ ப்3ரோசுடகு/ (நின்னு)
வீழ்ந்தோரை/ புனிதமாக்குபவளே/ என்னை/ காப்பதற்கு/ (உன்னை)


சரணம் 3
தாமஸம்பு3/-இடுல/ ஸேய ராது3/-இகனு/
தாமதம்/ இப்படி/ செய்யலாகாது/ இனியும்/

தல்லி/ நா/ மொர/ வின ராதா3/ த3ய/ லேதா3/
தாயே/ எனது/ முறையீட்டினை/ கேளலாகாதா/ தயை/ யில்லையா/

காமித/-அர்த2/ ப2ல/ தா3யகி/ நீவே/ க3தா3/
விரும்பிய/ பொருட்/ பயனை/ அருள்பவள்/ நீயே/ யன்றோ/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸஹோத3ரீ/ ப்3ரோசுடகு/ (நின்னு)
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ காப்பதற்கு/ (உன்னை)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நின்னு வினாக3 - நின்னு வினக3 : இவ்விடத்தில் 'வினக3' என்பது தவறாகும்.

2 - வேக3மே - வேவேக3மே.

3 - இலலு நீ வலனே க3தா3 - இலலோ நீ வலே கா3தா3 : புத்தகங்களில், இதற்கு 'உலகங்கள் உன்னாலேயன்றோ' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பிற்கூறப்பட்டதற்கு, தகுந்த பொருள் கொள்வதற்கு, 'கலதா3' என்றிருக்க வேண்டும் - 'கா3தா3' என்றல்ல. எனவே பிற்கூறியது சரியாகாது.

இவ்விடத்தில், 'இலலு' என்ற சொல் 'உலகங்கள்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'இல' என்பதற்கு, 'புவி' என்று பொருளாகும் - 'உலகம்' என்றல்ல. எனவே, 'இல' என்ற சொல்லை, பன்மையில் பயன்படுத்துவது முறையா என்று தெரியவில்லை.
Top

4 - எவ்வரி தரமு - எவ்வரி தரமா : இவ்விடத்தில், 'தரமா' என்பது பொருந்தாது.

5 - பலுக வஸ1மா - பலுகக3 வஸ1மா.

5 - ஆதி3 ஸே1ஷுனிகைனனு - ஆதி3 ஸே1ஷனிகைனனு : 'ஆதி3 ஸே1ஷுனிகைனனு' என்பதே சரியாகும்.

6 - தாமஸம்பி3டுல - தாமஸமிடுல.

7 - 2ல தா3யகி நீவே க3தா3 - ப2ல தா3யகீ லலிதா.

8 - ஸஹோத3ரீ - ஸோத3ரீ.
Top

மேற்கோள்கள்
5 - பலுக வஸ1மா ஆதி3 ஸே1ஷுனிகைனனு - ஆதி சேடனுக்காகிலும் சொல்ல இயலுமா? - இங்ஙனமே, ஆதி சங்கரரும், தமது ஆனந்த லஹரியில் (செய்யுள் 1) கூறுகின்றார். ஆதி சேடன், அம்மையின் கைவிரல் மோதிரமாக இருப்பதாகக் கூறப்படும்.
Top

விளக்கம்
அரவணிவோன் - சிவன்
ஏகாம்ர பதி - ஏகாம்பரேசுவர்
உன்னால் - அம்மை படைத்தல், காத்தல் செய்வதனால்
Top


Updated on 27 Jun 2011

No comments:

Post a Comment