Wednesday, June 29, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தே3வீ ப்3ரோவ - ராகம் சிந்தாமணி - Devi Brova - Raga Chintamani

பல்லவி
தே3வீ ப்3ரோவ ஸமய(மி)தே3 அதி வேக3மே வச்சி
நா வெதலு தீ3ர்சி கருணிஞ்சவே ஸ1ங்கரீ காமாக்ஷீ

சரணம்
சரணம் 1
லோக ஜனனீ நாபை த3ய லேதா3 (மாயம்மா)
நீ தா3ஸுடு33தா3 ஸ்ரீ காஞ்சி விஹாரிணீ கல்யாணீ
ஏ(கா)ம்(ரே)ஸ்1வருனி ப்ரிய பா4மயை(யு)ன்ன
நீ(கே)(ம)ம்மா எந்தோ பா4ரமா 1வினுமா நா தல்லீ (தே3வீ)


சரணம் 2
ரேபு மா(ப)னி செப்பிதே நே வினனு (தே3வீ) இக
தாளனு நேனு ஈ ப்ரொத்3து33ய சேயவே க்ரு2ப ஜூட3வே
நீ ப(தா3)ப்3ஜமுலே மதி3லோ ஸதா3(யெ)ஞ்சி நீ
2ப்ராபு கோரி(யு)ன்னா(ன)ம்மா 3முத3முதோ மா தல்லீ (தே3வீ)


சரணம் 3
4ஸ்1யாம க்ரு2ஷ்ணுனி ஸோத3ரீ கௌமாரீ (ஸ1ங்கரீ)
பி3ம்(பா3)த4ரீ கௌ3ரீ 5ஹே(மா)சலஜே லலிதே பர தே3வதே
காமாக்ஷீ 6நின்னு வினா பு4விலோ ப்ரேமதோ
7காபாடே3 வா(ரெ)வ(ரு)ன்னா(ர)ம்மா 8நா தல்லி (தே3வீ)


பொருள் - சுருக்கம்
  • தேவீ! சங்கரீ! காமாட்சீ!
  • உலகையீன்றவளே! எமதம்மா! ஸ்ரீ காஞ்சியில் உறைபவளே! கல்யாணீ! எனது தாயே!
  • தேவீ! எமது தாயே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரீ! கௌமாரீ! சங்கரீ! கோவைப்பழ நிகர் உதட்டினளே! கௌரீ! பனிமலைத் தோன்றலே! லலிதையே! பர தேவதையே! காமாட்சீ! எனது தாயே!

  • காக்கத் தருணமிதுவே.
  • மிக்கு விரைவாக வந்து, எனது வேதனைகளைத் தீர்த்து, கருணிப்பாயம்மா.

    • என்மீது தயை இல்லையா?
    • உனது தொண்டனல்லவா?
    • ஏகாம்பரேசுவரரின், பிரியமான, இல்லாளாக உள்ள உனக்கு, என்னம்மா (குறை)?
    • மிக்கு பளுவா?
    • கேளாயம்மா.

    • நாளை மறுநாளெனச் சொன்னால், நான் கேட்கமாட்டேன்.
    • இனி தாளமாட்டேன், நான்.
    • இவ்வேளை தயை செய்வாயம்மா; கருணை காட்டுவாயம்மா.
    • உனது திருவடிக் கமலங்களையே, உள்ளத்தில், எவ்வமயமும் நினைந்து, உனது ஆதரவு கோரியுள்ளேனம்மா.

    • உன்னையன்றி, புவியில், அன்புடன் காப்பாற்றுவோர் எவருளரம்மா?


  • மகிழ்வுடன் காக்கத் தருணமிதுவே.
  • மிக்கு விரைவாக வந்து, எனது வேதனைகளைத் தீர்த்து, கருணிப்பாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தே3வீ/ ப்3ரோவ/ ஸமயமு/-இதே3/ அதி/ வேக3மே/ வச்சி/
தேவீ/ காக்க/ தருணம்/ இதுவே/ மிக்கு/ விரைவாக/ வந்து/

நா/ வெதலு/ தீ3ர்சி/ கருணிஞ்சவே/ ஸ1ங்கரீ/ காமாக்ஷீ/
எனது/ வேதனைகளை/ தீர்த்து/ கருணிப்பாயம்மா/ சங்கரீ/ காமாட்சீ/


சரணம்
சரணம் 1
லோக/ ஜனனீ/ நாபை/ த3ய/ லேதா3/ (மாயம்மா)/
உலகை/ யீன்றவளே/ என்மீது/ தயை/ இல்லையா/ எமது அம்மா/

நீ/ தா3ஸுடு3/ க3தா3/ ஸ்ரீ/ காஞ்சி/ விஹாரிணீ/ கல்யாணீ/
உனது/ தொண்டன்/ அல்லவா/ ஸ்ரீ/ காஞ்சியில்/ உறைபவளே/ கல்யாணீ/

ஏக-ஆம்ர-ஈஸ்1வருனி/ ப்ரிய/ பா4மயை/-உன்ன/
ஏகாம்பரேசுவரரின்/ பிரியமான/ இல்லாளாக/ உள்ள/

நீகு/-ஏமி/-அம்மா/ எந்தோ/ பா4ரமா/ வினுமா/ நா/ தல்லீ/ (தே3வீ)/
உனக்கு/ என்ன/ அம்மா (குறை)/ மிக்கு/ பளுவா/ கேளாயம்மா/ எனது/ தாயே/ தேவீ/


சரணம் 2
ரேபு/ மாபு/-அனி/ செப்பிதே/ நே/ வினனு/ (தே3வீ)/ இக/
நாளை/ மறுநாள்/ என/ சொன்னால்/ நான்/ கேட்கமாட்டேன்/ தேவீ/ இனி/

தாளனு/ நேனு/ ஈ/ ப்ரொத்3து3/ த3ய/ சேயவே/ க்ரு2ப/ ஜூட3வே/
தாளமாட்டேன்/ நான்/ இந்த/ வேளை/ தயை/ செய்வாயம்மா/ கருணை/ காட்டுவாயம்மா/

நீ/ பத3/-அப்3ஜமுலே/ மதி3லோ/ ஸதா3/-எஞ்சி/ நீ/
உனது/ திருவடி/ கமலங்களையே/ உள்ளத்தில்/ எவ்வமயமும்/ நினைந்து/ உனது/

ப்ராபு/ கோரி/-உன்னானு/-அம்மா/ முத3முதோ/ மா/ தல்லீ/ (தே3வீ)
ஆதரவு/ கோரி/ யுள்ளேன்/ அம்மா/ மகிழ்வுடன்/ எமது/ தாயே/ (தேவீ)


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ணுனி/ ஸோத3ரீ/ கௌமாரீ/ (ஸ1ங்கரீ)/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரீ/ கௌமாரீ/ சங்கரீ/

பி3ம்ப3/-அத4ரீ/ கௌ3ரீ/ ஹேம/-அசலஜே/ லலிதே/ பர/ தே3வதே/
கோவைப்பழ (நிகர்)/ உதட்டினளே/ கௌரீ/ பனிமலை/ தோன்றலே/ லலிதையே/ பர/ தேவதையே/

காமாக்ஷீ/ நின்னு/ வினா/ பு4விலோ/ ப்ரேமதோ/
காமாட்சீ/ உன்னையன்றி/ புவியில்/ அன்புடன்/

காபாடே3 வாரு/-எவரு/-உன்னாரு/-அம்மா/ நா/ தல்லி/ (தே3வீ)/
காப்பாற்றுவோர்/ எவர்/ உளர்/ அம்மா/ எனது/ தாயே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வினுமா நா தல்லீ - வினுமா தல்லீ.
2 - ப்ராபு - ப்ராபே.
3 - முத3முதோ மா தல்லீ - முத3முதோ நன்னு.
4 - ஸ்1யாம க்ரு2ஷ்ணுனி ஸோத3ரீ - ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ.
5 - ஹேமாசலஜே - ஹேமாபாங்கி3.
6 - நின்னு வினா பு4விலோ - நினு வினா பூ4மிலோ.
7 - காபாடே3 வாரெவருன்னாரம்மா - காபாடெ3வருன்னாரம்மா.
8 - நா தல்லி - வினுமா மா தல்லீ - நன்னு.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
ஏகாம்பரேசுவரர் - காஞ்சி சிவன்
நாளை மறுநாளென - தட்டிக் கழித்தல்
Top


Updated on 29 Jun 2011

No comments:

Post a Comment