Friday, June 10, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - மாயம்மா நன்னு - ராகம் நாட குறஞ்சி - Maayamma Nannu - Raga Naata Kuranji

பல்லவி
மா(ய)ம்மா நன்னு ப்3ரோ(வவ)ம்மா 1மஹா மாயா உமா

அனுபல்லவி
2ஸத்(யா)னந்தா3 ஸானந்தா3 நித்(யா)னந்தா3 3ஆனந்தா3 அம்ப3 (மாயம்மா)

சரணம்
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஜனனீ தாமஸ(மே)ல ராவே தே3வீ
ஸ்1யாமளே 4நீ(லோ)த்பலே ஹி(மா)சல ஸுதே ஸுப2லே ஸி1வே (மாயம்மா)

ஸ்வர ஸாஹித்ய
மாத4(வா)தி3 5வினுத ஸரஸி(ஜா)க்ஷி
கஞ்சி காமாக்ஷி தாமஸமு ஸேயக
ரம்மா மரக(தா)ங்கி3 மஹா த்ரிபுர
ஸுந்த3ரி நின்னே 6ஹ்ரு23யமு பட்டுகொனி (மாயம்மா)


பொருள் - சுருக்கம்
  • எமதம்மா! மகா மாயையே! உமையே!
  • சத்திய ஆனந்தமே! ஆனந்த வடிவே! அழியா ஆனந்தமே! ஆனந்தமே! அம்பையே!
  • சியாம கிருஷ்ணனை ஈன்றவளே! தேவீ! சியாமளையே! நீலோற்பலமே! பனிமலை மகளே! நற்பயனே! சிவையே!
  • மாதவன் முதலானோர் போற்றும், கமலக்கண்ணீ! காஞ்சி காமாட்சீ! மரகத வடிவினளே! மகா திரிபுர சுந்தரீ!

  • என்னைக் காப்பாயம்மா.

    • தாமதமேன்?
    • வாராயம்மா.
    • தாமதம் செய்யாது, வாயம்மா.
    • உன்னையே இதயத்தில் பிடித்துக்கொண்டேன்.


  • என்னைக் காப்பாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மா/-அம்மா/ நன்னு/ ப்3ரோவு/-அம்மா/ மஹா/ மாயா/ உமா/
எமது/ அம்மா/ என்னை/ காப்பாய்/ அம்மா/ மகா/ மாயையே/ உமையே/


அனுபல்லவி
ஸத்ய/-ஆனந்தா3/ ஸானந்தா3/ நித்ய/-ஆனந்தா3/ ஆனந்தா3/ அம்ப3/ (மாயம்மா)
சத்திய/ ஆனந்தமே/ ஆனந்த வடிவே/ அழியா/ ஆனந்தமே/ ஆனந்தமே/ அம்பையே/


சரணம்
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஜனனீ/ தாமஸமு/-ஏல/ ராவே/ தே3வீ/
சியாம/ கிருஷ்ணனை/ ஈன்றவளே/ தாமதம்/ ஏன்/ வாராயம்மா/ தேவீ/

ஸ்1யாமளே/ நீல/-உத்பலே/ ஹிம/-அசல/ ஸுதே/ ஸுப2லே/ ஸி1வே/ (மாயம்மா)
சியாமளையே/ நீல/ உற்பலமே/ பனிமலை/ மகளே/ நற்பயனே/ சிவையே/


ஸ்வர ஸாஹித்ய
மாத4வ/-ஆதி3/ வினுத/ ஸரஸிஜ/-அக்ஷி/
மாதவன்/ முதலானோர்/ போற்றும்/ கமல/ கண்ணீ/

கஞ்சி/ காமாக்ஷி/ தாமஸமு/ ஸேயக/
காஞ்சி/ காமாட்சீ/ தாமதம்/ செய்யாது/

ரம்மா/ மரகத/-அங்கி3/ மஹா/ த்ரிபுர/
வாயம்மா/ மரகத/ வடிவினளே/ மகா/ திரிபுர/

ஸுந்த3ரி/ நின்னே/ ஹ்ரு23யமு/ பட்டுகொனி/ (மாயம்மா)
சுந்தரீ/ உன்னையே/ இதயத்தில்/ பிடித்துக்கொண்டேன்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஆனந்தா3 அம்ப3 - ஆனந்தா3.
5 - வினுத - வினுதே.
6 - ஹ்ரு23யமு பட்டுகொனி - ஹ்ரு23யமு பட்டுகொனு.
Top

மேற்கோள்கள்
1 - மஹா மாயா - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (215) அம்மையின் பெயர்.

2 - ஸத்யானந்தா3 - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (646) அம்மையின் பெயர் - ஸத்யானந்த3 ஸ்வரூபிணீ.

4 - நீலோத்பலே - நீலோற்பலம் - இதற்கு தனிப்பட்ட பொருள் ஏதும் கொள்வதற்கில்லை. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, இது, திருவாரூர் அம்மை (நீலோற்பலாம்பாள்) அல்லியங்கோதையைக் குறிக்கும். திருவாரூர் கோவில்.

Top

விளக்கம்
6 - ஹ்ரு23யமு பட்டுகொனி - இதயம் பிடித்துக்கொண்டு - புத்தகங்களில், இதற்கு, 'உன்னை எனது இதயத்தில் இருத்தினேன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், கீர்த்தனையில் உள்ள சொற்களினால், பொருள் நிறைவுறவில்லை. அத்தகைய பொருள் கொள்வதற்கு, இங்கு, 'ஹ்ரு23யமுன பட்டுகொண்டி' என்றோ அல்லது 'ஹ்ரு23யமுன பெட்டுகொண்டி' என்றோ இருக்கவேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

சத்திய ஆனந்தம் - பரம்பொருளின் மூவிலக்கணமாகிய சத்-சித்-ஆனந்தம் (சச்சிதானந்தம்) என்பதில் இரண்டு.

Top


Updated on 10 Jun 2011

2 comments:

  1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
    ஹ்ரு2த3யமு பட்டுகொனி - இதுபோல் பல பாடல்களில் பொருள் நிறைவுபெறாமல் உள்ளனவே. (incomplete sentences). என்ன காரணம்.
    வணக்கம்
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

      காரணம் என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

      வணக்கம்
      கோவிந்தன்

      Delete