Wednesday, June 8, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பராகேல - ராகம் கேதார கௌள - Paraakela - Raga Kedara Gaula

பல்லவி
பரா(கே)ல நன்னு பரிபாலிம்ப
மு(ரா)ரி ஸோத3ரி அம்பா3

அனுபல்லவி
நிராத3ரண ஸேயரா(த3)ம்மா ஸி1வே
பரா ஸ1க்தி நா மொர(னா)லகிம்ப (பராகேல)

சரணம்
4(ரா)(த்3ய)கி2லமுனகு ராணி ஹரி
ஹ(ரா)து3லு பொக3டு3 1பராத்பரி
து3ரந்த4ர மஹி(ஷா)ஸுர த3மனி
ஸ்ம(ரா)தீ4னுடௌ3 ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா (பராகேல)


பொருள் - சுருக்கம்
  • முராரி சோதரியே! அம்பா!
  • சிவையே! பரா சக்தீ!
  • புவி முதலாக, அனைத்துலகிற்கும் ராணியே! அரி, அரன் ஆகியோர் புகழும், பராபரீ! மகிடாசுரனை வதைத்த, தலைவியே! மன்மதன் தந்தையாகிய, சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே!

    • பராக்கேன், என்னைப் பேணுதற்கு?
    • அவமதிப்பு செய்யலாகாதம்மா.
    • எனது வேண்டுகோளினைக் கேட்பதற்கு பராக்கேன்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பராகு/-ஏல/ நன்னு/ பரிபாலிம்ப/
பராக்கு/ ஏன்/ என்னை/ பேணுதற்கு/

முர/-அரி/ ஸோத3ரி/ அம்பா3/
முரன்/ எதிரி/ சோதரியே/ அம்பா/


அனுபல்லவி
நிராத3ரண/ ஸேயராது3/-அம்மா/ ஸி1வே/
அவமதிப்பு/ செய்யலாகாது/ அம்மா/ சிவையே/

பரா/ ஸ1க்தி/ நா/ மொரனு/-ஆலகிம்ப/ (பராகேல)
பரா/ சக்தீ/ எனது/ வேண்டுகோளினை/ கேட்பதற்கு/ (பராக்கேன்?)


சரணம்
4ரா/-ஆதி3/-அகி2லமுனகு/ ராணி/ ஹரி/
புவி/ முதலாக/ அனைத்துலகிற்கும்/ ராணியே/ அரி/

ஹர/-ஆது3லு/ பொக3டு3/ பராத்பரி/
அரன்/ ஆகியோர்/ புகழும்/ பராபரீ/

து3ரந்த4ர/ மஹிஷ/-அஸுர/ த3மனி/
தலைவியே/ மகிட/ அசுரனை/ வதைத்த/

ஸ்மர/-ஆதீ4னுடௌ3/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதா/ (பராகேல)
மன்மதன்/ தந்தையாகிய/ சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - பராத்பரி - பராபரீ - பரத்திற்கும் புறம்பானவள் - இங்கு, 'பரம்' என்பது கீழ்க்கண்ட 'ஈஸா1வஸ்ய உபநிடத'ச் செய்யுளில் கூறப்பெற்ற 'இஃதினை'க் குறிக்கும் -

"ஓம் அஃது பூரணமாம்; இஃது பூரணமாம்; (அந்த) பூரணத்தினின்று, (இந்த) பூரணம் தோன்றும்;
(அந்த) பூரணத்தினின்று, (இந்த) பூரணத்தினை எடுக்க, பூரணமே மிஞ்சும்."

இந்த உபநிடதச் செய்யுளைப் பற்றிய கட்டுரை நோக்கவும்.

Top

விளக்கம்
இந்த கீர்த்தனை ஒரு புத்தகத்தில் மட்டுமே காணப்படுகின்றது - (‘Compositions of Syama Sastry’ – TK Govinda Rao).

முராரி - முரன் என்ற அசுரனி்ன் எதிரி - அரி.
மன்மதன் தந்தை - அரி

Top


Updated on 09 Jun 2011

No comments:

Post a Comment