Wednesday, June 8, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நின்னே நம்மிதி - ராகம் கேதார கௌள - Ninne Nammiti - Raga Kedara Gaula

பல்லவி
நின்னே நம்மிதி நிஜமுக33தி லோகமுலோ

அனுபல்லவி
1நன்(ன)ட3 சலுபக3 நா விசாரமு தீ3ர்சி-
2(ன)ம்போ3-ரு(ஹா)னனா தி3வ்ய-தர ஜூசி 3ப்ரஸன்ன முக2மு (நின்னே)

சரணம்
நீ மஹாத்ம்யமு எவரே நிதா3னிம்ப ஸ1க்யமு கா3து33தா3
4ஸ்ரீ மாதவே நீ 5சா2யேதுல(னொ)கனி கா3ஞ்ச க3லனே
ஏமனி செப்புது3 தே3வீ நுதிம்ப நாது3 வஸ1மா
ஈ மஹிலோ 6நீ த3ய க3ல்கி3 நா ப4யம்பு3 தொலிகே3னோ (நின்னே)


பொருள் - சுருக்கம்
  • மதி (தாமரை) முகத்தினளே! ஸ்ரீ மாதா! தேவீ!

  • உன்னையே உண்மையாக நம்பினேன், புகலென, உலகத்தினில்.

    • என்னைப் புறக்கணிக்காது, எனது கவலையினைத் தீர்த்து, தெய்வீகமாக நோக்குவாய், இனிய முகத்துடன்.

    • உனது பெருமையினை, எவருமே ஆழம் காண இயலாது அன்றோ?
    • உனது நீழலையும் அணுகுவோர், ஒருவரையும் காண இயலேனே.
    • என்னவெனச் சொல்வேன்? உன்னைப் போற்றவும் எனது வசமா?
    • இப்புவியில், உனது தயை கிடைத்து, எனது அச்சம் தொலையுமோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னே/ நம்மிதி/ நிஜமுக3/ க3தி/ லோகமுலோ/
உன்னையே/ நம்பினேன்/ உண்மையாக/ புகலென/ உலகத்தினில்/


அனுபல்லவி
நன்னு/-அட3 சலுபக3/ நா/ விசாரமு/ தீ3ர்சி/-
என்னை/ புறக்கணிக்காது/ எனது/ கவலையினை/ தீர்த்து/

அம்போ3-ருஹ/-ஆனனா/ தி3வ்ய-தர/ ஜூசி/ ப்ரஸன்ன/ முக2மு/ (நின்னே)
மதி (தாமரை)/ முகத்தினளே/ தெய்வீகமாக/ நோக்குவாய்/ இனிய/ முகத்துடன்/


சரணம்
நீ/ மஹாத்ம்யமு/ எவரே/ நிதா3னிம்ப/ ஸ1க்யமு கா3து3/ க3தா3/
உனது/ பெருமையினை/ எவருமே/ ஆழம் காண/ இயலாது/ அன்றோ/

ஸ்ரீ/ மாதவே/ நீ/ சா2யேதுல/-ஒகனி/ கா3ஞ்ச/ க3லனே/
ஸ்ரீ/ மாதா/ உனது/ நீழலையும் அணுகுவோர்/ ஒருவரையும்/ காண/ இயலேனே/

ஏமனி/ செப்புது3/ தே3வீ/ நுதிம்ப/ நாது3/ வஸ1மா/
என்னவென/ சொல்வேன்/ தேவீ/ (உன்னை) போற்றவும்/ எனது/ வசமா/

ஈ/ மஹிலோ/ நீ/ த3ய/ க3ல்கி3/ நா/ ப4யம்பு3/ தொலிகே3னோ/ (நின்னே)
இந்த/ புவியில்/ உனது/ தயை/ கிடைத்து/ எனது/ அச்சம்/ தொலையுமோ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
4 - ஸ்ரீ மாதா - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்மையின் முதலாவது பெயர்.

Top

விளக்கம்
1 - நன்னட3 சலுபக3 - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'என்னுடன் பேசுவாய்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சொற்களுக்கு, அத்தகைய பொருளேதும் இல்லை. இந்த சொற்களை, 'நன்னு அட3 சலுபக3' என்று பிரிக்கலாம். ஆனால், தெலுங்கில், 'அட3' என்ற சொல்லுக்கு, இவ்விடத்தில் பொருந்தும்படியான பொருளேதும் இல்லை. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, இது, 'கன்னட3 சலுபக3' என்றிருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். அதற்கு 'புறக்கணிக்காது' என்று பொருளாகும்.

2 - அம்போ3-ருஹானனா - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'தாமரை முகம்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. சம்ஸ்கிருதத்தில், 'தண்ணீரு'க்கு, 'அம்பு3' என்றும் 'அம்ப4ஸ்' என்றும் இரண்டு சொற்களுள்ளன. இவற்றின் தெலுங்கு வடிவம், 'அம்பு3வு' ஆகும். எனவே, இது, 'அம்போ4-ருஹானனா' என்றோ 'அம்பு3-ருஹானனா' என்றோ இருக்கவேண்டும்.

Top

2 - அம்போ3-ருஹானனா - புத்தகங்களில், இதற்கு, 'தாமரை முகம்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'அம்போ3-ருஹ' என்பதற்கு, 'தாமரை' யென்றும் 'மதி' யென்றும் பொருளாகும். முகம், பொதுவாக, மதிக்குத்தான் ஒப்பிடப்படும். எனவே, 'மதி முகம்' என்பது மிக்கு பொருந்தும் என்று நான் கருதுகின்றேன்.

3 - ப்ரஸன்ன முக2மு - இனிய முகம். இச்சொற்களின் வடிவம் சரியாக இல்லை. 'இனிய முகத்துடன்' என்பதுதான் இவ்விடம் பொருந்தும். எனவே 'ப்ரஸன்ன முக2முதோ' என்றிருக்கவேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

4 - ஸ்ரீ மாதவே - இச்சொல்லின் வடிவம் சரிவர விளங்கவில்லை. ஆயினும் இதற்கு 'ஒ ஸ்ரீ மாதா' என்று பொருள் கொள்ளப்பட்டது.

Top

5 - சா2யேதுல - நிழலை அணுகுவோர். இந்த சம்ஸ்கிருதம்-தெலுங்கு கலந்த சொல்லின் வடிவோ, பொருளோ சரியாக விளங்கவில்லை. புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருளே இங்கும் ஏற்கப்பட்டது.

6 - நீ த3ய க3ல்கி3 நா ப4யம்பு3 தொலிகே3னோ - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'உனது தயை கிடைத்து, அச்சம் தொலையுமோ?' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கு, 'உனது தயை கிடைத்தாலும், அச்சம் தொலைந்ததா?' என்று பொருளாகும். அத்தகைய பொருள் இவ்விடத்தில் பொருந்தாதாகையால், புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருளே சரியென ஏற்கப்பட்டது. ஆனால், அதற்கு, 'தொலகு3னா' என்றிருக்கவேண்டும்; ('தொலிகே3னோ' என்றல்ல).

Top

அனுபல்லவியின் சொற்களுடன் பொருள் நிறைவு பெறவில்லை. அனுபல்லவியினை, பல்லவியுடன் இணைக்கவும் இயலாது.

இத்தனை சிறிய கீர்த்தனையில், இத்தனைக் குழப்பங்கள் இருப்பது வியக்கத்தக்கது. எனக்குத் தெரிந்தவரை, இந்த கீர்த்தனை மிகவும் பழுதுபட்டுள்ளது அல்லது சியாமா சாஸ்திரி இந்த கீர்த்தனையினை இயற்றினாரா என்பது ஐயத்திற்குரியது.

தெய்வீகமாக - கருணையுடன் என.
நீழலை அணுகுவோர் - அம்மையின் நிழலுக்கும் நிகரல்லர் என.

Top


Updated on 08 Jun 2011

6 comments:

  1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களுக்கு

    நன்னெட౩ பாயக౩ என்பது என்னைக் கை விடாதே அல்லவா. நன்னெட౩ சலுபக3 என்பதுவும் இதே பொருள் தரும் என்று எண்ணுகிறேன்.
    வணக்கம்
    கோவிந்தசாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தசாமி அவர்களே,

    என்னுடைய விளக்கத்திலே, 'இந்த கீர்த்தனை மிகவும் பழுதுபட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளேன். தியாகராஜர், 'கன்னட3' என்ற சொல்லை ஒரு கீர்த்தனையில் பயன்படுத்தியுள்ளார். அதற்கு, 'புறக்கணிப்பு' என்று பொருளாகும். 'அட3 சலுபு' என்பது புரியாத சொல்லாக உள்ளது. 'எட3' என்று எந்த புத்தகத்திலும் கொடுக்கப்படவில்லை.

    வணக்கம்,
    கோவிந்தன்

    ReplyDelete
  3. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களுக்கு
    சரணம்- எவரே நிதா3னிம்ப ஸ1க்யமு கா3து3 –எவரூ என்று இருந்தால்தான் எவருமே என்று பொருள் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்.

    வணக்கம் கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

      நீங்கள் கூறுவது சரியே. ஆனால் எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. நான் அதை மாற்ற விரும்பவில்லை.

      வணக்கம்
      கோவிந்தன்

      Delete
  4. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
    நன்னட3 சலுபக3 - அதற்கு, எல்லா புத்தகங்களிலும் 'என்னுடன் பேசுவாய்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
    என்னைப் புறக்கணிக்காது என்று நீங்கள் பொருள் கொடுத்துள்ளீர்.
    நன்னெட3 சலுபக3 என்று எடுத்துக்கொண்டால் இந்த பொருள் பொருந்துகிறது.
    எட என்பதற்கு தூரம் பேதம் தடை முதலிய பொருள்கள் கொடுக்கப் பட்டுள்ளன.
    ఎడ-దూరము, భేదము, విఘ్నము
    (த்)சலுபு-செய், கடத்து.
    చలుపు- చేయు, కడఫు.
    த்ச, thcha, த்3ஜ dhja என்னும் இரு எழுத்துக்கள் வழக்கொழிந்து வருகின்றன. ச, ஜ வில் தொடங்கும் பெரும்பாலான சொற்கள் thcha, dhja என்று ஒலிக்கும். (எ.டு) சக்கனி ராஜ, ஜலுபு3
    வணக்கம்,
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,

      இந்த கீர்த்தனை சாஸ்த்திரிகளால் இயற்றப்பெற்றதா என்று நான் ஐயப்படுகின்றேன். அதனால் இங்கு மேற்கொண்டு இதனை ஆராய்வது உசிதமாக நான் கருதவில்லை, மன்னிக்கவும்.

      வணக்கம்
      கோவிந்தன்.

      Delete