Sunday, July 3, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஹிமாத்3ரி ஸுதே - ராகம் கல்யாணி - Himadri Sute - Raga Kalyani

பல்லவி
ஹி(மா)த்3ரி ஸுதே பாஹி மாம் வரதே3 பர தே3வதே

அனுபல்லவி
1ஸுமேரு மத்4ய வாஸினி ஸ்ரீ காமாக்ஷி (ஹிமாத்3ரி)

சரணம்
சரணம் 1
2ஹேம கா3த்ரி பங்கஜ நேத்ரி 3மதங்(கா3)த்மஜே
ஸரோஜ ப4வ ஹ(ரீ)ஸ1 4ஸுர மு(னீ)ந்த்3ர நுதே (ஹிமாத்3ரி)


சரணம் 2
அம்பு3(ஜா)ரி நிப4 வத3னே 5மௌக்திக மணி
ஹார
ஸோ14மான க3ளே ப4க்த கல்ப லதே (ஹிமாத்3ரி)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி கௌ3ரி பர(மே)ஸ்1வரி
6கி3ரிஜே நீல வேணி கீர வாணி ஸ்ரீ லலிதே (ஹிமாத்3ரி)


பொருள் - சுருக்கம்
  • பனிமலை மகளே! வரமருள்பவளே! பரதேவதையே!
  • உயர் மேரு நடுவில் உறைபவளே! ஸ்ரீ காமாட்சீ!
  • பொன்னங்கத்தினளே! கமலக்கண்ணீ! மதங்கருக்குப் பிறந்தவளே! தாமரையில் உறைவோன், அரி, ஈசன், வானோர், முனிவரிற் சிறந்தோரால் போற்றப்பெற்றவளே!
  • கமலப் பகை நிகர் வதனத்தினளே! முத்து, மணி மாலைகள் திகழும் கழுத்தினளே! தொண்டரின் கற்பகக் கொடியே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! கௌரீ! பரமேசுவரீ! மலைத் தோன்றலே! கார் குழலியே! கிளிக் குரலினளே! ஸ்ரீ லலிதையே!

    • காப்பாயென்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஹிம/-அத்3ரி/ ஸுதே/ பாஹி/ மாம்/ வரதே3/ பர/ தே3வதே/
பனி/ மலை/ மகளே/ காப்பாய்/ என்னை/ வரமருள்பவளே/ பரதேவதையே/


அனுபல்லவி
ஸுமேரு/ மத்4ய/ வாஸினி/ ஸ்ரீ/ காமாக்ஷி/ (ஹிமாத்3ரி)
உயர் மேரு/ நடுவில்/ உறைபவளே/ ஸ்ரீ/ காமாட்சீ/


சரணம்
சரணம் 1
ஹேம/ கா3த்ரி/ பங்கஜ/ நேத்ரி/ மதங்க3/-ஆத்மஜே/
பொன்/ அங்கத்தினளே/ கமல/ கண்ணீ/ மதங்கருக்கு/ பிறந்தவளே/

ஸரோஜ/ ப4வ/ ஹரி/-ஈஸ1/ ஸுர/ முனி/-இந்த்3ர/ நுதே/ (ஹிமாத்3ரி)
தாமரையில்/ உறைவோன்/ அரி/ ஈசன்/ வானோர்/ முனிவரிற்/ சிறந்தோரால்/ போற்றப்பெற்றவளே/


சரணம் 2
அம்பு3ஜ/-அரி/ நிப4/ வத3னே/ மௌக்திக/ மணி/
கமல/ பகை/ நிகர்/ வதனத்தினளே/ முத்து/ மணி/

ஹார/ ஸோ14மான/ க3ளே/ ப4க்த/ கல்ப/ லதே/ (ஹிமாத்3ரி)
மாலைகள்/ திகழும்/ கழுத்தினளே/ தொண்டரின்/ கற்பக/ கொடியே/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ கௌ3ரி/ பரம-ஈஸ்1வரி/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ கௌரீ/ பரமேசுவரீ/

கி3ரிஜே/ நீல/ வேணி/ கீர/ வாணி/ ஸ்ரீ/ லலிதே/ (ஹிமாத்3ரி)
மலைத் தோன்றலே/ கார்/ குழலியே/ கிளி/ குரலினளே/ ஸ்ரீ/ லலிதையே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
6 - கி3ரிஜே - கி3ரிஜா - கி3ரி ஜால : புத்தகங்களில், இதற்கு, 'மலை மகள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 'கி3ரிஜே' அல்லது 'கி3ரிஜா' என்பதே பொருந்தும். மேலும், 'கி3ரி ஜால' என்பதற்கு, தனிப்பட்டோ அல்லது முன், பின் இணைத்தோ, பொருள் ஏதும் கொள்வதற்கில்லை. எனவே, அது தவறாகும்.
Top

மேற்கோள்கள்
1 - ஸுமேரு மத்4ய வாஸினி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (55) அம்மையின் பெயர் 'ஸுமேரு மத்4ய ஸ்1ரு2ங்க3ஸ்தா4' என்பதாகும்.

2 - ஹேம கா3த்ரி - பொன்னங்கத்தினள் - இது தஞ்சாவூரில் உள்ள 'பங்காரு காமாட்சி'யினைக் குறிக்கும்.

3 - மதங்கா3த்மஜே - மதங்க முனிவரின் மகள். கவி காளிதாசர், தமது 'சியாமளா தண்டக'த்தினில், அம்மையை, 'மாதங்க3 தனயே' என்று அழைக்கின்றார்.
Top

4 - முனீந்த்3ர நுதே - முனிவரிற் சிறந்தோரால் போற்றப்பெற்றவள். இது, அகத்தியரைக் குறிக்கலாம். அகத்தியருக்கு, விஷ்ணுவின் அவதாரமாகிய, ஹயக்ரீவர், லலிதா ஸஹஸ்ர நாமத்தினை உபதேசித்தார். மேற்படி ஸஹஸ்ர நாமத்தின், பூர்வ பாகம் நோக்கவும்.
இது, 'க்ரோத44ட்டாரக' என்றழைக்கப்படும் 'தூ3ர்வாச முனிவரை'யும் குறிக்கலாம். தூ3ர்வாச முனிவரைப் பற்றி மேற்கொண்டு விவரங்கள் அறிய 'ஸ்ரீ வித்3யா உபாகசகர்கள்' நோக்கவும்.
Top

விளக்கம்
4 - ஸுர முனீந்த்3ர நுதே - இவ்விடத்தில், 'இந்த்3ர' என்ற சொல், 'ஸுர' மற்றும் 'முனி' இரண்டுக்கும் பொதுவாகவும் கொள்ளலாம் - 'ஸுரேந்த்3ர' என்றும் 'முனீந்த்3ர' என்றும்.

5 - மௌக்திக மணி ஹார - முத்து, மணி மாலை. இதனை, 'முத்து மாலை'யென்றோ, அல்லது 'முத்து மற்றும் மணி (வைர) மாலை' என்றோ பொருள் கொள்ளலாம். இங்கு பிற்கூறியபடி பொருள் கொள்ளப்பட்டது.

மதங்கர் - மதங்க முனிவர்
தாமரையில் உறைவோன் - பிரமன்
கமலப் பகை - மதி
Top


Updated on 03 Jul 2011

No comments:

Post a Comment