Saturday, July 2, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தே3வீ நன்னு - ராகம் கல்யாணி - Devi Nannu - Raga Kalyani

பல்லவி
தே3வீ நன்னு ப்3ரோ(வவ)ம்மா
இபுடே3 மஞ்சி ஸமய(ம)ம்மா

அனுபல்லவி
ஸேவிஞ்சி நின்னே ஸதா3 நம்மிதினி
நிரதமுக3 நம்மிதினி (தே3வீ)

சரணம்
சரணம் 1
அனாத2 ரக்ஷகி பி3ரான ப்3ரோவுமு தல்லீ
ஆஸ்1ரித ஜன பாலினி ப4வானி தே3வீ 1த்ரி-லோக ஜனனி (தே3வீ)


சரணம் 2
பராகு ஸேயக 2வரா(லொ)ஸகு3மு தல்லீ
பாமர ஜன பாலினி ம்ரு2டா3னி தே3வீ 3த்ரி-லோக பாலினி (தே3வீ)


சரணம் 3
குமார ஜனனீ கடாக்ஷ ஸேயுமு தல்லீ
ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலினி புராணி தே3வீ ப்3ரு2ஹ(த3)ம்பா3 (தே3வீ)


பொருள் - சுருக்கம்
  • தேவீ!
  • அனாதைகளைக் காப்பவளே! தாயே! அண்டிய மக்களைப் பேணுபவளே! பவானீ! தேவீ! மூவுலகை யீன்றவளே!
  • தாயே! பாமர மக்களைப் பேணுபவளே! மிருடானீ! தேவீ! மூவுலகைப் பேணுபவளே!
  • முருகனை யீன்றவளே! தாயே! சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! பழம்பொருளே! தேவீ! பெரிய நாயகியே!

  • என்னைக் காப்பாயம்மா.
  • இப்போதே நல்ல தருணமம்மா.

    • சேவித்து, உன்னையே எவ்வமயமும் நம்பினேன்.
    • மிக்கு ஆவலுடன் நம்பினேன்.

    • விரைவாகக் காப்பாயம்மா.
    • பராக்கு செய்யாது, வரங்கள் தருவாயம்மா.
    • கடைக்கணிப்பாயம்மா.


  • என்னைக் காப்பாயம்மா.
  • இப்போதே நல்ல தருணமம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தே3வீ/ நன்னு/ ப்3ரோவு/-அம்மா/
தேவீ/ என்னை/ காப்பாய்/ அம்மா/

இபுடே3/ மஞ்சி/ ஸமயமு/-அம்மா/
இப்போதே/ நல்ல/ தருணம்/ அம்மா/


அனுபல்லவி
ஸேவிஞ்சி/ நின்னே/ ஸதா3/ நம்மிதினி/
சேவித்து/ உன்னையே/ எவ்வமயமும்/ நம்பினேன்/

நிரதமுக3/ நம்மிதினி/ (தே3வீ)
மிக்கு ஆவலுடன்/ நம்பினேன்/


சரணம்
சரணம் 1
அனாத2/ ரக்ஷகி/ பி3ரான/ ப்3ரோவுமு/ தல்லீ/
அனாதைகளை/ காப்பவளே/ விரைவாக/ காப்பாயம்மா/ தாயே/

ஆஸ்1ரித/ ஜன/ பாலினி/ ப4வானி/ தே3வீ/ த்ரி-லோக/ ஜனனி/ (தே3வீ)
அண்டிய/ மக்களை/ பேணுபவளே/ பவானீ/ தேவீ/ மூவுலகை/ யீன்றவளே/


சரணம் 2
பராகு/ ஸேயக/ வராலு/-ஒஸகு3மு/ தல்லீ/
பராக்கு/ செய்யாது/ வரங்கள்/ தருவாயம்மா/ தாயே/

பாமர/ ஜன/ பாலினி/ ம்ரு2டா3னி/ தே3வீ/ த்ரி-லோக/ பாலினி/ (தே3வீ)
பாமர/ மக்களை/ பேணுபவளே/ மிருடானீ/ தேவீ/ மூவுலகை/ பேணுபவளே/


சரணம் 3
குமார/ ஜனனீ/ கடாக்ஷ ஸேயுமு/ தல்லீ/
முருகனை/ யீன்றவளே/ கடைக்கணிப்பாயம்மா/ தாயே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பாலினி/ புராணி/ தே3வீ/ ப்3ரு2ஹத்-அம்பா3/ (தே3வீ)
சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ பழம்பொருளே/ தேவீ/ பெரிய நாயகியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - த்ரி-லோக ஜனனி - லோக பாவனி.
2 - வராலொஸகு3மு - வராலனொஸகு3மு.
3 - த்ரி-லோக பாலினி - த்ரி-லோக ஜனனி.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
பெரிய நாயகி - தஞ்சாவூரில் அம்மையின் பெயர்.
Top


Updated on 02 Jul 2011

No comments:

Post a Comment