Sunday, April 10, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நனு ப்3ரோவ ராதா3 - ராகம் கௌளிபந்து - Nanu Brova Rada - Gaulipantu Raga

பல்லவி
நனு ப்3ரோவ ராதா3 வேக3மே நீவு

அனுபல்லவி
வினு நா மொரலனு நே நீ தா3ஸுடு33தா3 (நனு)

சரணம்
சரணம் 1
கோரின வர(மி)ச்சே தை3வமு நீவே க3தா3
காருண்ய மூர்தி கௌமாரீ கௌ3ரீ
1ர(ணா)க3த ஜன ரக்ஷகீ ஸ1ங்கரீ
ஸரஸ ம்ரு2து3 பா4ஷிணீ ராஜ ராஜேஸ்1வரீ (நனு)


சரணம் 2
அப4ய தா3ன(மி)ச்சே தை3வமு நீவே க3தா3
1அபி4ராம கு3ணமயீ அகி2லாண்டே3ஸ்1வரீ
2ஆஸ்1ரித ஜன தாப ஹாரிணீ புராணீ
ஆனந்த3 ரூபிணீ அலி குல வேணீ (நனு)


சரணம் 3
காமித ப2ல(மி)ச்சே தை3வமு நீவே க3தா3
பாமர பாலினீ ப4வ ப4ய ப4ஞ்ஜனீ
ஸோம ஸே12ர ப்ரிய பா4மினீ ரஞ்ஜனீ
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ பார்வதீ ப4வானீ (நனு)


பொருள் - சுருக்கம்
  • கருணை உருவே! கௌமாரீ! கௌரீ! புகலடைந்தோரைக் காப்பவளே! சங்கரீ! இனிய மென்-சொல்லினளே! ராஜ ராஜேசுவரீ!
  • களிப்பூட்டும், பண்பு மயமானவளே! அகிலாண்டேசுவரீ! சார்ந்தோர் துயர் தீர்ப்பவளே! பழம் பொருளே! ஆனந்த வடிவே! வண்டு மொய்க் குழலியே!
  • பாமரர்களைக் காப்பவளே! பிறவி யச்சம் போக்குபவளே! மதியணிவோனின் இனிய மனைவியே! மகிழ்ச்சியூட்டுபவளே! சியாம கிருஷ்ணனின் சோதரியே! பார்வதீ! பவானீ!

  • என்னைக் காக்கலாகாதா, விரைவில், நீ?

    • கேளாயம்மா, எனது முறையீட்டினை.
    • நான் உனது தொண்டனல்லவா?

    • கோரிய வரமளிக்கும் தெய்வம் நீயே யன்றோ?
    • அபய தானமளிக்கும் தெய்வம் நீயே யன்றோ?
    • விரும்பிய பயனருளும் தெய்வம் நீயே யன்றோ?


  • என்னைக் காக்கலாகாதா, விரைவில், நீ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நனு/ ப்3ரோவ ராதா3/ வேக3மே/ நீவு/
என்னை/ காக்கலாகாதா/ விரைவில்/ நீ/


அனுபல்லவி
வினு/ நா/ மொரலனு/ நே/ நீ/ தா3ஸுடு3/ க3தா3/ (நனு)
கேளாயம்மா/ எனது/ முறையீட்டினை/ நான்/ உனது/ தொண்டன்/ அல்லவா/


சரணம்
சரணம் 1
கோரின/ வரமு/-இச்சே/ தை3வமு/ நீவே/ க3தா3/
கோரிய/ வரம்/ அளிக்கும்/ தெய்வம்/ நீயே/ யன்றோ/

காருண்ய/ மூர்தி/ கௌமாரீ/ கௌ3ரீ/
கருணை/ உருவே/ கௌமாரீ/ கௌரீ/

1ரணு/-ஆக3த ஜன/ ரக்ஷகீ/ ஸ1ங்கரீ/
புகல்/ அடைந்தோரை/ காப்பவளே/ சங்கரீ/

ஸரஸ/ ம்ரு2து3/ பா4ஷிணீ/ ராஜ/ ராஜேஸ்1வரீ/ (நனு)
இனிய/ மென்/-சொல்லினளே/ ராஜ/ ராஜேசுவரீ/


சரணம் 2
அப4ய/ தா3னமு/-இச்சே/ தை3வமு/ நீவே/ க3தா3/
அபய/ தானம்/ அளிக்கும்/ தெய்வம்/ நீயே/ யன்றோ/

அபி4ராம/ கு3ணமயீ/ அகி2லாண்டே3ஸ்1வரீ/
களிப்பூட்டும்/ பண்பு மயமானவளே/ அகிலாண்டேசுவரீ/

ஆஸ்1ரித ஜன/ தாப/ ஹாரிணீ/ புராணீ/
சார்ந்தோர்/ துயர்/ தீர்ப்பவளே/ பழம் பொருளே/

ஆனந்த3/ ரூபிணீ/ அலி/ குல/ வேணீ/ (நனு)
ஆனந்த/ வடிவே/ வண்டு/ மொய்/ குழலியே/


சரணம் 3
காமித/ ப2லமு/-இச்சே/ தை3வமு/ நீவே/ க3தா3/
விரும்பிய/ பயன்/ அருளும்/ தெய்வம்/ நீயே/ யன்றோ/

பாமர/ பாலினீ/ ப4வ/ ப4ய/ ப4ஞ்ஜனீ/
பாமரர்களை/ காப்பவளே/ பிறவி/ யச்சம்/ போக்குபவளே/

ஸோம/ ஸே12ர/ ப்ரிய/ பா4மினீ/ ரஞ்ஜனீ/
மதி/ யணிவோனின்/ இனிய/ மனைவியே/ மகிழ்ச்சியூட்டுபவளே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ பார்வதீ/ ப4வானீ/ (நனு)
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ பார்வதீ/ பவானீ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3தா3 - அனுபல்லவியிலும், அனைத்து சரணங்களிலும் வரும் இந்தச் சொல், அனைத்து புத்தகங்களிலும், சில இடங்களில் 'க3தா3' என்றும் மற்ற இடங்களில் 'கா3தா3' என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரே சீராக இருப்பதற்காக, 'க3தா3' என்பது ஏற்கப்பட்டது.

1 - அபி4ராம கு3ணமயீ - அபி4ராம கு3ணாமயீ.

2 - ஆஸ்1ரித ஜன தாப ஹாரிணீ - ஆஸ்1ரித தாப ஹாரிணீ.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
மதியணிவோன் - சிவன்

Top


Updated on 10 Apr 2011

No comments:

Post a Comment