Tuesday, April 12, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - புர ஹர ஜாயே - ராகம் கௌளிபந்து - Pura Hara Jaaye - Raga Gaulipantu

பல்லவி
1புர ஹர ஜாயே பாலய மாம்

அனுபல்லவி
சர(ணா)ம்பு3ஜ ப4க்திம் தே3ஹி மே
கருணா நிதே4 நிராமயே மாயே (புர)

சரணம்
சரணம் 1
அலி குல வேணி ப4வானி பாவனி
2கல ரவ ம்ரு2து3-தர வாணி ஸ1ர்வாணி
கலி மோசனி பா3லே கமனீய கு3ண-ஸீ1லே
தில(கா)ஞ்சித பா2லே 3த்4ரு2த மணி மாலே (புர)


சரணம் 2
4பா4னு கோடி ஸமான1ரீரே
பாலித முனி நிகரே க3ம்பீ4ரே
தீ3ன ஜன போஷிணி 5நத ஸுத தோஷிணி
தை3த்ய குல ஸோ1ஷிணி ஸுலபே4 மஞ்ஜு பா4ஷிணி (புர)


சரணம் 3
6காம பீட23தே கல்யாணி காமாக்ஷி
காமித ப2லதே3 ஸ்ரீ லலிதே
ஸோம முகி2 புராணி ஸுந்த3ரி கௌமாரி
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி ஸை1ல ராஜ குமாரி (புர)


பொருள் - சுருக்கம்
  • புரமெரித்தோனின் இல்லாளே!
  • கருணைக் கடலே! குறைவற்றவளே! மாயையே!
  • வண்டு மொய் குழலியே! பவானீ! புனிதையே! குயில் கூவலின் மென்மைக் குரலியே! சர்வாணீ! கலியினின்று விடுவிப்பவளே! பாலையே! விரும்பத்தக்க குணசீலியே! திலகம் திகழும் நெற்றியினளே! மணிமாலை ஏந்தியவளே (அணிபவளே)!
  • பரிதி கோடி நிகர் உடலினளே! முனிவர்களைக் காப்பவளே! கம்பீரமானவளே! எளியோரைப் பேணுபவளே! பணியும் மகவினை மகிழ்விப்பவளே! அரக்கர் குலத்தினை வற்றச் செய்தவளே! எளியவளே! இன்-சொல்லினளே!
  • காம பீடத்தில் உறைபவளே! கலியாணியே! காமாட்சியே! விரும்பிய பயனருள்பவளே! ஸ்ரீ லலிதையே! மதி முகத்தினளே! பழம் பொருளே! சுந்தரியே! கௌமாரியே! சியாம கிருஷ்ணனின் சோதரியே! மலை மன்னன் மகளே!

    • காப்பாயென்னை.
    • திருவடித் தாமரையின் பக்தியினைத் தருவாயெனக்கு.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
புர/ ஹர/ ஜாயே/ பாலய/ மாம்/
புரம்/ எரித்தோனின்/ இல்லாளே/ காப்பாய்/ என்னை/


அனுபல்லவி
சரண/-அம்பு3ஜ/ ப4க்திம்/ தே3ஹி/ மே/
திருவடி/ தாமரையின்/ பக்தியினை/ தருவாய்/ எனக்கு/

கருணா/ நிதே4/ நிராமயே/ மாயே/ (புர)
கருணை/ கடலே/ குறைவற்றவளே/ மாயையே/


சரணம்
சரணம் 1
அலி/ குல/ வேணி/ ப4வானி/ பாவனி/
வண்டு/ மொய்/ குழலியே/ பவானீ/ புனிதையே/

கல/ ரவ/ ம்ரு2து3-தர/ வாணி/ ஸ1ர்வாணி/
குயில்/ கூவலின்/ மென்மை/ குரலியே/ சர்வாணீ/

கலி/ மோசனி/ பா3லே/ கமனீய/ கு3ண-ஸீ1லே/
கலியினின்று/ விடுவிப்பவளே/ பாலையே/ விரும்பத்தக்க/ குணசீலியே/

திலக/-அஞ்சித/ பா2லே/ த்4ரு2த/ மணி/ மாலே/ (புர)
திலகம்/ திகழும்/ நெற்றியினளே/ ஏந்தியவளே (அணிபவளே)/ மணி/ மாலை/


சரணம் 2
பா4னு/ கோடி/ ஸமான/ ஸ1ரீரே/
பரிதி/ கோடி/ நிகர்/ உடலினளே/

பாலித/ முனி நிகரே/ க3ம்பீ4ரே/
காப்பவளே/ முனிவர்களை/ கம்பீரமானவளே/

தீ3ன ஜன/ போஷிணி/ நத/ ஸுத/ தோஷிணி/
எளியோரை/ பேணுபவளே/ பணியும்/ மகவினை/ மகிழ்விப்பவளே/

தை3த்ய/ குல/ ஸோ1ஷிணி/ ஸுலபே4/ மஞ்ஜு/ பா4ஷிணி/ (புர)
அரக்கர்/ குலத்தினை/ வற்றச் செய்தவளே/ எளியவளே/ இன்/-சொல்லினளே/


சரணம் 3
காம/ பீட2/ க3தே/ கல்யாணி/ காமாக்ஷி/
காம/ பீடத்தில்/ உறைபவளே/ கலியாணியே/ காமாட்சியே/

காமித/ ப2லதே3/ ஸ்ரீ லலிதே/
விரும்பிய/ பயனருள்பவளே/ ஸ்ரீ லலிதையே/

ஸோம/ முகி2/ புராணி/ ஸுந்த3ரி/ கௌமாரி/
மதி/ முகத்தினளே/ பழம் பொருளே/ சுந்தரியே/ கௌமாரியே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ ஸை1ல/ ராஜ/ குமாரி/ (புர)
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ மலை/ மன்னன்/ மகளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - பா4னு கோடி ஸமான - பா4னு கோடி ஸமாப4.

Top

மேற்கோள்கள்
1 - புர ஹர - புரமெரித்தோன் - 'புரம்' என்பது, பொதுவாக, கமலாட்சன், தாரகாட்சன் மற்றும் வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் நிருமித்த பறக்கும் கோட்டைகளைக் குறிக்கும். சிவன் புரமெரித்தல்.

ஆனால் அம்பாளுக்கும் 'திரிபுரா' என்று பெயராகும். ‘திரிபுர ரஹஸ்யம்’ நோக்கவும்.

2 - கல ரவ - குயிலின் கூவல். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்பாளின் பெயர்களிலொன்று - 'கால கண்டி2' (404).

6 - காம பீட23தே - காம பீடத்தில் உறைபவள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்பாளின் பெயர்களிலொன்று - 'காம கோடிகா' (589) - காமகோடி பீடம்.

Top

விளக்கம்
3 - த்4ரு2த மணி மாலே - பொதுவாக, 'மணி' என்பது முத்தினைக் குறிக்கும். மணிமாலை, அம்பாள் கைகளில் ஏந்தியுள்ளதாகவோ, அணிந்துள்ளதாகவோ கொள்ளலாம். அம்பாளின், 'பாலா திரிபுரசுந்தரி', 'காயத்ரி' மற்றும் 'சரஸ்வதி' உருவங்களில், அட்சமாலையைக் கையிலேந்தியுள்ளாள்.

5 - நத ஸுத தோஷிணி - பணிந்த மகவினுக்கு மகிழ்வூட்டுபவள். இங்கு, 'மகவு' என்பது, 'விநாயகன்' அல்லது 'முருகனை'யோ அல்லது 'சியாமா சாஸ்த்திரியினை'யோ குறிக்கலாம்.

சர்வாணி - சர்வன் - சிவன் - சிவனின் இல்லாள்.

Top


Updated on 12 Apr 2011

No comments:

Post a Comment