Thursday, April 7, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - என்னேரமும் உன் பாத - ராகம் புன்னாக வராளி - Enneramum Un Pada - Raga Punnaga Varali

பல்லவி
என்னேரமும் உன் 1பாத கமல த்4யானம் 2செய்து-
கொண்(டு)ன்னை
நம்பினேன் நம்பினேன் நம்பினேன்

அனுபல்லவி
என்னை ரக்ஷிக்கச்-சொன்னேன் சொன்னேன்
சொந்த மைந்தன் நா(ன)ல்லவோ
அன்னை பின்னை(யு)ண்டோ எனக்கு
அகி2(லா)ண்(டே)ஸ்1வரீ ஸி1வ ஸ1ங்கரீ (என்னேரமும்)

சரணம்
சரனம் 1
ஆதி31க்தி உந்தன் மஹிமையை
துதி செய்ய(லா)குமோ பரமன்
முதலான பேருக்(கா)தியே 3பரஞ்-
சோதி
யே பங்கயக்-கண்ணியே
ஏ(த)ம்மா பரா-முகம் செய்யக்-
கூடா(த)ம்மா நீ கருணைக்-கட(ல)ல்லவோ (என்னேரமும்)


சரனம் 2
தாமரை இலை-மேல் தண்ணீர் போல்
தயங்குகிறாயே எந்தன்மேல் தயவு
செய்ய நல்ல தருண(மி)தே ஸி1
காமியே அபிராமியே அனுதினமும் உன்
நாமமே ஜபம் அல்லா(தொ)ன்றும்
நா(ன)றியே(னெ)னச்-சொன்னேன் தாயே (என்னேரமும்)


சரனம் 3
4நிலவின் வரவால் அல்லி மலர்
நிமிர்ந்து மலரவில்லையோ என்னை
நிலத்தில் வாழவைத்த அன்னையே
ஸனாதனியே புகழ்க்-கனியே மானியே
5தமியேன் எனக்(க)டைக்கலம் நேயமொடு
தருவ(து)ன் கடமை(ய)ல்லவோ தாயே (என்னேரமும்)


சரனம் 4
6ஸ்1யாம க்ரு2ஷ்ணன் சோதரீ உன்னை துதி
செய்யாம(லி)ருப்பேனோ உன் பாதங்களை
மறவாம(லி)ருக்க வரந்-தருவாயே ஸு1
ஸ்1யாமளே நித்ய கல்யாணீ
தாமத(மி)னி செய்தால் நா(னி)ப்போ
தாங்குவேனோ தாயே அகி2(லா)ண்(டே3)ஸ்1வரீ (என்னேரமும்)


பொருள் - சுருக்கம்
  • அகி2லாண்டேஸ்1வரீ! ஸி1வ ஸ1ங்கரீ!
  • ஆதி31க்தி! பரமன் முதலான பேருக்காதியே! பரஞ்சோதியே! பங்கயக்-கண்ணியே!
  • ஸி1வ காமியே! அபிராமியே! தாயே!
  • என்னை நிலத்தில் வாழவைத்த அன்னையே! ஸனாதனியே! புகழ்க் கனியே! மானியே!
  • ஸ்1யாம க்ரு2ஷ்ணன் சோதரீ! ஸு1க ஸ்1யாமளே! நித்ய கல்யாணீ! தாயே! அகி2லாண்டே3ஸ்1வரீ!

  • என்னேரமும், உன் பாத கமல த்4யானம் செய்து கொண்டு, உன்னை நம்பினேன், நம்பினேன், நம்பினேன்.

    • என்னை ரக்ஷிக்கச்-சொன்னேன், சொன்னேன்;
    • சொந்த மைந்தன் நானல்லவோ?
    • அன்னை பின்னை யுண்டோ எனக்கு?

    • உந்தன் மஹிமையை துதி செய்யலாகுமோ?
    • ஏதம்மா பரா-முகம்? செய்யக்கூடாதம்மா.
    • நீ கருணைக் கடலல்லவோ?

    • தாமரை இலை மேல் தண்ணீர் போல் தயங்குகிறாயே!
    • எந்தன்மேல் தயவு செய்ய நல்ல தருணமிதே.
    • அனுதினமும், உன் நாமமே ஜபம் அல்லாது, ஒன்றும் நானறியேன் எனச் சொன்னேன்.

    • நிலவின் வரவால், அல்லி மலர், நிமிர்ந்து மலரவில்லையோ?
    • தமியேன், எனக்கடைக்கலம், நேயமொடு, தருவதுன் கடமையல்லவோ?

    • உன்னை துதி செய்யாமலிருப்பேனோ?
    • உன் பாதங்களை மறவாமலிருக்க வரந்-தருவாயே.
    • தாமதமினி செய்தால், நானிப்போ தாங்குவேனோ?


  • என்னேரமும், உன் பாத கமல த்4யானம் செய்து கொண்டு, உன்னை நம்பினேன், நம்பினேன், நம்பினேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
என்னேரமும் உன் பாத கமல த்4யானம் செய்து-
கொண்டு-உன்னை நம்பினேன் நம்பினேன் நம்பினேன்


அனுபல்லவி
என்னை ரக்ஷிக்கச்-சொன்னேன் சொன்னேன்
சொந்த மைந்தன் நான்-அல்லவோ
அன்னை பின்னை-உண்டோ எனக்கு
அகி2ல-அண்ட-ஈஸ்1வரீ ஸி1வ ஸ1ங்கரீ (என்னேரமும்)


சரணம்
சரனம் 1
ஆதி ஸ1க்தி உந்தன் மஹிமையை
துதி செய்யல்-ஆகுமோ பரமன்
முதலான பேருக்கு-ஆதியே பரஞ்-
சோதியே பங்கயக்-கண்ணியே
ஏது-அம்மா பரா-முகம் செய்யக்-
கூடாது-அம்மா நீ கருணைக்-கடல்-அல்லவோ (என்னேரமும்)


சரனம் 2
தாமரை இலை-மேல் தண்ணீர் போல்
தயங்குகிறாயே எந்தன்-மேல் தயவு
செய்ய நல்ல தருணம்-இதே ஸி1
காமியே அபிராமியே அனுதி3னமும் உன்
நாமமே ஜபம் அல்லாது-ஒன்றும்
நான்-அறியேன்-எனச்-சொன்னேன் தாயே (என்னேரமும்)


சரனம் 3
நிலவின் வரவால் அல்லி மலர்
நிமிர்ந்து மலரவில்லையோ என்னை
நிலத்தில் வாழவைத்த அன்னையே
ஸனாதனியே புகழ்க்-கனியே மானியே
தமியேன் எனக்கு-அடைக்கலம் நேயமொடு
தருவது-உன் கடமை-அல்லவோ தாயே (என்னேரமும்)


சரனம் 4
ஸ்1யாம க்ரு2ஷ்ணன் சோதரீ உன்னை துதி
செய்யாமல்-இருப்பேனோ உன் பாதங்களை
மறவாமல்-இருக்க வரம்-தருவாயே ஸு1
ஸ்1யாமளே நித்ய கல்யாணீ
தாமதம்-இனி செய்தால் நான்-இப்போ
தாங்குவேனோ தாயே அகி2ல-அண்ட3-ஈஸ்1வரீ (என்னேரமும்)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பாத கமல த்4யானம் - பாத கமலமுல த்4யானம் : இந்த கிருதி முழுதும், தமிழிலும், போற்றிகள் ஸம்ஸ்கிருதத்திலும் உள்ளது. ஆனால் 'கமலமுல' என்பது தெலுங்காகும். எனவே இவ்விடத்தில் இது பொருந்தாது.

2 - செய்துகொண்டுன்னை - எல்லா புத்தகங்களிலும், 'செய்துகொண்டொன்னை' என்று கொடுக்கப்பட்டுள்ளது. அது தவறாகும்.

4 - நிலவின் வரவால் - எல்லா புத்தகங்களிலும், 'நிலவின் வரலால்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில், 'வ' மற்றும் 'ல' கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதனால், 'வரவால்' என்பதற்கு பதிலாக, 'வரலால்' என்று தவறாக எழுதப்பட்டதாகக் கருதுகின்றேன்.

5 - தமியேன் - எல்லா புத்தகங்களிலும், 'தனியேன்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'தமியேன்' என்ற சொல்லுக்கான பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 'தமியேன்' என்று ஏற்கப்பட்டது.

6 - ஸ்1யாம க்ரு2ஷ்ணன் - ஸ்1யாம க்ரு2ஷ்ண.

Top

மேற்கோள்கள்
3 - பரஞ்சோதி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (806), அம்மை இப்பெயரால் அழைக்கப்படுகின்றாள். இது குறித்து, கடோபநிடதத்தில் கூறப்பட்டது -

"அங்கு சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரன், தாரைகளும் கூட;
இந்த மின்னல்களும் ஒளிர்வதில்லை; இந்த நெருப்பும் எங்கே?
அஃதொன்றே ஒளிர, மற்று யாவையும் ஒளி பெருகின்றன;
அதன் ஒளியினால், இவை யாவும் ஒளிர்கின்றன." (2.2.15)
(ஸ்வாமி கம்பீராநந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

Top

விளக்கம்
மானி - மதிக்கப் பெற்றவள்

Top


Updated on 07 Apr 2011

2 comments:

  1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
    சரணம் 1- 'உந்தன் மஹிமையை
    துதி செய்ய(லா)குமோ பரமன்
    முதலான பேருக்கு' என்று பொருளா அல்லது என்னாலாகுமோ என்று பொருளா.
    வணக்கம்,
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,

      அப்படியும் பொருள் கொள்ளலாம்.
      வணக்கம்
      கோவிந்தன்

      Delete