Wednesday, April 27, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸாரஸாக்ஷி - ராகம் ஸாவேரி - Saarasaakshi - Raga Saveri

கீதம்
கீதம் 1
ஸார(ஸா)க்ஷி ஸதா3 பாஹி மாம்
குமார ஜனனி ஸரஸ ஹ்ரு23யே
1பரா ஸ1க்தி பா3லே ஸு-ஸீ1லே
2அபார மஹிமா ஸ்பூ2ர்தே 3ஸி1வே


கீதம் 2
கோடி ஸூர்ய ப்ரபே4 கோமளே
4த்ரி-கோண நிலயே 5கனக ஸத்3ரு2ஸே1
6கடி த்4ரு2த காஞ்சே 7ஸ-லீலே
ப்ரகாஸ1 ஸுகு3ண கீர்தே உமே


கீதம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதே ஸ்1யாமளே
8ஸ்ரீ காம கோடி பீட2 ஸத3னே
ஸாம கா3ன லோலே ஸு-ஸோ1பே4
விஸா1ல ஹ்ரு23ய மூர்தே ஸு1பே4


பொருள் - சுருக்கம்
  • கமலக் கண்ணீ! முருகனை யீன்றவளே! கனிந்த இதயத்தினளே! பரா சக்தீ! பாலையே! நற்பண்பினளே! அளவற்ற மகிமை சொரியும், சிவையே!
  • கோடிப் பரிதிகளின் ஒளியினளே! கோமளமானவளே! முக்கோணத்திலுறைபவளே! பொன்னிறத்தினளே! மணிமேகலை திகழும் இடுப்பினளே! திருவிளையாடல் புரிபவளே! ஒளிரும் நற்குணப் புகழ் வாய்ந்தவளே! உமையே!
  • சியாம கிருஷ்ணன் போற்றும், சியாமளையே! ஸ்ரீ காம கோடி பீடத்திலுறைபவளே! சாம கானத்தினை விரும்புபவளே! நல்லொளியினளே! பரந்த இதய உருவினளே! நல்லவளே!

    • எவ்வமயமும் காப்பயென்னை.



பதம் பிரித்தல் - பொருள்
கீதம்
கீதம் 1
ஸாரஸ/-அக்ஷி/ ஸதா3/ பாஹி/ மாம்/
கமல/ கண்ணீ/ எவ்வமயமும்/ காப்பய்/ என்னை/

குமார/ ஜனனி/ ஸரஸ/ ஹ்ரு23யே/
முருகனை/ யீன்றவளே/ கனிந்த/ இதயத்தினளே/

பரா/ ஸ1க்தி/ பா3லே/ ஸு-ஸீ1லே/
பரா/ சக்தீ/ பாலையே/ நற்பண்பினளே/

அபார/ மஹிமா/ ஸ்பூ2ர்தே/ ஸி1வே/
அளவற்ற/ மகிமை/ சொரியும்/ சிவையே/


கீதம் 2
கோடி/ ஸூர்ய/ ப்ரபே4/ கோமளே/
கோடி/ பரிதிகளின்/ ஒளியினளே/ கோமளமானவளே/

த்ரி-கோண/ நிலயே/ கனக/ ஸத்3ரு2ஸே1/
முக்கோணத்தில்/ உறைபவளே/ பொன்/ நிறத்தினளே/

கடி/ த்4ரு2த/ காஞ்சே/ ஸ-லீலே/
இடுப்பினளே/ திகழும்/ மணிமேகலை/ திருவிளையாடல் புரிபவளே/

ப்ரகாஸ1/ ஸுகு3ண/ கீர்தே/ உமே/
ஒளிரும்/ நற்குண/ புகழ் வாய்ந்தவளே/ உமையே/


கீதம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதே/ ஸ்1யாமளே/
சியாம/ கிருஷ்ணன்/ போற்றும்/ சியாமளையே/

ஸ்ரீ/ காம/ கோடி/ பீட2/ ஸத3னே/
ஸ்ரீ/ காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/

ஸாம/ கா3ன/ லோலே/ ஸு-ஸோ1பே4/
சாம/ கானத்தினை/ விரும்புபவளே/ நல்லொளியினளே/

விஸா1ல/ ஹ்ரு23ய/ மூர்தே/ ஸு1பே4/
பரந்த/ இதய/ உருவினளே/ நல்லவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - அபார மஹிமா - அபார மஹிம.

6 - கடி த்4ரு2 - கடீ த்4ரு2த.

7 - ஸ-லீலே - ஸலிலே : இவ்விடத்தில், 'ஸலிலே' என்பது பொருந்தாது. புத்தகங்களில், 'திருவிளையாடல் புரிபவள்' என்று பொருள் கொள்ளப்பட்டிருப்பதனால், 'ஸ-லீலே' என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்
1 - பரா ஸ1க்தி - பரா சக்தி - லலிதா ஸஹஸ்ர நாமத்தினில், அம்மைக்கு, 'பரா', 'பஸ்1யந்தீ', 'மத்4யமா', 'வைக2ரீ' என்று நான்கு பெயர்களுண்டு. 'பரா' என்பது சொல்லின் (ஓசையின் அல்லது நாதத்தின்) யாவுங் கடந்த நிலையினைக் குறிக்கும். 'வைக2ரீ' என்பது வெளிப்படையான (கேள்விப்படும்) சொல்லாகும். 'பஸ்1யந்தீ' என்பதுவும் 'மத்4யமா' என்பதுவும், சொல்லின் இடைப்பட்ட நிலைகளைக் குறிக்கும். இது குறித்து காஞ்சி மாமுனிவரின் 'ஸௌந்தர்ய லஹரி உரை' (பக்கம் 30) நோக்கவும்.

3 - ஸி1வே - சிவனின் இல்லாள். ஆனால், லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மைக்கு 'ஸி1வா' என்றோர் பெயருண்டு (53)

Top

4 - த்ரி-கோண நிலயே - முக்கோணத்தில் - ஸ்ரீ சக்கிரத்தினைக் குறிக்கும். 'ஸ்ரீ சக்கிரம்'

6 - கடி த்4ரு2த காஞ்சே - மணிமேகலை திகழும் இடுப்பினள் - காஞ்சி மாமுனிவரின் 'ஸௌந்தர்ய லஹரி உரை' (21) நோக்கவும்.

8 - ஸ்ரீ காம கோடி பீட2 ஸத3னே - காம கோடி பீடத்தினில் உறைபவள்.

Top

விளக்கம்
5 - கனக ஸத்3ரு2ஸே1 - பொன்னிறத்தினளே - இது பங்காரு காமாட்சியினைக் குறிக்கும்.

7 - ஸ-லீலே - திருவிளையாடல்கள் புரிபவள். இது, அம்மை, தீயோரை வென்று, நல்லோரைக் காத்த நிகழ்ச்சிகளையோ, அல்லது, 'மாயை' என்ற பெயரால் அழைக்கப்படும் அம்மையின் திருவிளையாடல்களையோ குறிக்கும்.

சாம கானம் - சாம வேதம் ஓதல்

Top


Updated on 27 Apr 2011

2 comments:


  1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே

    கடி த்4ரு2த காஞ்சே - மணிமேகலை திகழும் இடுப்பினள்- பதம் பிரித்துப் பொருள் கூறும் போது ‘இடுப்பினளே/ திகழும்/ மணிமேகலை’ என்றுள்ளது. தமிழ்ச்சொல்லமைப்போடு இது பொருந்தவில்லை. பொருள் – சுருக்கத்தில் சரியாகக் கொடுத்துள்ளீர்.

    வணக்கம்,
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

      காஞ்சே என்ற சொல்லின் 'ஏ' என்பதை நேரிடையாக மணிமேகலையே என்று மொழி பெயர்க்க இயலாது. அதனால், இந்த 'ஏ' எனும் விளிசசொல் தமிழில் எங்கு வரவேண்டுமோ அங்கு நான் கொடுத்துள்ளேன்.

      வணக்கம்,
      கோவிந்தன்.

      Delete