Showing posts with label Saveri Raga. Show all posts
Showing posts with label Saveri Raga. Show all posts

Thursday, April 28, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸ்ரீபதி முக2 - ராகம் ஸாவேரி - Sripati Mukha - Raga Saveri

பல்லவி
ஸ்ரீ-பதி முக2 விரசித பூஜ்யே
ஸ்ரீ பார்வதி மாம் பாஹி தே3வி

அனுபல்லவி
1நீப வன நிலயே நிராமயே
நிடில நயன ஜாயே மம ஹ்ரு2த3ய
தாப ஹாரிணி 2நவ ரத்(னா)லயே
தாபஸ வர நாரத3 முதி3தே தே3வி (ஸ்ரீ-பதி)

சரணம்
சரணம் 1
தருணி லதா பல்லவ ம்ரு2து3 சரணே
தபன விது4 விலோசனே
அருண கோடி ஸம காந்தி யுத
ஸ1ரீரே கல த்4ரு2த கலாபே
ஸுருசிர 3மணி கண்ட2 லஸன்-மணி ஹாரே
ஸுகு3ண-ஸீ1லே ஸததம் ஸமுத3ம்
கருணயா அவ தீ3னம் பர தே3வதே
4காம கோடி பீட2 க3தே லலிதே (ஸ்ரீ-பதி)


சரணம் 2
கரி முக2 கார்திகேய ஜனனி
ஸ்வர பாலினி பாவனி
ஹரி ஸஹோத3ரி வித3ளித
தை3த்(யா)ரி க3ணே 5ஸதா3 பூர்ணே
6பரமேஸ1 வினுதே ஸ்1ரித ஜன பாலிதே
ப்ரீதி(ரி)ஹ வஸது விமலே
புர ஹர ப்ரியே ஸ1ஸி1 நி(பா4)னனே
பூர்ண காமே ஸாம கா3ன லோலே (ஸ்ரீ-பதி)


சரணம் 3
ஸ்1யாம(ளா)ங்கி3 மஞ்ஜுள வாணி
ஸகல ப4ய நிவாரிணி
ஹே ம(ஹே)ஸ்1வரி மது4ப ஸத்3ரு2ஸ1
வேணி 7கா(மே)ஸ்1வரி கௌ3ரி
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி பு4வ(னே)ஸ்1வரி
ஸா1ம்ப4வி மஹா த்ரிபுர ஸுந்த3ரி
ஹிம கி3ரி குமாரி கவி குல
காமதே3 காங்க்ஷித ப2ல தா3யிகே (ஸ்ரீ-பதி)


பொருள் - சுருக்கம்
  • மாமணாளன் முதலானோரால் தொழப்பெற்றவளே! ஸ்ரீ பார்வதீ! தேவீ!
  • கதம்ப வனத்தில் நிலைபெற்றவளே! குறைவற்றவளே! நெற்றிக் கண்ணனின் இல்லாளே! எனது இதய வெம்மையினைத் தணிப்பவளே! நவரத்தின இல்லத்தில் உறைபவளே! தவசி, உயர் நாரதரால் அகமகிழ்பவளே, தேவீ!
  • என்றும் இளமங்கையே! கொடிக் குருத்து நிகர், மிருதுவான திருவடியினளே! பரிதி, மதிக் கண்களினளே! அருணன் கோடி நிகர், (சிவந்த) காந்தியுடைய மேனியளே! பிறையணியும், மதியே! (மதி நிகர் அழகியே!) மணிமாலை மிளிரும், அழகிய மிடற்றினளே! நற்பண்பினளே! பரதேவதையே! காம கோடி பீடத்தினில் உறைபவளே, லலிதையே!
  • ஆனை முகத்தோன் மற்றும் கார்த்திகேயனை ஈன்றவளே! இசையின் சுரங்களைப் பேணுபவளே! புனிதமானவளே! அரியின் சோதரியே! தேவர்களின் பகைவர் கும்பலை அழித்தவளே! என்றும் பூரணியே! பரமேசனால் போற்றப்பெற்றவளே! சார்ந்தோரைக் காப்பவளே! களங்கமற்றவளே! புரமெரித்தோனுக்கு இனியவளே! மதி நிகர் முகத்தினளே! விருப்பங்கள் யாவும் நிறைவேறப்பெற்றவளே! சாம கானத்தினில் மகிழ்பவளே!
  • கருநீல அங்கத்தினளே! (மேனியளே) இனிய குரலினளே! அனைத்து அச்சங்களையும் போக்கடிப்பவளே! ஏ மகேசுவரீ! தேன் வண்டு நிகர், கருங்குழலியே! காமேசுவரியே! கௌரீ! சியாம கிருஷ்ணனின் சோதரியே! புவனேசுவரியே! சாம்பவியே! மகா திரிபுர சுந்தரீ! இமய மலை மகளே! கவிக் குலத்திற்கு, வேண்டியதருள்பவளே! விழைந்த பயனருள்பவளே!

    • என்னைக் காப்பாய்.
    • எவ்வமயமும், மகிழ்வுடனும், கருணையுடனும் காப்பாய், இந்த எளியோனை.
    • அன்பு, இங்கு குடியிருக்கட்டும்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/-பதி/ முக2/ விரசித பூஜ்யே/
மா/ மணாளன்/ முதலானோரால்/ தொழப்பெற்றவளே/

ஸ்ரீ பார்வதி/ மாம்/ பாஹி/ தே3வி/
ஸ்ரீ பார்வதீ/ என்னை/ காப்பாய்/ தேவீ/


அனுபல்லவி
நீப/ வன/ நிலயே/ நிராமயே/
கதம்ப/ வனத்தில்/ நிலைபெற்றவளே/ குறைவற்றவளே/

நிடில/ நயன/ ஜாயே/ மம/ ஹ்ரு2த3ய/
நெற்றி/ கண்ணனின்/ இல்லாளே/ எனது/ இதய/

தாப/ ஹாரிணி/ நவ/ ரத்ன/-ஆலயே/
வெம்மையினை/ தணிப்பவளே/ நவ/ ரத்தின/ இல்லத்தில் உறைபவளே/

தாபஸ/ வர/ நாரத3/ முதி3தே/ தே3வி/ (ஸ்ரீ-பதி)
தவசி/ உயர்/ நாரதரால்/ அகமகிழ்பவளே/ தேவீ/


சரணம்
சரணம் 1
தருணி/ லதா/ பல்லவ/ ம்ரு2து3/ சரணே/
(என்றும்) இளமங்கையே/ கொடி/ குருத்து/ (நிகர்) மிருதுவான/ திருவடியினளே/

தபன/ விது4/ விலோசனே/
பரிதி/ மதி/ கண்களினளே/

அருண/ கோடி/ ஸம/ காந்தி/ யுத/
அருணன்/ கோடி/ நிகர்/ (சிவந்த) காந்தி/ யுடைய/

ஸ1ரீரே/ கல/ த்4ரு2த/ கலாபே/
மேனியளே/ பிறை/ யணியும்/ மதியே (மதி நிகர் அழகியே)/

ஸுருசிர/ மணி கண்ட2/ லஸத்/-மணி/ ஹாரே/
அழகிய/ மிடற்றினளே/ மிளிரும்/ மணி/ மாலை/

ஸுகு3ண-ஸீ1லே/ ஸததம்/ ஸமுத3ம்/
நற்பண்பினளே/ எவ்வமயமும்/ மகிழ்வுடனும்/

கருணயா/ அவ/ தீ3னம்/ பர/ தே3வதே/
கருணையுடனும்/ காப்பாய்/ (இந்த) எளியோனை/ பர/ தேவதையே/

காம/ கோடி/ பீட2/ க3தே/ லலிதே/ (ஸ்ரீ-பதி)
காம/ கோடி/ பீடத்தினில்/ உறைபவளே/ லலிதையே/


சரணம் 2
கரி/ முக2/ கார்திகேய/ ஜனனி/
ஆனை/ முகத்தோன்/ (மற்றும்) கார்த்திகேயனை/ ஈன்றவளே/

ஸ்வர/ பாலினி/ பாவனி/
(இசையின்) சுரங்களை/ பேணுபவளே/ புனிதமானவளே/

ஹரி/ ஸஹோத3ரி/ வித3ளித/
அரியின்/ சோதரியே/ அழித்தவளே/

தை3த்ய/-அரி/ க3ணே/ ஸதா3/ பூர்ணே/
தேவர்களின்/ பகைவர்/ கும்பலை/ என்றும்/ பூரணியே/

பரமேஸ1/ வினுதே/ ஸ்1ரித ஜன/ பாலிதே/
பரமேசனால்/ போற்றப்பெற்றவளே/ சார்ந்தோரை/ காப்பவளே/

ப்ரீதி:/-இஹ/ வஸது/ விமலே/
அன்பு/ இங்கு/ குடியிருக்கட்டும்/ களங்கமற்றவளே/

புர/ ஹர/ ப்ரியே/ ஸ1ஸி1/ நிப4/-ஆனனே/
புரம்/ எரித்தோனுக்கு/ இனியவளே/ மதி/ நிகர்/ முகத்தினளே/

பூர்ண/ காமே/ ஸாம/ கா3ன/ லோலே/ (ஸ்ரீ-பதி)
நிறைவேறப்பெற்றவளே/ விருப்பங்கள் யாவும்/ சாம/ கானத்தினில்/ மகிழ்பவளே/


சரணம் 3
ஸ்1யாமள/-அங்கி3/ மஞ்ஜுள/ வாணி/
கருநீல/ அங்கத்தினளே! (மேனியளே)/ இனிய/ குரலினளே/

ஸகல/ ப4ய/ நிவாரிணி/
அனைத்து/ அச்சங்களையும்/ போக்கடிப்பவளே/

ஹே/ மஹா-ஈஸ்1வரி/ மது4ப/ ஸத்3ரு2ஸ1/
ஏ/ மகேசுவரீ/ தேன் வண்டு/ நிகர்/

வேணி/ காம-ஈஸ்1வரி/ கௌ3ரி/
(கருங்)குழலியே/ காமேசுவரியே/ கௌரீ/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ பு4வன-ஈஸ்1வரி/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ புவனேசுவரியே/

ஸா1ம்ப4வி/ மஹா/ த்ரிபுர/ ஸுந்த3ரி/
சாம்பவியே/ மகா/ திரிபுர/ சுந்தரீ/

ஹிம/ கி3ரி/ குமாரி/ கவி/ குல/
இமய/ மலை/ மகளே/ கவி/ குலத்திற்கு/

காமதே3/ காங்க்ஷித/ ப2ல/ தா3யிகே/ (ஸ்ரீ-பதி)
வேண்டியதருள்பவளே/ விழைந்த/ பயன்/ அருள்பவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - மணி கண்ட2 - மணி க2ண்ட2 : இவ்விடத்தில், 'மணி க2ண்ட2' என்பது பொருந்தாது.

Top

மேற்கோள்கள்
1 - நீப வன நிலயே - கதம்ப வனத்தில் நிலைபெற்றவள் - லலிதா ஸஹஸ்ர நாமம் (60) - 'கத3ம்ப3 வன வாஸினி' மற்றும் ஸௌந்தர்ய லஹரி (8) - 'நீப-உபவனவதி' நோக்கவும்.

2 - நவ ரத்னாலயே - நவரத்தின இல்லத்தினில் உறைபவள் : அம்மை, சிந்தாமணி இல்லத்தில் வசிப்பதாகக் கூறப்படும். லலிதா ஸஹஸ்ர நாமம் (57) - 'சிந்தாமணி க்3ரு2ஹாந்தஸ்தா2' மற்றும் ஸௌந்தர்ய லஹரி (8) - 'சிந்தாமணி க்3ரு2ஹே' நோக்கவும்.

3 - மணி கண்ட2 லஸன்-மணி ஹாரே - மணிமாலை மிளிரும், அழகிய மிடற்றினள் - 'மணிமாலை' என்பது அட்டிகையைக் குறிக்கலாம்.

4 - காம கோடி பீட2 க3தே - காம கோடி பீடத்தில் உறைபவள் - லலிதா ஸஹஸ்ர நாமம் (589) 'காம கோடிகா' நோக்கவும் - காம கோடி பீடம்.

Top

5 - ஸதா3 பூர்ணே - என்றும் பூரணி - இதுகுறித்து 'ஈஸா1வஸ்ய உபநிடத'ச் செய்யுள் கூறுவது -

"ஓம் அஃது பூரணமாம்; இஃது பூரணமாம்; (அந்த) பூரணத்தினின்று, (இந்த) பூரணம் தோன்றும்;
(அந்த) பூரணத்தினின்று, (இந்த) பூரணத்தினை எடுக்க, பூரணமே மிஞ்சும்."

இந்த உபநிடதச் செய்யுளைப் பற்றிய கட்டுரை நோக்கவும்.

6 - பரமேஸ1 வினுதே - பரமேசனால் போற்றப்பெற்றவள் - 'காமேசுவரன்-காமேசுவரி' அமர்ந்திருக்கும் கட்டிலின், நான்கு கால்களில், 'பரமேசனும்' ஒரு கால் எனக் கூறப்படும். லலிதா ஸஹஸ்ர நாமம் (947) 'பஞ்ச ப்ரேத மஞ்சாதி4-ஸாயினி' நோக்கவும்.

7 - காமேஸ்1வரி - காமேசுவரி - ஸ்ரீ சக்கிரத்தின், 9-வது ஆவரணமாகிய, 'ஸர்வானந்த-மய சக்கிரம்' பற்றிய விவரங்கள் நோக்கவும். 'காமேசுவரி - காமேசுவரன்' பற்றிய காஞ்சி மாமுனிவரின் விளக்கத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நோக்கவும்.

Top

விளக்கம்
நெற்றிக் கண்ணன் - சிவன்
மணிமாலை - அட்டிகை
ஆனைமுகத்தோன் - கணபதி
கார்த்திகேயன் - முருகன்
பூரணி - பரம்பொருளின் இலக்கணம்
பரமேசன் - சிவன்
புரமெரித்தோன் - சிவன்
சியாம கிருஷ்ணன் - விஷ்ணு - பாடலாசிரியர் முத்திரை
கவிக் குலம் - கவிஞர்கள்

Top


Updated on 28 Apr 2011

Wednesday, April 27, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸாரஸாக்ஷி - ராகம் ஸாவேரி - Saarasaakshi - Raga Saveri

கீதம்
கீதம் 1
ஸார(ஸா)க்ஷி ஸதா3 பாஹி மாம்
குமார ஜனனி ஸரஸ ஹ்ரு2த3யே
1பரா ஸ1க்தி பா3லே ஸு-ஸீ1லே
2அபார மஹிமா ஸ்பூ2ர்தே 3ஸி1வே


கீதம் 2
கோடி ஸூர்ய ப்ரபே4 கோமளே
4த்ரி-கோண நிலயே 5கனக ஸத்3ரு2ஸே1
6கடி த்4ரு2த காஞ்சே 7ஸ-லீலே
ப்ரகாஸ1 ஸுகு3ண கீர்தே உமே


கீதம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதே ஸ்1யாமளே
8ஸ்ரீ காம கோடி பீட2 ஸத3னே
ஸாம கா3ன லோலே ஸு-ஸோ1பே4
விஸா1ல ஹ்ரு2த3ய மூர்தே ஸு1பே4


பொருள் - சுருக்கம்
  • கமலக் கண்ணீ! முருகனை யீன்றவளே! கனிந்த இதயத்தினளே! பரா சக்தீ! பாலையே! நற்பண்பினளே! அளவற்ற மகிமை சொரியும், சிவையே!
  • கோடிப் பரிதிகளின் ஒளியினளே! கோமளமானவளே! முக்கோணத்திலுறைபவளே! பொன்னிறத்தினளே! மணிமேகலை திகழும் இடுப்பினளே! திருவிளையாடல் புரிபவளே! ஒளிரும் நற்குணப் புகழ் வாய்ந்தவளே! உமையே!
  • சியாம கிருஷ்ணன் போற்றும், சியாமளையே! ஸ்ரீ காம கோடி பீடத்திலுறைபவளே! சாம கானத்தினை விரும்புபவளே! நல்லொளியினளே! பரந்த இதய உருவினளே! நல்லவளே!

    • எவ்வமயமும் காப்பயென்னை.



பதம் பிரித்தல் - பொருள்
கீதம்
கீதம் 1
ஸாரஸ/-அக்ஷி/ ஸதா3/ பாஹி/ மாம்/
கமல/ கண்ணீ/ எவ்வமயமும்/ காப்பய்/ என்னை/

குமார/ ஜனனி/ ஸரஸ/ ஹ்ரு2த3யே/
முருகனை/ யீன்றவளே/ கனிந்த/ இதயத்தினளே/

பரா/ ஸ1க்தி/ பா3லே/ ஸு-ஸீ1லே/
பரா/ சக்தீ/ பாலையே/ நற்பண்பினளே/

அபார/ மஹிமா/ ஸ்பூ2ர்தே/ ஸி1வே/
அளவற்ற/ மகிமை/ சொரியும்/ சிவையே/


கீதம் 2
கோடி/ ஸூர்ய/ ப்ரபே4/ கோமளே/
கோடி/ பரிதிகளின்/ ஒளியினளே/ கோமளமானவளே/

த்ரி-கோண/ நிலயே/ கனக/ ஸத்3ரு2ஸே1/
முக்கோணத்தில்/ உறைபவளே/ பொன்/ நிறத்தினளே/

கடி/ த்4ரு2த/ காஞ்சே/ ஸ-லீலே/
இடுப்பினளே/ திகழும்/ மணிமேகலை/ திருவிளையாடல் புரிபவளே/

ப்ரகாஸ1/ ஸுகு3ண/ கீர்தே/ உமே/
ஒளிரும்/ நற்குண/ புகழ் வாய்ந்தவளே/ உமையே/


கீதம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதே/ ஸ்1யாமளே/
சியாம/ கிருஷ்ணன்/ போற்றும்/ சியாமளையே/

ஸ்ரீ/ காம/ கோடி/ பீட2/ ஸத3னே/
ஸ்ரீ/ காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/

ஸாம/ கா3ன/ லோலே/ ஸு-ஸோ1பே4/
சாம/ கானத்தினை/ விரும்புபவளே/ நல்லொளியினளே/

விஸா1ல/ ஹ்ரு2த3ய/ மூர்தே/ ஸு1பே4/
பரந்த/ இதய/ உருவினளே/ நல்லவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - அபார மஹிமா - அபார மஹிம.

6 - கடி த்4ரு2த - கடீ த்4ரு2த.

7 - ஸ-லீலே - ஸலிலே : இவ்விடத்தில், 'ஸலிலே' என்பது பொருந்தாது. புத்தகங்களில், 'திருவிளையாடல் புரிபவள்' என்று பொருள் கொள்ளப்பட்டிருப்பதனால், 'ஸ-லீலே' என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்
1 - பரா ஸ1க்தி - பரா சக்தி - லலிதா ஸஹஸ்ர நாமத்தினில், அம்மைக்கு, 'பரா', 'பஸ்1யந்தீ', 'மத்4யமா', 'வைக2ரீ' என்று நான்கு பெயர்களுண்டு. 'பரா' என்பது சொல்லின் (ஓசையின் அல்லது நாதத்தின்) யாவுங் கடந்த நிலையினைக் குறிக்கும். 'வைக2ரீ' என்பது வெளிப்படையான (கேள்விப்படும்) சொல்லாகும். 'பஸ்1யந்தீ' என்பதுவும் 'மத்4யமா' என்பதுவும், சொல்லின் இடைப்பட்ட நிலைகளைக் குறிக்கும். இது குறித்து காஞ்சி மாமுனிவரின் 'ஸௌந்தர்ய லஹரி உரை' (பக்கம் 30) நோக்கவும்.

3 - ஸி1வே - சிவனின் இல்லாள். ஆனால், லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மைக்கு 'ஸி1வா' என்றோர் பெயருண்டு (53)

Top

4 - த்ரி-கோண நிலயே - முக்கோணத்தில் - ஸ்ரீ சக்கிரத்தினைக் குறிக்கும். 'ஸ்ரீ சக்கிரம்'

6 - கடி த்4ரு2த காஞ்சே - மணிமேகலை திகழும் இடுப்பினள் - காஞ்சி மாமுனிவரின் 'ஸௌந்தர்ய லஹரி உரை' (21) நோக்கவும்.

8 - ஸ்ரீ காம கோடி பீட2 ஸத3னே - காம கோடி பீடத்தினில் உறைபவள்.

Top

விளக்கம்
5 - கனக ஸத்3ரு2ஸே1 - பொன்னிறத்தினளே - இது பங்காரு காமாட்சியினைக் குறிக்கும்.

7 - ஸ-லீலே - திருவிளையாடல்கள் புரிபவள். இது, அம்மை, தீயோரை வென்று, நல்லோரைக் காத்த நிகழ்ச்சிகளையோ, அல்லது, 'மாயை' என்ற பெயரால் அழைக்கப்படும் அம்மையின் திருவிளையாடல்களையோ குறிக்கும்.

சாம கானம் - சாம வேதம் ஓதல்

Top


Updated on 27 Apr 2011

Tuesday, April 26, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸ1ங்கரி ஸ1ம்-குரு - ராகம் ஸாவேரி - Sankari Samkuru - Raga Saveri

பல்லவி
ஸ1ங்கரி ஸ1ம்-குரு சந்த்3ர முகி2 1அகி2(லா)ண்(டே3)ஸ்1வரி
ஸா1ம்ப4வி ஸரஸிஜ ப4வ வந்தி3தே 2கௌ3ரி அம்ப3

அனுபல்லவி
ஸங்கட ஹாரிணி ரிபு விதா3ரிணி கல்யாணி
ஸதா3 நத 3ப2ல தா3யிகே ஹர நாயிகே ஜக3ஜ்-ஜனனி (ஸ1ங்கரி)

சரணம்
சரணம் 1
ஜம்பு3 பதி விலாஸினி ஜக3(த3)வ(னோ)ல்லாஸினி
கம்பு3 கந்த4ரே ப4வானி 4கபால தா4ரிணி ஸூ1லினி (ஸ1ங்கரி)


சரணம் 2
அங்க3ஜ ரிபு தோஷிணி அகி2ல பு4வன போஷிணி
மங்க3ள ப்ரதே3 5ம்ரு2டா3னி 6மராள ஸன்னிப4 க3மனி (ஸ1ங்கரி)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி ஸ்1யாமளே 7ஸா1(தோ)த3ரி
ஸாம கா3ன லோலே 8பா3லே ஸ(தா3)ர்தி ப4ஞ்ஜன-ஸீ1லே (ஸ1ங்கரி)


பொருள் - சுருக்கம்
  • சங்கரீ! சந்திர வதனத்தினளே, அகிலாண்டேசுவரீ! சாம்பவீ! மலரோனால் தொழப்பெற்றவளே! கௌரீ! அம்பையே!
  • சங்கடங்களைத் தீர்ப்பவளே! பகைவரை அழிப்பவளே! கலியாணீ! எவ்வமயமும் பணிந்தோருக்குப் பயன் அருள்பவளே! அரனின் இல்லாளே! உலகைப் படைத்தவளே!
  • ஜம்பு பதியுடன் களிப்பவளே! உலகைக் காப்பதில் மகிழ்பவளே! சங்குக் கழுத்தினளே! பவானீ! கபாலம் ஏந்துபவளே! சூலமேந்தியே!
  • மன்மதனின் எதிரியை மகிழ்விப்பவளே! அகில புவனத்தையும் பேணுபவளே! மங்களம் அருள்பவளே! மிருடனின் மனைவியே! அன்னம் நிகர் நடையினளே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே, சியாமளா! மெல்லிடையாளே! சாம கானத்தினை விரும்புபவளே! பாலையே! எவ்வமயமும் துயர் களைவதில் ஈடுபாடுடையவளே!

    • நலனருள்வாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ1ங்கரி/ ஸ1ம்/-குரு/ சந்த்3ர/ முகி2/ அகி2ல-அண்ட3-ஈஸ்1வரி/
சங்கரீ/ நலன்/ அருள்வாய் (செய்வாய்)/ சந்திர/ வதனத்தினளே/ அகிலாண்டேசுவரீ/

ஸா1ம்ப4வி/ ஸரஸிஜ ப4வ/ வந்தி3தே/ கௌ3ரி/ அம்ப3/
சாம்பவீ/ மலரோனால்/ தொழப்பெற்றவளே/ கௌரீ/ அம்பையே/


அனுபல்லவி
ஸங்கட/ ஹாரிணி/ ரிபு/ விதா3ரிணி/ கல்யாணி/
சங்கடங்களை/ தீர்ப்பவளே/ பகைவரை/ அழிப்பவளே/ கலியாணீ/

ஸதா3/ நத/ ப2ல/ தா3யிகே/ ஹர/ நாயிகே/ ஜக3த்/-ஜனனி/ (ஸ1ங்கரி)
எவ்வமயமும்/ பணிந்தோருக்கு/ பயன்/ அருள்பவளே/ அரனின்/ இல்லாளே/ உலகை/ படைத்தவளே/


சரணம்
சரணம் 1
ஜம்பு3/ பதி/ விலாஸினி/ ஜக3த்/-அவன/-உல்லாஸினி/
ஜம்பு/ பதியுடன்/ களிப்பவளே/ உலகை/ காப்பதில்/ மகிழ்பவளே/

கம்பு3/ கந்த4ரே/ ப4வானி/ கபால/ தா4ரிணி/ ஸூ1லினி/ (ஸ1ங்கரி)
சங்கு/ கழுத்தினளே/ பவானீ/ கபாலம்/ ஏந்துபவளே/ சூலமேந்தியே/


சரணம் 2
அங்க3ஜ/ ரிபு/ தோஷிணி/ அகி2ல/ பு4வன/ போஷிணி/
மன்மதனின்/ எதிரியை/ மகிழ்விப்பவளே/ அகில/ புவனத்தையும்/ பேணுபவளே/

மங்க3ள/ ப்ரதே3/ ம்ரு2டா3னி/ மராள/ ஸன்னிப4/ க3மனி/ (ஸ1ங்கரி)
மங்களம்/ அருள்பவளே/ மிருடனின் மனைவியே/ அன்னம்/ நிகர்/ நடையினளே/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ ஸ்1யாமளே/ ஸா1த-உத3ரி/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ சியாமளா/ மெல்லிடையாளே/

ஸாம/ கா3ன/ லோலே/ பா3லே/ ஸதா3/-ஆர்தி/ ப4ஞ்ஜன/-ஸீ1லே/ (ஸ1ங்கரி)
சாம/ கானத்தினை/ விரும்புபவளே/ பாலையே/ எவ்வமயமும்/ துயர்/ களைவதில்/ ஈடுபாடுடையவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - கௌ3ரி அம்ப3 - கௌ3ரி.

3 - ப2ல தா3யிகே - ப2ல தா3யகி.

Top

மேற்கோள்கள்
1 - அகி2லாண்டே3ஸ்1வரி - திருவானைக்கா (திருவானைக் கோயில்) - அகிலாண்டேசுவரி சமேத ஜம்புகேசுவரர் (ஜம்பு பதி). திருவானைக்கா - 1; திருவானைக்கா - 2 .

4 - கபால தா4ரிணி - கபாலம் ஏந்துபவள் - மேற்கூறிய வலைத் தளத்தில், முன்னாளில், அகிலாண்டேசுவரி உக்கிர ரூபத்துடன் இருந்ததாகவும், ஆதி சங்கரர், அம்மையின் காதுகளில், ஸ்ரீ சக்கிரத்தினை, தாடங்கமாக ஸ்தாபித்து, அம்மையை சாந்தப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

Top

5 - ம்ரு2டா3னி - மிருடன் (கருணையுடையவன்) - சிவன். மிருடனின் இல்லாள் - லலிதா ஸஹஸ்ர நாமம் (564) நோக்கவும்.

6 - மராள ஸன்னிப4 க3மனி - அன்னம் நிகர் நடை - லலிதா ஸஹஸ்ர நாமம் (47) 'மராளி மந்த3 க3மனா' மற்றும் ஸௌந்தரிய லஹரி (91) - காஞ்சி மாமுனிவர் உரை நோக்கவும்.

7 - ஸா1தோத3ரி - மெல்லிடையாள். இமவானுக்கு, 'ஸதோதரன்' (நூற்றுக்கணக்கான குகைகளை உடையவன்) என்று பெயர். அதனால் 'ஸா1தோத3ரி' என்பதற்கு, 'இமவான் மகள்' என்றும் பொருள் கொள்ளலாம்.

8 - பா3லே - பாலை. 9 வயது பெண் - லலிதா ஸஹஸ்ர நாமம் (965) நோக்கவும்.

Top

விளக்கம்
மலரோன் - பிரமன்
ஜம்பு பதி - ஜம்புகேசுவரர் - திருவானைக்கா சிவனின் பெயர்.
கபாலம் - மண்டையோடு
மன்மதனின் எதிரி - சிவன்
சாம கானம் - சாம வேதம் ஓதுதல்

Top


Updated on 26 Apr 2011

Monday, April 25, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஜனனி நத ஜன - ராகம் ஸாவேரி - Janani Nata Jana - Raga Saveri

பல்லவி
ஜனனி நத ஜன பரிபாலினி
பாஹி மாம் 1ப4வானி த்ரி-லோக (ஜனனி)

அனுபல்லவி
த3னுஜ வைரி நுதே ஸகல ஜன
பரிதாப பாப 2ஹாரிணி ஜய-ஸா1லினி (ஜனனி)

சரணம்
சரணம் 1
3ஸதத வினுத ஸுத க3ண பதி
ஸேனானி ராஜ ரா(ஜே)ஸ்1வரி
4விஸா1(லா)க்ஷ தருணி அகி2ல ஜன
பாவனி (ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி)
5ஸதி ஸு1ப4 சரிதே ஸதா3 6மது4ர
பா4ஷா
7விக3ள(த3)ம்ரு2த ரஸ த்4வனி
8ஸுர நுத பத3 யுக3 த3ர்ஸி1த இஹ மம
9கா3த்ர(ம)தி-மாத்ர(ம)ஜனி ஸுஜனி (ஜனனி)


சரணம் 2
குவலய லோசன யுக3ளே
கல்யாணி நீல வேணி விகச
கோகனத3 ரஜச்-சரணே அதி
ரமணி (க4ன நீல வேணி)
பு4வி தி3வி 10ரக்ஷணி த்4ரு2(தா)மர க3ணே
பா4க்3யவதி ஸ1க்தி ஸம்பூர்ணே
கவன நிபுண மதிம் 11அயி தி3ஸ1 இஹ 12தவ
காந்தி(மு)பயாதும்
கி3(ரீ)ஸ1 ரமணி (ஜனனி)


சரணம் 3
சரண நிபத(த3)மர ஸமுத3யே
காளி ஸாரஸ முகி2
13ஸு-ஸோ1பி4(தோ)ரு யுக3ள வர
கத3லி (நவ ஸாரஸ முகி2)
ஸுருசிர 14முரளீ ம்ரு2த3ங்க3 ஸ்வர
ஸம்ஸோ1பி4னி
15ரஸ-க்ரு2த மஹீ தலே
ஸரஸிஜ கர யுக3ளே 16கடி கலித மணி
காஞ்சீ ப்4ரு2தே
காஞ்சீபுர வாஸினி (ஜனனி)


பொருள் - சுருக்கம்
  • ஈன்றவளே! பணிந்தோரைப் பேணுபவளே! பவானீ! மூவுலகை ஈன்றவளே!
  • அசுரர் பகைவரால் போற்றப்பெற்றவளே! அனைத்து மக்களின் பரிதாபங்களையும், பாவங்களையும் போக்கடிப்பவளே! வெற்றித்திருமகளே!
  • எவ்வமயமும், மைந்தர்கள், கணபதி மற்றும் முருகன் போற்றும், ராஜ ராஜேசுவரீ! அகன்ற கண்களுடைய, மங்கையே! உலக மக்களைப் புனிதமாக்குபவளே! ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ! சதீ! நற்சரிதத்தினளே! எவ்வமயமும், அமுதச் சாறு ஊறும் குரலுடைய, இன்-சொல்லினளே! பிறவாதவளே! நற்றாயே!
  • கமலக் கண் இணையினளே! கலியாணீ! கருங்குழலியே! அலர்ந்த, செந்தாமரையின் மகரந்தம் நிகர், (செந்) திருவடியினளே! மிக்கு எழிலியே! கார்முகில் நிகர், கருங்குழலியே! புவியையும் வானுலகையும் காப்பவளே! அமரர்களை ஆதரிப்பவளே! பாக்கியவதீ! வல்லமை முழுமையாக உடையவளே! அம்மா! மலையீசனை மகிழ்விப்பவளே!
  • அமரர் குழுமத்தினர் தெண்டனிடும் திருவடியினளே! காளீ! தாமரை வதனத்தினளே! வாழைத் தண்டு நிகர், துலங்கும், புனித, துடை இணையினளே! அன்றலர்ந்த, தாமரை வதனத்தினளே! இனிய, குழல் மற்றும் மிருதங்க சுரங்களில் திகழ்பவளே! புவிமீதினில், சாரம் உண்டாக்கியவளே! கமலக் கை இணையினளே! சலங்கைகள் பொருந்திய, இரத்தின மேகலைத் திகழும், இடுப்பினளே! காஞ்சீபுரத்தினிலுறைபவளே!

  • காப்பாயென்னை.

    • வானோர் போற்றும், திருவடி இணையினை தரிசித்து, இங்கு, எனது உடல், மிக்கு பூரிப்படைந்தது.
    • உனது பேரொளியினை அணுகுதற்கு, கவித்திறமை மிக்க அறிவினை, இங்கு தருவாய்.


  • காப்பாயென்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜனனி/ நத ஜன/ பரிபாலினி/
ஈன்றவளே/ பணிந்தோரை/ பேணுபவளே/

பாஹி/ மாம்/ ப4வானி/ த்ரி-லோக/ (ஜனனி)
காப்பாய்/ என்னை/ பவானீ/ மூவுலகை/ (ஈன்றவளே)


அனுபல்லவி
த3னுஜ/ வைரி/ நுதே/ ஸகல/ ஜன/
அசுரர்/ பகைவரால்/ போற்றப்பெற்றவளே/ அனைத்து/ மக்களின்/

பரிதாப/ பாப/ ஹாரிணி/ ஜய-ஸா1லினி/ (ஜனனி)
பரிதாபங்களையும்/ பாவங்களையும்/ போக்கடிப்பவளே/ வெற்றித்திருமகளே/


சரணம்
சரணம் 1
ஸதத/ வினுத/ ஸுத/ க3ண பதி/
எவ்வமயமும்/ போற்றும்/ மைந்தர்கள்/ கணபதி/ மற்றும்/

ஸேனானி/ ராஜ/ ராஜ-ஈஸ்1வரி/
முருகன்/ ராஜ/ ராஜேசுவரீ/

விஸா1ல/-அக்ஷ/ தருணி/ அகி2ல/ ஜன/
அகன்ற/ கண்களுடைய/ மங்கையே/ உலக/ மக்களை/

பாவனி/ (ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்1வரி/)
புனிதமாக்குபவளே/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/

ஸதி/ ஸு1ப4/ சரிதே/ ஸதா3/
சதீ/ நற்/ சரிதத்தினளே/ எவ்வமயமும்/

மது4ர/ பா4ஷா/ விக3ளத்3/-அம்ரு2த/ ரஸ/ த்4வனி/
இன்/-சொல்லினளே/ ஊறும்/ அமுத/ சாறு/ குரலுடைய/

ஸுர/ நுத/ பத3/ யுக3/ த3ர்ஸி1த/ இஹ/ மம/
வானோர்/ போற்றும்/ திருவடி/ இணையினை/ தரிசித்து/ இங்கு/ எனது/

கா3த்ரம்/-அதி/-மாத்ரம்/-அஜனி/ ஸுஜனி/ (ஜனனி)
உடல்/ மிக்கு/ பூரிப்படைந்தது/ பிறவாதவளே/ நற்றாயே/


சரணம் 2
குவலய/ லோசன/ யுக3ளே/
கமல/ கண்/ இணையினளே/

கல்யாணி/ நீல/ வேணி/ விகச/
கலியாணீ/ கருங்/ குழலியே/ அலர்ந்த/

கோகனத3/ ரஜஸ்/-சரணே/ அதி/
செந்தாமரையின்/ மகரந்தம் (நிகர்)/ (செந்) திருவடியினளே/ மிக்கு/

ரமணி/ (க4ன/ நீல/ வேணி/)
எழிலியே/ கார்முகில் (நிகர்)/ கருங்/ குழலியே/

பு4வி/ தி3வி/ ரக்ஷணி/ த்4ரு2த/-அமர க3ணே/
புவியையும்/ வானுலகையும்/ காப்பவளே/ ஆதரிப்பவளே/ அமரர்களை/

பா4க்3யவதி/ ஸ1க்தி/ ஸம்பூர்ணே/
பாக்கியவதீ/ வல்லமை/ முழுமையாக உடையவளே/

கவன/ நிபுண/ மதிம்/ அயி/ தி3ஸ1/ இஹ/ தவ/
கவி/ திறமை மிக்க/ அறிவினை/ அம்மா/ தருவாய்/ இங்கு/ உனது/

காந்திம்/-உபயாதும்/ கி3ரி/-ஈஸ1/ ரமணி/ (ஜனனி)
பேரொளியினை/ அணுகுதற்கு/ மலை/ யீசனை/ மகிழ்விப்பவளே/


சரணம் 3
சரண/ நிபதத்3/-அமர/ ஸமுத3யே/
திருவடியினளே/ தெண்டனிடும்/ அமரர்/ குழுமத்தினர்/

காளி/ ஸாரஸ/ முகி2/
காளீ/ தாமரை/ வதனத்தினளே/

ஸு-ஸோ1பி4த/-ஊரு/ யுக3ள/ வர/
துலங்கும்/ துடை/ இணையினளே/ புனித/

கத3லி/ (நவ/ ஸாரஸ/ முகி2/)
வாழைத் தண்டு/ நிகர்/ அன்றலர்ந்த/ தாமரை/ வதனத்தினளே/

ஸுருசிர/ முரளீ/ ம்ரு2த3ங்க3/ ஸ்வர/
இனிய/ குழல்/ (மற்றும்) மிருதங்க/ சுரங்களில்/

ஸம்ஸோ1பி4னி/ ரஸ/-க்ரு2த/ மஹீ/ தலே/
திகழ்பவளே/ சாரம்/ உண்டாக்கியவளே/ புவி/ மீதினில்/

ஸரஸிஜ/ கர/ யுக3ளே/ கடி/ கலித/ மணி/
கமல/ கை/ இணையினளே/ இடுப்பினளே/ திகழும்/ இரத்தின/

காஞ்சீ/ ப்4ரு2தே/ காஞ்சீபுர/ வாஸினி/ (ஜனனி)
சலங்கைகள் மேகலை/ பொருந்திய/ காஞ்சீபுரத்தினில்/ உறைபவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப4வானி த்ரி-லோக - ப4வானி ப4வானி ப4வானி த்ரி-லோக - ப4வானி ப4வானி ப4வானி லோக.

2 - ஹாரிணி - ஹரிணி.

3 - ஸதத வினுத - ஸதத வினத.

4 - விஸா1லாக்ஷ தருணி - விஸா1ல தருணி : பிற்கூறியது இவ்விடத்தில் பொருந்தாது.

5 - ஸதி ஸு1ப4 சரிதே - ஸதி நுத சரிதே : பிற்கூறியது இவ்விடத்தில் பொருந்தாது.

Top

6 - மது4ர பா4ஷா - மது4ர (பா4ஷிணி அம்பா3) பா4ஷா.

7 - விக3ளத3ம்ரு2த - விக3ளதம்ரு2த.

8 - ஸுர நுத பத3 யுக3 த3ர்ஸி1த இஹ மம - ஸுத நுத வஸுபத3 விகஸித இஹ மம : பிற்கூறியதற்கு பொருளேதும் இ்ல்லை. எனவே அது தவறாகும்.

8 - பத3 யுக3 த3ர்ஸி1த - பத3 யுக3 த3ரிஸி1த : 'த3ரிஸி1த' என்பது தவறு என்று கருதுகின்றேன்.

9 - கா3த்ரமதி-மாத்ரமஜனி ஸுஜனி - கா3த்ரமதி-மாத்ரமாஜனி ஸுஜனி : 'மாத்ரமாஜனி' என்பது தவறாகும்.

10 - ரக்ஷணி - ரக்ஷிணி.

Top

மேற்கோள்கள்
5 - ஸதி - சதி - தட்சன் மகள்.

12 - தவ காந்திமுபயாதும் - உன்னுடைய பேரொளியினை அணுகுதற்கு - சியாமா ஸாஸ்திரி, மற்ற கீர்த்தனைகளில், அம்மையை, 'பரஞ்சோதி' என்று குறிப்பிடுகின்றார். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (806), அம்மை இப்பெயரால் அழைக்கப்படுகின்றாள். இது குறித்து, கடோபநிடதத்தில் கூறப்பட்டது -

"அங்கு சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரன், தாரைகளும் கூட;
இந்த மின்னல்களும் ஒளிர்வதில்லை; இந்த நெருப்பும் எங்கே?
அஃதொன்றே ஒளிர, மற்று யாவையும் ஒளி பெருகின்றன;
அதன் ஒளியினால், இவை யாவும் ஒளிர்கின்றன." (2.2.15)
(ஸ்வாமி கம்பீராநந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

Top

13 - ஸு-ஸோ1பி4தோரு யுக3ள - துலங்கும், புனித, துடை இணையினளே! - லலிதா ஸஹஸ்ர நாத்தில் (39) கூறப்பட்டது - 'காமேஸ1 ஞாத ஸௌபா4க்3ய மார்த3வோரு த்3வயான்விதா'.

16 - கடி கலித மணி காஞ்சீ ப்4ரு2தே - சலங்கைகள் பொருந்திய, இரத்தின மேகலை திகழும், இடுப்பினளே! - இது குறித்து காஞ்சி மாமுனிவரின் 'ஸௌந்தர்ய லஹரி' உரை (21) நோக்கவும். "சிலம்புகள் பொருந்திய மேகலை, 'காஞ்சி' எனப்படும்".

Top

விளக்கம்
மூன்று சரணங்களிலும், முறையே, '(ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி)', '(க4ன நீல வேணி)', '(நவ ஸாரஸ முகி2)' ஆகியவை bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

4 - விஸா1லாக்ஷ தருணி - அகன்ற கண்களுடைய மங்கை. புத்தகங்களில் இதற்கு, 'சிவனின் மனைவி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இங்கு, 'சிவன்' என்று பொருள் கொள்ளும்படி எந்த சொல்லும் இல்லை.

11 - அயி - அம்மா - நமக்கு மிகவும் பிரியமான பெண்டிரை - தாய், சகோதரி, பெண் குழந்தை - ஆகியோரை விளிக்கும் முறை. லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (427), அம்மை 'அயீ' என்ற பெயரால் அழைக்கப்படுகின்றாள்.

Top

14 - முரளீ ம்ரு2த3ங்க3 ஸ்வர ஸம்ஸோ1பி4னி - இனிய, குழல் மற்றும் மிருதங்க சுரங்களில் திகழ்பவளே! : அம்மை நாத வடிவத்தினள். அந்த நாதத்தின் வழிபாடு (நாதோபாசனை) அம்மையின் வழிபாடாகும். 'சுரம்' என்பது 'குழலோசை' மற்றும் 'மிருதங்கத்தின் ஒலி' - இரண்டுக்கும் பொதுவான சொல்லாகும்.

15 - ரஸ-க்ரு2த மஹீ தலே - சாரம் உண்டாக்கியவள் - கவி பாரதி, தனது 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்' என்ற கவிதையில் 'சித்தினை அசித்துடன் இணைத்தாய்; அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்' என்று கூறுகின்றார். இறையெனும் சாரமின்றி, ஐம்பூதங்களும் ஜடமே.
'ரசம்' என்பதற்கு, 'நவரசம்' என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த கிருதியில் பாடலாசிரியரின் முத்திரை 'சியாம கிருஷ்ண' காணப்படவில்லை.

அசுரர் பகைவர் - வானோர்
மலையீசன் - சிவன்

Top


Updated on 25 Apr 2011

Thursday, April 21, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - து3ருஸுகா3 - ராகம் ஸாவேரி - Durusuga - Raga Saveri

பல்லவி
1து3ருஸுகா3 க்ரு2ப ஜூசி ஸந்தத-
(ம)ரோக3 த்3ரு2ட4 ஸ1ரீரமுக3 ஸலுபு நனு

அனுபல்லவி
பரம பாவனி 2க்ரு2பாவனி வினுத
பத3 ஸரோஜ ப்ரண(தா)ர்தி ஹரு ராணீ
3பராகு 4த4ர்ம ஸம்வர்த4னி ப3ஹு
3பரா(க)மல கு3ணா த்ரிபுர ஸுந்த3ரீ (து3ரு)

சரணம்
சரணம் 1
நீ ஸன்னிதி4னி ஜேரி கொ3லிசின
நின்(னெ)புடு3 தலசே ஸுஜன
தா3ஸ ஜன பா4க்3ய(மெ)டு தெலுபுது3னோ
ஓ 5ஸகல பாப ஸ1மனீ வினு
ஓங்காரி 6நியதி எடுலனோ
7நீ ஸா(டெ)வரே ஜக3ம்பு3லனு
8நே நிரதமு நினு கொ3லிசிதி (து3ரு)


சரணம் 2
ஏமோ 9கலத ஜெந்தி3 மனமுன
நே(னெ)ச்சட க3தி கா3னகனு
நீ மஹிம(லெ)ல்ல 10செவுலாரக3 வினி
ஈ மனஸுலோனி வெத தீ3ர்சுட(கீ)
11வேள ப3ஹு நிபுணா(வ)னி
காமாக்ஷீ நீவே வே(ரெ)வரு
கா(த3)னி தலசி கொ3லிசிதினி (து3ரு)


சரணம் 3
தா4ரா த4ரவி நீல கச லஸிதா
12ஸரஸ கவிதா நிசிதா
ஸார க4ன-ஸார ஸித 13த3ர ஹாஸிதா
வாரி ருஹ வாரி வத3(னோ)சிதா
14வா(கீ3)ஸ1 வினுதா ப்4ரு2த நதா
நாராயணீ 15ஸ்1யாம க்ரு2ஷ்ண வினுதா
16நா மனவினி வினு கி3ரி ஸுதா (து3ரு)


ஸ்வர-ஸாஹித்ய
ஸரோஜ நயன நத ஜன பாலினி(வ)னி
வேத3முலு மொர(லி)ட3கா3-
(னி)தரு(லெ)வரு மனவி வினு க்ரு2ப ஸலுப
பராகு ஸலுப ரா(தி3)க நீ(வி)புடு3 (து3ரு)


பொருள் - சுருக்கம்
  • முற்றிலும் தூயவளே! கிருபையுடையவளே! போற்றப்பெற்ற திருவடிக் கமலத்தினளே! பிரணதார்த்தி ஹரன் ராணியே! அறம் வளர்த்த நாயகியே! களங்கமற்ற குணத்தினளே! திரிபுர சுந்தரீ!
  • ஓ அனைத்து பாவங்களையும் தணிப்பவளே! ஓங்காரீ!
  • காமாட்சீ!
  • கார்முகல் நிகர், திகழும், கருங்குழலியே! (தன்னைப் புகழும்) இனிய கவிதைகள் நிறையப்பெற்றவளே! கர்ப்பூரத்தின் மணம் போலும் இனிய புன்னகையுடையவளே! தாமரை மலர்க் கொத்து போலும் பொருத்தமான வதனத்தினளே! நாமகள் மணாளனால் போற்றப்பெற்றவளே! அண்டியோரால் பணியப்பெற்றவளே! நாராயணீ! சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே! மலை மகளே!
  • கமலக்கண்ணீ!

  • விரைவாக, கிருபை கூர்ந்து, எவ்வமயமும், நோயற்ற, திட சரீரத்தினனாக ஆக்குவாய், என்னை.
  • பராக்கு! கேளாய். எனது வேண்டுகோளினைக் கேளாய்.

    • உனது சன்னிதியினை அடைந்து, உன்னைப் புகழும், உன்னை எவ்வமயமும் நினைக்கும், நல்லோர், அடியார்கள் பேறு, எத்தகையது எனக் கூறவல்லேனோ (எப்படிக் கூறுவேனோ)?
    • நியதி எப்படியோ!
    • உனக்கீடு எவரே உலகத்தினில்?
    • நான், இடையறாது, உன்னைப் போற்றி செய்தேன்.

    • ஏதோ குழப்பமடைந்து, மனத்தினில் நான், எங்கும் கதி காணாது, உனது மகிமைகளையெல்லாம் காதாரக் கேட்டு, இவ்வுள்ளத்தின் துயர் தீர்ப்பதற்கு, இந்த வேளை, மிக்கு நிபுணியாக, நீயே, மற்றெவரும் இல்லை யென்றெண்ணி, போற்றி செய்தேன்.

    • 'பணிந்தோரைப் பேணுபவள்' என்று மறைகள் முறையிட, மற்றவர் யார் உளர்?
    • கிருபை செய்ய, கவனியாதிருத்தல் கூடாது, இனியும், நீ இப்போழ்து.


  • விரைவாக, கிருபை கூர்ந்து, எவ்வமயமும், நோயற்ற, திட சரீரத்தினனாக ஆக்குவாய், என்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
து3ருஸுகா3/ க்ரு2ப/ ஜூசி/ ஸந்ததமு/-
விரைவாக/ கிருபை/ கூர்ந்து/ எவ்வமயமும்/

அரோக3/ த்3ரு2ட4/ ஸ1ரீரமுக3/ ஸலுபு/ நனு/
நோயற்ற/ திட/ சரீரத்தினனாக/ ஆக்குவாய்/ என்னை/


அனுபல்லவி
பரம/ பாவனி/ க்ரு2பாவனி/ வினுத/
முற்றிலும்/ தூயவளே/ கிருபையுடையவளே/ போற்றப்பெற்ற/

பத3/ ஸரோஜ/ ப்ரணத-ஆர்தி/ ஹரு/ ராணீ/
திருவடி/ கமலத்தினளே/ பிரணதார்த்தி/ ஹரன்/ ராணியே/

பராகு/ த4ர்ம/ ஸம்வர்த4னி/ ப3ஹு/
பராக்கு/ அறம்/ வளர்த்த நாயகியே/ மிக்கு/

பராகு/-அமல/ கு3ணா/ த்ரிபுர/ ஸுந்த3ரீ/ (து3ரு)
பராக்கு/ களங்கமற்ற/ குணத்தினளே/ திரிபுர/ சுந்தரீ/


சரணம்
சரணம் 1
நீ/ ஸன்னிதி4னி/ ஜேரி/ கொ3லிசின/
உனது/ சன்னிதியினை/ அடைந்து/ (உன்னை) புகழும்/

நின்னு/-எபுடு3/ தலசே/ ஸுஜன/
உன்னை/ எவ்வமயமும்/ நினைக்கும்/ நல்லோர்/

தா3ஸ ஜன/ பா4க்3யமு/-எடு/ தெலுபுது3னோ/
அடியார்கள்/ பேறு/ எத்தகையது என (எப்படி)/ கூறவல்லேனோ (கூறுவேனோ)/

ஓ/ ஸகல/ பாப/ ஸ1மனீ/ வினு/
ஓ/ அனைத்து/ பாவங்களையும்/ தணிப்பவளே/ கேளாய்/

ஓங்காரி/ நியதி/ எடுலனோ/
ஓங்காரீ/ நியதி/ எப்படியோ/

நீ/ ஸாடி/-எவரே/ ஜக3ம்பு3லனு/
உனக்கு/ ஈடு/ எவரே/ உலகத்தினில்/

நே/ நிரதமு/ நினு/ கொ3லிசிதி/ (து3ரு)
நான்/ இடையறாது/ உன்னை/ போற்றி செய்தேன்/


சரணம் 2
ஏமோ/ கலத/ ஜெந்தி3/ மனமுன/
ஏதோ/ குழப்பம்/ அடைந்து/ மனத்தினில்/

நேனு/-எச்சட/ க3தி/ கா3னகனு/
நான்/ எங்கும்/ கதி/ காணாது/

நீ/ மஹிமலு/-எல்ல/ செவுலாரக3/ வினி/
உனது/ மகிமைகளை/ யெல்லாம்/ காதார/ கேட்டு/

ஈ/ மனஸுலோனி/ வெத/ தீ3ர்சுடகு/-
இந்த/ உள்ளத்தின்/ துயர்/ தீர்ப்பதற்கு/

ஈ/ வேள/ ப3ஹு/ நிபுணா/-அனி/
இந்த/ வேளை/ மிக்கு/ நிபுணி(யாக)/ என/

காமாக்ஷீ/ நீவே/ வேரு/-எவரு/
காமாட்சீ/ நீயே/ மற்று/ எவரும்/

காது3/-அனி/ தலசி/ கொ3லிசிதினி/ (து3ரு)
இல்லை/ யென்று/ எண்ணி/ போற்றி செய்தேன்/


சரணம் 3
தா4ரா த4ரவி/ நீல/ கச/ லஸிதா/
கார்முகல் நிகர்/ கருங்/ குழலியே/ திகழும்/

ஸரஸ/ கவிதா/ நிசிதா/
(தன்னைப் புகழும்) இனிய/ கவிதைகள்/ நிறையப்பெற்றவளே/

ஸார/ க4ன-ஸார/ ஸித/ த3ர ஹாஸிதா/
இனிய/ கர்ப்பூரத்தின் (மணம் போலும்)/ உடையவளே/ புன்னகை/

வாரி ருஹ/ வாரி/ வத3ன/-உசிதா/
தாமரை மலர்/ கொத்து/ (போலும்) வதனத்தினளே/ பொருத்தமான/

வாக்/-ஈஸ1/ வினுதா/ ப்4ரு2த/ நதா/
நாமகள்/ மணாளனால்/ போற்றப்பெற்றவளே/ அண்டியோரால்/ பணியப்பெற்றவளே/

நாராயணீ/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ வினுதா/
நாராயணீ/ சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/

நா/ மனவினி/ வினு/ கி3ரி/ ஸுதா/ (து3ரு)
எனது/ வேண்டுகோளினை/ கேளாய்/ மலை/ மகளே/


ஸ்வர-ஸாஹித்ய
ஸரோஜ/ நயன/ நத/ ஜன/ பாலினிவி/-அனி/
கமல/ கண்ணீ/ 'பணிந்தோரை/ பேணுபவள்'/ என்று/

வேத3முலு/ மொரலு/-இட3கா3/-
மறைகள்/ முறை/ யிட/

இதருலு/-எவரு/ மனவி/ வினு/ க்ரு2ப/ ஸலுப/
மற்றவர்/ யார் (உளர்)/ வேண்டுகோளினை/ கேளாய்/ கிருபை/ செய்ய/

பராகு/ ஸலுப/ ராது3/-இக/ நீவு/-இபுடு3/ (து3ரு)
கவனியாது/ இருத்தல்/ கூடாது/ இனியும்/ நீ/ இப்போழ்து/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - து3ருஸுகா3 - து3ருஸுக3.

4 - த4ர்ம ஸம்வர்த4னி - த4ர்ம ஸம்வர்தி4னி

5 - ஸகல பாப ஸ1மனீ - ஸகல லோக ஜனனீ.

6 - நியதி எடுலனோ - நியதியடுலனோ.

7 - நீ ஸாடெவரே ஜக3ம்பு3லனு - நீ ஸாடெவரு ஈ ஜக3ம்பு3லனு.

8 - நே நிரதமு நினு கொ3லிசிதி - நே நிரதமுனு கொ3லிசிதி.

9 - கலத ஜெந்தி3 - கலக ஜெந்தி3 : 'கலத', 'கலக' ஆகிய இரண்டு சொற்களுக்கும், கிட்டத்தட்ட பொருள் ஒன்றுதான். ஆனால், அடுத்து வரும், 'ஜெந்தி3' (அடைந்து) என்பதனால், 'கலத' என்பதே பொருந்தும்.

Top

10 - செவுலாரக3 வினி - செவுலார வினி.

11 - வேள ப3ஹு நிபுணாவனி - வேள நிபுணாவனி.

13 - த3ர ஹாஸிதா - த3ர ஹஸிதா - த4ர ஹஸிதா : 'த4ர' என்பது தவறாகும்.

14 - வாகீ3ஸ1 வினுதா - வாகீ3ஸ1 நுதா.

15 - ஸ்1யாம க்ரு2ஷ்ண வினுதா - ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா.

16 - நா மனவினி வினு - நா மனவினி வினி.

Top

மேற்கோள்கள்
4 - த4ர்ம ஸம்வர்த4னி - அறம் வளர்த்த நாயகி - திருவையாற்றில் அம்மையின் பெயர்.

12 - ஸரஸ கவிதா நிசிதா - இனிய கவிதைகள் நிறையப்பெற்றவள். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, கவி காளிதாசரின் 'சியாமளா தண்டக'த்தினைக் கூறலாம்.

Top

விளக்கம்
2 - க்ரு2பாவனி - இந்த சொல்லின் வடிவம் விளங்கவில்லை. ஆயினும் இதனை, 'கருணையுடையவள்' என்று மொழிபெயர்க்கப்பட்டது.

3 - பராகு - பொதுவாக, இந்த சொல்லுக்கு 'கவனமின்மை' என்று பொருளாகும். ஆனால், அரசவையில், அரசனின் வருகையை அறிவிக்கும் காவலர்களும், அவையோரின் கவனத்தினை ஈர்க்க, 'பராக்கு பராக்கு' என்று கூறுவது வழக்கம். புத்தகங்களில், இந்தப் பொருளே கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே, 'கவனிப்பாய்' என்ற பொருளில் இங்கும் ஏற்கப்பட்டது.

Top

பிரணதார்த்தி ஹரன் - பணிந்தோர் துயர் களைவோன் - திருவையாறு சிவனின் பெயர் - தமிழில் ஐயாறப்பன்.
பராக்கு - கவனிப்பாய் என
நியதி - விதி வலிமை
நிபுணி - திறமையுடைத்தவள்
நாமகள் மணாளன் - பிரமன்
முறையிட - 'பறைசாற்ற' என்று பொருளாகும்

Top


Updated on 21 Apr 2011