Tuesday, April 19, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸந்ததம் என்னை - ராகம் பரஜு - Santatam Ennai - Raga Paraju

கீதம்
கீதம் 1
ஸந்ததம் என்னை ரக்ஷிப்பாய்
உந்தன் பா(தா)ரவிந்தத்தை
வந்திப்பேன் அனுதினமும் சிந்திப்பேன்


கீதம் 2
ஸார(ஸா)க்ஷி என் மனோ
விசாரத்தைத்-தீர்க்க மிகவும்
பாரமா உன் கடைக்-கண் பா(ர)ம்மா


கீதம் 3
மேதினியில் உன்னைப்-போல்
வேறு தெய்வ(மு)ண்டோ சொல்
1பரஞ்சோதியே 2எவர்க்கும் அனாதியே


கீதம் 4
3மான(ம)றியா மூடரும் தானே
துதிக்கக்-காரணம்
ஏ(ன)ம்மா உன் பெருமை தா(ன)ம்மா


கீதம் 5
நாத ரூபிணீ வீணா
வினோதினீ காமாக்ஷீ என்னை
ஆதரி ஸ்1யாம க்ருஷ்ண சோதரீ தேவீ


பொருள் - சுருக்கம்
  • கமலக் கண்ணீ!
  • பரஞ்சோதியே! எவர்க்கும் அனாதியே!
  • நாத உருவே! வீணை இசையில் மகிழ்பவளே! காமாட்சீ! சியாம கிருஷ்ண சோதரீ! தேவீ!

    • எவ்வமயமும், என்னைக் காப்பாய்.
    • உந்தன் திருவடிக் கமலத்தினை வந்திப்பேன், அனுதினமும் சிந்திப்பேன்.

    • என் மனக்கவலையைத் தீர்க்க மிகவும் சுமையா?
    • உன் கடைக்கண் பாரம்மா.

    • மேதினியில், உன்னைப் போல் வேறு தெய்வம் உண்டோ, சொல்?

    • மானம் அறியா, மூடரும்தானே, துதிக்கக் காரணம் ஏனம்மா?
    • உன் பெருமை தானம்மா.

    • என்னை ஆதரி.



பதம் பிரித்தல் - பொருள்
கீதம்
கீதம் 1
ஸந்ததம்/ என்னை/ ரக்ஷிப்பாய்/
எவ்வமயமும்/ என்னை/ காப்பாய்/

உந்தன்/ பாத/-அரவிந்தத்தை/
உந்தன்/ திருவடி/ கமலத்தினை/

வந்திப்பேன்/ அனுதினமும்/ சிந்திப்பேன்/
வந்திப்பேன்/ அனுதினமும்/ சிந்திப்பேன்/


கீதம் 2
ஸாரஸ/-அக்ஷி/ என்/ மனோ/
கமல/ கண்ணீ/ என்/ மன/

விசாரத்தைத்/-தீர்க்க/ மிகவும்/
கவலையை/ தீர்க்க/ மிகவும்/

பாரமா/ உன்/ கடைக்-கண்/ பார்-அம்மா/
சுமையா/ உன்/ கடைக்கண்/ பாரம்மா/


கீதம் 3
மேதினியில்/ உன்னைப்-போல்/
மேதினியில்/ உன்னைப் போல்/

வேறு/ தெய்வம்/-உண்டோ/ சொல்/
வேறு/ தெய்வம்/ உண்டோ/ சொல்/

பரஞ்-சோதியே/ எவர்க்கும்/ அனாதியே/
பரஞ்சோதியே/ எவர்க்கும்/ அனாதியே/


கீதம் 4
மானம்/-அறியா/ மூடரும்/ தானே/
மானம்/ அறியா/ மூடரும்/ தானே/

துதிக்கக்/-காரணம்/
துதிக்க/ காரணம்/

ஏன்-அம்மா/ உன்/ பெருமை/ தான்-அம்மா/
ஏனம்மா/ உன்/ பெருமை/ தானம்மா/


கீதம் 5
நாத/ ரூபிணீ/ வீணா/
நாத/ உருவே/ வீணை (இசையில்)

வினோதினீ/ காமாக்ஷீ/ என்னை/
மகிழ்பவளே/ காமாட்சீ/ என்னை/

ஆதரி/ ஸ்1யாம/ க்ருஷ்ண/ சோதரீ/ தேவீ/
ஆதரி/ சியாம/ கிருஷ்ண/ சோதரீ/ தேவீ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - மானமறியா மூடரும் - மானமறியா மூடரை : 'மானமறியா மூடரை' என்பது இவ்விடத்தில் பொருந்தாது.

Top

மேற்கோள்கள்
1 - பரஞ்சோதி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (806), அம்மை இப்பெயரால் அழைக்கப்படுகின்றாள். இது குறித்து, கடோபநிடதத்தில் கூறப்பட்டது -

"அங்கு சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரன், தாரைகளும் கூட;
இந்த மின்னல்களும் ஒளிர்வதில்லை; இந்த நெருப்பும் எங்கே?
அஃதொன்றே ஒளிர, மற்று யாவையும் ஒளி பெருகின்றன;
அதன் ஒளியினால், இவை யாவும் ஒளிர்கின்றன." (2.2.15)
(ஸ்வாமி கம்பீராநந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

Top

விளக்கம்
2 - எவர்க்கும் அனாதியே - 'அனாதி' என்பதற்கு, 'ஆதியற்ற' அல்லது 'என்றும் நிலைத்திருக்கும்' என்று பொருளாகும். ஆனால், இதற்கு முன்னர் வரும், 'எவர்க்கும்' என்பதுடன் சேர்த்து, இதற்குப் பொருள் கூறுவது கடினம். 'எவர்க்கும் ஆதி' என்பதற்குப் பொருளுண்டு. அல்லால், 'அனாதி' என்று தனிப்படக் கூறுவதற்கும் பொருளுண்டு. ஆனால், 'எவர்க்கும் அனாதி' என்ற வழக்கு சரியா என்று தெரியவில்லை. 'எவர்க்கும்' என்பதனை வேறு எதனுடனும் இணைப்பதற்கில்லை. எனவே, 'எவர்க்கும் அனாதி' என்றே கொள்ளப்பட்டது.

Top


Updated on 19 Apr 2011

No comments:

Post a Comment