Wednesday, May 25, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ப்3ரோவவம்மா தாமஸமேலே - ராகம் மாஞ்சி - Brovavamma Tamasamele - Raga Manji

பல்லவி
ப்3ரோ(வவ)ம்மா 1தாமஸ(மே)லே அம்ப3
தே3வீ 2தாள லேனே பி3ரான (ப்3ரோவ)

அனுபல்லவி
3நீவே அனாத3ரண ஜேஸிதே அம்பா3
நிர்வஹிம்ப வஸ1மா காமாக்ஷீ (ப்3ரோவ)

சரணம்
சரணம் 1
4ஜால(மே)ல வினோத3மா ஸி1
1ங்கரீ இதி3 ஸம்மதமா
ஸூ1லினீ நீவே ப4க்த
5பரிபாலினி க3தா3 பி3ரான (ப்3ரோவ)


சரணம் 2
6தீ3ன ரக்ஷகி நீவே(ய)னி 7நீ
தி3வ்ய நாமமே
த்4யானமு
வேரே 8மந்த்ர ஜபமு-
(லெ)ருக3னே
பி3ரான (ப்3ரோவ)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸஹோத3ரீ ஸு1
ஸ்1யாமளே 9த்ரிபுர ஸுந்த3ரீ அம்பா3
ஈ மஹிலோ நீ ஸமான 10தை3வமு
எந்து3 கா3ன லேனே
பி3ரான (ப்3ரோவ)


பொருள் - சுருக்கம்
  • அம்பா! தேவீ!
  • அம்பா! காமாட்சீ!
  • சிவ சங்கரீ! சூலமேந்துபவளே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! கிளியேந்தும், சியாமளையே! திரிபுர சுந்தரீ! அம்பா!

  • விரைவாகக் காப்பாயம்மா.
  • தாமதமேனம்மா?
  • பொறுக்க இயலேனம்மா.

    • நீயே மதிப்புத் தராவிட்டால், நிருவகிக்க இயலுமா?

    • ஏமாற்றுவதேன்?
    • வேடிக்கையா?
    • இது உனக்கு சம்மதமா?
    • நீயே, பக்தர்களைப் பேணுபவள் அன்றோ?

    • எளியோரைக் காப்பவள், நீயேயென, உனது திவ்விய நாமமே, தியானம் செய்கின்றேன்.
    • வேறே மந்திர, ஜபங்கள் அறியேனம்மா.
    • இப்புவியில், உனது நிகர் தெய்வம், எங்கும் காணேனம்மா.


  • விரைவாகக் காப்பாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்3ரோவு/-அம்மா/ தாமஸமு/-ஏலே/ அம்ப3/
காப்பாய்/ அம்மா/ தாமதம்/ ஏனம்மா/ அம்பா/

தே3வீ/ தாள/ லேனே/ பி3ரான/ (ப்3ரோவ)
தேவீ/ பொறுக்க/ இயலேனம்மா/ விரைவாக/ (காப்பாயம்மா)


அனுபல்லவி
நீவே/ அனாத3ரண ஜேஸிதே/ அம்பா3/
நீயே/ மதிப்புத் தராவிட்டால்/ அம்பா/

நிர்வஹிம்ப/ வஸ1மா/ காமாக்ஷீ/ (ப்3ரோவ)
நிருவகிக்க/ இயலுமா/ காமாட்சீ/


சரணம்
சரணம் 1
ஜாலமு/-ஏல/ வினோத3மா/ ஸி1வ/
ஏமாற்றுவது/ ஏன்/ வேடிக்கையா/ சிவ/

1ங்கரீ/ இதி3/ ஸம்மதமா/
சங்கரீ/ இது/ (உனக்கு) சம்மதமா/

ஸூ1லினீ/ நீவே/ ப4க்த/
சூலமேந்துபவளே/ நீயே/ பக்தர்களை/

பரிபாலினி/ க3தா3/ பி3ரான/ (ப்3ரோவ)
பேணுபவள்/ அன்றோ/ விரைவாக/ (காப்பாயம்மா)


சரணம் 2
தீ3ன/ ரக்ஷகி/ நீவே/-அனி/ நீ/
எளியோரை/ காப்பவள்/ நீயே/ யென/ உனது/

தி3வ்ய/ நாமமே/ த்4யானமு/
திவ்விய/ நாமமே/ தியானம் (செய்கின்றேன்)

வேரே/ மந்த்ர/ ஜபமுலு/-
வேறே/ மந்திர/ ஜபங்கள்/

எருக3னே/ பி3ரான/ (ப்3ரோவ)
அறியேனம்மா/ விரைவாக/ (காப்பாயம்மா)


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸஹோத3ரீ/ ஸு1க/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ கிளியேந்தும்/

ஸ்1யாமளே/ த்ரிபுர/ ஸுந்த3ரீ/ அம்பா3/
சியாமளையே/ திரிபுர/ சுந்தரீ/ அம்பா/

ஈ/ மஹிலோ/ நீ/ ஸமான/ தை3வமு/
இந்த/ புவியில்/ உனது/ நிகர்/ தெய்வம்/

எந்து3/ கா3ன லேனே/ பி3ரான/ (ப்3ரோவ)
எங்கும்/ காணேனம்மா/ விரைவாக/ (காப்பாயம்மா)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தாமஸமேலே அம்ப3 - தாமஸமேல.

2 - தாள லேனே - தாளனே.

3 - நீவே அனாத3ரண ஜேஸிதே - நீவனாத3ரண ஜேஸிதே.

5 - பரிபாலினி க3தா3 - பரிபாலினி கா3வா - பரிபாலினீ க3தா3 : 'க3தா3' என்ற சொல்லினால், 'பரிபாலினீ' என்பது சரியாகாது.

Top

6 - தீ3ன ரக்ஷகி நீவேயனி - தீ3ன ரக்ஷகீ நீவேயனி : 'நீவேயனி' என்ற சொல்லினால், 'ரக்ஷகீ' என்பது சரியாகாது.

7 - நீ தி3வ்ய நாமமே - நிதா3னமை நீ நாமமே.

8 - மந்த்ர ஜபமுலெருக3னே - மந்த்ர ஜப தபமுலெருக3னே.

9 - த்ரிபுர ஸுந்த3ரீ அம்பா3 - த்ரிபுர ஸுந்த3ரீ.

10 - தை3வமு எந்து3 கா3ன லேனே - தை3வமெந்து3 கா3னனே.

Top

மேற்கோள்கள்
9 - த்ரிபுர ஸுந்த3ரீ - திரிபுர சுந்தரி - 'திரிபுர' என்ற சொல்லின் விளக்கம்.

Top

விளக்கம்
4 - ஜாலமு - இச்சொல்லுக்கு, 'தந்திரம்' என்றும் பொருள் கொள்ளலாம்.

Top


Updated on 26 May 2011

4 comments:

  1. திரு கோவிந்தன் அவர்களே
    அனுபல்லவியில் ‘நீவே அனாதரண ஜேஸிதே’ என்பதற்கு ‘நீயே மதிப்புத் தராவிட்டால்’ என்று பொருள் கொடுத்துள்ளீர். நீயே ஆதரவு தராவிட்டால் என்பது இன்னும் தெளிவாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    வணககம்
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,
    தெலுங்கு - ஸம்ஸ்கிருதமும் - சொல் 'ஆதரமு', 'ஆதரணமு' என்பதற்கு, தமிழ்ச்சொல் 'ஆதரவு' ஈடாகாது. தயவு செய்து கீழ்க்கண்ட link-னை நோக்கவும்.
    http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=AdaraNa&table=brown
    வணக்கம்
    கோவிந்தன்

    ReplyDelete