ப்3ரோ(வவ)ம்மா 1தாமஸ(மே)லே அம்ப3
தே3வீ 2தாள லேனே பி3ரான (ப்3ரோவ)
அனுபல்லவி
3நீவே அனாத3ரண ஜேஸிதே அம்பா3
நிர்வஹிம்ப வஸ1மா காமாக்ஷீ (ப்3ரோவ)
சரணம்
சரணம் 1
4ஜால(மே)ல வினோத3மா ஸி1வ
ஸ1ங்கரீ இதி3 ஸம்மதமா
ஸூ1லினீ நீவே ப4க்த
5பரிபாலினி க3தா3 பி3ரான (ப்3ரோவ)
சரணம் 2
6தீ3ன ரக்ஷகி நீவே(ய)னி 7நீ
தி3வ்ய நாமமே த்4யானமு
வேரே 8மந்த்ர ஜபமு-
(லெ)ருக3னே பி3ரான (ப்3ரோவ)
சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸஹோத3ரீ ஸு1க
ஸ்1யாமளே 9த்ரிபுர ஸுந்த3ரீ அம்பா3
ஈ மஹிலோ நீ ஸமான 10தை3வமு
எந்து3 கா3ன லேனே பி3ரான (ப்3ரோவ)
பொருள் - சுருக்கம்
- அம்பா! தேவீ!
- அம்பா! காமாட்சீ!
- சிவ சங்கரீ! சூலமேந்துபவளே!
- சியாம கிருஷ்ணனின் சோதரியே! கிளியேந்தும், சியாமளையே! திரிபுர சுந்தரீ! அம்பா!
- விரைவாகக் காப்பாயம்மா.
- தாமதமேனம்மா?
- பொறுக்க இயலேனம்மா.
- நீயே மதிப்புத் தராவிட்டால், நிருவகிக்க இயலுமா?
- ஏமாற்றுவதேன்?
- வேடிக்கையா?
- இது உனக்கு சம்மதமா?
- நீயே, பக்தர்களைப் பேணுபவள் அன்றோ?
- எளியோரைக் காப்பவள், நீயேயென, உனது திவ்விய நாமமே, தியானம் செய்கின்றேன்.
- வேறே மந்திர, ஜபங்கள் அறியேனம்மா.
- இப்புவியில், உனது நிகர் தெய்வம், எங்கும் காணேனம்மா.
- நீயே மதிப்புத் தராவிட்டால், நிருவகிக்க இயலுமா?
- விரைவாகக் காப்பாயம்மா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்3ரோவு/-அம்மா/ தாமஸமு/-ஏலே/ அம்ப3/
காப்பாய்/ அம்மா/ தாமதம்/ ஏனம்மா/ அம்பா/
தே3வீ/ தாள/ லேனே/ பி3ரான/ (ப்3ரோவ)
தேவீ/ பொறுக்க/ இயலேனம்மா/ விரைவாக/ (காப்பாயம்மா)
அனுபல்லவி
நீவே/ அனாத3ரண ஜேஸிதே/ அம்பா3/
நீயே/ மதிப்புத் தராவிட்டால்/ அம்பா/
நிர்வஹிம்ப/ வஸ1மா/ காமாக்ஷீ/ (ப்3ரோவ)
நிருவகிக்க/ இயலுமா/ காமாட்சீ/
சரணம்
சரணம் 1
ஜாலமு/-ஏல/ வினோத3மா/ ஸி1வ/
ஏமாற்றுவது/ ஏன்/ வேடிக்கையா/ சிவ/
ஸ1ங்கரீ/ இதி3/ ஸம்மதமா/
சங்கரீ/ இது/ (உனக்கு) சம்மதமா/
ஸூ1லினீ/ நீவே/ ப4க்த/
சூலமேந்துபவளே/ நீயே/ பக்தர்களை/
பரிபாலினி/ க3தா3/ பி3ரான/ (ப்3ரோவ)
பேணுபவள்/ அன்றோ/ விரைவாக/ (காப்பாயம்மா)
சரணம் 2
தீ3ன/ ரக்ஷகி/ நீவே/-அனி/ நீ/
எளியோரை/ காப்பவள்/ நீயே/ யென/ உனது/
தி3வ்ய/ நாமமே/ த்4யானமு/
திவ்விய/ நாமமே/ தியானம் (செய்கின்றேன்)
வேரே/ மந்த்ர/ ஜபமுலு/-
வேறே/ மந்திர/ ஜபங்கள்/
எருக3னே/ பி3ரான/ (ப்3ரோவ)
அறியேனம்மா/ விரைவாக/ (காப்பாயம்மா)
சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸஹோத3ரீ/ ஸு1க/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ கிளியேந்தும்/
ஸ்1யாமளே/ த்ரிபுர/ ஸுந்த3ரீ/ அம்பா3/
சியாமளையே/ திரிபுர/ சுந்தரீ/ அம்பா/
ஈ/ மஹிலோ/ நீ/ ஸமான/ தை3வமு/
இந்த/ புவியில்/ உனது/ நிகர்/ தெய்வம்/
எந்து3/ கா3ன லேனே/ பி3ரான/ (ப்3ரோவ)
எங்கும்/ காணேனம்மா/ விரைவாக/ (காப்பாயம்மா)
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தாமஸமேலே அம்ப3 - தாமஸமேல.
2 - தாள லேனே - தாளனே.
3 - நீவே அனாத3ரண ஜேஸிதே - நீவனாத3ரண ஜேஸிதே.
5 - பரிபாலினி க3தா3 - பரிபாலினி கா3வா - பரிபாலினீ க3தா3 : 'க3தா3' என்ற சொல்லினால், 'பரிபாலினீ' என்பது சரியாகாது.
Top
6 - தீ3ன ரக்ஷகி நீவேயனி - தீ3ன ரக்ஷகீ நீவேயனி : 'நீவேயனி' என்ற சொல்லினால், 'ரக்ஷகீ' என்பது சரியாகாது.
7 - நீ தி3வ்ய நாமமே - நிதா3னமை நீ நாமமே.
8 - மந்த்ர ஜபமுலெருக3னே - மந்த்ர ஜப தபமுலெருக3னே.
9 - த்ரிபுர ஸுந்த3ரீ அம்பா3 - த்ரிபுர ஸுந்த3ரீ.
10 - தை3வமு எந்து3 கா3ன லேனே - தை3வமெந்து3 கா3னனே.
Top
மேற்கோள்கள்
9 - த்ரிபுர ஸுந்த3ரீ - திரிபுர சுந்தரி - 'திரிபுர' என்ற சொல்லின் விளக்கம்.
Top
விளக்கம்
4 - ஜாலமு - இச்சொல்லுக்கு, 'தந்திரம்' என்றும் பொருள் கொள்ளலாம்.
Top
Updated on 26 May 2011