Wednesday, May 4, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஆ தி3னமுனிஞ்சி - ராகம் ஆனந்த பைரவி - A Dinamuninchi - Raga Ananda Bhairavi

பல்லவி
1ஆ தி3னமுனிஞ்சி பொக3டி3 பொக3டி3
ஆஸ்1ரயிஞ்சி நீ மஹிமலனு பாட3 லேதா3

அனுபல்லவி
ஆதி31க்தி நீ(வ)னி (நம்மினானு) நம்மின நன்னு
ஆத3ரிஞ்ச லேவா த3ய லேதா3 (ஆ தி3ன)

சரணம்
அஹி பூ4ஷணுனி ராணீ புராணீ ப4வானீ
அலி குல வேணீ ஆஸ்1ரித ஸ்1ரேணீ அம்பு3ஜ லோசனீ
ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலித ஜனனீ 2அகி2ல லோக பாவனீ
ஸ்1யாம(ளா)ம்பி3கே வரதே3 அப4ய தா3ன(மீ)யவே (ஆ தி3ன)


பொருள் - சுருக்கம்
  • அரவணிவோனின் ராணீ! பழம்பொருளே! பவானீ! அளிகுல வேணீ! நம்பினோர் வரிசைகள் உடையவளே! கமலக் கண்ணீ! சியாம கிருஷ்ணனைப் பேணும், ஈன்றவளே! அனைத்துலகையும் புனிதப்படுத்துபவளே! சியாமளாம்பிகையே! வரமருள்பவளே!

    • அந்நாளிலிருந்து, போற்றிப் போற்றி, தஞ்சமடைந்து, உனது மகிமைகளைப் பாடவில்லையா?

    • ஆதி சக்தி நீயென நம்பினேன்.
    • நம்பின என்னை, ஆதரிக்க மாட்டாயா?
    • தயை இல்லையா?

    • அபய தானமருள்வாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஆ/ தி3னமுனிஞ்சி/ பொக3டி3/ பொக3டி3/
அந்த/ நாளிலிருந்து/ போற்றி/ போற்றி/

ஆஸ்1ரயிஞ்சி/ நீ/ மஹிமலனு/ பாட3 லேதா3/
தஞ்சமடைந்து/ உனது/ மகிமைகளை/ பாடவில்லையா/


அனுபல்லவி
ஆதி3/ ஸ1க்தி/ நீவு/-அனி/ (நம்மினானு)/ நம்மின/ நன்னு/
ஆதி/ சக்தி/ நீ/ யென/ (நம்பினேன்)/ நம்பின/ என்னை/

ஆத3ரிஞ்ச/ லேவா/ த3ய/ லேதா3/ (ஆ தி3ன)
ஆதரிக்க/ மாட்டாயா/ தயை/ இல்லையா/


சரணம்
அஹி/ பூ4ஷணுனி/ ராணீ/ புராணீ/ ப4வானீ/
அரவு/ அணிவோனின்/ ராணீ/ பழம்பொருளே/ பவானீ/

அலி/ குல/ வேணீ/ ஆஸ்1ரித/ ஸ்1ரேணீ/ அம்பு3ஜ/ லோசனீ/
அளி/ குல/ வேணீ/ நம்பினோர்/ வரிசைகள் உடையவளே/ கமல/ கண்ணீ/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பாலித/ ஜனனீ/ அகி2ல/ லோக/ பாவனீ/
சியாம/ கிருஷ்ணனை/ பேணும்/ ஈன்றவளே/ அனைத்து/ உலகையும்/ புனிதப்படுத்துபவளே/

ஸ்1யாமளா-அம்பி3கே/ வரதே3/ அப4ய/ தா3னமு/-ஈயவே/ (ஆ தி3ன)
சியாமளாம்பிகையே/ வரமருள்பவளே/ அபய/ தானம்/ அருள்வாயம்மா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஆ தி3னமுனிஞ்சி - ஆ தி3னமுனுஞ்சி : இலக்கணப்படி, 'தி3னமுனுஞ்சி' என்பதுதான் சரியாகும். ஆனால், 'தி3னமுனிஞ்சி' என்பது பேச்சு வழக்கு.

2 - அகி2ல லோக பாவனீ - அகி2ல லோக ப4வானீ : இவ்விடத்தில், 'ப4வானீ' என்பது பொருந்தாது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
அரவணிவோன் - சிவன்
அளிகுலம் - வண்டுக் கூட்டம்
அளிகுல வேணி - கருங்குழலி
அபய தானம் - புகல் - அஞ்சேல் எனல்

Top


Updated on 04 May 2011

2 comments:

  1. திரு கோவிந்தன் அவர்களே

    அலி குலவேணி என்பதற்கு அளி குலவேணி என்று பொருள் கொடுத்துள்ளீர். தமிழில் அளி என்றால் வண்டு என்று பொருளா? வண்டார் குழலி என்பது பொருந்துமா?
    வணக்கம்
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,

    'அளி, குல, வேணி' ஆகிய மூன்று சொற்களுமே, தமிழில் தற்சமமாக பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் அகராதி -
    அளி மற்றும்
    வேணி நோக்கவும்.

    'அளிகுல வேணி' என்பதற்கு 'வண்டுகள் (நிகர்) குழலி' என்று பொருள். அதற்கு, 'கருங்குழலி' என்று விளக்கம் கொடுத்துள்ளேன். ஆனால், 'வண்டார் குழலி' என்பதற்கு 'வண்டு நிறை குழலி' (சூடும் மலர்களை மொய்ப்பதனால்) என்று பொருளாகும்.

    வணக்கம்,
    கோவிந்தன்

    ReplyDelete