Sunday, May 22, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - காமாக்ஷி அனுதி3னமு - ராகம் பைரவி - Kamakshi Anudinamu - Raga Bhairavi

பல்லவி
1காமாக்ஷி அனுதி3னமு மரவகனே நீ
2பாத3முலே தி3(க்க)னுசு நம்மிதினி ஸ்ரீ கஞ்சி (காமாக்ஷி)

ஸ்வர ஸாஹித்ய
ஸ்வர ஸாஹித்ய 1
குந்த3 ரத3னா குவலய நயனா
தல்லி 3ரக்ஷிஞ்சு (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 2
கம்பு33ள நீரத3 சிகுரா விது4
வத3னா மா(ய)ம்மா (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 3
கும்ப4 குச மத3 மத்த க3ஜ க3
பத்3ம ப4வ ஹரி ஸ1ம்பு4 நுத பதா3
1ங்கரீ நீவு நா 4சிந்தல வேவேக3
5தீ3ர்(ச)ம்மா(வி)புடு3 (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 4
4க்த ஜன கல்ப லதிகா
கரு(ணா)லயா ஸத3யா கி3ரி தனயா
காவவே ஸ1ர(ணா)க3துடு33தா3
தாமஸமு ஸேயக வர(மொ)ஸகு3 (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 5
பாதகமுலனு தீ3ர்சி நீ பத3
4க்தி ஸந்தத(மீ)யவே
6பாவனி க3தா3 மொர வினவா
பரா(கே)ல(ன)ம்மா வி(ன)ம்மா (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 6
7து3ரித ஹாரிணி ஸதா3 நத ப2
தா3யகி(ய)னி பி3ருது3 பு4விலோ
3லிகி3ன தொ3ர(ய)னுசு
8வேத3முலு 9மொர(லி)ட33னு (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 7
10நீப வன நிலயா ஸுர ஸமுத3யா
11கர வித்4ரு2த குவலயா மத3
3னுஜ வாரண 12ம்ரு2(கே3)ந்த்3(ரா)ஸ்1ரித
13கலுஷ த3மன4னா
அபரிமித வைப4வமு க3ல நீ ஸ்மரண
மதி3லோ த3லசின ஜ(னா)து3லகு
3ஹு ஸம்பத3ல(னி)ச்சே(வி)புடு3
14மா(க)ப4ய(மி)ய்யவே (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 8
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸஹோத3ரீ ஸி1
1ங்கரீ பர(மே)ஸ்1வரீ
ஹரி ஹ(ரா)து3லகு நீ 15மஹிமலு
3ணிம்ப
தரமா ஸுது(ட3)ம்மா
அபி4மானமு லேதா3 நாபை தே3வீ
பரா(கே)லனே ப்3ரோவவே இபுடு3 ஸ்ரீ பை4ரவீ (காமாக்ஷி)


பொருள் - சுருக்கம்
  • ஸ்ரீ காஞ்சி காமாட்சீ!
  • முல்லைப் பல்லினளே! கமலக்கண்ணீ! தாயே!
  • சங்குக் கழுத்தினளே! கார்குழலியே! மதி முகத்தினளே! எமதம்மா!
  • கும்ப முலையாளே! மதம் கொண்ட, களிறு நடையாளே! மலரோன், அரி, சம்பு போற்றும் திருவடியினளே! சங்கரீ!
  • அடியார்களின் கற்பகக் கொடியே! கருணையின் ஆலயமே! தயையுடையவளே! மலை மகளே!
  • பாவங்களைக் களைபவளே!
  • கதம்ப வனத்தினில் உறைபவளே! வானோர் குழுமத்தினளே! கரத்தினில், கமலம் ஏந்துபவளே! செருக்குடைய, அசுரர் எனும் வாரணங்களுக்கு, விலங்கரசே! அண்டியோரின் மாசுகளைப் போக்கும், பெருந்தகையே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! சிவ சங்கரீ! பரமேசுவரீ! தேவீ! ஸ்ரீ பைரவீ!
    • அரி, அரன் ஆகியோருக்கும், உனது மகிமைகளை கணக்கிடத் தரமா?
    • 'எவ்வமயமும், பணிந்தோருக்கு, பயன் அருள்பவள்' எனும் விருது, புவியினில் உடைய, துரையென, மறைகள் முறையிடும்.
    • எல்லையற்ற வைபவங்கள் உடைய, உனது நினைவினை, (தமது) உள்ளத்தில் நினைக்கும் மக்களுக்கு, மிக்கு செழிப்புகளைத் தருகின்றாய்.

    • கேளம்மா.
    • அனுதினமும், மறவாது, உனது திருவடிகளே புகலென நம்பினேன்.

      • உனது மகவம்மா.
      • அன்பு இல்லையா, என்மீது,

      • காப்பாயம்மா, இவ்வமயம்.
      • எனது கவலைகளை வெகு வேகமாகத் தீர்ப்பாயம்மா, இவ்வமயம்.
      • தாமதம் செய்யாது, வரமருள்வாய்.
      • பாதகங்களைத் தீர்த்து, உனது திருவடிப் பற்றினை, என்றென்றைக்கும், அருளம்மா.

      • சரண் அடைந்தவன் அன்றோ?
      • இவ்வமயம், எமக்கு, அபயமளிப்பாயம்மா.

      • புனிதமாக்குபவள் அன்றோ?
      • முறையீட்டினைக் கேளாயோ?
      • பராக்கு ஏனம்மா?


    • அனுதினமும், மறவாது, உனது திருவடிகளே புகலென நம்பினேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
காமாக்ஷி/ அனுதி3னமு/ மரவகனே/ நீ/
காமாட்சீ/ அனுதினமும்/ மறவாது/ உனது/

பாத3முலே/ தி3க்கு/-அனுசு/ நம்மிதினி/ ஸ்ரீ/ கஞ்சி/ (காமாக்ஷி)
திருவடிகளே/ புகல்/ என/ நம்பினேன்/ ஸ்ரீ/ காஞ்சி/ (காமாட்சீ)


ஸ்வர ஸாஹித்ய
ஸ்வர ஸாஹித்ய 1
குந்த3/ ரத3னா/ குவலய/ நயனா/
முல்லை/ பல்லினளே/ கமல/ கண்ணீ/

தல்லி/ ரக்ஷிஞ்சு/ (காமாக்ஷி)
தாயே/ காப்பாய்/


ஸ்வர ஸாஹித்ய 2
கம்பு3/ க3ள/ நீரத3/ சிகுரா/ விது4/
சங்கு/ கழுத்தினளே/ கார்/ குழலியே/ மதி/

வத3னா/ மா/-அம்மா/ (காமாக்ஷி)
முகத்தினளே/ எமது/ அம்மா/


ஸ்வர ஸாஹித்ய 3
கும்ப4/ குச/ மத3/ மத்த/ க3ஜ/ க3ம/
கும்ப/ முலையாளே/ மதம்/ கொண்ட/ களிறு/ நடையாளே/

பத்3ம ப4வ/ ஹரி/ ஸ1ம்பு4/ நுத/ பதா3/
மலரோன்/ அரி/ சம்பு/ போற்றும்/ திருவடியினளே/

1ங்கரீ/ நீவு/ நா/ சிந்தல/ வேவேக3/
சங்கரீ/ நீ/ எனது/ கவலைகளை/ வெகு வேகமாக/

தீ3ர்சு/-அம்மா/-இபுடு3/ (காமாக்ஷி)
தீர்ப்பாய்/ அம்மா/ இவ்வமயம்/


ஸ்வர ஸாஹித்ய 4
4க்த ஜன/ கல்ப/ லதிகா/
அடியார்களின்/ கற்பக/ கொடியே/

கருணா/-ஆலயா/ ஸத3யா/ கி3ரி/ தனயா/
கருணையின்/ ஆலயமே/ தயையுடையவளே/ மலை/ மகளே/

காவவே/ ஸ1ரணு/-ஆக3துடு3/ க3தா3/
காப்பாயம்மா/ சரண்/ அடைந்தவன்/ அன்றோ/

தாமஸமு/ ஸேயக/ வரமு/-ஒஸகு3/ (காமாக்ஷி)
தாமதம்/ செய்யாது/ வரம்/ அருள்வாய்/


ஸ்வர ஸாஹித்ய 5
பாதகமுலனு/ தீ3ர்சி/ நீ/ பத3/
பாதகங்களை/ தீர்த்து/ உனது/ திருவடி/

4க்தி/ ஸந்ததமு/-ஈயவே/
பற்றினை/ என்றென்றைக்கும்/ அருளம்மா/

பாவனி/ க3தா3/ மொர/ வினவா/
புனிதமாக்குபவள்/ அன்றோ/ முறையீட்டினை/ கேளாயோ/

பராகு/-ஏலனு/-அம்மா/ வினு/-அம்மா/ (காமாக்ஷி)
பராக்கு/ ஏன்/ அம்மா/ கேள்/ அம்மா/


ஸ்வர ஸாஹித்ய 6
து3ரித/ ஹாரிணி/ ஸதா3/ நத/ ப2ல/
பாவங்களை/ களைபவளே/ 'எவ்வமயமும்/ பணிந்தோருக்கு/ பயன்/

தா3யகி/-அனி/ பி3ருது3/ பு4விலோ/
அருள்பவள்/ எனும்/ விருது/ புவியினில்/

3லிகி3ன/ தொ3ர/-அனுசு/
உடைய/ துரை/ யென/

வேத3முலு/ மொரலு/-இட33னு/ (காமாக்ஷி)
மறைகள்/ முறை/ யிட/ (காமாட்சீ)


ஸ்வர ஸாஹித்ய 7
நீப/ வன/ நிலயா/ ஸுர/ ஸமுத3யா/
கதம்ப/ வனத்தினில்/ உறைபவளே/ வானோர்/ குழுமத்தினளே/

கர/ வித்4ரு2த/ குவலயா/ மத3/
கரத்தினில்/ ஏந்துபவளே/ கமலம்/ செருக்குடைய/

3னுஜ/ வாரண/ ம்ரு23/-இந்த்3ர/-ஆஸ்1ரித/
அசுரர் (எனும்)/ வாரணங்களுக்கு/ விலங்கு/ அரசே/ அண்டியோரின்/

கலுஷ/ த3மன/ க4னா/
மாசுகளை/ போக்கும்/ பெருந்தகையே/

அபரிமித/ வைப4வமு/ க3ல/ நீ/ ஸ்மரண/
எல்லையற்ற/ வைபவங்கள்/ உடைய/ உனது/ நினைவினை/

மதி3லோ/ த3லசின/ ஜன-ஆது3லகு/
(தமது) உள்ளத்தில்/ நினைக்கும்/ மக்களுக்கு/

3ஹு/ ஸம்பத3லனு/-இச்சேவு/-இபுடு3/
மிக்கு/ செழிப்புகளை/ தருகின்றாய்/ இவ்வமயம்/

மாகு/-அப4யமு/-இய்யவே/ (காமாக்ஷி)
எமக்கு/ அபயம்/ அளிப்பாயம்மா/


ஸ்வர ஸாஹித்ய 8
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸஹோத3ரீ/ ஸி1வ/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ சிவ/

1ங்கரீ/ பரம-ஈஸ்1வரீ/
சங்கரீ/ பரமேசுவரீ/

ஹரி/ ஹர/-ஆது3லகு/ நீ/ மஹிமலு/
அரி/ அரன்/ ஆகியோருக்கும்/ உனது/ மகிமைகளை/

3ணிம்ப/ தரமா/ ஸுதுடு3/-அம்மா/
கணக்கிட/ தரமா/ (உனது) மகவு/ அம்மா/

அபி4மானமு/ லேதா3/ நாபை/ தே3வீ/
அன்பு/ இல்லையா/ என்மீது/ தேவீ/

பராகு/-ஏலனே/ ப்3ரோவவே/ இபுடு3/ ஸ்ரீ/ பை4ரவீ/ (காமாக்ஷி)
பராக்கு/ ஏனம்மா/ காப்பாயம்மா/ இவ்வமயம்/ ஸ்ரீ/ பைரவீ/


குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

1 - காமாக்ஷி - காமாக்ஷீ.

2 - பாத3முலே - பாத3முல.

3 - ரக்ஷிஞ்சு - ரக்ஷிம்ப.

4 - சிந்தல - சிந்தலு.

5 - தீ3ர்சம்மாவிபுடு3 - தீ3ர்சம்மா வினம்மா.

6 - பாவனி க3தா3 மொர வினவா - பாவனீ க3தா3 மொர வினதா.

7 - து3ரித ஹாரிணி - கலுஷ ஹாரிணி.

Top

8 - வேத3முலு - வேத3மு.

9 - மொரலிட33னு - மொரலிட33 வினி.

12 - ம்ரு2கே3ந்த்3ராஸ்1ரித - ம்ரு2கே3ந்த்3ரார்சித : இவ்விடத்தில் 'அர்சித' என்பது பொருந்தாது.

13 - கலுஷ த3மன - கலுஷ த3ஹன.

14 - மாகப4யமிய்யவே - மாகப4யமீயவே.

15 - மஹிமலு க3ணிம்ப - மஹிமலு வினிம்ப.

Top

மேற்கோள்கள்
10 - நீப வன நிலயா - கதம்ப வனத்தில் உறைபவள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தினில் (60), அம்மையின் பெயர், 'கதம்ப வன வாஸினி' என்பதாகும். ஸௌந்தர்ய லஹரி (8) - 'நீப உபவனவதி' நோக்கவும்.

11 - கர வித்4ரு2த குவலயா - கரத்தில் கமலம் ஏந்துபவள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தினில் (11), அம்மையின் பெயர் - 'பஞ்ச தன்மாத்ர ஸாயகா' - 'ஐம்பொறிகளெனும், (மலர்) அம்புகளுடையாள்' என்பதாகும். இவ்வைந்து மலர்களில், 'கமலம்' ஒன்றாகும்.

Top

விளக்கம்

சம்பு - சிவன்
கற்பகக் கொடி - விரும்பியதருளும் வானோர் தரு.
பாதகங்கள் - கொடிய பாவங்கள்
மறைகள் முறையிட - மறைகள் பறைசாற்ற என
விலங்கரசு - சிங்கம்

Top


Updated on 22 May 2011

2 comments:

  1. திரு கோவிந்தன் அவர்களே

    ஸ்வர ஸாஹித்ய 6- தொ3ர/-அனுசு- து3ரை என்பது ஆண்பால் அல்லவா?
    ம்ரு2க3/-இந்த்3ர- விலங்கு/ அரசே- விலங்கு/ அரசி என்பது தானே சரி? (பெண் சிங்கம் தானே வேட்டையாடும்).
    வணக்கம்
    கோவிந்தசாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தசாமி அவர்களே,

    'துரை' மற்றும் 'மிருகேந்திர' ஆகிய இரண்டிற்கும் நீங்கள் கூறவது உண்மையே. ஆனால், காமாட்சியை இங்கு பரம்பொருளாக அல்லது பரதேவதையாக சியாமா சாஸ்த்திரிகள் வழிபடுகின்றார். பரம்பொருளில் ஆண்பால், பெண்பால் என்று வேறுபாடு செய்தல் முறையாகாது - பாடலில் கூறியுள்ள சொற்களை இருபாலுக்கும் பொதுவாகவே ஏற்கப்படவேண்டும்.

    'துரை' மற்றும் 'இந்திரன்' என்பவைதான் பதவிகள். 'துரைசாணி' மற்றும இந்திராணி என்பவை பதவிகளல்ல - அவை துரையின் மற்றும் இந்திரனின் மனைவியர் என்று மட்டுமே பொருள் கொள்ளப்படும். இங்கு 'துரை' மற்றும் 'இந்திரன்' என்பவைதான் operative words.

    வணக்கம்
    கோவிந்தன்

    ReplyDelete