Friday, May 13, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - மஹிலோ அம்பா3 - ராகம் ஆனந்த பைரவி - Mahilo Amba - Raga Ananda Bhairavi

பல்லவி
மஹிலோ அம்பா3 நீது3
மஹி(மா)திஸ1ய(மெ)ன்ன தரமா

அனுபல்லவி
அஹி பூ4ஷணுனி ராணீ ஸ1ங்கரி
அம்பி3கா ப்3ரு2ஹந்-நாயகி கௌ3ரீ (மஹிலோ)

சரணம்
சரணம் 1
ஸாரஸ த3ள நயனா 1வத3
ஸரோஜ விஜித க4
2பு(ரா)ரிவை ராணி
3வரா(லொ)ஸகி3ம்பவே
பி3ரான ப்3ரோசின பரா ஸ1க்தி க3தா3 (மஹிலோ)


சரணம் 2
4ஸுமேரு மத்4ய லதா லலிதா
5ரமிஞ்சு வினு 6நே குமாருட3(ன)னுசு
மா தல்லீ நீவு
மானவதீ நீ
ஸமான(மெ)வரு இலலோ ஜெப்(பவ)ம்மா (மஹிலோ)


சரணம் 3
7ஸாம கா3ன நுதா ஸரஸ பதா3
8தாமஸமு ஜேஸே தாளனே
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ ஸ1ங்கரீ
ஸ்1யாம(ளா)ம்பா3 9நீவே மா(ய)ம்ம (மஹிலோ)


பொருள் - சுருக்கம்
  • அம்மா!
  • அரவணிவோனின் ராணீ! சங்கரீ! அம்பிகையே! பெரிய நாயகியே! கௌரீ!
  • தாமரை யிதழ்க் கண்ணீ! முகிலினை வெல்லும், கமல வதனத்தினளே!
  • புனித, மேரு நடுவில் திகழும், மெல்லிடையாளே! லலிதையே! எந்தாயே! மதிப்பிற்குரியவளே!
  • சாம கானத்தினால் போற்றப்பெற்றவளே! சாரமான திருவடியினளே! சியாம கிருஷ்ணனின் சோதரியே! சங்கரீ! தாயே, சியாமளா!

    • புவியில், உனது மகிமைகளின் அதிசயங்களை எண்ண இயலுமா?

    • புரமெரித்தோனின் ராணியாம் நீ!
    • வரங்களருள்வாயம்மா. (வரங்களருளி)
    • விரைவில், காத்த பரா சக்தியன்றோ?

    • களிப்புடன், கேளம்மா.
    • நான் உனது மகவென்று, நீ கூறுவாயம்மா.
    • உனக்கிணை யாரம்மா, புவியில்?

    • தாமதம் செய்தால், தாளேனம்மா.
    • நீயே எமது தாயாகும்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மஹிலோ/ அம்பா3/ நீது3/
புவியில்/ அம்மா/ உனது/

மஹிம/-அதிஸ1யமு/-என்ன/ தரமா/
மகிமைகளின்/ அதிசயங்களை/ எண்ண/ இயலுமா/


அனுபல்லவி
அஹி/ பூ4ஷணுனி/ ராணீ/ ஸ1ங்கரி/
அரவு/ அணிவோனின்/ ராணீ/ சங்கரீ/

அம்பி3கா/ ப்3ரு2ஹத்/-நாயகி/ கௌ3ரீ/ (மஹிலோ)
அம்பிகையே/ பெரிய/ நாயகியே/ கௌரீ/


சரணம்
சரணம் 1
ஸாரஸ/ த3ள/ நயனா/ வத3ன/
தாமரை/ யிதழ்/ கண்ணீ/ வதன/

ஸரோஜ/ விஜித/ க4ன/ புர/-அரிவை/ ராணி/
கமலம்/ வெல்லும்/ முகிலினை/ புரம்/ எரித்தோன் நீ/ ராணி/

வராலு/-ஒஸகி3ம்பவே/
வரங்கள்/ அருள்வாயம்மா/ (வரங்கள்/ அருளி)

பி3ரான/ ப்3ரோசின/ பரா/ ஸ1க்தி/ க3தா3/ (மஹிலோ)
விரைவில்/ காத்த/ பரா/ சக்தி/ யன்றோ/


சரணம் 2
ஸுமேரு/ மத்4ய/ லதா/ லலிதா/
புனித, மேரு/ நடுவில்/ (திகழும்) மெல்லிடையாளே/ லலிதையே/

ரமிஞ்சு/ வினு/ நே/ குமாருட3னு/-அனுசு/
களிப்புடன்/ கேளம்மா/ நான்/ (உனது) மகவு/ என்று/

மா/ தல்லீ/ நீவு/ மானவதீ/ நீ/
எமது/ தாயே/ நீ/ மதிப்பிற்குரியவளே/ உனக்கு/

ஸமானமு/-எவரு/ இலலோ/ ஜெப்பு/-அம்மா/ (மஹிலோ)
இணை/ யாரம்மா/ புவியில்/ கூறுவாய்/ அம்மா/


சரணம் 3
ஸாம/ கா3ன/ நுதா/ ஸரஸ/ பதா3/
சாம/ கானத்தினால்/ போற்றப்பெற்றவளே/ சாரமான/ திருவடியினளே/

தாமஸமு/ ஜேஸே/ தாளனே/
தாமதம்/ செய்தால்/ தாளேனம்மா/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ ஸ1ங்கரீ/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ சங்கரீ/

ஸ்1யாமளா/-அம்பா3/ நீவே/ மா/-அம்ம/ (மஹிலோ)
சியாமளா/ தாயே/ நீயே/ எமது/ தாயாகும்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - விஜித க4 - விஜிதா க4ன : இவ்விடத்தில், 'க4ன' என்பதுடன் அடைமொழி நிறைவுறுவதனால், 'விஜிதா' என்பது பொருந்தாது.

7 - ஸாம கா3ன நுதா ஸரஸ பதா3 - ஸாம கா3ன நுத ஸரஸ பதா3.

9 - நீவே மாயம்ம - நீவே மாயம்மா : இவ்விடத்தில், 'மாயம்மா' என்பது பொருந்தாது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - வத3ன ஸரோஜ விஜித க4 (முகிலினை வெல்லும், கமல வதனத்தினள்) : இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அம்மையின் வதனத்தினை, 'கமலம்' என்ற கூறிவிட்டு, கரிய முகிலுடன் ஒப்பிடுவது குழப்பமாகும்.

2 - புராரிவை ராணி (புரமெரித்தோனின் ராணியாம் நீ) : இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 'புராரி ராணிவை' என்பது தான் சரியென நான் நம்புகின்றேன்.

3 - வராலொஸகி3ம்பவே - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. சொல்லின் இந்த வடிவம், இவ்விடத்தில், தவறென நான் கருதுகின்றேன். இது 'வராலொஸக3வே' என்றோ, 'வராலொஸகி3' என்றோ இருக்கவேண்டும். பிற்கூறிய முறையில், அடுத்து வரும், 'பி3ரான ப்3ரோசின' என்பதுடன் இதனை (வராலொஸகி3) இணைத்துப் பொருள் கொள்ளலாம்.

4 - ஸுமேரு மத்4ய லதா (புனித மேரு மலை நடுவில் திகழும் மெல்லிடையாள்) : இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் 'லதா' என்பது தவறென நான் கருதுகின்றேன். இது 'ஸுமேரு மத்4யஸ்தா2' (புனித மேரு மலை நடுவிருப்பவள்) என்றிருக்க வேண்டும்.

5 - ரமிஞ்சு வினு - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகங்களில், இதற்கு, 'களிப்புடன் கேளாய்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இவ்விடத்தில், 'ரமிஞ்சு' என்ற சொல்லின் வடிவம் தவறாகும்.

Top

6 - நே குமாருட3னனுசு மா தல்லீ நீவு (நான் உனது மகவென நீ) : இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொற்களின் பொருள் நிறைவுறுவதற்கு, இந்த சரணத்தின் கடைசியில் வரும், 'ஜெப்பவம்மா' (கூறுவாயம்மா) என்பதுடன் இணைக்க வேண்டும். ஆனால், இடையில் வேறொரு சொற்றொடர் வருகின்றது. எனவே, இதுவும் தவறாகப் படுகின்றது.

8 - தாமஸமு ஜேஸே தாளனே (தாமதம் செய்தால் பொறுக்கவியலேன்) : இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், 'ஜேஸே' என்பது தவறாகும். அது 'ஜேஸிதே' என்றிருக்கவேண்டும்.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த கிருதி, முழுமையாக களங்கப்பட்டுள்ளதாகவோ அல்லது இந்த கிருதி, சியாமா சாஸ்திரியினால் இயற்றப்படவில்லை என்றோ, நான் கருதுகின்றேன்.

அரவணிவோன் - சிவன்
பெரிய நாயகி - தஞ்சாவூரில் அம்மையின் பெயர்
புரமெரித்தோன் - சிவன்

Top


Updated on 13 May 2011

2 comments:

  1. திரு கோவிந்தன் அவர்களே


    சரணம் 1 முகிலினை வெல்லும், கமல வதனத்தினளே- இதன் பொருள் விளங்கவில்லை. மதியை வெல்லும், கமல வதனத்தினளே என்று தானே சாதாரணமாகக் கூற ப்படும். க4ன என்பது பாடபேதமா?

    சரணம் 2- ரமிஞ்சு வினு என்பது ரமிஞ்சி வினு என்று இருக்கவேன்டுமா?

    இந்த கிருதி, சியாமா சாஸ்திரியினால் இயற்றப்படவில்லை என்றோ, நான் கருதுகின்றேன் என்று கூறியுள்ளீர். இவர் பாடல்களில் பல பிழைகள் உள்ளன போல் தோன்றுகிறதே. ஏன்?

    வணக்கம்
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தசாமி அவர்களே,

    இந்த கீர்த்தனை மிகவும் பழுதுபட்டுள்தாலும், நான் கூறியபடி, இந்த கீர்த்தனை சியாமா சாஸ்த்திரிகள் உண்மையிலேயே இயற்றினாரா என்று நான் ஐயப்படுவதாலும், உங்களுடைய சந்தேகங்களுக்கு நான் பொருத்தமான பதில் அளிக்கும் நிலையில்லை.

    மேலும் ஒரு கீர்த்தனைக்கு நான் பொருள் எழுதவேயில்லை. அது, 'ஸாமினி ரம்மனவே' என்ற ஆனந்த பைரவி வர்ணமாகும். இது ஏதோ தெலுங்கு பண்டிதர் இயற்றியது போன்று மிக்கு கடினமான சொற்களுடன் கூடியதாக, சியாமா சாஸ்த்திரிகளின் எளிய நடையின் சாயல் சிறிதுமின்றுயுள்ளது. எனவே, இத்தகைய முரண்பாடுகள் இந்த கீர்த்தனையிலும் இருப்பது எனக்கு வியப்பளிக்கவில்லை.

    வணக்கம்,
    கோவிந்தன்.

    ReplyDelete