Saturday, June 25, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - காமாக்ஷி ப3ங்கா3ரு - ராகம் வராளி - Kamakshi Bangaru - Raga Varali

பல்லவி
காமாக்ஷி ப3ங்கா3ரு காமாக்ஷி
நன்னு ப்3ரோவவே

அனுபல்லவி
தாமஸ(மே)ல ராவே
ஸாம கா3ன லோலே ஸுஸீ1லே (காமாக்ஷி)

சரணம்
சரணம் 1
காம கால ப்ரிய பா4மினீ காம்ய
காமதே3 கல்யாணீ
காமாக்ஷீ கஞ்ஜ த3(ளா)ய(தா)க்ஷீ
1த்ரி-கோண வாஸினீ காருண்ய ரூபிணி (காமாக்ஷி)


சரணம் 2
பாவனீ ம்ரு2து3 பா4ஷிணீ ப4க்த
பாலினீ ப4வ மோசனீ
2ஹே(மா)ங்கீ3 ஹிம கி3ரி புத்ரீ
ம(ஹே)ஸ்1வரீ 3ஹ்ரீம்-கார ரூபிணீ (காமாக்ஷி)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலினீ ஸு1
ஸ்1யாமளே ஸி1வ ஸ1ங்கரீ
ஸூ1லினீ ஸதா3-ஸி1வுனிகி ராணீ
4விஸா1(லா)க்ஷ தருணீ ஸா1ஸ்1வத ரூபிணீ (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய
நா 5மனவினி வினு தே3வீ
நீவே க3தி(ய)னி நம்மினானு
மா(ய)ம்மா வேக3மே கருண ஜூ(ட3வ)ம்மா
3ங்கா3ரு பொ3ம்மா (காமாக்ஷி)


பொருள் - சுருக்கம்
 • காமாட்சீ! பங்காரு காமாட்சீ!
 • சாம கானத்தினை விரும்புபவளே! நல்லியல்பினளே!
 • மன்மதனை எரித்தோனுக்குப் பிரியமான இல்லாளே! விரும்பியது அருள்பவளே! கல்யாணீ! காமாட்சீ! தாமரையிதழ் நிகர், நீண்ட கண்களினளே! முக்கோணத்தில் உறைபவளே! கருணை வடிவினளே!
 • புனிதமானவளே! மிருதுவான சொல்லினளே! தொண்டர்களைக் காப்பவளே! பிறவியிலிருந்து மீட்பவளே! பொன்னங்கத்தினளே! பனிமலை மகளே! மகேசுவரியே! ஹ்ரீம்-கார வடிவினளே!
 • சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! கிளியேந்தும் சியாமளையே! சிவ சங்கரீ! சூலமேந்துபவளே! சதாசிவனின் ராணியே! அகன்ற கண்களோனின் இல்லாளே! அழியாத உருவினளே!
 • தேவீ! எமது தாயே!

 • என்னைக் காப்பாயம்மா.

  • நீயே கதியென நம்பியுள்ளேன்.
  • தாமதம் ஏன்?

  • வாராயம்மா.
  • எனது வேண்டுகோளைக் கேளாய்.
  • வேகமாக கருணை புரிவாயம்மா.


 • என்னைக் காப்பாயம்மா.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
காமாக்ஷி/ ப3ங்கா3ரு/ காமாக்ஷி/
காமாட்சீ/ பங்காரு/ காமாட்சீ/

நன்னு/ ப்3ரோவவே/
என்னை/ காப்பாயம்மா/


அனுபல்லவி
தாமஸமு/-ஏல/ ராவே/
தாமதம்/ ஏன்/ வாராயம்மா/

ஸாம/ கா3ன/ லோலே/ ஸுஸீ1லே/ (காமாக்ஷி)
சாம/ கானத்தினை/ விரும்புபவளே/ நல்லியல்பினளே/


சரணம்
சரணம் 1
காம/ கால/ ப்ரிய/ பா4மினீ/ காம்ய/
மன்மதனை/ எரித்தோனுக்கு/ பிரியமான/ இல்லாளே/ விரும்பியது/

காமதே3/ கல்யாணீ/
அருள்பவளே/ கல்யாணீ/

காமாக்ஷீ/ கஞ்ஜ/ த3ள/-ஆயத/-அக்ஷீ/
காமாட்சீ/ தாமரை/ யிதழ் (நிகர்)/ நீண்ட/ கண்களினளே/

த்ரி-கோண/ வாஸினீ/ காருண்ய/ ரூபிணி/ (காமாக்ஷி)
முக்கோணத்தில்/ உறைபவளே/ கருணை/ வடிவினளே/


சரணம் 2
பாவனீ/ ம்ரு2து3/ பா4ஷிணீ/ ப4க்த/
புனிதமானவளே/ மிருதுவான/ சொல்லினளே/ தொண்டர்களை/

பாலினீ/ ப4வ/ மோசனீ/
காப்பவளே/ பிறவியிலிருந்து/ மீட்பவளே/

ஹேம/-அங்கீ3/ ஹிம/ கி3ரி/ புத்ரீ/
பொன்/ அங்கத்தினளே/ பனி/ மலை/ மகளே/

மஹா-ஈஸ்1வரீ/ ஹ்ரீம்-கார/ ரூபிணீ/ (காமாக்ஷி)
மகேசுவரியே/ ஹ்ரீம்-கார/ வடிவினளே/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பரிபாலினீ/ ஸு1க/
சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ கிளியேந்தும்/

ஸ்1யாமளே/ ஸி1வ/ ஸ1ங்கரீ/
சியாமளையே/ சிவ/ சங்கரீ/

ஸூ1லினீ/ ஸதா3-ஸி1வுனிகி/ ராணீ/
சூலமேந்துபவளே/ சதாசிவனின்/ ராணியே/

விஸா1ல/-அக்ஷ/ தருணீ/ ஸா1ஸ்1வத/ ரூபிணீ/ (காமாக்ஷி)
அகன்ற/ கண்களோனின்/ இல்லாளே/ அழியாத/ உருவினளே/


ஸ்வர ஸாஹித்ய
நா/ மனவினி/ வினு/ தே3வீ/
எனது/ வேண்டுகோளை/ கேளாய்/ தேவீ/

நீவே/ க3தி/-அனி/ நம்மினானு/
நீயே/ கதியென/ நம்பியுள்ளேன்/

மா/-அம்மா/ வேக3மே/ கருண/ ஜூடு3/-அம்மா/
எமது/ தாயே/ வேகமாக/ கருணை/ புரிவாய்/ அம்மா/

3ங்கா3ரு/ பொ3ம்மா/ (காமாக்ஷி)
தங்க/ சிலையே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - மனவினி வினு - மனவி வினு.
Top

மேற்கோள்கள்
1 - த்ரி-கோண வாஸினீ - முக்கோணத்தில் உறைபவள் - 'ஸ்ரீ சக்ரம்' நோக்கவும். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (986) அம்மையின் பெயர், 'த்ரி-கோணகா3'.

2 - ஹேமாங்கீ3 - பொன்னங்கத்தினள் - பங்காரு காமாட்சி.

3 - ஹ்ரீம்-கார ரூபிணீ - ஹ்ரீம்-கார வடிவினள் - 'ஹ்ரீம்' என்ற மந்திரத்தின் பொருளறிய 'லலிதா த்ரி-ஸ1தி' நோக்கவும்.
Top

விளக்கம்
4 - விஸா1லாக்ஷ தருணீ - அகன்ற கண்களோனின் இல்லாள் - புத்தகங்களில், இதற்கு, 'சிவனின் இல்லாள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அகராதியின்படி, 'விஸா1லாக்ஷ' என்பதற்கு, 'சிவன்' என்றும் ஒரு பொருள் உண்டு. ஆனால், காசியில், அம்மைக்கு, 'விஸா1லாக்ஷி' என்று பெயராகும். எனவே, அதன்படி, 'விஸா1லாக்ஷ தருணீ' என்பதற்கு, 'அகன்ற கண்களுடைய, என்றும் இளமையானவள்' என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டு பொருள்களும் இங்கு தரப்பட்டுள்ளன.

பங்காரு காமாட்சி - தஞ்சாவூர்
மன்மதனை எரித்தோன் - சிவன்
அகன்ற கண்களோன் - சிவனைக் குறிக்கும்
தங்கச் சிலை - பங்காரு காமாட்சி
Top


Updated on 25 Jun 2011

No comments:

Post a Comment